May 30, 2017

மனிதன் பறவை ஆகலாம் - பாகம் 2

ஜிம் சொன்னான்: "நான் குடித்திருக்கலாம்ஆனால் இந்த மாதிரி உண்மையை அவர்கள் பார்த்திருக்க  முடியாது.  ஏனெனில்  உலகம்  தோன்றி இத்தனை பெரிய அதிசயம் இதுவரை எங்கும் நிகழ்ந்ததே இல்லை.... நான் ஒரு பெரிய திட்டம்  வைத்திருக்கிறேன்.  நீங்கள்  ‘ம்’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்கோடி கோடியாக உங்கள் காலில் கொட்டுகிறேன் பணத்தை!"

பணமா..?” முல்லி பேச்சில் நாசூக்காகக் கலந்துகொண்டாள்.
"ஆமாம்எக்ஸிபிஷன்வொர்ல்ட் டூர் எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்!'
*அதெல்லாம் எதற்குநான் பேசாமல் என் சொந்த ஊரான யார்க்ஷையருக்குத் திரும்பிப் போகலாம் என்று நினைக்கிறேன்!" என்றார் ஸாம்.
ஏதாவது தத்துப்பித்துன்னு பேச வேண்டாம்நான் சொல்லுகிறபடி கேளுங்கள்!' என்றாள் முல்லி.
'பறக்க வேண்டியவன் நான்ஆகவே நான் சொல்லுகிறபடிதான்..." என்று ஸாம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
முல்லி குறுக்கிட்டு, ''அடாடாஇந்த மனுஷனுக்கு மூளை ஏன் இப்படித் திடீர்னு வக்கரித்துக் கொள்ள வேண்டுமோதெரிய8லயே!.. சரி சரிஇத்தனை நாளாக இல்லாமல் இது என்ன  புது வழக்கம்?.... நான் பார்த்துக்கறேன்!' என்று ஒரு   போடு போட்டதுதான் தாமதம்ஸாம் வாயை மூடிக்கொண்டார்.
"நியூயார்க் மாடிஸன் அவென்யூவின் பரந்த மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டம் தயாரானதும்உங்களுக்கு நான் பிளேன் டிக் கெட் வாங்கி அனுப்புகிறேன்!" என்றான் ஜிம்.
"ஸாமுக்கு டிக்கெட் ஏன்நாம் பிளேனில் போவோம்அவர் அந்தப் பிளேனுக்குப் பின்னல் பறந்து வரட்டும்டிக்கெட் செலவு மிச்சமாகும்!" என்றாள் முல்லி.
"அதெல்லாம் கூடாதுஸாம் அதிக நேரம் பறந்தால் ஆபத்து ஏற்படலாம்என்று ஜிம் கடைசியாகக் கூறியதை முல்லி ஒப்புக்கொண்டாள்.
நியூயார்க்கிலிருந்த ஒரு பிரம்மாண்டமா ஓட்டலில் ஸாம் குழு தங்கியிருந்ததுஹோட்டல் அறை வழிய வழிய வந்து சேர்ந்த நிருபர்கள்போட்டோகிராபர்கள்டெலிவிஷன்காரர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்.
மனிதனாவதுபறப்பதாவது!...”

