August 28, 2013

ஆ ,அமெரிக்கா: இரண்டு இலவசம்


ஆ, அமெரிக்கா:
 --இரண்டு இலவசம்

அமெரிக்காவில் நார்த் கரோலினா மாநிலத்தில் சேப்பல்ஹில் என்ற  நகரில் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அந்த மாநிலத்தில்தான் கிட்டிஹாக் என்ற புகழ் பெற்ற இடம்  இருக்கிறது. கிட்டிஹாக்கின் புகழிற்கு என்ன காரணம்? அங்குதான் ஆர்வில்-வில்பர் ரைட் சகோதரர்கள் கணக்கில்லாத முயற்சிகளுக்குப் பிறகு முதல் முதல் விமானத்தைப் பறக்க விட்டார்கள்.

ஒரு சமயம் கிட்டி ஹாக்கிற்குப் போனேன். அங்குள்ள ஒரு சிறிய குன்றிலிருந்துதான் அவர்கள் பறந்தார்கள். அவர்கள் சாதனை புரிந்த  அந்த குன்றில் ஒரு நினைவுத்தூண் வைக்கப்பட்டிருக்கிறது.

குன்றை ஒட்டிய மைதானத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் தரையில் மைல் கல் மாதிரி ஒரு கல்லை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். முதன் முதலில் அவர்கள் பறந்த விமானம், அந்த தூரம்தான் பறந்து வந்து, விழுந்து நொறுங்கியது! ஆண்டு  1903!

ஆனால் அதுவே பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அதனால் விமானம் நொறுங்கியதை எண்ணி அவர்கள் மனம் தளரவில்லை. மேலும் ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தந்தையார் ஒரு பிஷப், அவர் ஒரு புத்தகப்பிரியர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார்.   விமான ஆராய்ச்சி செய்த பலர் எழுதிய புத்தகங்களை சகோதரர்கள் முனைந்து படித்தார்கள்.

ரைட் சகோதரர்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.1905’ல் முதன் முதலாக அவர்களுடைய விமானம் அரை மணி நேரம் பறந்தது

கிட்டிஹாக்கில் அந்த புகழ் பெற்ற குன்றுக்கு அருகில் ரைட் சகோதரகள் விமானப் பொருட்காட்சி உள்ளது.

ஐந்தாறு அறைகளில் படங்களும் மாடல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல. முதன் முதல் பறந்த விமானத்தை அச்சு அசலாக மாடல் செய்து வைத்திருக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் 10 டாலர் என்று நினைவு. டிக்கட் வாங்கப் போனோம். டிக்கட் கவுண்டரில் ”இன்று இலவசம். யார் வேணுமானாலும் போகலாம்” என்றார்கள். ஏன் என்று கேட்கவில்லை. இலவசம் என்றால் பரவசம்தானே? பொருட்காட்சியைப் பார்த்து விட்டு  வந்தோம். வெளியே வரும்போது ஒரு பணியாளரிடம். “ஆமாம்.. இன்றைக்கு என்ன விசேஷம்? ஏன் இன்று இலவசம்?” என்று கேட்டேன்.

August 19, 2013

புதிய பழமொழிகள்!

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சில பழமொழி வாசகங்கள் புதிதாகத் தோன்றி அவை நாளாவட்டத்தில் பழமொழிகளாக ஆகி இருக்கும்.
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சில புதிய பழமொழிகளை உருவாக்கும் போட்டியை  நாலைந்து வருஷங்களுக்கு முன்பு ‘நியூ யார்க் டைம்ஸ்’  வைத்தது. வாசகர்களிடமிருந்து வந்த சுமார் 1200 பழமொழிகளைப் பிரசுரித்தது. அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

