Showing posts with label எல்லாம் அவன் அருள். Show all posts
Showing posts with label எல்லாம் அவன் அருள். Show all posts

July 11, 2018

கடவுளின் கரங்கள்

இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே . பார்த்தசாரதி அவர்கள் கூறிய உண்மைச் சம்பவம். அவர் சொன்னதை அப்படியே இங்கு தருகிறேன்.
    *                        *                           *
    " என் கண்ணின் முன்னே நடந்த அதிசயம் அது. சத்தியமான நிகழ்ச்சி, ஆண்டவனின் அபார கருணையை, லீலையை அப்போது  கண்டேன்.
     விவரமாகக் கூறுகிறேன்;
     என்னுடன் பணியாற்றும் நண்பரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மனக் கோளாறு வேறு ஏற்பட்டு விட்டது. பிழைப்பதே அரிது என்று ஆகிவிட்டது. மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தார் பிறகு,”வாரத்துக்கு இரண்டு ஷாக் வீதம், பத்து மின்சார ஷாக் கொடுத்தால்,‘மன நோய் சரியாகிவிடும்என்று சொல்லி  மருத்துவமனையிருந்து  டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள்.
     வீட்டிற்கு வந்தும், அந்த அம்மாள் படுத்தபடியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே என் நண்பர் தன் மைத்துனரைத் தஞ்சாவூரிலிருந்து டில்லிக்கு வரவழைத்தார். அவர் வந்த பிறகு ஒருதரம் ஷாக் கொடுத்தார்கள். ஆனாலும் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
     இந்த சமயம், அந்த அம்மாளிடம் நான் திருப்புகழ். புத்தகங்களைக் கொடுத்து, அவற்றைப் படித்து மனச்சாந்தி பெறும்படி சொன்னேன். அவரும் படிப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டார்.
     அந்த திருப்புகழ் பிரதி என் நண்பருடையது.   அந்தப் பிரதியை எனக்குக் கொடுத்த அவர் “முருகன் அருள் தருவான்என்று எழுதிக் கொடுத்திருந்தார்.
 மருத்துவர் அடுத்த ’ஷாக்’ கொடுத்த பிறகும்   அந்த அம்மாவிற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தச் சமயத்தில், அவருடைய கிராமத்திலிருந்து ஒரு தந்தி வந்தது., அந்த அம்மாளின் தாயார் கிராமத்தில் காலமாகிவிட்டதாகத் தந்தியில் தெரிவித்து இருந்தார்கள்.  தன் நோயை மறந்து, “ ஐயோ அம்மா”  என்று அழுது அரற்றினார் என் நண்பரின்மனைவி.

September 04, 2010

டாக்டர் குருவாயூரப்பன். எம்.டி ( MASTER OF DIVINITY!)

கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.. எனக்கு மிகவும் வேண்டிய பெண்மணியின் வாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது நான் நேரிலேயே பார்த்தது என்று முதலிலேயே கூறி விடுகிறேன்.

சில வருஷங்களுக்கு முன்பு - 1995ல்- நாங்கள் எட்டு பேர் குருவாயூர் போகக் கிளம்பினோம். அது வரை நான் குருவாயூர்  போனதில்லை. எங்களுடன் ஒரு பெண்மணியும் வந்திருந்தார். ரயில் ஏறியதும் அவர் ”அம்மாடி.. என்னாலே அதிக நேரம்  நிற்கவோ   உட்காரவோ முடியாது. நான் படுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லியபடியே, தன் இடுப்பிலிருந்து ஒரு பட்டையான பெல்ட்டைக் கழட்டினார்.
“ என்ன மாமி..இது? இத்தனை பட்டையாக இருக்கிறது இந்த பெல்ட்?”  எங்களில் ஒருத்தர் கேட்டார்.  ”அதுவா .... இந்த பெல்ட் இல்லாவிட்டால் என்னால் ஒரு நிமிஷம் கூட நிற்கமுடியாது. என் முதுகு எலும்பில் இரண்டு இணைப்புகள் சரியாக இல்லை. L- 4, மற்றும் L - 5 இல் தேய்மானம் ஆகிவிட்டதால், அந்த இடத்தில் உடல் கனத்தின் பாதிப்பு ஏற்படுகிறது. பதினைந்து வருஷமாக என்னோடு ஒட்டு உறவாடிக்கொண்டிருக்கும் பெல்ட் இது.”
”எப்பவுமா பெல்ட்?...”
”ஆமாம் அம்மா ....  இதுக்குமுன்னே ஒரு இரும்பு பட்டையை பெல்ட் போல் செய்து கொடுத்தார்கள். அதன் கனம் ஒரு கிலோவுக்கு மேல்  இருக்கும்.”.
”நீங்கள் டில்லியில் இருந்தீர்களே  .. அங்கே பெரிய ஹாஸ்பிடலில் காண்பித்தீர்களா?. 

April 05, 2010

கடவுள் கை கொடுத்தார் - கடுகு

ஒரு உண்மைச் சம்பவம். முப்பது வருடத்திற்கு முன்பு நடந்தது.
என் நண்பரின் அப்பாவிற்குக் கரோல்பாக்கில் அஜ்மல்கான் ரோடுக்கு வெகு அருகில் மூன்று அடுக்கு மாடி வீடு சொந்தமாக இருந்தது. அவருக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளும் ஒவ்வொரு மாடியில் இருந்தார்கள். என் நண்பர் தன் தந்தையைத் தம் வீட்டிலேயே வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தார். தந்தை காலமாவதற்கு முன்பு தன் உயிலை மாற்றி எழுதினார்.  ( படம்: அஜ்மல்கான் தெருவை ஒட்டிய வீதியில் அவர் வீடு உள்ள வீதி) அந்த வீட்டை முழுமையாக என் நண்பரின் பெயரிலேயே எழுதி விட்டார். இப்படி மாற்றி எழுதியது  பிள்ளைகளுக்குத் தெரியாது. உயிலில் சாட்சியாக ஒரு வக்கீல் நண்பரையும், டாக்டர் நண்பரையும் கையெழுத்துப் போடச் செய்திருந்தார்.
தந்தை காலமானதும் உயில் விவரங்களை என் நண்பர் தெரிவிக்க மற்ற இரு சகோதரர்களும் கொதித்து எழுந்தார்கள். வாய்ச் சண்டை, கைச் சண்டை என்று நடந்தது. உயில் பொய் என்று கேஸ் போட்டார்கள்.
தன் சகோதரர்களைக் கூப்பிட்டு ஒரு சமாதான ஏற்பாட்டைச் சொன்னார் என் நண்பர். ``இந்த உயில் பொய் என்று வழக்குப் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை.நம் அப்பா இப்படி உயில் எழுதினார் என்று எனக்குத் தெரியாது. இறந்து போவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் உயிலைப் பற்றி என்னிடம் கூறினார். அப்பா உங்களுக்குப் பங்கு தராவிட்டாலும் பரவாயில்லை. நான் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தருகிறேன். அதைப் பெற்றுக் கொண்டு வீட்டைக் காலி பண்ணி விடுங்கள். நமது உறவு கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை'' என்றார்.