பல வருஷங்களுக்கு முன்பு.கல்கி தீபாவளி மலரில் ஆண்டாளின் `வாரணமாயிரம்' பாடல்களை அழகான படங்களுடன் (ஓவியர் ரவி என்று நினைவு) 5 பக்கங்களுக்குப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்ததும் தான் திருமணங்களில் பாடப்படும் இந்தப் பாடல்கள் ஆண்டாள் இயற்றியவை என்று அறிந்ததுடன் அவற்றின் அழகுத் தமிழில் மனதைப் பறி கொடுத்தேன். (திருமணங்களில் வாரணமாயிரம் பாடல்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் புரோகிதர்கள் சொல்வார்கள். ஆகவே பாடலே பாதி புரியாது.)
அதுவரை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஓரளவே ஈடுபாடு இருந்தது. அதன்பின் அதன் மேல் மிகுந்த ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் `மர்ரே' ராஜம் மலிவுப் பதிப்பாக மாதாமாதம் பல இலக்கியங்களை வெளியிடத் துவங்கினார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை 4 பாகங்களாக ஒரு மாதம் வெளியிட்டார். நாலு புத்தகங்களின் மொத்த விலை ரூ.4/- (ஆம். அவர் வெளியிட்ட எல்லா புத்தகங்களுக்கும் ஒரே விலை: ஒரு ரூபாய் என்று நிர்ணயித்திருந்தார்.) நாலு புத்தகத்தையும் வாங்கினேன்.. படிக்கப் படிக்க தமிழ் மொழியின் அழகும், வீச்சும், ஆழ்வார்களின் கற்பனைத் திறனும், பக்திப் பெருக்கும் என்னை ஆட்கொண்டன. இதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் எங்கள் வீட்டு புத்தக அலமாரியைப் பார்த்துக் கொண்டிருந்த போது நாலாயிரத்தின் ஒரு பாகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தேன். லேசான மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த புஸ்தகத்தில் என் அப்பா, தன் கையெழுத்தையும் வாங்கிய தேதியையும் போட்டிருந்தார். அந்த தேதி நான் பிறந்த தேதிக்கு அடுத்த நாள்! அத்துடன் இன்னொரு பதிப்பும் இருந்தது. அது 1913-ல் பிரசுரிக்கப்பட்டது. கிட்டதட்ட 100 வருஷத்திற்கு முன் பிரசுரிக்கப்பட்ட அதைக் குடும்பப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
அதன் பிறகு யார் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரசுரித்தாலும் வாங்க ஆரம்பித்தேன்.
* * *
திருமணம் ஆன பிறகு என் மனைவியும் நானும் நாலாயிரம் படித்தோம் எல்லாப் பாசுரங்களையும் ஒரு தரம் படித்தோம் . பிறகு 4000 பாடல்களையும் நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். (அந்த கால கட்டத்தில் நான் அரசு ஊழியர். ஆதலால் நேரத்திற்குப் பஞ்சமில்லை!) உத்தமூர், அண்ணங்கராச்சாரியார் புத்தகங்களைப் பார்த்து, `ராஜம்' பதிப்பு புத்தகங்களில் பள்ளி பாட புத்தகங்களில் செய்வது போல் கடினமான பதங்களுக்குக் கோடிட்டு அர்த்தமும் எழுதினேன். பிறகு நாங்கள் இருவரும் 4000 பாசுரங்களையும் படித்தோம். எங்கள் குழந்தைக்கு இரண்டு வயது ஆனதுமே திருப்பாவை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம்.
அவளுக்கு இரண்டரை வயது ஆன சமயம் செங்கல்பட்டிற்கு வந்திருந்த கதாகாலட்சேப விற்பன்னர் எம்பார் விஜயராகவாச்சாரியாரை. என் மனைவியும் நானும் என் குழந்தை ஆனந்தியுடன் அவர் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.
