July 24, 2010

கோளறு பதிகம், -7 :வேள்பட

பாடல்-7:
வேள்பட விழிசெய் தன்று விடைமேல் இருந்து
      மடவான் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழி லங்கை அரையன்ற னோடும்
      இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

வேள் பட விழி செய்து அன்று - அன்று (மன்மதன) வேள் சாம்பலாக நெற்றிக் கண்ணைத் திறந்து

விடைமேல் இருந்து - எருதின் மேல் அமர்ந்து

மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து

வாள்மதி, வன்னி,  கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும்  திருமுடி மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.

2 comments:

  1. Thank you sir......

    Kothamalli

    ReplyDelete
  2. நன்றாகப் பதம் பிரித்துச் சொல்கிறீர்கள்..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!