June 20, 2010

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

 ஒரு சமயம் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ரயில்வே அமைச்சராக இருந்தார்.
ரயில்வே அமைச்சகத்தின் பல மாடிக் கட்டடமான  `ரயில் பவனில்'  இவரது அலுவலகம். இங்கு பல பணியாளர்கள் மிகவும் தாமதமாக வருவதைக் கவனித்த அவர், ஒரு சுற்றறிக்கையை அனுப்பச் செய்தார்- அனைவரும் ஆபீசுக்கு தாமதமாக வருவதை நிறுத்த வேண்டும் என்று. இந்தச் சுற்றறிக்கை வந்ததும் நிலைமை சீரடைந்தது.  இத்தோடு இது மாதிரி எத்தனை சர்க்குலர் பார்த்திருப்போம் என்று கமெண்ட் அடித்த பணியாளர்கள் நாலைந்து வாரங்களில் பழைய குருடி ஆகி விட்டார்கள். பார்த்தார் ஜார்ஜ்.
ஒரு நாள் காலை  என்ன செய்தார் தெரியுமா?

காலை பத்து  மணிக்கு ரயில் பவனின் நுழைவாயிலில் ரிசப்ஷன் மேஜையில் வந்து உட்கார்ந்து விட்டார்.  பத்து அடித்து பத்து நிமிஷத்துக்கு பிறகு வருபவர்களை ஒரு ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டுப் போகும்படி சென்ட்ரிகளை சொல்லச் சொன்னார்.  சுமார் 11 மணி வரை உட்கார்ந்து ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருத்தரிடமும் `ஏன் லேட்?' என்று கேட்கவில்லை.

அவ்வளவுதான். மறுநாள் பத்து மணிக்குள் எல்லோரும் வந்து வேலை ஆரம்பித்து விட்டார்கள்!

7 comments:

  1. இது போல் பல நல்ல ஊழல் அற்ற மனிதர்கள் தற்போது இந்திய அரசியலில் என்பது நமது துரதிஷ்டம்

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    பவர்ஃபுல் மனிதராக இருந்த திரு.ஜார்ஜ் அவர்கள், இப்போது, உடல் நலம் இல்லாமல், பிறரின் கண்ட்ரோலில் இருப்பதாக சமீபத்தில் படித்தேன். எதிர்காலம் நமக்கு என்ன தரப் போகிறதோ என்ற பயம் தோன்றியது.

    சரி, இப்போது ரயில் பவனில் எல்லோரும் கரெக்டான நேரத்துக்கு வருகிறார்களா என்று தெரியவில்லையே.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  3. Such things happen every now and then. But it is too much to expect our government servants to follow timings and be sincere in what they do in that time! Even recently P. Chidambaram introduced bio-metric attendance readers in his ministry's offices to check on the movement of people and this is years after George Fernandes's action! - R. Jagannathan

    ReplyDelete
  4. ராஜ சுப்ரமணியன்June 23, 2010 at 6:44 PM

    நான் வேலை பார்த்த DRDL, Hyderabad ஆஃபீஸிலும் எங்கள் டைரக்டரும் இதே போன்று ஒரு நாள் காலை 9 மணிக்கு நுழைவாயிலில் நின்றுகொண்டு லேட்டாக வருபவர்களுக்கு “காலை வணக்கம்” சொன்னார். மறுநாளிலிருந்து எல்லாரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர்.

    ReplyDelete
  5. ராஜ சுப்ரமணியன் said... எங்கள் டைரக்டரும் இதே போன்று ஒரு நாள் காலை 9 மணிக்கு நுழைவாயிலில் நின்றுகொண்டு லேட்டாக வருபவர்களுக்கு “காலை வணக்கம்” சொன்னார். //

    ஒரு சின்ன சந்தேகம்” உங்களுக்குச் சொன்னாரா? :)

    ReplyDelete
  6. //ஒரு சின்ன சந்தேகம்” உங்களுக்குச் சொன்னாரா? :) // - ஆஹா, செங்கல்பட்டு குசும்பா இது! - ரா.ஜெ.

    ReplyDelete
  7. அப்படி எதுவும் இல்லை. நாலு விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம்தான் காரணம்.ஹி.. ஹி...:)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!