July 31, 2010

மூன்று சிலேடைகள்--அசிமாவ் தேர்ந்து எடுத்தது

 ஆம்னி  (OMNI)  என்ற  பத்திரிகையை புத்தகசாலையில் அவ்வப்போது படிப்பதுண்டு.
அதில் ஒரு சமயம் ( 1986?) ஒரு சிலேடைப் போட்டி வைத்திருந்தார்கள்.  ஒரே வாக்கியத்தில் அதிக பட்ச சிலேடைகள் எழுத வேண்டும். பரிசு: வி. ஸி. ஆர். ( C D க்கு  மூதாதை  V.C.R.) போட்டிக்கு வந்ததில் பரிசுக்குரியதைத் தேர்ந்தெடுத்தவர்: பிரபல எழுத்தாளர் இஸாக் அசிமாவ்.

அந்த சிலேடையை ஆங்கிலமும் தமிழும் கலந்து இங்கு தருகிறேன்.

மூன்று சகோதரர்கள்  தங்கள் கிராமத்தில் மாமிச உற்பத்தி பண்ணையை ( MEAT FARM)  ஆரம்பித்தார்கள். நகரத்தில் இருந்த அவர்களுடைய அம்மாவிற்கு பண்ணையைப் பற்றிக் கடிதம் எழுதினார்கள். அப்படியே பண்ணைக்கு ஒரு பெயரைச் சொல்லும்படி கேட்டிருந்தார்கள். (அவர்களுடைய அம்மா சிலேடைப் பிரியர் எனபதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.)

அம்மா ஒரே வார்த்தையில் பெயர் வைத்தார்.  ”FOCUS என்று வைக்கவும்” என்று எழுதினார். ஏன், எதற்கு என்று கேட்காமல் பிள்ளைகள் அப்படியே பெயர் வைத்தார்கள். ( ”என்னது, இப்படி கூட பிள்ளைகள் இருக்கிறார்களா?” என்று கேட்காதீர்கள். இது கற்பனைக் கதை!)

சில நாட்கள் கழித்து அவர்களுடைய அம்மா பண்ணையைப் பார்க்க வந்தார்.
ஒரு பிள்ளை, "எதற்காக    FOCUS  என்ற பெயரை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டான்” ” ஓ, அதுவா? FOCUS. என்பது SUN-னின்  RAYS  ( கிரணங்கள்) (MEET)  மீட் பண்ணும் இடம் இல்லையா? அதனால்” என்றார். அதைத்தானே நீங்கள் செய்கிறீர்கள்” என்றார்.
பிள்ளைக்குப் புரியவில்லை.
“உனக்குப் புரியவில்லையா?  இங்கு நீங்கள் MEAT உற்பத்தி செய்கிறீர்கள். இந்த பண்ணைiயில் என்னுடைய SON'S RAISE MEAT.  ஃபோகஸ்  (FOCUS)  என்பது என்ன?
FOCUS IS WHERE  SUN'S RAYS MEET!"  என்றார் அம்மா.

  SUN'S (SON'S)  RAYS (RAISE)  MEET (MEAT) ==  ஆக மூன்று சிலேடைகள்!

பின் குறிப்பு:  அசிமாவ்  ஒரு ஜீனியஸ். அவரைப்பற்றி  ஒரு தனிப் பதிவு  போட இருக்கிறேன்.

வாரன் பஃபெட் பொன்மொழிகள்

பால ஹனுமான் கொண்டு வந்த சில வாரன் பஃபெட் பொன்மொழிகள்

Here are some nuggets of wisdom from Warren Buffett's letter to shareholders
------
* By year end, investors of all stripes were bloodied and confused, much as if they were small birds that had strayed into a badminton game.

* The watchword throughout the country became the creed I saw on restaurant walls when I was young: "In God we trust; all others pay cash."

* Economic medicine that was previously meted out by the cupful has recently been dispensed by the barrel. These once-unthinkable dosages will almost certainly bring on unwelcome aftereffects.

கோளறு பதிகம்,-8 பலபல வேடம்

பாடல்-8
பலபல வேடம் ஆகும் பரன் நாரி பாகன்
      பசு வேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
      வருகால மான பலவும்
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

பல பல வேடமாகும் பரன் - அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள் புரியும் பரமன்
நாரி பாகன் - பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்
பசுவேறும் எங்கள் பரமன் - விடையின் மேல் ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து - நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் - மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை. 

July 28, 2010

சிலேடைப் புலி கி.வா.ஜ

  கி.வா.ஜ  அவைகளின் பாரதி பாடல் விளக்கத்தைப் பார்த்து  திரு பால ஹனுமான் நிறையப்   பின்னூட்டங்களைப்  போட்டுள்ளார். அவற்றைத் தொகுத்து  ஒரு பதிவாகவே போட்டுள்ளேன். திரு பால ஹனுமான் அவர்களுக்கு நன்றி
இன்று ஒரு ஆங்கில TRIPLE PUN போடுவதாக  இருந்தேன். நாளை போடுகிறேன்.

புடவையின் சிறப்பு...
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்
வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.

வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,

'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.

'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.

'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.

உள்ளே வெளியே
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".

July 27, 2010

புள்ளிகள்: கி.வா.ஜ

ஒட்டுமி ரண்டுளம்
மகாகவி பாரதியாரின் பாடல்களின் அழகை விவரித்து   ஒரு உரையை டில்லித் தமிழ் சங்கத்தில் கி.வா.ஜ ஒரு உரை நிகழ்த்தினார் (1974 வாக்கில்!)
இத்தனை வருஷம் கழிந்த பிறகும் அவர் உரையில் சில பகுதிகள் அப்படியே நினைவில் உள்ளன.
 முதலில் பாரதியார் பாடலைப் பார்க்கலாம்.

மாலைப் பொழுதினிலே.
    மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
    வானையும் கடலையும் நோக்கி இருந்தேன்;
    மூலைக் கடலினை அவ் வானவளையம்
    முத்தமிட் டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
    நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
    நேரம் கழிவதிலும் நினைப்பின்றியே
    சாலப் பலபல நற் பகற்கனவில்
    தன்னை மறந்த லயம் தன்னில் இருந்தேன்.

