July 14, 2010

ஆஹா கம்பெனி: ஆஹா சேர்மன்! -கடுகு

சில வாரங்களுக்கு முன்பு வரை பெர்க்‌ஷைர்  ஹத்வே   என்ற அமெரிக்கன்  கம்பனியின்  பெயரையோ  அல்லது  அதன் சேர்மன்  வாரன்  பஃபட்டின்  பெயரையோ நான்  கேள்விப்பட்டதில்லை. சேர்மன்  வாரன்  பஃபெட்டிற்கு வயது  80! உலகிலேயே மூன்றாவது  பெரிய  பணக்காரராம்!
தற்செயலாக அந்த கம்பெனியின் ஆண்டறிக்கையைப் பார்க்க நேர்ந்தது. சுமார் 100 பக்க அறிக்கையில் 90 பக்கத்தில் இருந்தது எதுவும் எனக்குப் புரியவில்லை. போதாதற்கு அவை மில்லியன், பில்லியன் என்ற கணக்கில் இருந்தன. 2009 ஆண்டு அந்தக் கம்பெனி ஈட்டிய லாபம் சுமார் 22 மில்லியன் டாலர்கள். ( இது எவ்வளவு ரூபாய் என்றெல்லாம் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்காதீர்கள்!)
     நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இதன் ஒரே ஒரு ’ஏ’’ ஷேரின் விலை: ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலர்  விலை. (சுமார்  55 லட்சம் ரூபாய்!)
ஆண்டறிக்கையில் அச்சாகியிருந்த சேர்மனின் உரை மிக மிக சுவையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.  அதே சமயம் நேர்மையான உரையாகவும் இருந்தது. (இந்த உரை காபிரைட் செய்யப்பட்டது என்று போட்டிருக்கிறார்கள்!)
   தான் செய்த தவறுகளையும் தப்புக் கணக்குகளையும் வாரன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.    அதனால்  எத்தனை பில்லியன்  நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.
அவரது உரையில் சிற்சில பாராக்களை ( தொடர்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை)  இங்கு தருகிறேன்.

* நமது கம்பெனியின் சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர்.  நாம் ஈட்டும் லாபமோ இவ்வளவு சொத்துக்கு முன்பு மிக மிகக் குறைவு,  தூசுக்குச் சமானம். இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். நாம் நிம்மதியாகத் தூங்கமுடிகிறதே!
* சென்ற ஆண்டு உங்கள் சேர்மன் மாபெரும் வியாபரத்தவறு செய்து விட்டார். அந்தத் தவறுக்கு முழுபொறுப்பும் அவரையே சாரும். .
* “நான் சொன்ன ஒரு யோசனையை போர்டில் எல்லாரும் எதிர்த்தார்கள். ’உங்கள் எல்லாரையும் விட நான் வயசானவன்; புத்திசாலியும் கூட’ என்று  அவர்களிடம் சொன்னேன். பின்னால் நிகழ்ந்தவைகளைப் பார்க்கும்போது “நான் வயசானவன்” என்பது மட்டும்தான் சரி!”
* நம் கம்பெனியில் இன்ஷூர் பண்ணியவர்களுக்குக் கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.  எதிர்பார்த்தபடி நிறைய பிஸினஸ் வந்தது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நல்லவைகளாக அமையவில்லை. நஷ்டத்தில் போய் முடிந்தன்.
* நமது கம்பெனியின் நிதி நிலைமை அறிக்கைகளை எப்போதும் வெள்ளிக்கிழமை மாலை தான் வெளியிடுவோம். காரணம், வார இறுதியில் நீங்கள் அவற்றைச் சாவகாசமாக படிக்க முடியும். இல்லாவிட்டால் மீடியாவில் வரும் அரைகுறை செய்தியைத்தான் படிப்பீர்கள். மீடியாக்கள் பல சமயம் செய்தியை முழுமையாகத் தருவதில்லை.  உதாரணமாக 2009 ம் ஆண்டு நமது கம்பெனி ஒரு அறிக்கையை வெளியிட்டது. ”இந்த ஆண்டு நமது பொருளாதாரம் மிகவும் சீர் குலையக்கூடும்.  ஆனால் இதன் விளைவாக ஷேர் மார்கெட் ஏறுமா அல்லது இறங்குமா என்று கூறமுடியாது என்ற நம் அறிக்கையின் முதல் பாதியை மட்டும் மீடியா வெளியிட்டன. இந்தப் பாதி அறிக்கையைப் படித்தவர்கள் மார்க்கெட் விழுந்துவிடும் என்று நினைத்தார்கள்.  ஆனால் 7000 பாயின்டிலிருந்த மார்க்கெட் வருட முடிவில் 10000 பாயின்டாக உயர்ந்தது.

