Showing posts with label Special. Show all posts
Showing posts with label Special. Show all posts

October 02, 2019

நானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டு



கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இடையிடையே ஒரு சில   சொந்தப்  பாடல்களைப் பல புலவர்கள் புகுத்தி வைத்துள்ளது  அனைவரும் அறிந்ததே.
கம்பன் பெயரோடு தாங்களும் சேர்ந்து பெருமைப்படலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடைச்செருகல் பாடல்களை உருவாக்கி வந்துள்ளார்கள்!
  அவற்றைக் கண்டுபிடித்து நீக்குவதற்கு மிகுந்த திறமையும் புலமையும் வேண்டும்;  டி.கே.சி போன்று ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்  விழிப்புடன் ஈடுபட்டால் இந்த கலப்பட பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
  இந்த  பித்து உலகெங்கும் பலரைப் பிடித்து ஆட்டும் அல்ப ஆசை! ஆனால் இங்கிலாந்தில் ஒரு இருபது வயது பையன் செய்த தில்லுமுல்லுவுக்கு ஈடு எதுவும் கிடையாது.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது ஷேக்ஸ்பியர்  காலமான பிறகு, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு நடந்த தில்லு முல்லு!

       வில்லியம் ஹென்றி அயர்லாந்து என்ற இளைஞன் என்ன செய்தான் தெரியுமா?  அவன் லண்டனில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஏதோ பழைய பத்திரங்களைத் தேடியபோது, ஒரு பத்திரத்தில் ஷேக்ஸ்பியரின் சாட்சிக் கையெழுத்து இருப்பதை பார்த்தான்.  

அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

 ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களைப் படித்து இருந்ததால், அவருடைய கையெழுத்தைப் பார்த்ததும் அவனை ஒரு வெறி பிடித்துக் கொண்டது.  ஷேக்ஸ்பியரின்  நாடகங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தான். 

   அத்துடன் நிற்கவில்லை. சுமார் ஒன்றரை வருஷம்  பத்திரத்தில் இருந்த ஷேக்ஸ்பியரின் கையெழுத்தைப் பார்த்து,  அப்படியே  எழுதப் பழகினான்.  
இத்தனைக்கும் அவரது நாடகங்களின் ஒரிஜினல் கையெழுத்து பிரதிகள் யாவும் மறைந்து போயிருந்தன. 
இளைஞன் அயர்லாந்திற்ககு மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வம் உண்டு அவனே நடிகனாக வேண்டும் என்று விரும்பினான். அத்துடன் கவிதைகள் எழுதுவதிலும் அவனுக்கு விருப்பம் உண்டு .
படிப்பில்  அவன் படு சூனியம். அவனுடைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் ஒரு சமயம் கூறியது  “ உன்னால் பள்ளிக்கூடமே அவமானம் அடைகிறது.” .
அவனுடைய பெற்றோர்களும் அவனை ’வடிகட்டி’ என்றுதான் சொல்வார்கள் 

February 25, 2019

மக்கள் வேடிக்கையானவர்கள்!

மெரிக்க ரேடியோ  மற்றும் டி.வி.யில் பல தொடர் நிகழ்ச்சிகள் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இன்றும் பலர் அவற்றை நினைத்துப் பார்த்து வருகிறார்கள். ஆர்ட் லின்க்லெட்டர் என்ற  நகைச்சுவையாளர்   ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அதன் பெயர்   ‘பீப்பிள் ஆர் ஃபன்னி (PEOPLE ARE FUNNY).  
ஒரு முக்கியமான புட்பால் போட்டி நடந்து கொண்டிருந்த  மைதானத்திற்குஅவரை  அனுப்பினோம் இரண்டு நடிகர்களுக்கு  போலீஸ்காரர்கள் மாதிரி நாங்களே டிரஸ் போட்டுத் தயார் செய்து விட்டோம்.
x
 இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ரேடியோ நிகழ்ச்சியாக   நடந்ததுபிறகு டி. வி.  நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 1943 முதல் 1960 வரை   நடந்தது.  அதில் 1943 முதல் 1960 வரை ஆர்ட் லின்க்லெட்டர்  என்ற நகைச்சுவையாளர் நிகழ்ச்சி   அமைப்பாளராக இருந்தார்.   அவர் எழுதிய ‘ பீப்பிள் ஆர் ஃபன்னி’ என்ற புத்தகத்தைப்  பல வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அவர் நடத்திய பல நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. மூன்று நிகழ்ச்சிகளைப் பற்றிய    விவரங்களைச்  சுருக்கமாக தருகிறேன்.
புது மணப்பெண்! ஒரு அழகான பெண்ணை மணப்பெண் மாதிரி
தடபுடலாக அலங்காரம் செய்தார்கள். அவருடைய கையில் பெரிய
பூங்கொத்தைக் கொடுத்தார்
கள்யாரும் அறியாதபடி ஒரு முக்கிய தெருவில் அவளை இறக்கி விட்டார்கள்.  இவர் சொல்லிக்கொடுத்தபடி அவள் நடித்தாள்.