    ஆங்கு அப்பொழுதில் என் பின்பு றத்திலே,
    ஆள்வந்து நின்று எனது கண் மறைக்கவே,
    பாங்கினிற் கையிரண்டும் தீண்டி அறிந்தேன்.
    பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்,
    ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;
    ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்;
    ''வாங்கி விடடி கையை யேடி கண்ணம்மா!
    மாயம் எவரிடத்தில்?'' என்று மொழிந்தேன். 

கடற்கரையில் தலைவன் தனியே உட்கார்ந்து இருக்கிறான். அவனை பார்க்கத் தலைவி ஓசைப்படாமல் வருகிறாள். அவன் பின்னே வந்து அவனுடையக் கண்களைப் பொத்துகிறாள். அவள் கையைத் தொட்டதும் அவனுக்கு யார் என்று தெரிந்து விடுகிறது. என்றாலும் அதற்கு முன்னேயே அவனுக்குத் தெரிந்து விட்டதாம். எப்படி? அவள் உடுத்தி இருக்கும் பட்டு உடையின் மெலிதான வாசனையை  முகர்ந்து மூக்கு கண்டுபிடித்து உணர்த்திவிட்டதாம். மூக்குக்கும் முன்பேயே அவன் உள்ளத்தில் பெருகிய உவகை அவனுக்கு அறிவித்து விட்டதாம்.அதற்கு முன்பு, ஒன்று பட்ட இரண்டு மனங்களில்,  ஒன்றில் மகிழ்ச்சி காரணமாகத்  துடிப்பு அதிகரித்தால், மற்ற உள்ளத்திலும் துடிப்[பு அதிகரிக்கும். அப்படி அதிகரித்ததால் அந்த துடிப்பு கண்டுபிடித்து விட்டதாம்!  இதை விஞ்ஞான பூர்வமாக  SYMPATHETIC VIBRATION என்பார்கள். தலவைனை பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியால் அவள் உள்ளத் துடிப்பு அதிகரிக்கிறது. அதே  FREQUENCY-யை  உடைய தலைவன் உள்ளத்திலும் அது தன்னிச்சையாக துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. தொடாமலேயே, பட்டுடை  வாசனையை முகர்வதற்கு முன்பேயே,   உவகை பெருகுவதற்கு முன்பேயே,  இதயத்  துடிப்பு அவனுக்கு உணர்த்திவிட்டது!
இதைத் தான் ‘ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன்’ என்று: பாரதியார் கச்சிதமாகச் சொன்னார்.
கி.வா.ஜ. அபாரமாக விளக்கினார்.
(நான் அதை இங்கு ஆங்கிலம் கலந்து  காமா சோமா என்று எழுதி இருக்கிறேன்.).

புள்ளி கள்: பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட்  கேம்ரூன்  சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயார்க் நகரத்திற்கு ரயிலில் சென்றார்.  அங்கு பென் ரயில்  ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த ‘ஹாட்-டாக்’  கையேந்தி பவனில் அவரும் நியூ யார்க் மேயர்  ப்ளூம்பெர்க்கும்  ’ஹாட் டாக்’ சாப்பிட்டார்கள்!

மகிழ்ச்சியை விதைப்போம்

A GOOD CREED
If any little word of ours
Can make one life the brighter;
If any little song of ours
Can make one heart the lighter;
God help us speak that little word,
And take our bit of singing
And drop it in some lonely vale
To set the echoes ringing.

If any little love of ours
Can make  one life sweeter;
If any little care of ours
Can make one step the fleeter;
If any little help may ease
The burden of another;
God give us love and care and strength
To help along each other.

If any little thought of ours
Can make one life the stronger;
If any cheery smile of ours
Can make the brightness longer;
Then let us speak the thought today
With tender eyes aglowing,
So God may grant the weary one
Shall reap from our  glad sowing.
                             - Author Unknown.


From: Poems that touch the heart .Complied by A L Alexander

July 24, 2010

கோளறு பதிகம், -7 :வேள்பட

பாடல்-7:
வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
      மடவான் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழி லங்கை அரையன்ற னோடும்
      இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

வேள் பட விழி செய்து அன்று - அன்று (மன்மதன) வேள் சாம்பலாக நெற்றிக் கண்ணைத் திறந்து

விடைமேல் இருந்து - எருதின் மேல் அமர்ந்து

மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து

வாள்மதி, வன்னி,  கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும்  திருமுடி மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.

July 21, 2010

கல்லும் கரையும் கீதம்

ஜான் ஹிக்கின்ஸ்  பாகவதர்
சில வருடங்களுக்கு முன்பு,  ஜான் ஹிக்கின்ஸ்  (கன்னட்கட்டில் உள்ள வெஸ்லேயன்)   என்ற, அமெரிக்கப் பல்கலையில் இசைப் பேராசிரியர் கர்நாடக இசையைக் கற்றுகொள்ள தமிழ்நாட்டிற்கு வந்தார். இங்கு  திரு டி.விஸ்வநாதனின்   (பாலசரஸ்வதியின் தம்பி )அவர்களிடம் கற்றுத்  தேர்ச்சி அடைந்தார்.. பளிச்சென்று வெள்ளை வேஷ்டி, ஜிப்பா அணிந்து, மேடையில் உட்கார்ந்து அட்சர சுத்தமாகவும் அர்த்தம் தெரிந்தும் கம்பீரமாகக் கச்சேரி.  செய்வார். கேட்கக் கேட்க மெய் சிலிர்க்கும்.