May 25, 2017

மனிதன் பறவை ஆகலாம் - பாகம் 1


 முன் குறிப்பு:
சுமார் 45 வருஷத்திற்கு முன்பு தினமணி கதிரில், நான் மொழிபெயர்த்த இந்த கட்டுரை சமீபத்தில்  ஒரு வாசக ரசிகர் கண்ணில் பட்டிருக்கிறது.  படித்துப் பார்த்திருக்கிறார்.. அவருக்குப் பிடித்திருந்தது. ‘தாளிப்பு’வில் போட சிபாரிசு செய்ததுடன், அதை தட்டச்சும் செய்து அனுப்பி விட்டார்.
அதை இரண்டு பாகங்களாகப் போடுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் என்னைப் பாராட்டுங்கள்; இல்லாவிட்டால் அந்த  நேயரைக் காய்ச்சுங்கள்.. அடடா. அவசரத்தில் மாற்றி எழுதி விட்டேன்!  அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!
=============================
திடீரென்றுதான் ஸாமுக்குத் தோன்றியது, தம்மால் பறக்க முடியும் என்று. மாதா கோவிலில் வேதத்திலிருந்து சில அத்தியாயங்களைப் படித்துக் கொண்டிருந்த ஸிஸ்டர் மின்னியின் சொற்பொழிவை வேண்டாவெறுப்பாக , ஸாம், அவர் மனைவி முல்லி இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். "ஆழமான நம்பிக்கை மலையையும் நகர்த்தும்" என்ற வேத வாக்கியத்திற்கு அவர் அப்போது விளக்கம் தந்துகொண்டிருந்தார்.
"கோவிலில் கூடியிருக்கும் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து மலையடிக்குப் போய், "மலை நகர வேண்டும்" என்று திடநம்பிக்கையுடன் விரும்பினால் போதும்; அது தானாகப் பத்தடி ஒதுங்கிப் போகும். ஆனால் மலையை நகர்த்த வேண்டிய அவசியம் இப்போது யாருக்கும் இல்லையாதலால், நம்பிக்கையால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை" என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்....
கடைசியாகத் தொண்டை கிழிய அந்த வேத வாக்கியத்தைப் பாடி முடித்துவிட்டுச் சபை கலைந்தது.
வெளியே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த முல்லியும் ஸாமும் காலிபோர்னியாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஸாமுக்குத் தெரியும், காலிபோர்னியாவிலேயே நிரந்தரமாகத் தங்க நினைக்கிறாள் முல்லி என்பது. ஏனெனில் முல்லியாவது, அவர்களது பெண் லாவினியாவது காலிபோர்னியாவை ஒரு நாளைக்கு நாற்பது தரமாவது புகழ்வார்கள். லாவினியாவுக்கு ஹாலிவுட்டில் பெரிய சினிமா ஸ்டாராக ஜொலிக்க ஆசை. ஆக, அவர்களுக்கு இங்கிலாந்து திரும்பும் எண்ணமே கிடையாது.
பஸ் வருகிற வழியாக இல்லை. சளசளவென்று முல்லி ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள்- சாதாரண பெண்களின் வழக்கப்படி. ஸாம் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார்-சாதாரண ஆண்களின் வழக்கப்படி, ஆனால் அவர் மனது மட்டும் நம்பிக்கை, மலை, நகர்தல்- இவைகளை அசை போட்டுக்கொண்டே இருந்தது. நகர்த்துவது என்பது பெரிய விஷயம். சின்னதாக ஆரம்பித்துத்தான் பெரிய விஷயங்களுக்குப் போக வேண்டும். சரி, இப்போது நம்பிக்கையால் நமக்கு வேண்டிய டவுன் பஸ்ஸை வரவழைப்போம்.
கண்களை/ மூடிக்கொண்டு ஸாம் முணுமுணுத்தார்: "எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கண்களைத் திறக்கும்போது ஒன்பதாம் நம்பர் பஸ் வந்திருக்கும்". அவர் இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னால் முல்லி அவரை உலுக்கி, "பஸ் வந்து விட்டது, அதற்குள் என்ன தூக்கம்?" என்றாள்.
ஸாம் கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம், அதே பஸ் வந்து நின்று கொண்டிருந்தது! தற்செயலாக இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஸாமுக்கு அந்த சக்தியின்மேல் பலத்த நம்பிக்கை விழுந்துவிட்டது. பஸ் அவர்கள் இறங்க வேண்டிய இடத்துக்கு வந்து நின்றது. முல்லியும் ஸாமும் வீட்டை நோக்கி நடந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்த கடல், அலை வீசிக்கொண்டிருந்தது. அந்தக் கடலுக்கு வெகு தூரத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் மாளிகைகள்: கடல் பறவைகள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில்தான் ஸாமுக்குத் திடீரென்று தோன்றியது, மனிதன் பறக்க முடியும் என்று!

May 15, 2017

1. ஒரு அம்மா 2. ஒரு பையன்

1. MOTHER'S DAY SPECIAL: வியப்புக்குரிய ரோஸ் கென்னடி

அமெரிக்க அதிபராக இருந்த J.F. கென்னடியின் அம்மா ரோஸ் கென்னடி ஒரு துடிப்பான பெண்மணி. (இவரைப் பற்றிய ஒரு சுவையான துணுக்கை ‘தாளிப்பு’வில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.) அதன் சுட்டி: அம்மாவுக்கு அட்வைஸ்.