``இவள் எங்கள் பெண்.. திருப்பாவையில் முதல் பத்து பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறோம். அவள் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்'' என்றோம்.
``அப்படியா? சொல்லும்மா எந்தப் பாசுரமாவது?'' என்று அவர் சொன்னார். ``இல்லை. நீங்கள் ஒரு பாசுரத்தைக் கேளுங்கள். அவள் சொல்வாள்.'' என்றோம். ``சரி.. ‘ஆழி மழைக் கண்ணா’சொல்லும்மா'' என்றார். என் பெண் நிறுத்தி நிதானமாக வார்த்தைப் பிசகாமல் சொன்னாள். கடைசி வரியை `நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து -- ஏலோர் எம் பாவாய்' என்று பிரித்துச் சொன்னாள். எம்பாருக்கு திடீரென்று ஒரு உற்சாகம் ஏற்பட்டது. ``டேய் வேம்பு, இவனே... எல்லாரும் வாங்கடா. இந்த இரண்டு வயதுக் குழந்தை திருப்பாவை என்னமாய்ச் சொல்கிறாள், கேளுங்கள். ரெம்பாவாய், ரெம்பாவாய்ன்னு நீங்க ரம்பம் போடறீங்களே... இவள் பதம் பிரிச்சு `எம் பாவாய்' என்று அழகாகச் சொல்றதைக் கேளுங்கள்...'' என்றார்.
அடுத்து `ஓங்கி உலகளந்த' சொல்லும்மா'' என்றார். ஆனந்தியும் சொன்னாள்.
உடனே எம்பார், ``டேய்... வேம்பு... போய் பூ, பழம், வெற்றிலை, தேங்காய் எல்லாம் வாங்கிண்டு வாங்க'' என்று அனுப்பினார். வெகு அருகிலேயே கடைகள் இருந்ததால் ஐந்தாவது நிமிஷத்தில் எல்லாப் பொருள்களும் வந்தன. குழந்தையும் நாங்களும் அவரைச் சேவித்தோம். ஆசீர்வாதம் செய்து வெற்றிலை பாக்கு கொடுத்தார். “ இவள் ஓஹோ என்று வருவாள்” என்று ஆசிர்வதித்தார்.
* * *
டில்லியில் என் நண்பர் ராமநாத அய்யர். விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கத்தை நிறுவினார். ஞாயிற்றுக்கிழமைகளில் சகஸ்ரநாம பாராயணம். சின்னதாக ஆரம்பித்தது விரைவில் பெரிதாக வளர்ந்து விட்டது. (இப்போது அதற்கு 41 வயது) ஆண்டு விழாவில் சத்சங்கம் ஏதாவது ஒரு புத்தகத்தை வெளியிட ஆரம்பித்தது. சில வருடங்களில் கணினி வந்து விட்டது. தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கணினியில் அச்சுகோத்து (DTP) செய்வதில் என் மனைவியும் நானும் நல்ல தேர்ச்சி பெற்றோம். சத்சங்கத்தின் புத்தகங்களை என் மனைவியும் நானும் வீட்டிலேயே வடிவமைத்துக் கொடுத்தோம்.டில்லி சத் சங்கங்கள் பலவற்றுக்கு சாவனீர் நிறைய செய்து கொடுத்தோம்.
இவ்வளவு பிரசுரித்திருந்தும், நாலாயிரத்தை நாமே பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்குத் தோன்றவில்லை. ஒன்றிரண்டு லட்சங்கள் தேவைப்படும் என்பதாலோ என்னவோ!
டில்லியை விட்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். 2005-ம் ஆண்டு மார்கழி மாதம், நாரத கான சபாவில் திருப்பாவை விளக்க உரை தினமும் கலியாணபுரம் ஆரவமுதாச்சரியார் காலை 7 மணிக்கு நடத்துவது அறிந்து 30 நாளும் போனோம். ரசித்தோம். அப்போது `மயர்வு அற மதிநலம் அருளியவன்' எங்கள் மனதில் புகுந்து நாலாயிரத்தைப் புத்தகமாகப் போடும் எண்ணத்தை தோற்றுவித்தான். உடனே வேலையை ஆரம்பித்தோம். அப்போது சில தீர்மானங்களை உருவாக்கிக் கொண்டோம்.