ஒரு சமயம் இவர் சில நண்பர்களுடன்  இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முக்கியமாகப் பல தலங்களுக்குச்  சென்றர். அப்போது உடுப்பிக்கும் போனார். அங்கே கிருஷ்ணர் கோவிலுக்குள் தன் நண்பர்களுடன் நுழையப் போகும் சமயத்தில் கோவில் அர்ச்சகர் அவரை தடுத்து நிறுத்தினார். “  ஹிந்து மதத்தினர் மட்டும்தான் கோவிலுக்குள் வரலாம்” என்றை. “ ஓ, அப்படியா. நான் உள்ளே வரவில்லை. நீங்கள் போய்  தரிசனம் செய்து விட்டு வாருங்கள்” என்று நண்பர்களிடம் சொன்னார். அவர்களுக்குப் போக மனம் வரவில்லை. அர்ச்சகரிடம் ஹிக்கின்ஸ்: ”நான் உள்ளே வரவில்லை. இங்கிருந்தே தரிசித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன வேண்டுகோள்”: என்றார்.

அர்ச்சகர் “என்ன.. சொல்லுங்கோ” என்றார்.

“ இங்கேயே நின்று கொண்டு கிருஷ்ணன் மீது நான் ஒரு பாட்டுப் பாட ஆசைப் படுகிறேன்… பாடலாமா?” என்று கேட்டார்.

” தராளமாகப் பாடலாம்" என்று அர்ச்சகர் சொன்னதும் கண்களை மூடிக்கொண்டு ‘கிருஷ்ண நீ பேகனே” என்று நெஞ்சுருகப் பாட ஆரம்பித்தார். அவரை சுற்றி பக்தர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவரது இசை அவர்களை மெய்மறக்கச் செய்தது.
ஹிக்கின்ஸ் பாடி முடித்ததும், அர்ச்சகர் உணர்ச்சிவசப்பட்டு, அவரை அணைத்துக் கொண்டு “ உள்ளே வாங்க.. அற்புதமாகப் பாடினீர்கள். உங்களை மாதிரி பக்திமான்களுக்கு யாரும் தடை சொல்ல முடியாது,” என்றார். எல்லாருடைய கண்களும் கலங்கி விட்டன.
பின் குறிப்பு1:
இந்த தகவல் பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கத் தகவல் சர்வீஸின் வெளியீடான SPAN பத்திரிகையில் வந்தது. சுந்தரம் (?) என்பவர் எழுதி இருந்தார், (ஹிக்கின்ஸுடன் சென்றவர்களில் சுந்தரமும் ஒருவராம்.)  அதை வெட்டி வைத்திருந்தேன். இப்போது கைக்கு அகப்படவில்லை.

பின் குறிப்பு 2:  துரதிர்ஷ்டம். சிகாகோவில் ஒரு தெருவைக் கடக்கும் போது கார் மோதி அவர்  உயிரிழந்தார் (1984)

பின் குறிப்பு 3: அந்த கால கட்டத்தில் குமுத்தில் வந்த ஜோக்.

புள்ளிகள்: எச். ஜி. வெல்ஸ்

என் தாய் வேலைக்காரி'

பல வருஷங்களுக்கு முன்பு படித்த தகவல். இந்த தகவலை எத்தனை பேரிடம் சொல்லி இருப்பேன் என்று எனக்கே தெரியாது.

பிரிட்டிஷ் எழுத்தாளர் எச். ஜி. வெல்ஸ் ஒரு பெரிய வீடு கட்டி முடித்திருந்தார். வீட்டைப் பார்க்க அவருடைய நண்பர் வந்திருந்தார். எல்லா அறைகளையும் சுற்றிக் காண்பித்தார். மாடியில் ஒரு சின்ன அறையைக் காட்டி, ``இதுதான் என் அறை'' என்றார் வெல்ஸ்.

``கீழே ஒரு பெரிய அறையைக் காட்டினாயே, அது உன் வீட்டுப் பணிப் பெண்ணுக்கு என்று சொன்னாயே... அந்த அறையை நீ உனக்கு வைத்துக் கொண்டு இந்த அறையை அவளுக்குக் கொடுத்து விடுவதற்கு என்ன? எல்லா வீடுகளிலும் பணிப் பெண்ணிற்கு சிறிய அறைதான் கொடுக்கிறார்கள்.'' என்றார் நண்பர்.

``ஆமாம். உண்மைதான்... அதனால்தான் நான் பெரிய அறையை பணிப்பெண்ணிற்குத் தருகிறேன். காரணம், என் அம்மா ஒரு பணிப் பெண்ணாக இருந்தவள்'' என்றார் வெல்ஸ்!

July 18, 2010

கேரக்டர்: மாணிக்கம் -கடுகு

ஜவஹர்லால் நேருவின் வெயிஸ்ட் கோட் போல, சர்ச்சிலின் சுருட்டு போல, சார்லி சாப்ளினின் தொப்பியைப் போல, மேஸ்திரி மாணிக்கத்திற்கு ஒரு இமேஜை அளிப்பது அவர் கையில் இருக்கும் கொல்லுருதான்!
இவர் தங்க ஸ்பூனுடன் பிறக்கவில்லை. இரும்புக் கொல்லுருவுடன் பிறந்தவர்; அதைப் பற்றி மிகவும் பெருமையும் படுபவர். தன் தொழிலின் மேல், தன் கை வித்தையின் மேல் அபார மதிப்பு.
இத்தனைக்கும் வேலையில் அவர் மன்னன் அல்ல. அதில் உள்ள குறைபாடுகளைத்  தன் பேச்சினால் ஈடுகட்டிவிடுவார்!
நல்ல உயரம், `வி' கழுத்து பனியன் மாதிரியான சட்டை கட்டம் போட்ட வேட்டி. பெரிய முண்டாசு. பெரிய மீசை. கழுத்தில் தாயத்து. வாயில் புகையிலை. வலது கையில் கொல்லுரு. இடது கையில் ஒரு பித்தளை (சாப்பாட்டுத்) தூக்கு. பார்த்தவுடனேயே இவர் ஒரு கொல்லத்துக்காரர் என்பது தெரிந்து விடும்.!
"என்னப்பா மாணிக்கம். கிணற்றடியில் ஒரு சின்ன மேடை போடணும். சௌகரியப்பட்டபோது போடு'' என்று சொல்லி விடுங்கள் போதும்; ஆரம்பித்து விடுவார் மாணிக்கம்! "சாமி... இன்னும் ஆறு மாசத்துக்கு ஒழிவு கிடையாது. பொங்கலுக்குத் தொறந்துடணும்னு திட்டம் போட்டுட்டாங்க, பேஸ்மெண்டே வரலை சினிமா தியேட்டர்... மாணிக்கம், வேலை மளமளன்னு ஆவட்டும்'னு சொல்றாரு காண்ட்ராக்டர்.. அவசரப்பட்டா ஆவறதுக்கு எலெக்ட்ரீ வேலையா?...கடகால் போட்டால்,  பச்சைக் குழந்தையைப் பாத்துக்கற மாதிரி கவனிச்சுக்கிட்டு இருக்கணும்!