அதற்குமுன் --
தமிழுக்குச் சேவை செய்ய எண்ணி, நான் உருவாக்கிய சில தமிழ்ப் பழமொழிகளைத் தருகிறேன். அவற்றைப் படித்து ‘அனுபவியுங்கள்’!
* உன் ரிங்டோனைச் சொல்; நீ யார் என்று சொல்லுகிறேன்.
* ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒன்பது தொலைபேசி அழைப்பு மிச்சமாகும்.
*பழைய கேபிள்; புதிய கனக் ஷன்.
*முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ள முப்பது ஜி-மெயில் .
*இவனுக்கு எப்பவும் விண்டோஸே கதி;  அடுத்த வீட்டுப் பெண் WINDOW-லே!
*நேத்து பொறந்த பையன், கேக்கறான் பத்து வேலன்டைன் கார்டு.
* பையன் ஐ-பேட் (iPAD), பொண்ணு ஐ-ஃபோன் (iPhone); அம்மா மினி ஐ-பேட் Mini-iPAD), பேரன்- ஐ-பாட் (iPOD). பேத்தி-ஐ-டச் (iTouch), அப்பா:  I PAY!
* கெட்டிக்கார பொண்ணு கிட்ட BROAD-BAND இருந்தால் போதும்   HUS-BAND-ஐ வலை போட்டு பிடிச்சுடுவா!
இனி ‘நியூ யார்க் டைம்ஸ்’ போட்டிக்கு வந்தவை.
 Actions speak louder than tweets.
Where there’s a will there’s a lawyer.
If you can’t beat ’em, sue ’em.
You can take horse to a Bar but not make it drink beer
A pixel is worth 10 words.
Different keystrokes for different folks.
A stitch in time saves a trip to the dry cleaners – for alterations.
Don’t clone your chickens before they’ve hatched.
If you can’t say something nice about someone, blog about that person instead.
History retweets itself.
Live fat die young.
People who live in glass houses shouldn’t run Windows.
A ‘bama in the land is worth two of the Bush.
One man’s wine is the same man’s poison.
Friends, Romans, and countrymen: lend me your iPhone.
90% of inspiration is googlization.
Google is power.
Ask not what your newspaper can write for you, ask what you can write for your newspaper.
An Englishman’s home is his collateral.
A fool and his mortgage are soon parted.
Where there’s confusion, there’s profit.
An apple a day keeps the doctor away; a garlic a day keeps the dentist away.

August 13, 2013

WORD PLAY -வார்த்தை விளையாட்டு

 அன்புடையீர், 
சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எப்படியோ மாயமாய்ப்   போய்விட்டன. அவர்கள் அன்புடன் மறுபடியும் அனுப்பினால். பிரசுரிக்கிறேன்.
==================================
எலிஸபெத் ராணி
சமீபத்தில் எலிஸபெத் அரசிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம், அது தொடர்பான ஒரு துணுக்கைப் பதிவில் போடலாம் என்று எண்ணினேன். ஆனால் வேறு பதிவுகள் கியூவில்  முந்திக் கொண்டதால் போடவில்லை.
உடனே போடாததும் ஒரு விதத்தில்  நல்லதாகப் போயிற்று.

FLASHBACK:  1964-ல் ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ( அந்தக் குழந்தை தான்  எட்வர்ட்.) அந்தக் குழந்தை பிறந்தபோது லண்டன் டெய்லி மெயில் தினசரி குழந்தையின் படத்தை வெளியிட்டது.  குழந்தை அழுது கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம். படத்திற்கு மெயில் போட்ட தலைப்பு”  HIS CRYNESS!  (HIS ROYAL CRYNESS? - எது  சரி என்று  ஞாபகம் இல்லை.)
இந்த வித்தியாசமான WORDPLAY - யை நான் தினமணி கதிரில் துணுக்காக எழுதினேன்.
*               *                *
சமீபத்தில் அமுல் விளம்பரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏர்- இந்தியா விளம்பரங்களைப் போல் நகைச்சுவையுடன் அவை இருக்கும்.(யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் விளம்பரங்களும் இதே ரகம். ("At United India,it's always U before I.)  என்றாலும், இன்ஷூரன்ஸ் என்ற  வார்த்தையை வைத்துக் கொண்டு அதிகம் விளையாட முடியாது.

ராணிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம் அமுல் விளம்பரத்தில்
HIS  ROYAL CRYNESS! என்ற வார்த்தையை போட்டு இருந்தார்கள். படத்தைப் பார்க்கவும்.
போனசாக மேலும் சில அமுல் விளம்பரங்களைத் தருகிறேன். இப்போதெல்லாம் அமுல்  விளம்பரங்களில் ‘ஹிங்கிலீஷ்’ அதிகம் இருப்பதால் ஹிந்தி தெரியாதவர்கள் அதிகம் ரசிக்க முடியாது.

August 07, 2013

ஒரு மன்னரின் சவால்சமீபத்தில் ஒரு பொன்மொழிப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்தஒருபொன்மொழி:  BE PREPARED TO SHOOT THE KING – FOR I WILL BE THE SOLDIER”  என்று இருந்தது.KING CHRISTAIN  என்ற் ஒரு அரசர் சொன்னது. 
 இது என்ன பெரிய பொன்மொழி, யாரோ ஒரு அரசர் சொன்னதால், அது பொன்மொழி ஆகிவிடுமா? என்று தோன்றியது. பொன்மொழிப் புத்தகத்தில் ஓரளவு விவரங்கள் இருந்தன.. விவரமாகத் தகவல்களை அறிய வலை வீசினேன். 
KING CHRISTAIN- பற்றிய   விவரங்கள் அடங்கிய THE YELLOW STAR என்ற புத்தகம் அகப்பட்டது.  அதை படித்தேன். அதில் இந்த பொன்மொழி தொடர்பான சம்பவம் விவரிக்கப் பட்டு இருந்தது. அதை இங்கு தருகிறேன்.

1940’ம் ஆண்டு. அந்த கால கட்டத்தில் டென்மார்க் நாட்டில், அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும்  இல்லையாம்) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம். எந்த விதமான பாதுகாப்பும் வைத்துக் கொள்ளமாட்டார். மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மன்னனுக்கு மக்களே பாதுகாப்பு என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.

August 06, 2013

ஒரு மன்னரின் சவால்


சமீபத்தில் ஒரு பொன்மொழிப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்த ஒரு பொன்மொழி:  BE PREPARED TO SHOT THE KING – FOR I WILL BE THE SOLDIER.” 
 இது என்ன பெரிய பொன்மொழி, யாரோ ஒரு அரசர் சொன்னதால், அது பொன்மொழி ஆகிவிடுமா? என்று தோன்றியது. பொன்மொழிப் புத்தகத்தில் ஓரளவு விவரங்கள் இருந்தது. விவரமாகத் தகவல்களை அறிய வலை வீசினேன்
KING CHRISTAIN- பற்றிய   விவரங்கள் அடங்கிய THE YELLOW STAR என்ற புத்தகம் அகப்பட்டது.  அதை படித்தேன். அதில் இந்த பொன்மொழி தொடர்பான சம்பவம் விவரிக்கப் பட்டு இருந்தது. அதை இங்கு தருகிறேன்.

1940’ம் ஆண்டு. அந்த கால கட்டத்தில் டென்மார்க் நாட்டில், அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும்  இல்லையாம்.) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம். எந்த விதமான பாதுகாப்பும் வைத்துக் கொள்ளமாட்டார். மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மன்னனுக்கு மக்களே பாதுகாப்பு என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.. 

இரண்டாம் உலகப் போர் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். நாஜிப் படைகள் டென்மார்க் எல்லையைச் சூழ்ந்து இருந்தன.
 ஒரு நாள் நாஜிகள் தங்கள் கொடியை அரண்மனை கொடிக் கம்பத்தில் ஏற்றிவிட்டனர். இதற்கு மன்னர் என்ன செய்யப்போகிறார் என்று மக்கள் (பயத்துடன்) கவனித்துக் கொண்டிருந்தார்கள். நகர்வலம் வரும்போது நாஜி கொடியைப் பார்த்த மன்னர், ஒரு சிப்பாயை அனுப்பி அதை இறக்கச் சொன்னார்.
தங்கள் கொடி அகற்றப்பட்டதை மறுநாள் பார்த்த நாஜி ராணுவ அதிகாரி, மன்னரைப் பார்க்கக் கோபத்துடன் வந்தார். “ எங்கள் கொடியை அகற்றியது யார்?” என்று கேட்டார்.”