`
எவ்வளவு செலவானாலும் நாலாயிரம் புத்தகத்தின் விலையை ரூ.100/-க்கு மேல் வைக்கக் கூடாது. எழுத்துகள் 13 பாயின்டிலாவது இருக்கவேண்டும். பாசுரங்களைப் பதம் பிரித்து போட வேண்டும். புத்தகத்தை திரு.கலியாணபுரம் அவர்கள்தான் வெளியிட வேண்டும். அதுவும் நாரத கான சபா அரங்கில், என்று நாங்களே தீர்மானித்து விட்டோம்.
கலியாணபுரம் அவர்களைச் சந்தித்துப் பேசலாம் என்று ஒரு மார்கழி மாதம் காலையில் சற்று சீக்கிரமாகவே நாரத கான சபாவிற்குச் சென்றோம். சபா காரியதரிசி மதிப்பிற்குரிய திரு. ஆர்.கிருஷ்ண ஸ்வாமி. தனியாக நின்று கொண்டிருந்தார். அவருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு, ``எங்களை உங்களுக்கு தெரிந்திருக்காது. உங்களிடம் பேச வேண்டும். ஒரு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.'' என்றோம்.
``அப்பாயிண்ட்மெண்ட் எதற்கு? இப்போதான் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களே... என்ன சமாசாரம்?'' என்று பரிவுடன் கேட்டார்.
எங்கள் திட்டத்தைச் சொன்னோம். ``அப்படியா... வெரிகுட். செய்து விட்டால் போகிறது. இந்த மாதிரி பணிகளுக்கில்லாவிட்டால் இந்த பெரிய ஹால் வேறு எதற்கு இருக்கிறது? நிச்சயம் செய்து விடலாம். இதோ கலியாணபுரம் வருகிறார்'' என்று சொல்லி அவருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். கலியாணபுரமும் எல்லா உதவிகளையும் செய்வதாகச் சொன்னார். அணிந்துரையும் எழுதித் தந்தார்.
``ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமியிடம் ஸ்ரீமுகம் கேட்டு வாங்கித் தருகிறேன்'' என்று சொன்னார். அத்துடன் அவருடைய `ஸ்ரேயஸ்' அமைப்பின் விழாவிலேயே புத்தக வெளியீட்டு விழாவை சேர்த்துக் கொண்டார். ஆண்டவன் ஸ்வாமிகளை அணுகி வெளியிடும்படி கேட்டுக் கொண்டார்.
நாரத கான சபா காரியதரிசி திரு. ஆர்.கே. அவர்களோ, ``உங்களுக்கு ஒரு பைசா செலவு இல்லாமல் நான் நடத்திக் கொடுக்கிறேன். இது என் உத்தரவாதம்...'' என்று உற்சாகத்துடன் சொன்னார்.
எந்த வித அறிமுகமோ செல்வாக்கோ இல்லாத ஒரு கணவன் மனைவி டீமிற்கு அவர் எல்லா உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்!
2006 ஏப்ரல் மாதம்தான் புத்தகம் (2 பாகங்கள்; 848 பக்கங்கள்) தயார் ஆயிற்று. ஒரு வருட கால முயற்சி.
புத்தகம் வெளியீடு சிறப்பாக நடந்தது. முதல் பிரதிகளை சங்கர நேத்ராலயா டாக்டர் பத்ரிநாத் அவர்களும், நகைச்சுவை ஜீனியஸ் கிரேசி மோகனும் வேறு சிலரும் பெற்றுக் கொண்டார்கள். கமலஹாசன் கேட்டார் என்று கிரேசி சொன்னார். ஒரு செட் கொடுத்து அனுப்பினேன்.