கோளறு பதிகம் -6: செப்பிள

பாடல் -6
செப்பிள முலைநன் மங்கை ஒருபாகம் ஆக
      விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்த் என்
      உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
      வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான பெண்மை கொண்ட மங்கையான உமையன்னை தன்னில் ஒரு பாகமாக ஆக

விடையேறு செல்வன் அடைவார் - ரிஷபத்தில் ஏறுகின்ற,  செல்வனாம் சிவபெருமான்  அடைபவர்கள் 

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு கூறத்தக்க இள மதியமும் கங்கையும்  (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து  நின்றதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம்  போன்ற எந்த நோயும்

வினையான வந்து நலியா - வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை  (அவை வராமல் இருக்கும்: அல்லது    வந்தாலும் வாட்டாமல்   நல்லவையாய் இருக்கும்)

July 17, 2010

நெஞ்சைத் தொட்ட பாடல்: GOD THE ARTIST

சில வருஷங்களுக்கு முன்பு பழையப் புத்தககடையில் ஒரு புத்தகத்தை வாங்கினேன். தலைப்பு:   Poems that touch the heart. (மனதைத் தொட்ட பாடல்கள்.).
ஏ.எல் அலெக்ஸாண்டர் என்பவர் தொகுத்தது.  அமெரிக்க ரேடியோவில் முப்பதுகளில் மனித நேய நிகழ்ச்சிகளை  நடத்தி மிகவும் பிரபலமடைந்தவர். மிகச் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் என்ற விருதை நியூ யார்க் மேயர் வழங்கி உள்ளார். இந்த 400 பக்கப் புத்தகம் 1941-லிருந்து 1963-க்குள் 31 பதிப்புகள்  வெளிவந்துள்ளது. அதிலிருந்து ஒரு பாடல்.

GOD THE ARTIST 
God, when you thought of the pine tree, 
    How did you think of a star?
God, when you patterned a bird song,
    Flung on silver string,
How did you know the ecstasy
    That crystal call would bring?
How did you think of a bubbling throat
     And a beautifully speckled wing?

God, when you fashioned a raindrop,
    How did you think of a stem
Bearing a lovely satin leaf
    To hold the tiny gem?
How did you know a million drops
     Would deck the morning's hem?
Why did you mate the moonlight night
     With the honey suckle vines?
How did you know Madeira bloom
     Distilled ecstatic wines?
How did you weave the velvet dusk
     Where tangled perfumes are?
God, when you thought of a pine tree
     How did you think of a star?

              -- Angela Morgan

கம்பன் ( பாடிய )  ரசித்த  ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ பாடல் நினைவுக்கு வருகிறதா?

Madeira is a fortified Portuguese wine  made in the Madeira islands.
 ----------------------
மதி அவர்களின் பின்னூட்டம்:  மூங்கில் இலை மேலே, கம்பன் பாடியது இல்லை என்று நினைக்கிறேன். கம்பர் ஒருநாள் வயல்வெளி வழியாகச் செல்லும்போது ஏற்றக்காரர் ஒருவர் ”மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே” என்று பாடியது கம்பர் காதில் விழுந்தது. அடுத்தவரியை நின்று கேட்க நேரமில்லை, சென்றுவிட்டார். ஆனால் அவரால் அன்று தூங்க இயலவில்லை. அடுத்தவரி என்னவாக இருக்கும் என்று யோசித்து, யோசித்து, அவரால் முடிவுக்கு வர இயலவில்லை. மறுநாள் அதே இடத்திற்கு சென்று ஏற்றக்காரர் வரும்வரை காத்திருந்தார். “மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே” என்று முடித்தபோது கமபர் ஆனந்தத்தில் துள்ளிகுத்தித்தார் என்று சொல்லக்கேள்வி.
மதி

மதி  அவர்களுக்கு நன்றி. திருத்தம் செய்து விட்டேன். கம்பனின் ’ஆழியான் ஆழி’ பாடல் ஞாபகத்தில் தவறாக  இதை எழுதி விட்டேன் - கடுகு

July 14, 2010

ஆஹா கம்பெனி: ஆஹா சேர்மன்! -கடுகு

சில வாரங்களுக்கு முன்பு வரை பெர்க்‌ஷைர்  ஹத்வே   என்ற அமெரிக்கன்  கம்பனியின்  பெயரையோ  அல்லது  அதன் சேர்மன்  வாரன்  பஃபட்டின்  பெயரையோ நான்  கேள்விப்பட்டதில்லை. சேர்மன்  வாரன்  பஃபெட்டிற்கு வயது  80! உலகிலேயே மூன்றாவது  பெரிய  பணக்காரராம்!
தற்செயலாக அந்த கம்பெனியின் ஆண்டறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. சுமார் 100 பக்க அறிக்கையில் 90 பக்கத்தில் இருந்தது எதுவும் எனக்குப் புரியவில்லை. போதாதற்கு அவை மில்லியன், பில்லியன் என்ற கணக்கில் இருந்தன. 2009 ஆண்டு அந்தக் கம்பெனி ஈட்டிய லாபம் சுமார் 22 மில்லியன் டாலர்கள். ( இது எவ்வளவு ரூபாய் என்றெல்லாம் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்காதீர்கள்!)
     நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இதன் ஒரே ஒரு ’ஏ’’ ஷேரின் விலை: ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலர்  விலை. (சுமார்  55 லட்சம் ரூபாய்!)
ஆண்டறிக்கையில் அச்சாகியிருந்த சேர்மனின் உரை மிக மிக சுவையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.  அதே சமயம் நேர்மையான உரையாகவும் இருந்தது. (இந்த உரை காபிரைட் செய்யப்பட்டது என்று போட்டிருக்கிறார்கள்!)
   தான் செய்த தவறுகளையும் தப்புக் கணக்குகளையும் வாரன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.    அதனால்  எத்தனை பில்லியன்  நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.

