January 27, 2011

ஜம்பம் ஒரு கலை

   ஒரு சில கார்ட்டூனிஸ்டுகள் போடும் படங்களைப் பார்க்கும்போது, "நாமும் இப்படிச் சுலபமாகப் படம் போடலாம்' என்று தோன்றும்.  அந்தப் படங்களைப் பார்த்து ஓரளவு போடக் கூட முடியும். ஆனால் நாமே சொந்தமாக ஒரு படம் போட ஆரம்பித்தால்தான் அது எத்தனை கஷ்டமான காரியம் என்பது தெரியும்.
      இந்த மாதிரி பார்க்க, அல்லது கேட்க எளிதாக இருப்பது ஜம்பம்.  ஆனால் நாமே ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமானால் அதுவும் நாசுக்குடன், ஒரு சாமர்த்தியத்துடன், ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமென்றால், அது ஒரு கலை என்பதை உணர்வோம்.
       சிறந்த முறையில் ஜம்பம் அடித்துக்கொள்வது என்பதன் இலக்கணம் என்ன?
      சொல்ல வேண்டியவைகளை, சொந்தப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஜம்பமாகச் சொல்கிறான் என்பதைப் பிறர் உணராதபடி ஜம்பமாகச் சொல்ல வேண்டும்!
      மாதிரிக்குச் சில ஜம்ப உரைகளை இங்கு தருகிறேன்:  ஜம்பம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பாடம் பெற விரும்புவர்களுக்கு என்னால் இயன்ற சேவை!
*               *                     *                      *

      ""சார். . . என்னைக் கேட்டால் பசங்களை என்ஜினீர், டாக்டர் என்று படிக்க வைக்கிறதை விட ஒரு டைப்பிஸ்டாக ஆக்குவதே மேல் என்பேன்.  பாருங்களேன், இவன் இருக்கிறானே ராஜ÷, எம்.பி.பி.எஸ் பாஸ் பண்ணினானே, அப்போ கிடைச்ச கோல்டு மெடலோடு திருப்தி அடைய வேண்டியதுதான்.  இப்போ அமெரிக்கா போகணும்னு  குதிக்கிறான். ராமு இருக்கிறானே, அவன் பி.ஈ. படிச்சு இருபதாயிரம் சம்பாதிக்கிறது போறாதாம். சொந்தமாக இண்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போகிறானாம். இதெல்லாம் பாஎக்கும்போது நானும் என் ஒய்ஃபும் என் பெண் கிட்டே பாரீஸ÷க்கே போய்விடலாமா என்று தோன்றுகிறது!''

January 23, 2011

குறும்பு விளக்கம்

 MORE DAFFYNITIONS:

Autobiography -- Boast seller
Hardware shop -- Tools Paradise
அட்வகேட் கமலா

கமலா வெறும் பி.ஏ. பட்டம் பெற்றதோடு நிற்காமல் சட்டப்படிப்பும் படித்துக் கறுப்புக் கோட்டும் போட்டுக் கோர்ட்டுகளுக்குப் போயிருந்தால் பால்கிவாலா வகையறாக்களை முழுங்கி ஏப்பம் விட்டிருப்பாள். விவாதம் என்று வந்தால் கமலா பாயிண்ட் பாயிண்டாகவும், பல சமயம் பாயிண்ட் இல்லாமலும் வெளுத்து வாங்குவாள். இதோ சில உதாரணங்கள்:
*
``கமலா... நாளைக்கு காலை பத்து மணியிலிருந்து புது காஸ் கனெக் ஷனுக்குப் பதிவு செய்து கொள்ளப் போகிறார்களாம்.''
``முதல்லே போய் உங்க பேரை ரிஜிஸ்டர் பண்ணிட்டு வாங்கோ!''
``ஒரே கூட்டமாக இருக்கும். இரண்டு நாள் போகட்டுமே...''
``கூட்டம் இருக்காது, ஒண்ணும் இருக்காது. உங்களை மாதிரி எல்லாரும் நினைச்சிண்டு இரண்டு நாள் கழிச்சுத்தான் போவார்கள். அன்னிக்குத்தான் கூட்டம் அலைமோதும் அதனால நாளைக்கே போங்கோ...'
``சரி கமலா.''
*
``போய் அரைக் கிலோ முட்டைக்கோஸ் வாங்கிக் கொண்டு வாங்க. கையிலே எடுத்துப் பார்த்தா லேசா இருக்கணும். அதுதான் நிறைய நிக்கும்'' என்றாள் கமலா.
``அது எப்படி? எடை போட்டு வாங்கும் போது அரைக் கிலோவுக்கு 750 கிராம் என்று வந்து விடுமா?'' என்று நான் கேட்டேன்.
``பேத்தாதீங்கோ... அடைஞ்ச மாதிரி இருக்கிற முட்டைக் கோஸில் உள்ளே காற்றே இருக்காது. வெலவெலன்னு லேசா இருக்கிறதில் உள்ளே காத்து இருக்கும். அதனால் எடை குறைவாக்கிக் காண்பிக்கும். உங்க சயன்ஸ் அறிவெல்லாம் கறிகாய் மார்க்கெட்டிற்கு உதவாது'' என்றாள்.
``உண்மைதான் கமலா'' என்றேன்.
*
``பேப்பரில் பார்த்தீங்களா... ஆறு டஜன் தையல் மிஷின் ஊசி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் இனாம் தருகிறார்கள்.''
``வீட்டில் இருக்கும் பக்கெட்டுகள் எட்டுத் தலைமுறைக்கு வரும் கமலா.''
``வரட்டுமே... தையல் மிஷின் ஊசி இருககிறதா வீட்டில்?''
``மெஷின் இருந்தால்தானே ஊசி இருப்பதற்கு? மெஷின் வாங்கும் போது ஊசி வாங்கிக் கொண்டால் போகிறது கமலா!''
``அப்போது உங்களுக்கு வெத்தலை பாக்கு வெச்சு பிளாஸ்டிக் பக்கெட் இனாமாகத் தரப் போகிறார்களா?''
``ஓசி பக்கெட்டுக்காக ஊசியை வாங்கி ஸ்டாக் பண்ணணுமா?''
``ஊசி என்ன ஊசிப் போகிற வஸ்துவா? இருந்துவிட்டுப் போகிறது. எப்போ லாபகரமாகக கிடைக்கிறதோ அப்போ வாங்காமல் இருப்பாங்களா?''
``சரி... சரி... கமலா.''
*
``கமலா... நாளைக்குக் காலை பத்து மணியிலிருந்து பாம் ஆயில் தர்றாங்களாம் கடையில். நான் முதல்லே போய் நின்னுடப் போகிறேன்.''
``ஒண்ணும் வேண்டாம். ஒரே கூட்டமாக இருக்கும். நசுங்கிப் போய்டுவீங்க. இரண்டு நாள் கழிச்சுப் போகலாம்.''
``இல்லை கமலா... கூட்டமாக இருக்கும்னு ரொம்பப் பேர் இரண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க. முதல் நாள் கூட்டம் இருக்காது.''
``எல்லோரும் இரண்டு நாள் கழிச்சு வருவாங்க. நாம்ப முதல் நாளே போயிடலாம்னு எல்லாரும் நினைச்சுண்டு வந்துடுவாங்க. கொஞ்சமாவது யோசனை இருக்கணுமே...'

January 17, 2011

அர்ச்சனை-1 --ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சகஸ்ர அர்ச்சனை

வீட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு முகத்தைத் துடைத்தபடியே இரவு பத்து மணிக்கு படுக்கை அறைக்குள் வந்தாள் அம்புஜம். லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். அவள் வந்ததைக் கவனிக்காத மாதிரி பேப்பரை படிப்பது போல் பஞ்சு பாவ்னை செய்துகொண்டிருந்தார்.


.``என்ன உங்களைத்தான்..பேப்பர் படிச்சாச்சா? இன்னும் வரி விளம்பரம், மணமகள் தேவை, ஏல நோட்டீஸ் எல்லாம் பாக்கி இருக்கா? ஜில் ஜில் ரமாமணி காதல் விவகாரம் பற்றியெல்லாம் ஒரு எழுத்து விடாமல் படிச்சு ஆச்சா?  ஆமாம், பெரிய பொண்ணு உமா நீல-வெள்ளை சல்வார் கமீஸ் கேட்டாளாம்.  இந்த மாசம் முடியாதுன்னு சொன்னீங்களாமே... நேற்று உங்க பர்ஸில் 200 ரூபாய் இருந்ததைப் பார்த்தேனே... என்ன, கடுவம்பூனை மாதிரி பாக்கறிங்க? உங்க பர்ஸை எடுத்துப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா? அந்த பேப்பரைத் தூக்கி எறியுங்க... முதல்லே என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க...

”இருநூறு ரூபாய்க்கு கணக்குச் சொல்லுங்க. மம்மியா, ரம்மியா? அம்மா கேட்டார்; இவர் மணியார்டர் அனுப்பினாரா? இல்லே, ஆபீஸ்ல கிளப்பில் ரம்மியில் மொய் எழுதியாச்சா?  சரி, சரி, மம்மியோ, ரம்மியோ... பர்ஸ் காலி!
ஏதோ ஸ்காலர்ஷிப்புக்காக  இன்டர்வியூவிற்குப் போகணுமாம். புது டிரஸ் கேட்டாள். அவள் கிட்ட சொல்லிடறேன். நாலு எவர்சில்வர் டம்ளரைப் போட்டு பழைய பாத்திரக்காரன் கிட்ட இருந்து சல்வார் கமீஸ் வாங்கிக் கொடுத்துடறேன்னு!.

