ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர்
சில வருடங்களுக்கு முன்பு, ஜான் ஹிக்கின்ஸ் (கன்னட்கட்டில் உள்ள வெஸ்லேயன்) என்ற, அமெரிக்கப் பல்கலையில் இசைப் பேராசிரியர் கர்நாடக இசையைக் கற்றுகொள்ள தமிழ்நாட்டிற்கு வந்தார். இங்கு திரு டி.விஸ்வநாதனின் (பாலசரஸ்வதியின் தம்பி )அவர்களிடம் கற்றுத் தேர்ச்சி அடைந்தார்.. பளிச்சென்று வெள்ளை வேஷ்டி, ஜிப்பா அணிந்து, மேடையில் உட்கார்ந்து அட்சர சுத்தமாகவும் அர்த்தம் தெரிந்தும் கம்பீரமாகக் கச்சேரி. செய்வார். கேட்கக் கேட்க மெய் சிலிர்க்கும்.ஒரு சமயம் இவர் சில நண்பர்களுடன் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முக்கியமாகப் பல தலங்களுக்குச் சென்றர். அப்போது உடுப்பிக்கும் போனார். அங்கே கிருஷ்ணர் கோவிலுக்குள் தன் நண்பர்களுடன் நுழையப் போகும் சமயத்தில் கோவில் அர்ச்சகர் அவரை தடுத்து நிறுத்தினார். “ ஹிந்து மதத்தினர் மட்டும்தான் கோவிலுக்குள் வரலாம்” என்றை. “ ஓ, அப்படியா. நான் உள்ளே வரவில்லை. நீங்கள் போய் தரிசனம் செய்து விட்டு வாருங்கள்” என்று நண்பர்களிடம் சொன்னார். அவர்களுக்குப் போக மனம் வரவில்லை. அர்ச்சகரிடம் ஹிக்கின்ஸ்: ”நான் உள்ளே வரவில்லை. இங்கிருந்தே தரிசித்துக் கொள்கிறேன். ஒரு சின்ன வேண்டுகோள்”: என்றார்.
அர்ச்சகர் “என்ன.. சொல்லுங்கோ” என்றார்.
“ இங்கேயே நின்று கொண்டு கிருஷ்ணன் மீது நான் ஒரு பாட்டுப் பாட ஆசைப் படுகிறேன்… பாடலாமா?” என்று கேட்டார்.
” தராளமாகப் பாடலாம்" என்று அர்ச்சகர் சொன்னதும் கண்களை மூடிக்கொண்டு ‘கிருஷ்ண நீ பேகனே” என்று நெஞ்சுருகப் பாட ஆரம்பித்தார். அவரை சுற்றி பக்தர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவரது இசை அவர்களை மெய்மறக்கச் செய்தது.
ஹிக்கின்ஸ் பாடி முடித்ததும், அர்ச்சகர் உணர்ச்சிவசப்பட்டு, அவரை அணைத்துக் கொண்டு “ உள்ளே வாங்க.. அற்புதமாகப் பாடினீர்கள். உங்களை மாதிரி பக்திமான்களுக்கு யாரும் தடை சொல்ல முடியாது,” என்றார். எல்லாருடைய கண்களும் கலங்கி விட்டன.
பின் குறிப்பு1:
இந்த தகவல் பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கத் தகவல் சர்வீஸின் வெளியீடான SPAN பத்திரிகையில் வந்தது. சுந்தரம் (?) என்பவர் எழுதி இருந்தார், (ஹிக்கின்ஸுடன் சென்றவர்களில் சுந்தரமும் ஒருவராம்.) அதை வெட்டி வைத்திருந்தேன். இப்போது கைக்கு அகப்படவில்லை.
பின் குறிப்பு 2: துரதிர்ஷ்டம். சிகாகோவில் ஒரு தெருவைக் கடக்கும் போது கார் மோதி அவர் உயிரிழந்தார் (1984)
பின் குறிப்பு 3: அந்த கால கட்டத்தில் குமுத்தில் வந்த ஜோக்.
Dear Agastian sir
ReplyDeleteI remember seeing John Higgins singing at Tiruvaiyaar utsavam in 1964/65.
rajagopalan-dubai
எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை.. அருமையான கட்டுரை. இவர்களைப்போன்றவர்களையெல்லவா ஆராதித்து கோவிலுக்குள்ளே விடவேண்டும்.. ஹிக்கின்ஸ் பாகவதர் - பேரைக்கேட்கவே வித்தியாசமாய் இருக்கிறது. அவருக்கு இப்படி ஒரு சோகமுடிவு ஏற்பட்டிருக்க வேண்டாம். கடுகு தளம் அள்ள அள்ளக் குறையாத அட்டகாசமான அஞ்சறைப்பெட்டி.. நிறைய எழுதுங்கள்.கொஞ்சம் மொக்கை ஜோக்குதான்.. படம் மிகச் சுமார்:-)
ReplyDelete<<< ஜெயக்குமார் said... >>>> பாராட்டுகளுக்கு நனறி. கடைசி வரியை இன்னும் படிக்கவில்லை!