புள்ளிகள்: ப்ரூக் ஷீல்ட்

ஒரு சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஹாலிவுட் நடிகை ப்ரூக் ஷீல்ட்  தன் கணவருடன் வந்திருந்தார்.  ப்ளூ லகூன் என்ற படத்தின்   கதாநாயகி அவர்.   இந்தியாவிற்கு வருவதற்குச்  சிலமாதங்களுக்கு முன்பு தான் ரெவ்லான் என்ற பிரபல அழகு சாதன நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராகப் ப்ரூக் ஷீல்ட். ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தார்..
    பத்திரிகை நிருபர்களின் கூட்டம் வழக்கமான ஹாலில் இல்லாமல் விக்யான் பவன் லௌஞ்சிலேயே நடந்தது. வீட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்து பேசுவது போல் நிருபர் கூட்டம் பந்தா இல்லாமல் நடந்தது.. ப்ரூக் ஷீல்ட்டின் கணவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். பல நிருபர்கள் கேள்வி கேட்டார்கள். சவ சவ கேள்விகள் தான். சிரத்தை இல்லாமல் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த  ப்ரூக் ஷீல்ட்டின் கணவரின் கை விரல்களைப் பார்த்தேன். அவர் எல்லா விரல்களிலும் நெயில் பாலிஷ் போட்டிருந்தார். உடனே ப்ரூக் ஷீல்டின் விரல்களைப் பார்த்தேன் எந்த விரலிலும் நெயில் பாலிஷ் இல்லை.. ஏன் லிப்ஸ்டிக் கூட அவர் போட்டுக் கொள்ளவில்லை.

கோளறு பதிகம்- 5 --வாள்வரி

பாடல் -5
வாள் வரி அதள தாடை வரிகோவ ணத்தார்
      மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடு கொலை யானை கேழல்
      கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை - வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும் ( அதள் = தோல்)

வரிகோவணத்தர் - வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடை ஆடையும் அணிந்த சிவபெருமான்

மடவாள் தனோடும் உடனாய் - அன்பு மனையாளோடு சேர்ந்து

நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - தானாக என் உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்

கோளரி உழுவையோடு - கொடுமையே வடிவான புலியும் ( உழுவை - புலி)

கொலை யானை - பயங்கரமான யானையும்

கேழல் - காட்டுப் பன்றியும்

கொடு நாகமோடு - கொடிய நாகமும்

கரடி - கரடியும்

ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

July 11, 2010

கமலாவும் எலியும் -கடுகு

 கமலாவும் எலியும் -கடுகு
இரவு மணி பன்னிரண்டு இருக்கும். ஏழு ஸ்வரங்களையும் தாண்டி (என் அருமை மனைவி கமலா புதிதாகக் கண்டுபிடித்திருந்த) எட்டாவது ஸ்வரத்தில் அவள் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தாள்! எனக்கு தூக்கம் வரவில்லை. அதற்குக் காரணம் முன் நாள் அவளுடைய அருமைத் தம்பி தொச்சு, "அத்திம்பேர், டூ தௌஸண்ட் லோன் வேண்டும்" என்று கேட்டிருந்தான். அவன் இங்கிலீஷில் பேசினால் கடன் கேட்கப் போகிறான் என்று அர்த்தம்! அவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது சமையலறையிலிருந்து டமால் என்று ஓசை. ஏதோ ஓர் பாத்திரம் விழுந்து உருண்டோடிய ஓசை.
கமலா சட்டென்று விழித்துக் கொண்டு, ”என்ன... சமையலறையில் நீங்க ஏதாவது பூனைக்காரியம் செய்றீங்களா?” என்று கேட்டாள்.
”பூனைக் காரியமும் இல்லை; பானைக் காரியமும் இல்லை. சமையலறையில் ஏதோ பாத்திரம் விழுந்திருக்குது” என்றேன்.
”பாத்திரம் எப்படித் தானாக விழும்? எலியாத்தான் இருக்கும்... முதலில் சமையலறைக் கதவை இழுத்து மூடிட்டு வாங்கோ” என்றாள்.
’அப்படியே ஆகட்டும்’ என்று சொல்லிவிட்டு மூடி விட்டு வந்தேன். மீண்டும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மற்றொரு பாத்திரம் விழுந்த ஓசை.

”நாசமாகப் போகிற எலி. ஜன்னல் வழியாக ஓடிப் போகாமல் பிராணனை வாங்கறது. முதலில் எலியை விரட்டப் பாருங்கோ... போன வருஷம் எலி வந்ததே, அப்ப என்ன ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
”சரிதான், பொங்கலுக்குப் பட்டுப் புடவை வேண்டும்னு நீ நேத்து கேட்டதே மறந்து போயிட்டுது. போன வருஷம் எலி வந்ததா எனக்கு ஞாபகம் இருக்கப் போகிறது!"என்றேன்.
”ஆமாம்... எப்படி ஞாபகம் இருக்கும்னேன்? அந்த எலி, உங்கம்மாவின் பட்டுப்புடைவையை ரிப்பனாகக் கடித்துக் குதறிப் போட்டதும், என்னவோ நான் வளர்த்த எலிதான் புடைவையைப் பாழ் பண்ணிவிட்ட மாதிரி, உங்கம்மா வாய்க்கு வந்த வசவுகளாலும், ஏன் வாய்க்கு வராத வசவுகளாலும் எனக்கு அர்ச்சனை பண்ணினாளே, அது எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கும்?”
விளம்பர இடைவேளைக்கு நிறுத்துவது மாதிரி அவள் பேச்சை (ஏச்சை?) நிறுத்த அப்போது மற்றொரு (கதா!) பாத்திரம் விழுந்து ஓசைப்படுத்தியது!
”பார்த்தீங்களா! எலி பண்ற பாட்டை? பாத்திரம் எல்லாம் பாழ். முதல்லே போய் எலிப்பொறி வாங்கிண்டு வாங்கோ!” என்றாள்.
”கமலா... இப்பவே போய் எலிப்பொறி வாங்கிண்டு வந்துடுவேன். 24 மணி நேர எலிப்பொறி ஷாப் இருக்கா என்று தெரியவில்லையே!” என்றேன்.
பொறி பறந்தது, கமலாவின் கண்களில். ”விடிஞ்ச பறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றாள் சாந்தமாக! அளவுக்கு மிஞ்சினால் கோபமும் பாசமாகிவிடுமோ!
”பாத்து நல்ல எலிப்பொறியாக வாங்கிக்கொண்டு வாங்க” என்று கமலா சொன்னாள்.
எலிப்பொறி எங்கு கிடைக்கும் என்பது தெரியாததால் பல கடைகளில் ஏறி இறங்கினேன்.