எந்த விளம்பரமும் செய்யாமலும், எந்த புத்தக விற்பனை ஏஜென்சியின் உதவியும் இல்லாமலும் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். மூன்றே மாதங்களில் மொத்த புத்தகங்களும் விற்று விட்டன. எங்களாலேயே நம்ப முடியவில்லை. பலர் பத்து, இருபது காபிகள் வாங்கிக் கொண்டார்கள். சிலர் எங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து - வேண்டாம் என்று உண்மையாகத் தடுத்த போதிலும் - நமஸ்கரித்து விட்டு வாங்கிக் கொண்டார்கள். ``நூறு ரூபாய் ரொம்ப குறைவு'' என்று சொல்லி 500 ரூபாயைத் திணித்து விட்டுப் போனவர்களும் உண்டு. (அப்படி பணம் அனுப்பியவர்களில் ஒருவர் ஓவியமேதை கோபுலு!)
இரண்டாவது பதிப்பு போட்டோம். ஒருத்தரே நூறு காபி வாங்கிக் கொண்டார். மற்றொருத்தர் தன் மகன் திருமணத்தை ஒட்டி நூறு காபிகள் வாங்கித் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுத்தார். ஒரு தொழிலதிபர் 100 + 200 காபிகள் வாங்கிக் கொண்டார்.
இந்தப் புத்தகத்தைத்தான் ”புத்தக சந்தையில் நான் வாங்கிய ஒரே ரத்தினம்” என்று சுஜாதா எழுதியிருந்தார்.” “ தன் மேஜையின் மேல் இந்த இரண்டு பாகங்களையும் சுஜாதா எப்போதும் வைத்திருப்பார்” என்று எழுத்தாளர் “சுஜாதா தேசிகன்’ என்னிடம் ஒரு சமயம் சொன்னார்.
* * * *
பக்தி இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஆழ்வார்களின் அழகுத் தமிழ் பொங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் உண்மையிலேயே ஒப்பற்ற ரத்தினம்தான். அதை பதிப்பித்து வெளியிட எங்களைப் பணித்த அவன் பொற்றாள் தொட்டு வணங்குகிறோம். ஒரு கத்துக்குட்டியின் பதிப்பு என்ற அளவிலாவது இந்த பதிப்பு என்றென்றும் பக்தி இலக்கியங்களின் புத்தகப் பட்டியலில் இருக்கும்.

நல்ல பணி. தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் செய்த சேவை.
ReplyDeletegod bless you sir
ReplyDeleteDear Sir,
ReplyDeleteWhere can I get this Book in Delhi ? ( Iam in Gurgaon )Can this Book be bought through Net?
Pl. reply to my e mail. ID.
Thanks
S.Kannan.
Namaskaram sir,
ReplyDeleteCan you kindly guide me where i can buy this.
Thanks in advance
Kulasekaran
mobile :9840902495
PLease see the advertisement about this book on the right panel of this blog. You can ring Nandhini Pathippakam 9381024379 and give your mailing address. Books will be mailed to you. Payment can be made after the receipt of the books.
ReplyDeleteYou can also order Nalayiram books from Sri Srinivasan cell: 9444187365
ReplyDeleteஇவ்வளவு செய்த உங்கள் மனைவியின் போட்டோவைப் போட்டிருக்கலாமே! ஏன். உங்கள் குழந்தையின் படத்தையும் போட்டிருக்கலாம்.-- டில்லி பல்லி
ReplyDeleteநமஸ்காரங்கள்! நாங்கள் வாங்கிப் பயன் அடைந்தோம்! நமஸ்காரங்கள்!