”என்னது... என்னது... நீ இதுவும் செய்வே, இன்னமும் செய்வேன்னு சொல்றீங்களா?  நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏறித்தான் ஆகணும். வேறு ஒருத்தியாக இருந்தால் எப்பவோ குடும்பநலக் கோர்ட்டுக்குப் போயிருப்பா.
`குழந்தை, நீ இன்டர்வியூவிற்குப் போக வேண்டாம்'னு சொல்லிடறேன். ஏன், படிப்புக்கே தலைமுழுகிடச் சொல்லிடறேன். ஊரெல்லாம் அப்பளம், கைமுறுக்கு, சீடை இதுக்கெல்லாம் நல்ல டிமாண்ட் இருக்கே... ஏதாவது பண்ணி பொழைச்சுக்கட்டும்! அவள் தலையிலே , வாணலி, ஜாரணின்னு பிரம்மா படம் போட்டிருந்தால் யாரால அழிக்க முடியும்? அடி, உங்கப்பாவால   பணத்தை மட்டும்தான் அழிக்க முடியும்னு சொல்லிடறேன்.வேறு எதையும் அழிக்க முடியாதுன்னு சொல்லிடறேன்.

January 14, 2011

அம்புஜத்தின் அர்ச்சனைகள்- ஆரம்பம்

ஒரு நாள் காலை என் நண்பன் கிட்டப்பா என் வீட்டிற்கு வந்தார். கையில் பெரிய பை.
``என்னப்பா, பையும் கையுமா காலையில் வந்திருக்கிறாய். பையில் என்ன? உன் கிராமத்திற்குப் போயிருந்தாயா? கத்திரிக்காய் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டேன்.
``கத்திரிக்காயும் இல்லை, ஒண்ணுமில்லை. நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரைக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு அவ்வளவு சரியாக எழுத வரவில்லை. நீதான் பெரிய எழுத்தாளன் என்று ஊரெல்லாம் சொலிக் கொண்டு திரிகிறாயே, கொஞ்சம் சரி செய்து கொடு'' என்றான்.
``உன் கட்டுரைகளில் சரியாக இல்லாத பகுதிகளை எல்லாம் எடுத்து விட்டால் தலைப்பும், `முற்றும்' மட்டும்தான் இருக்கும்'' என்றேன்.
``நீ கை வெச்சால் எல்லாம் பிரமாதமாகி விடும் என்றுதானே உன்னிடம் வந்தேன். நீ என்னை நக்கல் பண்ணறே. பண்ணு, பரவாயில்லை. அப்படியே இதையும் சரி பண்ணு'' என்றான்.
``சரியப்பா... பாக்கறேன்...'' என்றேன்.
கிட்டப்பா தன் கையெழுத்துப் பிரதியை வைத்து விட்டுப் போனான்.
இரண்டு நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தேன். இங்க் புட்டிக்குள் விழுந்த எறும்பு காகிதத்தில் ஓடியது போல் இருந்தது அவன் கையெழுத்து! கஷ்டப்பட்டுப் படித்தேன். சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருந்தான்.  உண்மை போல் இருந்தது. அதே சமயம் நம்பமுடியாததாகவும் இருந்தது.

ஒரு வாரம் கழித்து கிட்டப்பா வந்தான்.
``கிட்டப்பா... இதில் எழுதி இருக்கிறதெல்லாம் உண்மையா? உன் மனைவி உனக்குப் பண்ணின அர்ச்சனைகள் நம்ப முடியாதபடி இருக்கிறது. உன் மனைவியைப் பற்றி இத்தனை நாளில் ஒரு சமயம் கூட என்னிடம் குறைபட்டுக் கொண்டதில்லையே! சும்மா ரீல் மாதிரி இருக்கிறதே!'' என்றேன்.
``இல்லைப்பா... உண்மைதான். கணவன்-மனைவி பெயர்களை மாற்றி இருக்கிறேன். இதை நீ சரிபார்த்த பிறகு சில சம்பவங்களையும், பெயர்களையும் மாற்றி விடப் போகிறேன்.  அதிருக்கட்டும், மொத்தத்தில் எப்படி இருக்கிறது நான் எழுதியது?'' என்று கேட்டான்.
``மொத்தத்தில் நன்றாக இருக்கிறது. சில்லறையில்தான் போரடிக்கிறது'' என்றேன்.
``இந்த கலாட்டாதான் வேண்டாம் என்கிறது. கதையில் வரும் மனைவியின் பெயரை அம்புஜம் என்று வைத்து விடலாம். கணவன் பெயரை பஞ்சு என்று மாற்றி விடலாம்.'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் எழுதிய உண்மையான `கற்பனை'க் கட்டுரைதான் அம்புஜத்தின் அர்ச்சனைகள்!                                                              (தொடரும்)