* நமது கம்பெனியின்  1981 ம் வருட ஜெனரல் பாடி கூட்டத்திற்கு வந்தவர்கள் மொத்தம் 12 பேர் ( சைபர் எதுவும் விட்டுப் போகவில்லை!). 2009 ம் ஆண்டு கூட்டத்திற்கு வந்தவர்கள் மொத்தம்: 35000 பேர்.
* *நமது கம்பெனியில் ஆறு குரூப்கள் உள்ளன.  குரூப்பின் மேனேஜர்கள் சூராதி சூரர்கள். நமது கம்பெனியில் இதுவரை எந்த ஒரு மேனேஜரும் வேலையிலிருந்து ராஜிநாமா செய்ததில்லை. ரிடையர் தான் ஆகியிருக்கிறார்கள்.
*1985 ல் நமது கம்பெனியில் அஜித் மேனேஜராக சேர்ந்தார். அஜித் நிச்சயமாக ஒரு சூப்பர் ஸ்டார். நான் என்ன செய்தேன் தெரியுமா? அஜீத்தின் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ”அஜித்திற்கு தம்பி இருக்கிறாரா? இருந்தால் அனுப்புங்கள். எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொள்கிறேன்” என்று எழுதினேன். நான் எதிர்பார்த்தது போலவே “ இல்லை” என்று பதில் வந்தது. அஜித் மாதிரி இன்னொருத்தர் இருக்கமுடியாது என்பது எனக்குத் தெரியும்.
* சென்ற வருடம் ஜெனரல் பாடி மீட்டிங்கிற்கு வெளிநாடுகளிலிருந்து 800 பேர் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவுப் பரிசைக் கொடுத்தோம். இந்த வருடம் தரப்போவதில்லை. காரணம், சென்ற தடவை 800 அன்புப் பரிசு கார்டில் வைஸ் சேர்மென் சார்லஸும் நானும் கையெழுத்துப் போட மட்டும் இரண்டரை மணி நேரம் தேவைப் பட்டது.
*              *       *                   *
வாரன் பஃபெட் கடந்த 54 வருடங்களாக ஒரே வீட்டில் தான் வசிக்கிறார். இவ்வளவு பில்லியன் வருவாய் உள்ள கம்பெனியின் சேர்மனின் சம்பளம்  ஒரு லட்சம் டாலர்தான். உலகிலேயே இது மிகமிக குறைவான சதவிகிதம் தான் என்கிறார்கள்.

”என்னுடைய சொத்தில் 99 சதவிகிதம் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகத் தரப்படும்” என்று அவர் சொல்லி இருக்கிறார்.
இன்றைக்கும் இவர் காரைத் தானே  ஓட்டிச் செல்கிறாராம்.

இந்த கம்பெனியின் ஜெனரல் பாடி மீட்டிங்கை ஒரு திருவிழாவாக நடத்துவார். ஆட்டம், பாட்டம், மேஜிக் , கேளிக்கை, உணவுத் திருவிழா என்று ஒரே கோலாகலம் தான்.

இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது வந்த தகவல். வாரன் பஃபெட், சுமார் 37  பில்லியன் டாலர்களை  பில் கேட்சின் தொண்டு  நிறுவனத்திற்கு வழங்கினார் என்ற செய்தி வந்தது. பில் கேட்ஸின் டிரஸ்டின் உபதலைவர் வாரன் பஃபெட்.  ( இந்த தொகை ஜெர்மனியின் ஒரு வருஷ ராணுவ பட்ஜெட் தொகையின் அளவு என்று நாலும்  தெரிந்த ஒரு நண்பர் சொன்னார்!)

