July 07, 2010

பிரிந்த சகோதர நிறுவனங்கள் பகை மறந்தன

சமீபத்தில் இந்தி பத்திரிகைகளில் மட்டும் அல்ல, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளிலும், ரேடியோ, டி.வி செய்திகளிலிலும் இடம் பெற்ற முக்கிய செய்தி அம்பானி சகோதரர்கள் சமாதானமாகிவிட்டார்கள். இந்த பதிவு அவர்களைபப் பற்றி அல்ல.
    இது மாதிரி வேறு இரண்டு சகோதர நிறுவனங்களும் தங்களது ஐம்பத்தெட்டு வருட பகையை மறந்து 2009 ம் ஆண்டு ஒரு கால் பந்தயத்தை நடத்தி சமாதானம் செய்துகொண்டன.
    அடிடாஸ்  (ADIDAS), புமா (PUMA) என்ற பெயர்களைப் கேள்விப்பட்டிருப்பீர்கள். புகழ் பெற்ற காலணி நிறுவனமான அடிடாஸ் உலகின் முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நிறுவனம். பூமாவும் பிரும்மாண்ட நிறுவனம் தான். இந்த இரண்டு கம்பெனிகளும் ஜெர்மனியிலுள்ள ஒரு மிகச் சின்ன ஊரில் இருக்கின்றன.
          அடால்ஃப் டாஸ்லர் என்பவரும் அவருடைய சகோதரர் ருடால்ஃப்  டாஸ்லர் என்பவரும் 1928 ல் துவக்கிய நிறுவனம் அடிடாஸ். விளையாட்டு வீரர்களுக்கென்று பல் வேறு வித ஷூக்களைத் தயாரித்து மிக பிரும்மாண்டமான நிறுவனமாக அது வளர்ந்து விட்டது. இந்த சமயத்தில் சகோதரர்களின் மனைவிமார்களுக்குள் உரசல் ஏற்பட்டது. உரசல் விரிசலுக்குக் கொண்டு போய் விட்டது. கம்பெனி 1948 ல் இரண்டாக உடைந்தது. ஊரின் குறுக்கே ஓடும் ஒரு ஆற்றின் மேல்புறம் அடிடாஸ் தொழிற்சாலை இருந்தது. பிரிந்து போன தம்பி ஆற்றின் மறுபக்கம் புதிய கம்பெனியைத் துவக்கினார். அதுவும் ஸ்போர்ட்ஸ் காலணிகள் தயாரிக்கும் கம்பெனிதான். பெயர் புமா.
    இரண்டு கம்பெனிகளுக்கிடையே கடும் பகை; கடும் போட்டி.
    ஒரு கம்பெனியின் ஊழியர் மற்றொரு கம்பெனி ஊழியருடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்ககூடாது. திருமணம் போன்ற சம்பந்தம் கூட் வைத்துக்கொள்ளமுடியாது! அந்த கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாருமே இந்த இரண்டு கம்பெனிகளில் பணியாற்றியதால் கிராமமே இரண்டுபட்டு விட்டது. அவரவர் பணியாற்றும் கம்பெனி தயாரிக்கும் ஷூக்களைத் தான் ஊழியர்கள் அணிந்திருப்பார்கள். ஆகவே ஒருவரை ஒருவர் முகத்தைக் கூட பார்க்காமல் முதலில் கால் ஷூவைப் பார்ப்பார்கள். போட்டி ஷூ கம்பெனி ஊழியர்களாக இருந்தால் ஹலோ கூட சொல்லிக் கொள்ளமாட்டார்களாம். (கழுத்தை வளைத்து முதலில் காலைப் பார்ப்பதால் இந்த கிராமத்திற்கே ’வளைந்த கழுத்து ஊர்[  ( TOWN OF BENT NECK!) என்ற பெயர் வந்து விட்டதாம்.)
   இவர்களின் வியாபாரப் போட்டி  ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றபோது உச்சகட்டத்தை அடைந்தது..
    ஒலிம்பிக் சமயத்தில் இந்த கம்பெனி தங்கள் ஷூ விளம்பரங்களில் இடம் பெற பல பிரபல விளையாட்டு வீரர்களுக்குக்  கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துகொண்டன. அடிடாஸ் விம்பரங்களில் இடம் பெற்ற வீரர்கள். பீலே, மார்க்ஸ் ஸ்பிட்ஸ்.  புமா விளம்பரங்களில் இடம் பெற்றவர்: போரீஸ் பெக்கர்
   1970-ல் நடந்த உலகக் கோப்பை  கால்பந்து போட்டியின் போது  பிரேசில் வீரர் பிலேவை, தங்கள் கம்பெனி விளம்பரங்களுக்கு  புமா ஒப்பந்தம் செய்திருந்தது. மேடச் ஆரம்பிக்க வெண்டிய கடைசி நிமிஷத்தில் பிலே , ரெஃப்ரியிடம் “ ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு,  நிதானமாக் குனிந்து தன் புமா ஷூகளின் நாடாவை அவிழ்த்துக் கட்டிக் கொண்டாரம். உலக முழுதும்   டி.வி.யில்  இது ஒளிபரப்பாயிற்று. புமாவிற்கு  நல்ல விளம்பரம் கிடைத்தது பிலேவுக்குக் கிடைத்தது  1,20,000  டாலர் .(இது 1970ல் நடந்தது என்பதை நினைவு கொள்ளுங்கள்!)  