ஒருவாறாக ஒரு எலிப்பொறியை, அதன் மூடி, கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள இடம், நீளம், அகலம் ஆகியவை வாஸ்து பிரகாரம் உள்ளனவா என்று சரி பார்த்து வாங்கி வந்தேன். (ஒன்றுமில்லை. கமலாவுக்கு வாஸ்து பித்து, தும்ம வேண்டுமானால்கூட, வாஸ்துவை அனுசரித்து வட கிழக்கு மூலையைப் பார்த்துதான் தும்முவாள்!)
எலிப்பொறியைப் பார்த்ததும் அப்போதே எலி பிடிபட்டதைப் போல கமலாவுக்குக் குஷி ஏற்பட்டது!
”இப்பவே போய் போளி பண்றேன்” என்றாள்.
”என்ன கமலா, எலிப்பொறி வாங்கினதுக்காக ஸ்வீட் பண்ணிக் கொண்டாடணுமா?”
”உங்க உளறலுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை” என்று சொல்லி விட்டு, போளி தயாரிப்பில் இறங்கினாள்.
அன்று இரவு, போளித்துண்டை எலிப்பொறியில் வைத்துவிட்டு கமலா படுத்துத் தூங்கி விட்டாள். எலிக்குத் தொந்தரவாக இருக்கும் என்றோ என்னவோ அவள் குறட்டையும் விடவில்லை.
அந்த சமயத்தில் தெருவில் குப்பை லாரி போக, எங்கள் ஃபளாட் வெடவெட என்று நடுங்கியது. அடுத்த கணமே, டமால் என்று எலிப்பொறியின் கதவு மூடும் ஓசை கேட்டது.
கமலா சட்டென்று விழித்து எழுந்து, ”எலி விழுந்துவிட்டது” என்றாள் ஏதோ லாட்டரியில் பரிசு விழுந்துவிட்ட மாதிரி.
கிச்சனுக்குள் போய்ப் பார்த்தாள். பொறியில் எலி இல்லை!
”எலி இல்லையே... ஆச்சரியமா இருக்கே!” என்றாள்.
”கமலா... லாரி போனப்போ வீடு குலுங்கியது. மூடி தானாக மூடிக் கொண்டது...”
”இருக்கும்... சரி, இதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ.”
”குப்பை லாரி வராத இடத்தில் ஃப்ளாட் வாங்கிக் குடிபோய் விடலாம்..”. என்றேன்.
கமலா லேசர் பார்வையை வீச, நான் அம்பேல் ஆனேன்!

மறுநாள் மசால் வடை செய்து வைத்தாள். அன்றும் எலி விழவில்லை.
மறுநாள் தோசை வைத்தாள். பலனில்லை.
மறுநாள் அதிரசம் செய்து வைத்தாள். பலனில்லை.
எலிக்கு டயபடீஸோ என்னவோ... என்று நினைத்தேனே தவிர சொல்லவில்லை.
”சனியன் படிச்ச எலி. எப்படிப் பிடிக்கறதுன்னு தெரியலையே!” என்று கமலா அலுத்துக் கொண்டாள்.
”எலி பிடிக்க எலிய வழி என்று ஏதாவது புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.
"எலிமென்டரி பள்ளி ஆசிரியர்களை கேட்டுப் பார்க்கட்டுமா?’ என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.

அன்று இரவு வழக்கம்போல் எலி ஓசை கேட்டதும், கமலா என்னை எழுப்பினாள்.
”வாங்கோ, இன்னிக்கு என்ன ஆனாலும் சரி, சமைலறையைக் காலி பண்ணி, மேலே உள்ள பரணைக் காலி பண்ணி, எலியைத் துரத்தாவிட்டால் என் காதை அறுத்துக் கொடுத்து விடுகிறேன்.”
”வைரத் தோட்டோடுதானே?” என்று கேட்க நினைத்து வழக்கம்போல் கேட்கவில்லை! ஆனால், ”கமலா, இந்த ராத்திரியிலேயா? என்று கெஞ்சலாகக் கேட்டேன்.,
”சரி... நீங்க போய்த் தூங்குங்க. நான் எடுத்து வைக்கிறேன்.” எரிச்சலாகச் சொன்னாள்
பாத்திர ஷெல்ஃபில் மேல் தட்டிலிருந்து பாத்திரத்தை எடுத்தாள். கை தவறி அந்த பாத்திரம் கீழே விழுந்து, மேடையின் கீழே இருந்த சிலிண்டரின் மேல் மோத--
திடீரென்று ஓர் எலி எங்கிருந்தோ வெளிவந்து, லாங் ஜம்ப், ஹை ஜம்ப், எல்லாவற்றையும் செய்து, ஒரே தாவாகத் தாவி ஜன்னல் வழியாக வெளியே ஓடியது!
* *
இப்போது எங்கள் வீட்டில் எலி மட்டுமல்ல; காற்றுகூட உள்ளே வர முடியாதபடி சமையலறை ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை கமலா அடைத்து விட்டாள்.
பழையபடி கமலா நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள். எனக்குத்தான் தூக்கம் இல்லை. காரணம், கமலா விடும் குறட்டையின் டெஸிபல் இரண்டு மடங்கு அதிகமாகி -விட்டிருந்ததுதான்!