ReplyDeleteஐயா,
ReplyDeleteஊருக்கு வரும் போது அடியேன் இந்தப் புத்தகத்தை கட்டாயம் வாங்க வேண்டுமே! நந்தினி பதிப்பகம் வெளியீடு என்று வலப்பக்கம் ஒரு விளம்பரம் இருக்கிறதே. அந்த புத்தகம் தானா? அடியேன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கே அனுப்ப வேண்டுமென்றால் எவ்வளவு ஆகும்?
உங்கள் புஸ்தகத்தின் விளம்பரம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் - ஆனால் வாங்குவது தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. இன்று என் தம்பி ஸுஜாதாவின் ‘ ஆழ்வார்கள் ஒரு அறிமுகம்’ என்ற புஸ்தகம் கொடுத்தான். என் தங்கையும் சென்னை பல்கலையில் 2 வருட ஸ்ரீ வைஷ்ணவிஸம் கோர்ஸ் இந்த வருடம் முடித்து விட்டாள். அவளும் என் ஓய்வு நாட்களை நல்ல புஸ்தகங்கள் படிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்பொது உஙகளின் இந்த பதிவைப் படித்ததும் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் படிக்கும் ஆசை வந்து விட்டது. நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன். - ஜகன்னாதன்
ReplyDeleteJ<<<< agannathan said... உங்கள் புஸ்தகத்தின் விளம்பரம் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் >>>>
ReplyDeletePlease phone Mr Srinivasan 9444187365 and request him to send the books. He will post the books to you. On receipt of the books you can send him a cheque drawn in favour of Nandhini Pathippalkam.
Does the book also cover the meanings for the songs ? or just song only ?
ReplyDeleteAre there any books with Prabandam with meaning clearly given - in simple language (tamil).
thanks
Suresh
நாலாயிரம் புத்தகத்தில் பாசுரங்கள் மூலம் மட்டும் உள்ளன. உரை இல்லை. ஆனால் பதம் பிரித்து இருப்பதால் 50 -60 சதவிகித பாசுரங்களுக்குப் பொருள் புரிந்துவிடும்.
ReplyDeletetears have rolled ! after reading in full about your resolve & efforts . all names told in the blog are great people, tamilukku vera yenna sevai ! alwargal ... i am not able to continue , tears are blokking my eyes.
ReplyDeleteungal manaiviyen, madam KAMALA udavi is very very great.
humble,
idiyen dasan to your efforts.
ma Vee SEETARAMAN.
Thank for your comments. Ihave sent you an email now.
ReplyDeleteநாலாயிர திவ்யப் ப்ரபந்தப் பாடல்களைத் தேடும்போது தங்களின் இடுகையை காண நேர்ந்தது. தங்களின் அரிய, பெரிய முயற்சி பாராட்டத்தக்கது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கும், உங்கள் முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களையும், நலங்களையும் அருள்வான். நன்றி. (புத்தகங்களை வாசித்துவிட்டுக் கருத்து தெரிவிக்கிறேன்.)
ReplyDeleteஸ்ரீ....
Peranbudaiyer, Namaskaram.I want one copy.To whom I have to contact ?. Nantrigal palappala.
ReplyDeleteDear Sir, Please see the Ad on the right column of the blog and phone the number given in the Ad
ReplyDelete-Kadugu
Sir,
ReplyDeletethe pubisher's number si always switched off. the other No o Mr. Srinivasan ( He never responds) any other alternative to buy
Mr Prasad, The printed copies of Nalayiram are all sold out. You can buy the e-book in Amazon Kindle in 4 volumes. Each vol costs only one dollar. -Kadugu
ReplyDeletePRINTED BOOKS ARE SOLD OUT. oNLY e-BOOKS ARE AVAILABLE IN AMAZON
ReplyDeleteSir
ReplyDeletewhen will be the Nalayiram reprinted. Is there any idea of reprinting. reading ebooks is a strain to my eyes
Printing, keeping the stock of the the copies and packing and posting individual copies are very laborious. I have done this for nearly 13 years. I have therefore, with regret, decided to close shop.- Kadugu
ReplyDelete