February 25, 2019

மக்கள் வேடிக்கையானவர்கள்!

மெரிக்க ரேடியோ  மற்றும் டி.வி.யில் பல தொடர் நிகழ்ச்சிகள் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இன்றும் பலர் அவற்றை நினைத்துப் பார்த்து வருகிறார்கள். ஆர்ட் லின்க்லெட்டர் என்ற  நகைச்சுவையாளர்   ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அதன் பெயர்   ‘பீப்பிள் ஆர் ஃபன்னி (PEOPLE ARE FUNNY).  
ஒரு முக்கியமான புட்பால் போட்டி நடந்து கொண்டிருந்த  மைதானத்திற்குஅவரை  அனுப்பினோம் இரண்டு நடிகர்களுக்கு  போலீஸ்காரர்கள் மாதிரி நாங்களே டிரஸ் போட்டுத் தயார் செய்து விட்டோம்.
x
 இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ரேடியோ நிகழ்ச்சியாக   நடந்ததுபிறகு டி. வி.  நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 1943 முதல் 1960 வரை   நடந்தது.  அதில் 1943 முதல் 1960 வரை ஆர்ட் லின்க்லெட்டர்  என்ற நகைச்சுவையாளர் நிகழ்ச்சி   அமைப்பாளராக இருந்தார்.   அவர் எழுதிய ‘ பீப்பிள் ஆர் ஃபன்னி’ என்ற புத்தகத்தைப்  பல வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அவர் நடத்திய பல நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. மூன்று நிகழ்ச்சிகளைப் பற்றிய    விவரங்களைச்  சுருக்கமாக தருகிறேன்.
புது மணப்பெண்! ஒரு அழகான பெண்ணை மணப்பெண் மாதிரி
தடபுடலாக அலங்காரம் செய்தார்கள். அவருடைய கையில் பெரிய
பூங்கொத்தைக் கொடுத்தார்
கள்யாரும் அறியாதபடி ஒரு முக்கிய தெருவில் அவளை இறக்கி விட்டார்கள்.  இவர் சொல்லிக்கொடுத்தபடி அவள் நடித்தாள்.

February 24, 2019

அன்புடையீர்!,

அறிவிப்பு

அன்புடையீர், தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு போடுவதற்குச் சற்று தாமதம் ஆகிறது. இரண்டொரு  நாள் கழித்து போடுகிறேன். - கடுகு

February 11, 2019

பறக்கும் தட்டு


ஒவ்வொரு கால-கட்டத்திலும் ஏதாவது ஒரு  புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்டாக்கும் புரளி சில வருஷங்களுக்கு முன்பு பரவியது.  ஆனால் கிளப்பப்பட்டது  மட்டும்தான் மிச்சம். இந்த உலகத்திற்கு எதுவும் நேரவில்லை. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு  சிறிய  நல்ல பலன் கிட்டியது என்று சொல்லலாம். மகா பெரியவா சொன்னதன் பேரில், எட்டு கிரகங்களால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க தனியாகவோ சேர்ந்ததோ கோளறு பதிகம்
பஜனை பலர் செய்தார்கள். அதனால் தமிழ் மொழியின் அழகை ரசிக்க முடிந்தது; பாடல்களை தெரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடிந்தது. எட்டு கிரகங்கள் சேர்ந்து தமிழுக்கு செய்த சேவை என்று இதைக் கருதலாம்.

 இந்த காலகட்டத்தில் மற்றொரு ஆதாரம் இல்லாத செய்தி பல நாடுகளில் பரவியது. அது பறக்கும் தட்டு. அயல் கிரகங்களிலிருந்து, அந்த ‘பயங்கர’ கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் (Unidentified Flying Object)  வந்து இறங்க போகிறார்கள் என்று யாரோ திரித்துவிட்டார்கள்.  கூகுள் இல்லாத காலத்தில் கூட மிக வேகமாக  உலகெங்கும் பரவி விட்டது.

 இந்த ஊரில் பறக்கும் தட்டு வந்தது;  அந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது,  என்று பல கற்பனை மன்னர்கள் வதந்திகளைப் பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த பறக்கும் தட்டு சரடு அவ்வப்போது அடங்கிப்போகும் அவ்வப்போது வெளியே வரும்.

பறக்கும் தட்டு
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இரவு 8.15 மணியிலிருந்து 9 மணி வரை, அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில்  மாரிஸ் டவுன் என்ற ஊரில் - கிட்டத்தட்ட நம் மயிலாப்பூர் மாதிரியான ஊர் - ஓரிரவு பறக்கும் தட்டைப் பலர் பார்த்தனர். அந்தத் தட்டில் பெரிதாகத் தீவட்டி ஏதோ எரிந்து கொண்டிருந்தது. தாழ்வான உயரத்தில் அது பறந்து போவதைப் பார்த்து பயந்து, பலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உட்பட பலர் பார்த்தார்கள். எல்லோருக்கும் இனம் தெரியாத ஒரு பயமும், கிலியும் ஏற்பட்டது. தீயைக் கக்கிக் கொண்டு தட்டு பறந்தது.  சிறிது நேரத்திற்கு பிறகு அது எங்கேயோ போய் மாயமாகி விட்டது.