மிக மிக இளம்வயதிலேயே சாதனை படைத்தவர் டென்னிஸ் கிருஷ்ணன். அவர் தற்சமயம் கேஸ் எஜன்ஸியை சென்னையில் நடத்திக் கொண்டு இருக்கிறார்,
அவரைப் பற்றி இரண்டு தகவல்கள்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு கேஸ் ஏஜன்ஸியில் 2000 கஸ்டமர்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்று கேஸ் கம்பெனிகள் ஒரு உத்திரவு போட்டன.இதனால் பல பெரிய ஏஜன்ஸிகளுக்கு பிஸினஸ் குறைந்து விட்டது. கிருஷ்ணனின் கம்பெனியும் அதிக அளவு கஸ்டமர்களை வைத்திருந்தது. புதிய உத்திரவினால் கிருஷ்ணனின் கம்பெனிக்கும் பிஸினஸ் குறைந்து விடும் என்று அறிந்த இந்திரா காந்தி ஒரு விசேஷ உத்திரவைப் போட்டார்: “ கேஸ் கம்பெனிகள் போட்ட உத்திரவிலிருந்து .கிருஷ்ணன் கம்பெனிக்கு விதி விலக்கு அளிக்கப்படவேண்டும்; அவருக்கு எவ்வித இழப்பும் ஏற்படக்கூடாது. அவர் நிம்மதியாக தொழிலை நடத்தட்டும்.”
* * *
இன்னொரு துணுக்கு..
ஹாலிவுட் நடிகரும் எழுத்தாளருமான பீட்டர் உஸ்டினாவிற்கு டென்னிஸ் விளயாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் கிருஷ்ணனின் விசிறி; நண்பர்.
அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். ( புத்தகத்தின் பெயர் மறந்து போய்விட்டது.) அதில் அவர், தான் நேரில் பார்த்த ஒரு சுவையான சம்பவத்தை எழுதி இருந்தார். அதை இங்கு தருகிறேன்.
டென்னிஸ் கிருஷ்ணனனும் வேரொருவரும் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உஸ்டினா பார்வையாளர். , எதிரே விளையாடியவரால் கிருஷ்ணனுடன் ஈடு கொடுக்கமுடியவில்லை; திணறிக் கொண்டிருந்தார். அவர் திடீரென்று கிருஷ்ணனைப் பார்த்து தப்பு ஆட்டம் ஆடுவதாகக் கத்தினார். “ பாருங்கள்.. உங்களைப் பற்றி இந்திய டென்னிஸ் ஃபெடரேஷனுக்குப் புகார் அனுப்பப் போகிறேன்” என்று இரைந்தார்.
கிருஷ்ணன் மிகவும் கூலாக ”அப்படியா? அந்தப் புகாரை என்னிடம் கொடுத்து விடுங்கள்..” என்றார்.
“ உங்களிடமா? உங்களிடம் எதற்குக் கொடுக்க வேண்டும்?” என்று அந்த ஆட்டக்காரர் கேட்டார்.
“ ஏனென்றா ல்.... நான்தான் இந்திய டென்னிஸ் ஃபெடரேஷன்!!” என்று நிதானமாகச் சொன்னார் கிருஷ்ணன்!.(Because I am the Indian Tennis Federation!)
very interesting to read. His Son also very accomplished tennis player
ReplyDelete