என் நண்பரின் அப்பாவிற்குக் கரோல்பாக்கில் அஜ்மல்கான் ரோடுக்கு வெகு அருகில் மூன்று அடுக்கு மாடி வீடு சொந்தமாக இருந்தது. அவருக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பிள்ளைகளும் ஒவ்வொரு மாடியில் இருந்தார்கள். என் நண்பர் தன் தந்தையைத் தம் வீட்டிலேயே வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தார். தந்தை காலமாவதற்கு முன்பு தன் உயிலை மாற்றி எழுதினார். ( படம்: அஜ்மல்கான் தெருவை ஒட்டிய வீதியில் அவர் வீடு உள்ள வீதி) அந்த வீட்டை முழுமையாக என் நண்பரின் பெயரிலேயே எழுதி விட்டார். இப்படி மாற்றி எழுதியது பிள்ளைகளுக்குத் தெரியாது. உயிலில் சாட்சியாக ஒரு வக்கீல் நண்பரையும், டாக்டர் நண்பரையும் கையெழுத்துப் போடச் செய்திருந்தார்.
தந்தை காலமானதும் உயில் விவரங்களை என் நண்பர் தெரிவிக்க மற்ற இரு சகோதரர்களும் கொதித்து எழுந்தார்கள். வாய்ச் சண்டை, கைச் சண்டை என்று நடந்தது. உயில் பொய் என்று கேஸ் போட்டார்கள்.
தன் சகோதரர்களைக் கூப்பிட்டு ஒரு சமாதான ஏற்பாட்டைச் சொன்னார் என் நண்பர். ``இந்த உயில் பொய் என்று வழக்குப் போட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஜெயிக்கப் போவதில்லை.நம் அப்பா இப்படி உயில் எழுதினார் என்று எனக்குத் தெரியாது. இறந்து போவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் உயிலைப் பற்றி என்னிடம் கூறினார். அப்பா உங்களுக்குப் பங்கு தராவிட்டாலும் பரவாயில்லை. நான் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் தருகிறேன். அதைப் பெற்றுக் கொண்டு வீட்டைக் காலி பண்ணி விடுங்கள். நமது உறவு கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை'' என்றார்.
``நல்ல கதையாக இருக்கிறது! ப்த்து லட்சம் பெறுமானமுள்ள வீடு இது. தலைக்கு கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரும். 25 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறாயா? உறவு கெட்டுப் போகக் கூடாதாம்!'' என்று கூறி நிராகரித்து விட்டார்கள்.
வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிக்கு உயில் உண்மையானது என்று சந்தேகமில்லாமல் தெரிந்து விட்டது. அவர் சகோதரர்களைப் பார்த்துக் கூறினார்: ``இந்த வழக்கில் தீர்ப்புக் கூறுவதற்கு முன்பு உங்களுக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். உங்கள் சகோதரர் தன்னிச்சையாக ஓரளவு பணம்தர முன்வருகிறார். தீர்ப்பு சொல்வதற்கு முன்பு அவருடன் ராஜியாகப் போய் விடுங்கள். ஆளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அவரைத் தரச் சொல்கிறேன். என்ன, சம்மதமா?'' என்று கேட்டார்.
பார்த்தார்கள் சகோதரர்கள். உள்ளதும் போய்விடும் என்பதை உணர்ந்த அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். இரு தரப்பினருக்கும் மூன்று மாத அவகாசம் தரப்பட்டது.
நண்பரின் தந்தை வீட்டை எழுதி வைத்து விட்டாரே தவிர பணம், காசு எதுவும் தரவில்லை. (அவரிடம் பணம் எதுவும் இல்லை.) 30 ஆயிரம் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பத்து லட்ச ரூபாய்க்குச் சமம்!
என் நண்பர் நகைகளை விற்றார். நண்பர்களிடம் கடன் வாங்கினார். நான் ஆயிரம் கடன்கொடுத்தேன். மூன்று மாதம் முடியப் போகும் கடைசி நாளில் 30 ஆயிரம் ரூபாயைக் கோர்ட்டில் கட்டினார்.
இனி நமக்கு வீடு இருக்கிறது என்று அவர் சந்தோஷப்பட முடியவில்லை.
கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்ற கவலையுடன் கோர்ட்டிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் டில்லி லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார்.
நம்புங்கள்! 15 தினங்கள் கழித்து லாட்டரி முடிவுகள் வந்தன. என் நண்பருக்கு, சரியாக 30 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருந்தது!