காலம் சென்ற இவருடைய மனைவியின் பெயரில் ஒரு டிரஸ்ட் அமைத்திருக்கிறார். இவருடைய சொந்த சொத்தை நிர்வகிக்க ஒரு அதிகாரியை நியமித்திருக்கிறார். அவர் வாரன் பஃபெட்டின் மகளின் முன்னாள் கணவராம்!  இது எப்படி இருக்கு!

பின் குறிப்பு1:
1 மில்லியன் = 1,000,000
1 பில்லியன் = 1,000,000, 000
பின் குறிப்பு 2:.
வாரன் பஃபெட் ஏராளமான பொன் மொழிகளை உதிர்ப்பாராம். நகைச் சுவையுடனும் அவை இருக்கும். அவைகளில் சிலவற்றைப் பின்னால் போடுகிறேன்.
பின் குறிப்பு 3:
ஆண்ட றிக்கையிலிருந்து சில வாசகங்கள்:
* During 2009, he (Ajit jain,  Manager of a group) negotiated a life reinsurance contract that could produce $50 billion of premium for us over the next 50 or so years.
* If (Vice chairmன்n) Charlie, I and Ajit are ever in a sinking boat – and you can only save one of us – swim to Ajit.
* Our best guess is that 35,000 people attended the annual meeting last year (up from 12 – no zeros omitted – in 1981).
* Charlie and I will convene the annual meeting at 3:45. If you decide to leave during the day’s question periods, please do so while  ( Vice Chairman ) Charlie is talking. (Act fast; he can be terse.)

* Be sure to visit the Bookworm( during the AGM) . Among the more than 30 books and DVDs it will offer are two new books by my sons: Howard’s Fragile, a volume filled with photos and commentary about lives of struggle around the globe and Peter’s Life Is What You Make It. Completing the family trilogy will be the debut of my sister Doris’s biography, a story focusing on her remarkable philanthropic activities. Also available will be Poor Charlie’s Almanack, the story of my partner. This book is something of a publishing miracle – never advertised,yet year after year selling many thousands of copies from its Internet site.
* At 86 and 79, Charlie and I remain lucky beyond our dreams. We were born in America; had terrific parents who saw that we got good educations; have enjoyed wonderful families and great health; and came equipped with a “business” gene that allows us to prosper in a manner hugely disproportionate to that experienced by many people who contribute as much or more to our society’s well-being. Moreover, we have long had jobs that we love, in which we are helped in countless ways by talented and cheerful associates. Indeed,over the years, our work has become ever more fascinating; no wonder we tap-dance to work. If pushed, we would gladly pay substantial sums to have our jobs (but don’t tell the Comp Committee).

7 comments:

  1. பண்ம் என்பது ஒரு அள்வு வரைதான் மெதுவாக வளரும் .அதன்பின் அதன் வளர்ச்சி பன்மடங்கில்தான் இருக்கும். ஏனென்றால் நமக்காக உழைக்க நூற்றுக்கணக்காண, அல்லது ஆயிரக்கணக்கான மனிதர்கள் பணியாள் என்ற பெயரில் வந்துவிடுவார்கள்.ஒரு உதாரணம். நம் நாட்டில் ”பட்ஜெட்” என்று ஒருவிசயம் வருடாவருடம் ஏப்ரல் 1ம் தேதி அமுலுக்கு வரும். ஒருகடையின் முதலாளி முதல் நாள் கடையை மூடிவிட்டு இரவு தூங்கி மறுநாள் வந்து கடையை திறப்பார். முத்ல் நாள் அவருடைய கடையின் மதிப்பு 50 ல்ட்சம் என்றால், மறுநாள் ஏப்ரல் 1ம் தேதி அதன் மதிப்பு குறந்த பட்சம் 60லட்சமாக ஆகி இருக்கும். இன்னும் நிறைய சொல்லலாம். அது சரி எந்த முத்லாளியாவது, ”நம் கம்பெனி ந்ன்றாக வளர்ந்துவிட்டது இனிமேல் ப்ணி ஓய்வுபெறும் தொழிலாளிக்கு நிறுவனத்தில் பணப்பயனுக்குபதிலாக பங்குதாரரக ஆக்கிக்கொள்வோம் என்று நினைத்தது உண்டா?
    மதி

    ReplyDelete
  2. Interesting man and his words..Thanks for sharing, Sir!