அம்புஜத்தின் அர்ச்சனைகள் -முன்னுரை

அம்புஜத்தின் அர்ச்சனைகள்
- அகஸ்தியன் -

ஒரு நாள் காலை என் நண்பன் கிட்டப்பா என் வீட்டிற்கு வந்தார். கையில் பெரிய பை.
``என்னப்பா, பையும் கையுமா காலையில் வந்திருக்கிறாய். பையில் என்ன? உன் கிராமத்திற்குப் போயிருந்தாயா? கத்திரிக்காய் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டேன்.
``கத்திரிக்காயும் இல்லை, ஒண்ணுமில்லை. நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரைக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு அவ்வளவு சரியாக எழுத வரவில்லை. நீதான் பெரிய எழுத்தாளன் என்று ஊரெல்லாம் சொலிக் கொண்டு திரிகிறாயே, கொஞ்சம் சரி செய்து கொடு'' என்றான்.
``உன் கட்டுரைகளில் சரியாக இல்லாத பகுதிகளை எல்லாம் எடுத்து விட்டால் தலைப்பும், `முற்றும்' மட்டும்தான் இருக்கும்'' என்றேன்.
``நீ கை வெச்சால் எல்லாம் பிரமாதமாகி விடும் என்றுதானே உன்னிடம் வந்தேன். நீ என்னை நக்கல் பண்ணறே. பண்ணு, பரவாயில்லை. அப்படியே இதையும் சரி பண்ணு'' என்றான்.
``சரியப்பா... பாக்கறேன்...'' என்றேன். கிட்டப்பா தன் கையெழுத்துப் பிரதியை வைத்து விட்டுப் போனான்.
இரண்டு நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தேன். இங்க் புட்டிக்குள் விழுந்த எறும்பு காகிதத்தில் ஓடியது போல் இருந்தது அவன் கையெழுத்து! கஷ்டப்பட்டுப் படித்தேன். சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருந்தான். உண்மை போல் இருந்தது. அதே சமயம் நம்ப முடியாததாகவும் இருந்தது.
ஒரு வாரம் கழித்து கிட்டப்பா வந்தான்.
``கிட்டப்பா... இதில் எழுதி இருக்கிறதெல்லாம் உண்மையா? உன் மனைவி உனக்குப் பண்ணின அர்ச்சனைகள் நம்ப முடியாதபடி இருக்கிறது. உன் மனைவியைப் பற்றி இத்தனை நாளில் ஒரு சமயம் கூட என்னிடம் குறைபட்டுக் கொண்டதில்லையே! சும்மா ரீல் மாதிரி இருக்கிறதே!'' என்றேன்.
``இல்லைப்பா... உண்மைதான். கணவன்-மனைவி பெயர்களை மாற்றி இருக்கிறேன். இதை நீ சரிபார்த்த பிறக சில சம்பவங்களையும், பெயர்களையும் மாற்றி விடப் போகிறேன். அதிருக்கட்டும், மொத்தத்தில் எப்படி இருக்கிறது நான் எழுதியது?'' என்று கேட்டான்.
``மொத்தத்தில் நன்றாக இருக்கிறது. சில்லறையில்தான் போரடிக்கிறது'' என்றேன்.
``இந்த கலாட்டாதான் வேண்டாம் என்கிறது. கதையில் வரும் மனைவியின் பெயரை அம்புஜம் னெ்று வைத்து விடலாம். கணவன் பெயரை பஞ்சு என்று மாற்றி விடலாம்.'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் எழதிய உண்மையான `கற்பனைக்' கட்டுரைதான் அம்புஜத்தின் அர்ச்சனைகள்!

January 12, 2011

தினமும் ஒரு கவிதை வீதம் முப்பது வருஷங்கள்!

  ஆங்கில கவிதைகள் தொகுப்புப் புத்தகத்தை  ஒரு  புத்தகச்சாலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு  பாடல் கண்ணில் பட்டது. பாடல் மிகவும் அருமையாக இருந்தது.  எழுதியவர்” எட்கார் கெஸ்ட் ( EDGAR GUEST)
 உடனே அவர் எழுதிய பாடல் புத்தகங்களைத் தேடத் துவங்கினேன். அவரைப் பற்றிய விவரங்களைத் தேடிப்பிடித்தேன்.