புள்ளிகள்: ராஜ் நாராயண்

 வாங்கு 500 பஸ்!
ஜனதா ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜ் நாராயணன். (இந்திரா காந்தியை தேர்தலில் வென்றவர்) ஏறக்குறைய இன்றைய லாலு பிரசாத்தின் அன்றைய(!) பதிப்பு.

இவர் அமைச்சரான சில மாதங்களுக்குப் பிறகு லண்டன் சென்றார். அங்கு பல சுகாதார நிலையங்களையும், மருத்துவமனைகளையும் பார்வையிட்டார். ஒரு மொபைல் மருத்துவமனை என்று சொல்லக் கூடிய அளவு பல வசதிகளைக் கொண்ட பஸ்கள் இருப்பதைப் பார்த்து அவற்றைப் பற்றி விசாரித்தார். மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப் புறங்களுக்கு இத்தகைய பஸ்கள் ஒரு குறிப்பிட்ட அட்டவணைப்படி போய் வந்தால் கிராம மக்கள் பயன் பெறுவார்களே என்று எண்ணி அந்த மாதிரி பஸ்களை நம் நாட்டிற்கு வாங்கலாம் என்று கருதினார். தன்னுடன் வந்த அதிகாரிகளிடம், ``இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.

July 10, 2010

கோளறு பதிகம்,-4: நஞ்சணி கண்டன்

பாடல்-4
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
      விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து, என்
      உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
      மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் - தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய

எந்தை - என் தந்தை

மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் - அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவளோடு,   எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து - அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி மலரையும், கொன்றை மலரையும் தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு

என் உளமே புகுந்த அதனால் - அவனது அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்

வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்

உருமிடியும் மின்னும் - உருமும் இடியும் மின்னலும்

மிகையான பூதமவையும் - மிக்க சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)

அஞ்சிடும் - இறைவனது பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அதனால் அவை அடியார்களுக்கு மிக்கவே நல்லவைகளாக இருக்கும். 

  .

July 07, 2010

பிரிந்த சகோதர நிறுவனங்கள் பகை மறந்தன

சமீபத்தில் இந்தி பத்திரிகைகளில் மட்டும் அல்ல, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளிலும், ரேடியோ, டி.வி செய்திகளிலிலும் இடம் பெற்ற முக்கிய செய்தி அம்பானி சகோதரர்கள் சமாதானமாகிவிட்டார்கள். இந்த பதிவு அவர்களைபப் பற்றி அல்ல.
    இது மாதிரி வேறு இரண்டு சகோதர நிறுவனங்களும் தங்களது ஐம்பத்தெட்டு வருட பகையை மறந்து 2009 ம் ஆண்டு ஒரு கால் பந்தயத்தை நடத்தி சமாதானம் செய்துகொண்டன.
    அடிடாஸ்  (ADIDAS), புமா (PUMA) என்ற பெயர்களைப் கேள்விப்பட்டிருப்பீர்கள். புகழ் பெற்ற காலணி நிறுவனமான அடிடாஸ் உலகின் முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிறுவனம். பூமாவும் பிரும்மாண்ட நிறுவனம் தான். இந்த இரண்டு கம்பெனிகளும் ஜெர்மனியிலுள்ள ஒரு மிகச் சின்ன ஊரில் இருக்கின்றன.
          அடால்ஃப் டாஸ்லர் என்பவரும் அவருடைய சகோதரர் ருடால்ஃப்  டாஸ்லர் என்பவரும் 1928 ல் துவக்கிய நிறுவனம் அடிடாஸ். விளையாட்டு வீரர்களுக்கென்று பல் வேறு வித ஷூக்களைத் தயாரித்து மிக பிரும்மாண்டமான நிறுவனமாக அது வளர்ந்து விட்டது. இந்த சமயத்தில் சகோதரர்களின் மனைவிமார்களுக்குள் உரசல் ஏற்பட்டது. உரசல் விரிசலுக்குக் கொண்டு போய் விட்டது. கம்பெனி 1948 ல் இரண்டாக உடைந்தது. ஊரின் குறுக்கே ஓடும் ஒரு ஆற்றின் மேல்புறம் அடிடாஸ் தொழிற்சாலை இருந்தது. பிரிந்து போன தம்பி ஆற்றின் மறுபக்கம் புதிய கம்பெனியைத் துவக்கினார். அதுவும் ஸ்போர்ட்ஸ் காலணிகள் தயாரிக்கும் கம்பெனிதான். பெயர் புமா.
    இரண்டு கம்பெனிகளுக்கிடையே கடும் பகை; கடும் போட்டி.

புள்ளிகள்: அண்ணங்கராச்சாரியார்

நூலுக்கு வயது நூறு!ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றி மதிக்கக்கூடிய தகுதி படைத்தவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ப்ரதிவாதி  பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.  அவர்
எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது. இதை ஒட்டி சென்னை சர்வ கலாசாலை வைணவுப் பிரிவில்  ஒரு சிறப்புச் சொற் பொழிவு நடந்தது. : சென்னை வைணவச் சங்கத்தின் துடிப்பான செயலர் அட்வகேட் ராஜநாராயணன்.நிகழ்த்திய மிகச் சுவையான உரையிலிருந்து ஒன்றிரண்டு தகவல் துளிகளைத் தருகிறேன்.
* அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர்  எழுதிய முதல் நூல்.

* அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் - 1200!
* எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!