    ReplyDelete
  3. http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/07/warren-buffet.html

    இன்று நான் எழுதிய பதிவு.. என்ன ஒரு கோ இன்சிடென்ஸ்..

    ஜெயக்குமார்

    ReplyDelete
  4. வாரன் மட்டுமல்ல. அவர் தன் குரு என்று எப்போதும் சொல்லும் பெஞ்சமின் க்ரஹாம் கூட மிக சுவாரஸ்யமானவர். இவர்களின் integrity மிக மிக பிரசித்தம். Graham -மின் பிரபலமான investment advice.

    There are only two rules for your investment
    1. Never lose your principal
    2. Never forget rule number 1

    Thanks for sharing

    ReplyDelete
  5. <<>> உங்கல் பதிவைப் பார்த்தேன். கூடுதல் தகவல் இருந்தது.

    ReplyDelete
  6. Buffett said he paid a 16.5 percent tax rate on all his income because the tax rate on investment dividends and long-term capital gains is only 15 percent.

    By contrast, a single employee at Buffett’s firm, Berkshire Hathaway, who earns between $33,000 and $83,000 must pay a 25 percent federal income tax rate.

    ReplyDelete
  7. Here are some nuggets of wisdom from Warren Buffett's letter to shareholders
    ------
    By year end, investors of all stripes were bloodied and confused, much as if they were small birds that had strayed into a badminton game.

    The watchword throughout the country became the creed I saw on restaurant walls when I was young: "In God we trust; all others
    pay cash."

    Economic medicine that was previously meted out by the cupful has recently been dispensed by the barrel. These once-unthinkable dosages will almost certainly bring on unwelcome aftereffects.
    Their precise nature is anyone's guess, though one likely consequence is an onslaught of inflation.

    Though the path has not been smooth, our economic system has worked extraordinarily well over time. It has unleashed human
    potential as no other system has, and it will continue to do so. America's best days lie ahead

    When investing, pessimism is your friend, euphoria the enemy.

    Long ago, Ben Graham taught me that "Price is what you pay; value is what you get." Whether we're talking about socks or stocks, I like buying quality merchandise when it is marked down.

    Some years back our competitors were known as "leveraged-buyout operators." But LBO became a bad name. So in Orwellian fashion,
    the buyout firms decided to change their moniker. What they did not change, though, were the essential ingredients of their
    previous operations, including their cherished fee structures and love of leverage. Their new label became "private equity".

    General Re ... is the only reinsurer that is backed by an AAA corporation. Ben Franklin once said, "It's difficult for an empty sack to stand upright." That's no worry for General Re clients.


    Putting people into homes, though a desirable goal, shouldn't be our country's primary objective. Keeping them in their homes should be the ambition.

    By year end 2007, the half dozen or so companies that had been the major players in this [tax-exempt bond] business had all fallen into big trouble. The cause of their problems was captured long ago by Mae West: "I was Snow White, but I drifted."

    If merely looking up past financial data would tell you what the future holds, the Forbes 400 would consist of librarians.

    Investors should be skeptical of history-based models. Constructed by a nerdy-sounding priesthood using esoteric terms such as beta, gamma, sigma and the like, these models tend to look impressive.
    Too often, though, investors forget to examine the assumptions behind the symbols. Our advice: Beware of geeks bearing formulas.

    During 2008, I spent $244 million for shares of two Irish banks that appeared cheap to me. At yearend we wrote these holdings
    down to market: $27 million, for an 89% loss. Since then, the two stocks have declined even further. The tennis crowd would call my mistakes "unforced errors."

    I have pledged - to you, the rating agencies and myself - to always run Berkshire with more than ample cash. We never want to
    count on the kindness of strangers in order to meet tomorrow's obligations. When forced to choose, I will not trade even a night's sleep for the chance of extra profits.

    When the financial history of this decade is written, it will surely speak of the Internet bubble of the late 1990s and the
    housing bubble of the early 2000s. But the U.S. Treasury bond bubble of late 2008 may be regarded as almost equally extraordinary.

    Beware the investment activity that produces applause; the great moves are usually greeted by yawns.


    When I read the pages of "disclosure" in 10-Ks of companies that are entangled with these instruments [derivatives], all I end up
    knowing is that I don't know what is going on in their portfolios (and then I reach for some aspirin).

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!