எட்கார் அமெரிக்காவில் டெட்டரய்ட் நகரில் வசித்தவர். 1959’ல் தனது 78-வதுவயதில் காலமானார்.  இவர் பிரபலமான கவிஞர்.. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ஆபீஸ்  பையனாக வேலைக்குச் சேர்ந்தவர். இவர் எழுதிய முதல் கவிதை வெளியானதும், டெட்ராய்ட் நகரமே  திரும்பிப் பார்த்தது!
அத்தனை அபாரமாக இருந்ததாம். அதன் பின் இவர் நூற்றுக் கணக்கான கவிதைளை எழுதிப் புகழ் பெற்றார்.  மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது கவிதைகள் சுமார் 300 பத்திரிகைகளில் ‘சிண்டிகேட்’ செய்யப்பட்டதாம். FREE PRESS  என்ற தினசரியில் தினமும் ஒரு கவிதை எழுதிவந்தாராம்.ஆம்,  தினமும்! வாரத்தில் ஏழு நாட்களும். இப்படி எத்தனை வருஷங்கள் எழுதினார் தெரியுமா? முப்பது வருஷங்கள்.!
இவரை மிச்சிகன் மானிலம் அரசவைக் கவிஞராக்கிக் கௌரவித்தது. (இதுவரை இவரை தவிர வேறு  யாருக்கும் இந்த கௌரவம் தரப்படவில்லை.)
இவர் படத்தைத் தபால் தலையிலும்  போட்டு பெருமைப்படுத்தி இருக்கிறது அரசு.
இவர் பதினோராயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.!

 இவரது சிறந்த கவிதைகள்  THE BEST OF EDGAR GUEST  என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. கவிதைகளை அவரே தேர்ந்து எடுத்துக் கொடுத்தாராம்.
அந்த புத்தகத்தை மிகவும் தேடி அலைந்து வாங்கினேன். அதிலிருந்து ஒரு பாடலைத் தனிப் பதிவாகப் போட்டுள்ளேன். வேறு சில பாடல்களைப் பின்னால் போடுகிறேன்.

January 11, 2011

It Couldn’t Be Done -- Edgar Guest


Somebody said that  it couldn’t be done
     But, he with a chuckle replied
That "maybe it couldn’t," but he would be one
     Who wouldn’t say so till he’d tried.
So he buckled right in with the trace of a grin
     On his face. If he worried he hid it.
He started to sing as he tackled the thing
     That couldn’t be done, and he did it.

Somebody scoffed: "Oh, you’ll never do that;
     At least no one has done it";
But he took off his coat and he took off his hat,
     And the first thing we knew he’d begun it.
With a lift of his chin and a bit of a grin,
     Without any doubting or quiddit,
He started to sing as he tackled the thing
     That couldn’t be done, and he did it.

There are thousands to tell you it cannot be done,
     There are thousands to prophesy failure;
There are thousands to point out to you one by one,
     The dangers that wait to assail you.
But just buckle it in with a bit of a grin,
     Just take off your coat and go to it;
Just start to sing as you tackle the thing
     That "couldn’t be done," and you’ll do it.
===========
 Quiddit - A subtilty; an equivocation.
 
from Collected Verse of Edgar Guest

கடன் கேட்டுப்பாருங்கள்!

கடன் கேட்பது ஒரு கலை என்றால், கடன் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வதும் ஒரு கலை.  இந்தக் கலையை-- அதாவது கடன் தராமல் சால்ஜாப்பு  சொல்வதை நான் கற்றுக் கொள்வதற்கென்றே பலரைக் கடன் கேட்டேன்.  அதன் காரணமாகச் சில உத்திகள் எனக்குத் தெரிய வந்தன.  யான் பெற்ற பேற்றை உங்களுக்கும் தர ஆவல்.
 