இது சத்தியமான சம்பவம்.
எல்லா நல்ல மனங்களுக்கும் உடனடியாக இப்படி பலன் கிடைக்கும் என்று கூற முடியாது. ஆனால் பலன் நிச்சயம் கிடைக்கும். ஆகவே மனதில் நல்லதை விதைப்போம்.
உரிய நேரத்தில் அன்னாருக்கு
ReplyDeleteஅதிர்ஷ்ட தேவதையின் பார்வை
பட்டிருக்கிறது!!!
incidents like these add to our belief on the Providence; and enthuse us to live honestly.
ReplyDeletethanks to god. till today there is god but now there is no human being??!!! everyone now is money minded and money lovers if there is a person with all human nature then sure today people will tell that he is mad.
ReplyDeletemanithan undu anal manitha neyam illai
- Kovai
<<<< சைவகொத்துப்பரோட்டா said...உரிய நேரத்தில் அன்னாருக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை பட்டிருக்கிறது!!!>>>
ReplyDeleteதெய்வத்தின் கடாட்சம் கிடைத்திருக்கிறது.
எல்லாம் அவன் அருள்.
ReplyDeleteஎனக்கு இது சரியாகவே படலை. அப்பா தான் கடைசி காலத்தில் ஒரு தலை பட்சமா செயல்பட்டாருன்னா அதுக்காக பிள்ளைங்க இப்படி பண்ணலாமா ? சமமா எடுத்துகிட்டு ஒரே வீட்டிலே இருந்திருந்தா வழக்கறிஞர் செலவு, அலைச்சல் மிச்சம் அதோடு உறவுநிலைக்குமே.
ReplyDeletevirutcham
It is my opinion that the gentleman should have shared the 3 floor house with his brothers. It was nice of him to have taken care of his father in his last days and he should have thanked the God for that opportunity. The other brothers might have been not so well to do as this gentleman comparably. I don't know if the other brothers and their wives were cruel and ill-treated their father. This gentleman may be the eldest and naturally the father would have stayed with him. It is highly appreciable that he took care of his father till the end so well that the father was happy to bequeath his house to him and him only.
ReplyDeleteBut, the man getting a raffle prize is his luck and I am unable to link it to his agreeing to pay Rs 30,000 to his brothers - agains his own earlier offer of Rs 50,000. This leaves a bad taste in my mouth. I am sorry I have differed from your / other followers'view point. - R. Jagannathan
Virutcham said...எனக்கு இது சரியாகவே படலை.
ReplyDelete>>> Iagree with you. Thisnbperson was a heart patient and was not expected to live long. Theother two borthers were irresponsble and were spendthrifts.
But still...
You are right
>>> Jagannathan said... I don't know if the other brothers and their wives were cruel and ill-treated their father>>>
ReplyDelete==Yes. They were.
>>>I am unable to link it to his agreeing to pay Rs 30,000 to his brothers - agains his own earlier offer of Rs 50,000.>>>>
He got the prize after thw court settelement.
>>> I am sorry I have differed from your / other followers' view point. >>
I am not saying my friend was a holy soul. In that set of circumstances he did not percieve the unfairness in this settleement .
இந்த வழக்கின் தீர்ப்பில் எனக்கு உடன்பாடு இல்லை.அவர் தனது த்ந்தையை வைத்து பாதுகாத்தார் என்ற ஒரு விசயத்திற்காக, த்ந்தை
ReplyDeleteவீட்டை அவர் பெயருக்கு எழுதி வைத்தார் என்பது தந்தைக்கு சரியாக இருக்கலாம்.ஆனால்
உங்கள் ந்ண்பர் உண்மையிலேயே மனசாட்சி
உள்ளவராக இருந்தால், சொத்தை சமமாக பங்கிட்டு இருக்கவேண்டும், அல்லது மொத்த மதிப்பில் மூன்றில் ஒரு பாகம் இருவருக்கும் கொடுத்து இருக்க வேண்டும். ஏனென்றால் மற்ற
இரு சகோதரகளின் மனமும், அவர்களின் மனைவி, பிள்ளைகளின் மனமும் உங்கள்
நண்பரை எவ்வளவு சபித்திருக்கும்?
அவர்கள் யார்? தன்னுடன் பிறந்தவர்கள்தானே?
அந்த பெருந்தன்மை அவரிடம் இல்லையே?
அவருக்கு 30 ஆயிரம் கிடைத்தது என்பது
தற்செயல்தான்!
