1. MOTHER'S DAY SPECIAL: வியப்புக்குரிய ரோஸ் கென்னடி
அமெரிக்க அதிபராக இருந்த J.F. கென்னடியின் அம்மா ரோஸ்
கென்னடி ஒரு துடிப்பான பெண்மணி. (இவரைப் பற்றிய ஒரு சுவையான துணுக்கை
‘தாளிப்பு’வில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.) அதன் சுட்டி: அம்மாவுக்கு
அட்வைஸ்.
“எங்கள் குடும்பத்தை
ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் பசை எங்கள் அம்மாதான்” என்று கென்னடி ஒரு சமயம்
கூறியிருக்கிறார்.
ரோஸ் கென்னடி ஒன்பது குழந்தைகளைப்
பெற்றவர். ஒரு சமயம், தன் மகன் TED
KENNEDYக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு கூட்டத்தில் அவர்
கூறியது...”நான் ஒன்பதாவது தடவை கர்ப்பமாக இருந்தபோது சிலர் என்னிடம் கேட்டனர்,
‘இப்படி கர்ப்பமடைவதால் உன் அழகு குலைந்து போய்விடாதா?’ என்று.” அவர்களுக்கு அப்போது
நான் ஏதும் பதில் கூறவில்லை. இப்போது இந்தக் கூட்டத்தில் அந்தக் கேள்விக்குப்
பதில் சொல்கிறேன். நான் ஒன்பதாவது குழந்தையைப் பெற்றெடுக்காமல் இருந்தால், இன்று
ஒரு பிள்ளையுமில்லாதவளாக ஆகி இருப்பேன்” என்றார்.
கூட்டத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து
போய்க் கண்களைத் துடைத்துக்கொண்டனர்.
ரோஸ் கென்னடி ஒரு சமயம் சொன்னது: கடவுள் தர மறந்தது. நான் அவ்வப்போது எனக்குள்ளேயே சொல்லிக்
கொள்வேன்: என் பிள்ளை, பெண்களுக்கு அழகு, கெட்டிக்காரத்தனம், நண்பர்களைத் தேடிக்
கொள்ளும் திறமை, மற்றவர்களின் மதிப்பைச் சம்பாதிக்கும் வல்லமை, சுறுசுறுப்பு
எல்லாம் கொடுத்த கடவுள், ஒன்றை மட்டும் கொடுக்கவில்லை-அவர்களுக்கு நீண்ட ஆயுள். இதை அவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என்
விருப்பம்