மார்க்ஸ் ஸ்பிட்ஸ் 1972  ஒலிம்பிக்ஸில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றார். பரிசு வாங்கப் போகும் போது அடிடாஸ் ஷூக்களை அணிந்து கொண்டு போனார். ஆனால் அவரது  நீண்ட கால்சட்டை அடிடாஸ் ஷூக்களை மறைத்து விடும் என்பதால் அடிடாஸ் ஷூக்களைக் கழட்டி கையில் பிடித்தபடியே  ஷூக்களைஉயர்த்திப் பிடித்து கூட்டத்தினரை பார்த்துக்  கையை ஆட்டினார். 
    அடால்ஃப்  டாஸ்லர் காலமான பிறகும் பகை குறையவில்லை தம்பி ருடால்ஃப்   டாஸ்லர் காலமானதும் அண்ணன் கல்லறையை விட்டு எவ்வளவு தள்ளி புதைக்கமுடியுமோ அவ்வளவு தள்ளி புதைத்தார்களாம்!.
    2009 ம்ஆண்டு வரை இந்த பகைமைத் தொடர்ந்தது. அப்போது  உலக சமாதான தினம் என்று செப்டம்பர் 21-ம்   தேதியைக் கொண்டாட, PEACE ONE DAY  என்ற அமைப்பு ஐ. நா ஆதரவுடன்  வேண்டுகோள் விடுத்தது.

       இந்த  வேண்டுகோள் இரண்டு கம்பெனிகளின்  அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டு கம்பெனிகளுக்கிடையே ஒரு ஜாலி கால்பந்து போட்டியை உற்சாகமாக நடத்திச் சமதானமானார்கள். அறுபது வருட விரோதம் ஓரளவு நீங்கியது. ஊர் மக்களுக்கும் பெரிய நிம்மதி ஏற்பட்டது.
    இந்த சமாதானத்திற்கு வழி கோலிய ’கோகிலா பென்’ யார் என்று தெரியவில்லை.

9 comments:

  1. When the read the headline i thought you had written about ambani brothers!!!! ( Nice surprise)

    When we can expect ambaniyum Naanum ?????/

    ReplyDelete
  2. எனக்கு இதுவரை தெரியாத விஷயம். நல்ல பதிவு.

    கட்டுரையின் ஆரம்பத்தில், “ இரண்டு சகோதர நிறுவனங்களும் தங்களது ஐம்பத்தெட்டு வருட பகையை மறந்து 2006 ம் ஆண்டு ஒரு கால் பந்தயத்தை நடத்தி சமாதானம் செய்துகொண்டன “ என்றும், கடைசியில் “2009 ம்ஆண்டு வரை இந்த பகைமைத் தொடர்ந்தது “ என்றும் வருகிறது. வருடக் குழப்பம். - ஜகன்னாதன்

    ReplyDelete
  3. "ஐம்பத்தெட்டு வருட பகையை மறந்து 2009 ம் ஆண்டு ஒரு கால் பந்தயத்தை நடத்தி சமாதானம் செய்துகொண்டன"(காப்பி பேஸ்ட் செயயப்பட்டது

    திரு. அகஸ்தியன் சரியாகத்தான் எழுதியுள்ளார்.
    திரு. ஜெகன்னாதன் மறுமுறை வாசிக்கவேண்டுகிறேன்

    ReplyDelete
  4. ப்ரசாத் அவர்களே, இது அகஸ்தியன் சாரின் கைவண்ணமாய்த் தான் இருக்கும் (என் போஸ்ட்டுக்கும் நீங்கள் படிப்பதற்கும் இடையில்)! நானும் கட் அண்ட் பேஸ்ட் செய்துதான் எழுதினேன். - R. J.

    ReplyDelete
  5. சின்ன அறிவிப்பு: 2006-ஐ, 2009 எண்று திருத்தியவன் நான்தான். பிரசாத் - ஜகன்னாதன் இருவரும் கை குலுக்கி கொள்ளலாம்! :)

    (இரண்டு நாளாக நான் போட்ட பின்னூட்டங்களை கம்ப்யூட்டர் ஏற்கவில்லை.)- கடுகு

    ReplyDelete
  6. ஏன் அவர்கள் ஓரு புட்பால் மேட்ச் ஆடலாம் என்று
    சொல்வேன் :) :) --டில்லி பல்லி

    ReplyDelete
  7. :) :) Thanks - R. Jagannathan

    ReplyDelete
  8. sure Mr.Dilli palli (or Balli) I will paly as spain

    ReplyDelete
  9. ஜெய் நாராயண்October 20, 2010 at 8:03 PM

    இம்ம்ம் ..... நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி. இதேபோலே ஜெர்மனி கார்கள் பற்றிய செய்திகளையும் எங்களுக்காக தேடி எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!