      ""என்னப்பா ராமசாமி,நூறு ரூபாய் கடன் வேண்டுமே'' என்று நான் கேட்டேன். ராமசாமி சொன்னான்:
      "நூறு ரூபாய் வேண்டுமா? கிண்டல் பண்ணாதே!... 'மாசக் கடைசி, இவன் கிட்டப் பணம் இல்லை' என்கிறதைத் தெரிஞ்சு வெச்சுண்டுதானே ஆழம் பார்க்கிறே?....''
      கோபாலசாமி சொன்னதைக் கேளுங்கள்.
      " ஏனப்பா, நேத்துத்தான் கிருஷ்ணசாமிகிட்டே நான் ஐம்பது ரூபாய் கடன் கேட்டேன்.  பணம் தராவிட்டாலும் அந்தக் கிருஷ்ணசாமி ஊரெல்லாம் தண்டோராப் போட்டுட்டான் போலிருக்கு.  அதனால்தான் நீ. .-- . . டெய்லி ஐந்நூறு ரூபாய் நோட்டை மாத்தற நீ. . . இப்படி டிராமா போடறே. . . அட, நான் 
     நாராயணசாமி கூறியது: "இன்னிக்குநூறு ரூபாய் கேட்பே.  நாளைக்கு ஐந்நூறு. . .  அப்புறம் ஆயிரம்.  அடுத்த வாரம் பத்தாயிரம்.  அடுத்த மாசம் லட்சம். . . இப்படித்தான் போகும்.  கடைசியில் திவாலாகி விடுவாய். . கடன் கேட்கிற வழக்கத்தை விடு. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.''
      ரங்கசாமி கேட்டது: "நூறு ரூபாயா? இன்னிக்குத் தேதி எட்டு. சம்பளம் வாங்கின பணம் எனன் ஆச்சு  பிடிப்புப் போக உன் சம்பளம் எவ்வளவு? வாடகை,, ஓட்டல் பில்,, ஊருக்கு அனுப்பினது  இதெல்லாம் எவ்வளவுஓவர் டைம் கூட இந்த மாசம் வந்ததேசீட்டுக் கடனும் போன மாசம் முடிஞ்சுட்டுது.  ஒவ்வொரு பைசாவுக்கும் முதல்லே கணக்குச் சொல்லு!''
      கோவிந்தசாமி டைப்பே வேறு.  "கேட்கிற கடனை இருநூறு ரூபாயா கேள்.  யாராவது கொடுத்தால் அதில் எனக்குநூறு ரூபாய் கொடு. . எனக்கும் பணம் தேவை.  யாரைக் கேட்கிறது என்று தெரியவில்லை!''
      அண்ணாசாமி சொல்லியது டாப்:  ""உனக்குப் நூறு ரூபாய் தருவது ஒண்ணும் பெரிய கஷ்டமான காரியம் இல்லை.  ஆனால் இது ஆபத்தான பழக்கம் என்பதை முதலில் சொல்லிடணும்.  நேத்துதான் மெடிகல் ஜர்னலில் படித்தேன்.  கடன் வாங்கிவிட்டால் மனசில் ஒரு டென்ஷன் ஏற்படறது.  இதன் காரணமாக பிளட் பிரஷர் அதிகமாயிடறது.  தூக்கமும் சரியாக இருக்காது.  ஹார்ட்டுக்கும் தொல்லை வரும்.  கடன் வாங்குவதும்ஒண்ணுதான். சைனைட் விஷத்தைச் சாப்பிடறதும் ஒண்ணுதான்னு அழுத்தம் திருத்தமா எழுதியிருக்கிற கட்டுரையைப் படிச்ச பிறகு உனக்குப் பணம் கொடுத்தால் அது.எனக்கு மகா பாவம். நான் அந்தத் தப்புக் காரியத்தைப் பண்ண மாட்டேன்..!”


ஆகவே,  கடன் கொடுக்காமல் தப்பிக்க பல உத்திகள் என்னிடம் இருக்கிறது எனபதையும் மறைமுகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!
=============
ரவிபிரகாஷ்  அவர்கள் அனுப்பியப்  பின்னூட்டம்
கடன் தராமல் இருக்க ஒவ்வொருவரின் சால்ஜாப்புமே டாப்! ரசித்துப் படித்தேன். இதோ, இன்னும் சில சால்ஜாப்புகள்! தேவைப்படுவோர் உபயோகித்துக் கொள்க. எனக்கு ராயல்டி எதுவும் தேவையில்லை! :) 1. அடடா! ஒரு பத்து நிமிஷம் முந்தி வந்திருக்கப்படாது? கையில் இருந்ததையெல்லாம் போட்டு இப்பத்தான், சீப்பா கிடைச்சுதேன்னு ஒரு வாக்குவம் க்ளீனர் வாங்கினேன்! வாசல்லியே கொண்டு வந்தான்! 2. நீ உடனே என்ன பண்றே... மசமசன்னு இங்கே டயத்தை வேஸ்ட் பண்றதை விட்டுட்டு, நேரே போய் பத்மநாபனைப் பிடி! அவனுக்குதான் தொப்புளுக்கு மேல கஞ்சி. காசை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கான்! அவன் கிட்டே கேளு. கண்டிப்பா கொடுப்பான். ஆனா, நான்தான் கை காமிச்சேன்னு மட்டும் அவன்கிட்டே சொல்லிடாதே, என்ன? 3. உங்கிட்டே சொல்றதுக்கு வெக்கப்படுவானேன்... கையில பரம்பைசா இல்லே. ஏதோ ஒரு படத்துல பிச்சைக்காரன் (கவுண்டமணி) சொல்லுவானே, 'அப்ப ஏண்டா நாயே இங்கே நிக்கிறே? என்கூட வா! நாலு தெரு போய் காசு பாப்போம்'னு. அப்படி யாராவது என்னைக் கூப்பிட்டா, பேசாம அவனோட கிளம்பிப் போயிடலாம்னு இருக்கேன்! 4. நீ கேட்டுக் கொடுக்க முடியலையேன்னு ரொம்ப ஃபீலா இருக்குடா மச்சி! அன்னிக்கு இந்த நாய் வந்து அவசரம்னு சொல்லிக் கேட்டபோது நாம மழுப்பி அனுப்பிட்டமே, அந்தக் காண்டுலதான் இப்ப இவன் நமக்குத் தண்ணி காட்டறான்னு மட்டும் தயவுசெஞ்சு நினைச்சுடாதே! பிராமிஸா ஒரு பைசா இல்லடா!

