July 31, 2010

மூன்று சிலேடைகள்--அசிமாவ் தேர்ந்து எடுத்தது

 ஆம்னி  (OMNI)  என்ற  பத்திரிகையை புத்தகசாலையில் அவ்வப்போது படிப்பதுண்டு.
அதில் ஒரு சமயம் ( 1986?) ஒரு சிலேடைப் போட்டி வைத்திருந்தார்கள்.  ஒரே வாக்கியத்தில் அதிக பட்ச சிலேடைகள் எழுத வேண்டும். பரிசு: வி. ஸி. ஆர். ( C D க்கு  மூதாதை  V.C.R.) போட்டிக்கு வந்ததில் பரிசுக்குரியதைத் தேர்ந்தெடுத்தவர்: பிரபல எழுத்தாளர் இஸாக் அசிமாவ்.

அந்த சிலேடையை ஆங்கிலமும் தமிழும் கலந்து இங்கு தருகிறேன்.

மூன்று சகோதரர்கள்  தங்கள் கிராமத்தில் மாமிச உற்பத்தி பண்ணையை ( MEAT FARM)  ஆரம்பித்தார்கள். நகரத்தில் இருந்த அவர்களுடைய அம்மாவிற்கு பண்ணையைப் பற்றிக் கடிதம் எழுதினார்கள். அப்படியே பண்ணைக்கு ஒரு பெயரைச் சொல்லும்படி கேட்டிருந்தார்கள். (அவர்களுடைய அம்மா சிலேடைப் பிரியர் எனபதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.)

அம்மா ஒரே வார்த்தையில் பெயர் வைத்தார்.  ”FOCUS என்று வைக்கவும்” என்று எழுதினார். ஏன், எதற்கு என்று கேட்காமல் பிள்ளைகள் அப்படியே பெயர் வைத்தார்கள். ( ”என்னது, இப்படி கூட பிள்ளைகள் இருக்கிறார்களா?” என்று கேட்காதீர்கள். இது கற்பனைக் கதை!)

சில நாட்கள் கழித்து அவர்களுடைய அம்மா பண்ணையைப் பார்க்க வந்தார்.
ஒரு பிள்ளை, "எதற்காக    FOCUS  என்ற பெயரை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டான்” ” ஓ, அதுவா? FOCUS. என்பது SUN-னின்  RAYS  ( கிரணங்கள்) (MEET)  மீட் பண்ணும் இடம் இல்லையா? அதனால்” என்றார். அதைத்தானே நீங்கள் செய்கிறீர்கள்” என்றார்.
பிள்ளைக்குப் புரியவில்லை.
“உனக்குப் புரியவில்லையா?  இங்கு நீங்கள் MEAT உற்பத்தி செய்கிறீர்கள். இந்த பண்ணைiயில் என்னுடைய SON'S RAISE MEAT.  ஃபோகஸ்  (FOCUS)  என்பது என்ன?
FOCUS IS WHERE  SUN'S RAYS MEET!"  என்றார் அம்மா.

  SUN'S (SON'S)  RAYS (RAISE)  MEET (MEAT) ==  ஆக மூன்று சிலேடைகள்!

பின் குறிப்பு:  அசிமாவ்  ஒரு ஜீனியஸ். அவரைப்பற்றி  ஒரு தனிப் பதிவு  போட இருக்கிறேன்.

1 comment:

  1. கடுகு சார்,

    மூன்று சிலேடைகள் really சூப்பர்....
    அசிமாவ் பற்றிய தனிப்பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்......

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!