செங்கற்பட்டு சேவா சங்கத்திற்காக எம். எஸ் அவர்கள் ஒரு கச்சேரி 1952-ல் செய்தார். சங்கத்தின் தொண்டன் என்ற முறையில் கச்சேரி செய்ய வந்த எம். எஸ். அவர்களுக்கு நமஸ்காரம் போட்டேன். பிறகு கச்சேரி முடிந்து அவர் விடைபெறும்போது அவ்ரிடம் கையெழுத்து வாங்கினேன்..
அதன் பிறகு 1985-ல் அவரது உறவினர் திருமணத்திற்குப் போயிருந்து போது அவர் இங்கும் அங்கும் போய் எல்லாரையும் விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து போனேன். குறுக்கே போன என்னிடம் “சாப்பிட்டீங்களா?” என்று பரிவோடு கேட்டார்.2004-ல் ஒரு நாள் என் டில்லி நண்பர் போன் செய்தார்.: என் பையன் ரவி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். அவன எம்.எஸ். அவர்களைப் பார்த்து ந்மஸ்காரம் சொல்ல ஆசைப்படுகிறான். நாளைக்குப் பகல் சென்னை வருகிறான். சாயங்காலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்... ஆகட்டும், பார்க்கிறேன் அது இது என்று எது சொன்னாலும் என் காதில் விழாது... நீங்கள் தான் பிரபலமான ஆசாமியாச்சே!” என்று சொன்னார்.
எம். எஸ் அவர்களோ உடல் நலமில்லாமல் இருக்கிறர் என்பது எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று புரியவில்லை. ‘எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமே: என்று திரு. ஆத்மா அவர்களுக்குப் போன் செய்தேன்
என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ஆத்மா உடனே உற்சாகமாக: ”அடேடே.. நீங்களா? எப்படி இருக்கீங்க? டில்லிதானே?” என்று மிகவும் பரிச்சியமானவரைப் போல கேட்டார். ( அவர் என் விசிறி என்பதைப் பின்னால் அறிந்தேன்.)