January 08, 2011

காபியில் ஈ- தொடர்கிறது: முடிவடைகிறது.

காபியில் ஈ- தொடர்கிறது.  இத்துடன்  முற்றும்; உத்திரவதமாக முற்றும்!

உண்மையைச் சொல்கிறேன். இது சேஷன் என்ற ஒரு நேயர் ஈ மெயிலில் அனுப்பியவை!
( அட, என்ன பொருத்தம்.. ஈ .. ஈ :) ! அவர் என்மனைவியின் உறவினர் என்பதால் போடாமல் இருக்க முடியவில்லை. மேலும் சேஷன், நினைத்தால் அல்சேஷனாக மாறக்கூடியவர்!


- Waiter! Waiter! There’s a dead fly in my soup.
- Yes, I know! It never learned to swim.


- Waiter! What is that fly doing in my soup?
- It looks as if it is swimming on the back.- Waiter, there’s a fly in my soup.
- Nonsense, that is a raisin.
- Waiter, the raisin just flew away.


- Waiter I’ve found a fly in my soup.
- And what then?
- You’re not expecting a reward, are you?


- Waiter, it is a fly in my soup.
- Well, then it is a pound extra.


- Waiter, there’s a fly in my soup.
- Hush, don’t shout, or else the others want it too.


- Waiter, there’s a fly in my soup.
- I’m sorry, but you’re wrong. That is a wasp.
The fly is in the glass.


- Waiter, there’s a fly swimming in my soup.
- Then you’re lucky. Usually there is not more soup than it walks.


- Waiter, there’s a fly in my soup.
- Calm down. Don’t you see the spider on your spoon?


- Waiter, there’s a fly in my soup.
- Yeah, and then what?
- I asked for a double portion!


- Waiter, this soup tastes unusual.
- Oh, it is only the cook who has forgotten the fly.


- Waiter, this soup tastes awfully!
- Is that so funny? The fly is on holiday.


- Waiter, there are three flies in my soup!
- Then you’re lucky. In the recipe there’s only one.


- Waiter, there are two mosquitos in my soup!
- Yes I know. The cook didn’t find any flies.


- Waiter, why is there a fly on my ice.
- It is just learning to ski.


- Waiter, two flies are rowing in my soup!
- It is a T(W)O RO(W) soup. (Norwegian soup brand)


- Waiter, what is it that is floating around in my soup?
- No idea. I don’t know anything about insects.


- Waiter, there is a dead fly in my soup!
- Yeah, probably it didn’t survive the cooking.


- There’s a fly in my soup. What is that supposed to mean?
- I don’t know, I’m not a fortune teller.


- Waiter, there’s a half dead fly in my soup.
- What about it? I’m only a waiter, and not a vet.


- Waiter, there’s a dead fly in my soup.
- Oh, I’m sorry. I shall get you a new one.


- Waiter, there’s a dead fly in my soup.
- Hush, just let it sleep…..


- Waiter, there’s a living fly in my soup.
- There you are. We do only use fresh supplies.


- Waiter, there’s a fly in my tomato sஒup.
- Yeah, isn’t that funny. It believes it is in the Red Sea.