கோளறு பதிகம்-3: மதிநுதல்

பாடல் - 3
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
      மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
      கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியாரவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு - நிலாப் பிறையை போல் வளைந்து, நிலவைப் போல் குளிர்ந்த ஒளிவீசும் நெற்றியையுடைய அன்னை உமையோடு

வடபாலிருந்து - தென் திசை நோக்கி (தட்சிணாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து

மறையோதும் எங்கள் பரமன் - மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்

நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து - கங்கையும் கொன்றை மாலையும் தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்

கொதியுறு காலன் - உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்

அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் 

நமனோடு தூதர் - உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய

கொடுநோய்கள் ஆன பலவும் - கொடிய நோய்கள் யாவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.

July 04, 2010

பித்துக்குளி முருகதாஸும் நானும்

ஐம்பதுகளில் கொத்தவால் சாவடி, பூக்கடை பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி சமயங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடு வீதியில் போடப்பட்ட சுமாரான மேடையில் இசைக் கச்சேரிகள் நடைபெறும். அதில் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்தி பாடல் நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது.. தரையில் தான் உட்கார்ந்து கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அந்த கூட்டத்தில் நான் நிச்சயமாக இருப்பேன். ஒரு பக்கமாக நின்று கொண்டே கூட இரவு12, 1 மணி வரை கச்சேரிகளைக் கேட்பேன்
முருகதாஸின் பயங்கர அபிமானி. வார்த்தைத் தெளிவு,  உச்சரிப்பு சுத்தம், அலட்டல் இல்லாத சங்கீதம் ஆகியவை காரணமாக தமிழ் மொழியின் அழகும், பாடல்களின் சிறப்பும் முருகதாஸின் குரலும் என்னை எங்கோ கொண்டு போய்விடும். பாரதி விழாக்களில் பித்துக்குளி பாடாமல் இருக்க மாட்டார்.

பின்னால் டேப் ரிகார்டர்கள் வந்ததும், நிறைய ரிகார்ட் பண்ணி வைத்துக் கொண்டு கேட்டேன். திருப்புகழ், கந்தர் அனுபூதி, ஊத்துக்காடு, மகாகவி பாரதி ஆகியவர்களின் பாடல்களை எனக்கு அறிமுகப் படுதியவர் பித்துக்குளிதான்.

ஏன் திருமணம் செய்து கொண்டேன்? --பித்துக்குளி முருகதாஸ்

ஏன் திருமணம் செய்து கொண்டேன்?  -
குங்குமம் இதழில் வந்த பழைய கட்டுரை - பேட்டி: கடுகு

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டபித்துக்குளி முருகதாஸ் அவர்கள் டில்லி, ஹரித்வார் முதலிய இடங்களுக்குத் தமது மனைவியுடன்  யாத்திரை செய்தார். கையில் விலை உயர்ந்த காமிராவைக் கொண்டு வந்து தானே படங்கள் எடுத்தார்.
        அதே காவிச் சாட்டை, காவித் தலைத் துணி (தாடி மறுபடியும்) ஆகியவை களுடன்தான் இருந்தார்.

டில்லியில் முருகதாஸ் அவர்கள் பக்திப்பாடல் நிகழ்ச்சி நடத்தினார். திருமதி. தேவி முருகதாஸ் அவர்கள் பக்திப் பாடல்களை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டே பாடினார். அவரது முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்தது. இடையே முருகதாஸ் அவர்கள் தன் திருமண விஷயத்தைப் பற்றி விளக்கினார். டேப் செய்யப்பட்ட உரையைக் கீழே தருகிறேன்:
*         *                 *                  *
``உங்களுக்கெல்லாம் தெரியும். பித்துக்குளி முருகதாஸ் அறுபது வயதுக்கு மேலே ரிஷி பாரம்பரியத்தின் ஒரு தத்துவத்தைப் பின்பற்றி திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அந்த மனைவியோடு ரிஷிகேசம் சென்று வந்தான். பிரம்மச்சரியன்  இவன். சின்ன வயசிலேயே பிரம்மச்சாரியாக இருந்தாலும்- நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பது அது ஒரு கடினமான சாதனை.

July 03, 2010

புள்ளிகள்: டென்னிஸ் கிருஷ்ணன்

மிக மிக இளம்வயதிலேயே சாதனை படைத்தவர் டென்னிஸ் கிருஷ்ணன். அவர் தற்சமயம் கேஸ் எஜன்ஸியை சென்னையில் நடத்திக் கொண்டு இருக்கிறார்,
அவரைப் பற்றி இரண்டு தகவல்கள்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு கேஸ் ஏஜன்ஸியில் 2000 கஸ்டமர்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்று கேஸ் கம்பெனிகள் ஒரு உத்திரவு போட்டன.இதனால் பல பெரிய  ஏஜன்ஸிகளுக்கு  பிஸினஸ் குறைந்து விட்டது. கிருஷ்ணனின் கம்பெனியும் அதிக அளவு கஸ்டமர்களை வைத்திருந்தது.  புதிய உத்திரவினால் கிருஷ்ணனின் கம்பெனிக்கும் பிஸினஸ் குறைந்து  விடும் என்று அறிந்த இந்திரா காந்தி ஒரு விசேஷ உத்திரவைப் போட்டார்:  “ கேஸ் கம்பெனிகள் போட்ட உத்திரவிலிருந்து .கிருஷ்ணன் கம்பெனிக்கு விதி விலக்கு அளிக்கப்படவேண்டும்; அவருக்கு  எவ்வித இழப்பும் ஏற்படக்கூடாது. அவர் நிம்மதியாக தொழிலை நடத்தட்டும்.”
* *  *
இன்னொரு துணுக்கு..
ஹாலிவுட் நடிகரும் எழுத்தாளருமான பீட்டர் உஸ்டினாவிற்கு டென்னிஸ் விளயாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு.  அவர்   கிருஷ்ணனின்  விசிறி; நண்பர்.
அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு  படித்தேன். ( புத்தகத்தின் பெயர் மறந்து போய்விட்டது.) அதில் அவர்,  தான் நேரில் பார்த்த ஒரு சுவையான சம்பவத்தை எழுதி இருந்தார். அதை இங்கு தருகிறேன்.