“எங்கள் குடும்பத்தை ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் பசை எங்கள் அம்மாதான்” என்று கென்னடி ஒரு சமயம் கூறியிருக்கிறார்.
ரோஸ் கென்னடி ஒன்பது குழந்தைகளைப் பெற்றவர். ஒரு சமயம்,  தன் மகன் TED KENNEDYக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு கூட்டத்தில் அவர் கூறியது...”நான் ஒன்பதாவது தடவை கர்ப்பமாக இருந்தபோது சிலர் என்னிடம் கேட்டனர், ‘இப்படி கர்ப்பமடைவதால் உன் அழகு குலைந்து போய்விடாதா?’ என்று.” அவர்களுக்கு அப்போது நான் ஏதும் பதில் கூறவில்லை. இப்போது இந்தக் கூட்டத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். நான் ஒன்பதாவது குழந்தையைப் பெற்றெடுக்காமல் இருந்தால், இன்று ஒரு பிள்ளையுமில்லாதவளாக ஆகி இருப்பேன்” என்றார்.
         கூட்டத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போய்க் கண்களைத் துடைத்துக்கொண்டனர்.
ரோஸ் கென்னடி  ஒரு சமயம் சொன்னது: கடவுள் தர மறந்தது. நான் அவ்வப்போது எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வேன்: என் பிள்ளை, பெண்களுக்கு அழகு, கெட்டிக்காரத்தனம், நண்பர்களைத் தேடிக் கொள்ளும் திறமை, மற்றவர்களின் மதிப்பைச் சம்பாதிக்கும் வல்லமை, சுறுசுறுப்பு எல்லாம் கொடுத்த கடவுள், ஒன்றை மட்டும் கொடுக்கவில்லை-அவர்களுக்கு நீண்ட ஆயுள்.  இதை அவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம்
        

May 05, 2017

மிகச் சிறிய "ஷெர்லாக் ஹோம்ஸ்' கதை


     ஆர்தர் கானன் டாயில் எழுதியது!

முன் குறிப்பு:
 மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மனைவி மேரி ராணி, ஒரு அழகிய பொம்மை வீடு கட்டினார். அதில் ஒரு அறையில் புத்தக ஷெல்ஃப்கள் வைத்தார். அதில் பல குட்டிப் புத்தகங்களை வைக்க விரும்பினார். அதற்காக பல பிரபல எழுத்தாளர்களை அணுகி, ஒரு மினி புத்தகம் அளவு வரக்கூடிய கதையோ, கட்டுரையோ எழுதித் தரும்படி கேட்டார்
பிரபல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய ஆர்தர் கானன் டாயலிடமும் கேட்டார். அவர் எழுதித் தந்த கதை ஒன்றை அங்குல உயரப் புத்தகமாகத் தயாரித்து பொம்மை வீட்டு புத்தகசாலையில் வைத்தார்.
ஆர்தர் கானன் டாயில் எழுதிய 
அந்தக் கதை....

வாட்ஸன் கற்றுக் கொண்ட வித்தை 

ஷெர்லாக்-ஹோம்ஸுடன் காலைச் சிற்றுண்டியை சாப்பிட மேஜையின் முன் வாட்ஸன் உட்கார்ந்தார். ஹோம்ஸை உற்றுப் பார்த்தபடி இருந்தார். ஹோம்ஸ்  தலையை  நிமிர்ந்து  வாட்ஸனைப்  பார்த்தார்.
"வாட்ஸன்... என்னவோ யோசனையில் ஆழ்ந்திருக்கிறாயே, எதைப் பற்றி?'  என்று கேட்டார்.

"உன்னைப் பற்றித்தான்...'
"என்னது... என்னைப் பற்றியா?'
"ஆமாம்... ஹோம்ஸ், நீ செய்கிற துப்பறியும் வித்தைகள் மிகவும் சாதாரணமானவை. இருந்தும் பொதுமக்கள் இதில் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக  இருக்கிறது.'