January 05, 2011

ஏழையின் சிரிப்பில் இறைவன்-கடுகு


வெகுநாட்களுக்குப் பிறகு என் பழைய நண்பரை தற்செயலாக ஒரு விழாவில் சந்தித்தேன். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். பழைய நட்பை புதுப்பித்துக் கொள்ளும் விருப்பத்தினால் அவர் மனைவியையும் அவரையும் வீட்டிற்கு வரும்படி கூறினேன். சுமார் ஒரு மாதம் கழித்து அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு அவருடைய மனைவி சொன்னார். ``இவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி போன வருஷம் நடந்தது. மூன்று இடத்தில் அடைப்பு இருந்ததாக இரண்டு ஸ்டென்ட்கள் போட்டார்கள். கடவுள் அருளால் இவர் பழையபடி ஆகிவிட்டார்'' என்றார்.
``என்ன பிரதர், உனக்கு ஹார்ட்ல அடைப்பா? நம்பவே முடியலையே... எத்தனையோ வருஷமாக வெயிட் கூடப் போடாத ஆசாமி நீ. நடக்கிறதுக்கு அஞ்ச மாட்டே... உனக்கு எப்படிப்பா அடைப்பு வந்தது?'' என்று கேட்டேன்.
``இதையேதான் டாக்டரும் கேட்டார்...''
``ஆமாம்... செலவு  அதிகம் ஆகி இருக்குமே..? ஓ... நீதான் ரிடையர்ட் கவர்மென்ட் ஊழியன் ஆச்சே. உனக்கு இலவசமாகப் பண்ணி இருப்பாங்களே...'' என்று கேட்டேன்.
``...  அதை ஏன் கேக்கறே?.. கவர்மென்ட் அங்கீகரித்த ஒன்றிரண்டு ஆஸ்பத்திரில ஆபரேஷன் பண்ணிக் கொண்டால்தானாம்.  திடீரென்று மார்பில் வலி வந்து அவஸ்தைப்படும் போது செலவைப் பார்த்தால் முடியுமா? பேர் பெற்ற ஆஸ்பத்திரிக்குத்தான் உடனே போனேன். அங்கு அட்மிட் பண்ணி, டெஸ்ட் பண்ணி மூணு நாட்களுக்குப் பிறகு ஆஞ்சியோ பிளாஸ்டி பண்ணினார்கள். மூணு லட்சம் பில்!''
``அடப்பாவமே...''
``கேளேன்... இனிமேல்தான் என் கதையில் சுவையான பாகம் வரப் போகிறது.''
``சொல்லுப்பா...'' என்றேன் ஆர்வத்துடன்..

``உடம்பு சற்றுத் தேறியதும் நான் மத்திய அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு  மத்திய அரசு பென்ஷனர் என்ற காரணத்தால் இலவசமாக மருந்துகள் கிடைக்கும். அங்கு டாக்டரிடம் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நடந்ததைச் சொல்லி மருந்துகள் தருமாறு கேட்டேன்.

”டாக்டர் மிகவும் நல்லவர். அவர் கேட்டார். ”அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைக்குப் போயிருந்தால் இலவசமாக அறுவை சிகிச்சை செய்திருப்பார்களே..சரி...எவ்வளவு செலவு ஆச்சு?' என்று கேட்டார்.
`மூணு லட்சம். டாக்டர்.. ஜாஸ்தி செலவுதான். பில் கொடுத்தால் பணம் திருப்பி (ரீ இம்பர்ஸ்மென்ட்) தருவார்களா?' என்று கேட்டேன்.
`தந்தாலும் தரலாம்.  நான் சொல்கிறபடி நீங்கள் செய்யுங்கள்.இது அவசரமாகச் செய்ய வேண்டிய ஆஞ்சியோ பிளாஸ்டி என்று டாக்டரிடமிருந்து சான்றுக் கடிதத்தை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள்.    ஒரு பெட்டிஷன் எழுதுங்கள். ’திடீரென்று   மார்பு வலி வந்தது.  எமர்ஜன்ஸியாக தனியார் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்தது. உடனே அங்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து விட்டார்கள். அது அரசு அங்கீகாரம் பெற்ற ஆஸ்பத்திரி இல்லை என்றாலும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்ட காரணத்தால் அருகில் இருந்த அந்த ஆஸ்பத்திரிக்கு நான் போய் விட்டேன். . இத்துடன் பில்களை இணைத்துள்ளேன். டாக்டரிடமிருந்து சான்றுக் கடிதத்தையும் இணைத்துள்ளேன். மேற்கூறிய காரணங்களால் , பில் தொகையை எனக்கு திருப்பி அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதிக் கொடுங்கள். உங்கள் மனுவுடன் பில் தொகை, டாக்டர் கடிதம் ஆகியவற்றை இணைத்து அனுப்புங்கள். உங்களுக்குப் பணத்தை திருப்பித் தந்தாலும் தருவார்கள்”  என்று கூறினார்.