மதி
<<< mathileo said...அந்த பெருந்தன்மை அவரிடம் இல்லையே?>>>> உண்மைதான். கோபமும் மனக்கசப்பும் அறிவை மழுங்கச் செய்யும்.
ReplyDeleteமிகவும் சுவையான பதிவு வழக்கம் போல!
ReplyDeleteஆனால் பதிவை விட பின்னூட்டங்களை மிக ரசித்தேன்!
ஒரு முதியவர்;அவர் இறுதிகாலத்தில் இரண்டு பிள்ளைகள் அவரை கைவிட்டுவிட மூன்றாவது பிள்ளை காப்பாற்றுகிறார் .தந்தை மனம் நெகிழ்ந்து சொத்து முழுவதும் அந்த பிள்ளை பெயரிலேயே எழுதி வைத்து விடுகிறார்.இதுவும் அந்த மகனுக்கு தெரியாது.
தந்தை மறைந்த பிறகு,தன் சகோதரர்களுக்கு அவர் ரூ 25000 தர தயாராக இருக்கிறார்.இதுவே போதுமானது .சொத்துக்களை மூன்று பங்காக பிரித்தால் அது தந்தையை அவமதித்தால் போல ஆகி விடும் என அவர் நினைத்து இருக்கலாம்.இதில் என்ன தவறு உள்ளது?
வேண்டுமானால் இப்படி செய்யலாம்.இப்பொழுது அந்த மாளிகையின் மதிப்பு ரூ.5 கோடிக்கு குறையாது.அவர் தன சகோதரர்களுக்கு,(ஒவ்வொருவருக்கும்) ரூ 10 லட்சம் கொடுத்து மகிழலாம்/மகிழ்விக்கலாம் !
Dear sir
ReplyDeleteWhat your freind did is totaly unfair.i don't know the reality. but you must be knowing since he is your freind!getting money in lotery is just a coincidence.for that your saying"கடவுள் கை கொடுத்தார்" etc its too much and rubbish.please note that we are in 2010 and only god need money from us!!.I read your writings regularly and enjoy your sense of hummaor.ofcourse iread your articles when i was young(still i am young!!).to read it again in your blog is nice.my request 'கடவுள் சாமி என்று இன்றய இளைஞர்களின் அறிவை மழுங்கச் செய்யாதீர்கள்!!
<<< கடவுளால் கைவிடப்பட்டவன் said...>>
ReplyDeleteThanks for your comments.
<<< please note that we are in 2010 and only god need money from us!! >>>
ReplyDelete:-)) :-))
சிறு வயதில் நான் "TRADE" என்ற dice game விளையாடுவேன்.அப்பொழுது ஒரு நாள் என் அப்பாவிடம் அந்த trade game பணத்தை கொடுத்து
அதை பத்திரமாக வைத்து கொண்டு கேட்கும் போது கொடுக்குமாறு சொல்லிக் கொடுத்தேன்.அப்போது அவர் இட்ட புன்னகையின் அர்த்தம் என்ன என்று இப்போதுதான் தெரிந்தது.
நீங்க நண்பனின் கதையை சொன்னதால் பதிவின் நோக்கம் திசை திரும்பி விட்டது. நீங சொல்ல நினைத்தது உங்கள் நண்பருக்கு அவசர நேரத்தில் தேவையான தொகை எதிர்பாராமல் கிடைத்தது கடவுள் செயல் என்பது. சரியா?
ReplyDeleteஅந்த வகையில் பார்த்தா எதிர்பாராத அதிர்ஷ்ட தேவதை அந்த சூழ்நிலையில் நம்மை மிகவும் நெகிழ வைக்கும். கடவுளின் இருப்பை ஊர்ஜிதப் படுத்தும்.
http://www.virutcham.com
<<< Virutcham said...நீங்க நண்பனின் கதையை சொன்னதால் பதிவின் நோக்கம் திசை திரும்பி விட்டது. >>>> ஒரு விதத்தில் சரிதான். திசை மாறி விட்டதாக நினக்கவில்லை... Now we get more view points since we are just obersvers.
ReplyDeleteவலைஞன் சொல்லுவதைப்பார்த்தால், இன்றைய தலைமுறையின் எண்ண்ங்கள் ந்ம்மைவிட வேறுபட்டுத்தான் இருக்கிறது.சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதானோ!
ReplyDeleteThamizh puththaandukku Arumaiyaana, Rusikkaththakka, Suvaiyaana, vagai vagaiyaana virundhu mattumae ungalidam ethir paarkkirom! - R. Jagannathan
ReplyDelete