ReplyDelete<<< ஜெயக்குமார் said... >>>> என் பதிவிலிருந்து கடைசி வரியை எடுத்து விட்டேன். உங்களை மாதிரி
ReplyDeleteநிறைய பேர் ‘பாராட்டுகள்’ அனுப்பினால் என்னால் தாங்கமுடியாது!:)
ஹிக்கின்ஸ் பாகவதர் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிருக்கட்டும் சார், சிகாகோவில் கார் மோதி உயிர் இழந்தவர் ஹிக்கின்ஸ் பாகவதரா, அவரைப் பற்றி ஸ்பாம் பத்திரிகையில் எழுதிய சுந்தரமா?
ReplyDeleteஎங்கள் பாட்டி இவரை பற்றி கூறியிருக்கிறார் ...அண்ணாமலை university இலும் ,சிதம்பரத்திலும் இவர் கச்சேரிகள் செய்ததுண்டு ...இவர் பாடலை ஒருமுறை ஆல் இந்திய ரேடியோ வில் கேட்டிருக்கிறேன் .அப்போது இவர் உச்சரிப்பு பிரமிப்பூட்டியது ..மிகவும் சிறிய வயதில் தான் ஆனாலும் நன்கு நினைவில் உள்ளது ...ஞாபகங்களை நீங்கள் கிளப்புவது இதை எல்லாம் பேசி மகிழ என் பாட்டி இல்லையே என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது
ReplyDeleteவெள்ளைக்காரர் என்பதால் இவருக்கு தனி மௌஸ் இருந்ததோ என்று நினைத்தது உண்டு. உங்கள் பதிவு அதை க்ளியர் செய்தது.நன்றி. ஜேஸுதாஸ் அவர்களை என்று குருவாயூரில் அனுமதிப்பார்கள்? - ஜெ.
ReplyDeleteஹிக்கின்ஸ் பற்றிய தகவல் எனக்கு ரொம்ப புதுசு.
ReplyDeleteஉடுப்பி கோயிலில் அவருக்கு நேர்ந்த அனுபவம் அவரை அமெரிக்காவின் நந்தனாரோ என எண்ண வைத்தது.
இந்த தகவலை படித்தபோது எனக்கு புதுக் கவிஞர் அப்துல் ரகுமானுக்கு நேர்ந்த ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. (எங்கேயோ படித்ததுதான்)
ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் இவர் கம்பராமயாண்தைப் பற்றி பேச ஆரம்பிக்க ஒரு பழுத்த வைதீகர் ரகுமானின் மதத்தை குறிப்பிட்டு, அவர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். பின்னர் மைக்கைப் பிடித்த ரகுமான் இவ்வாறு பேசியிருக்கிறார். "ஒரு இராமன் மானைப் பிடிக்க சென்றதால் இராமாயணம் உருவானது. எனவே மானின் பின்னே சென்ற ரகுவைப் (இராமன்) பற்றிப் பேச இந்த ரகுமானுக்கு தகுதி இல்லையா" அந்த வைதகீர் நெகிழ்ந்து போனாராம்,
ஜெ. பாபு,
கோவை-20.
hiqins padalkalai migavum virumbi ketkum nan avarai patri ivvalavu vivramaha ungal moolam arinthatharku nandri
ReplyDeleteகடுகு....... said...
ReplyDeleteரவி பிரகாஷ் அவர்களுக்கு..............:
ஹிக்கின்ஸ் இரவு தன் நாயுடன் வாக்கிங் சென்றபோது விபத்து எற்பட்டது
He was killed by a drunken hit-and-run motorist on December 7, 1984
SPAN இதழில் எழுதியது சுந்தரம் (?) என்பது என் நினைவு
21 July 2010 9:10 PM
இந்தத் தகவல் எனக்குப் புதுசு. அரிய விஷயங்களை நாங்கள் அறிய பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி
ReplyDeleteதிருநெல்வேலி வானொலி நிலையத்தின் காலை
ReplyDelete7 .30 மணிக் கச்சேரிகளில் இவருடைய கச்சேரியையும் சிறுவனாக இருந்த பொழுது கேட்டதுண்டு! "சிவ சிவ என ராதா " எனத்தொடங்கும் பாடல் கேட்க நன்றாக இருக்கும்! அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள உங்கள் கட்டுரை உதவியது! நன்றி!