February 11, 2019

பறக்கும் தட்டு


ஒவ்வொரு கால-கட்டத்திலும் ஏதாவது ஒரு  புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்டாக்கும் புரளி சில வருஷங்களுக்கு முன்பு பரவியது.  ஆனால் கிளப்பப்பட்டது  மட்டும்தான் மிச்சம். இந்த உலகத்திற்கு எதுவும் நேரவில்லை. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு  சிறிய  நல்ல பலன் கிட்டியது என்று சொல்லலாம். மகா பெரியவா சொன்னதன் பேரில், எட்டு கிரகங்களால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க தனியாகவோ சேர்ந்ததோ கோளறு பதிகம்
பஜனை பலர் செய்தார்கள். அதனால் தமிழ் மொழியின் அழகை ரசிக்க முடிந்தது; பாடல்களை தெரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடிந்தது. எட்டு கிரகங்கள் சேர்ந்து தமிழுக்கு செய்த சேவை என்று இதைக் கருதலாம்.

 இந்த காலகட்டத்தில் மற்றொரு ஆதாரம் இல்லாத செய்தி பல நாடுகளில் பரவியது. அது பறக்கும் தட்டு. அயல் கிரகங்களிலிருந்து, அந்த ‘பயங்கர’ கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் (Unidentified Flying Object)  வந்து இறங்க போகிறார்கள் என்று யாரோ திரித்துவிட்டார்கள்.  கூகுள் இல்லாத காலத்தில் கூட மிக வேகமாக  உலகெங்கும் பரவி விட்டது.

 இந்த ஊரில் பறக்கும் தட்டு வந்தது;  அந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது,  என்று பல கற்பனை மன்னர்கள் வதந்திகளைப் பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த பறக்கும் தட்டு சரடு அவ்வப்போது அடங்கிப்போகும் அவ்வப்போது வெளியே வரும்.

பறக்கும் தட்டு
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இரவு 8.15 மணியிலிருந்து 9 மணி வரை, அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில்  மாரிஸ் டவுன் என்ற ஊரில் - கிட்டத்தட்ட நம் மயிலாப்பூர் மாதிரியான ஊர் - ஓரிரவு பறக்கும் தட்டைப் பலர் பார்த்தனர். அந்தத் தட்டில் பெரிதாகத் தீவட்டி ஏதோ எரிந்து கொண்டிருந்தது. தாழ்வான உயரத்தில் அது பறந்து போவதைப் பார்த்து பயந்து, பலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உட்பட பலர் பார்த்தார்கள். எல்லோருக்கும் இனம் தெரியாத ஒரு பயமும், கிலியும் ஏற்பட்டது. தீயைக் கக்கிக் கொண்டு தட்டு பறந்தது.  சிறிது நேரத்திற்கு பிறகு அது எங்கேயோ போய் மாயமாகி விட்டது.

January 30, 2019

காதலியா? அரச பதவியா?


காதலியா?  அரச பதவியா? இப்படி ஒரு கேள்வி பல வருஷங்களுக்கு முன்பு இங்கிலாந்து மன்னருக்கு  முன்னே தோன்றியது. இந்தக் கேள்வியைக் கண்டு அவர் கலங்கவில்லை; இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவில்லை. காரணம் அவர்  காதல் அவ்வளவு தீவிரமாகவும், உண்மையாக இருந்தது. அதனால் அவர் – எட்டாம் எட்வர்ட்- தன்னுடைய அரச பதவியைத் துறக்க முடிவு செய்தார்.


  அன்றைய காலகட்டத்தில், இங்கிலாந்து மன்னராக வரப் போகிறவர் அரச குடும்பத்தில் உள்ள ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. வேறு எவரையாவது மணந்தால் அவர் அரச  வம்சத்திலிருந்து நீக்கப்படுவார்; அது  மட்டுமல்ல அரச பதவியும் பின்னால் கிடைக்காது.
 தன்னுடைய குடும்பத்தாரிடமும் மதகுருமார்களும் அரசியல் தலைவர்களுடனும் தன்னுடைய காதலைப் பற்றி கூறியதுடன், வாலிஸைத் திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் கேட்டுப் பார்த்தார். ஆனால் எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.            ஏற்கனவே இரண்டு தடவை திருமணமாகிஇரண்டாவது திருமணம் விவாகரத்து வழக்கில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் எல்லா பத்திரிகைகளும் இதை செய்திகளும் பின்னணியும் காதல் விவகாரம் ஆகியவை பற்றி பத்தி பத்தியாக எழுதின ஆனால் எதற்கும் கலங்கவில்லை. தன் காதலிலிருந்து சிறிதளவும் அவர் விலகவில்லை. அதில் உறுதியாக இருந்தார்.

December 30, 2018

அதிசயம்; ஆனால் உண்மை! முற்பிறப்பை அறிந்த ஒரு சிறுமி!

"சைகாலஜிஸ்ட்' என்று இங்கிலாந்திலிருந்து வரும் பத்திரிகையில் 1965-வாக்கில் ஒரு சுவையான கட்டுரை வெளியாகி இருந்தது. முற்பிறப்பை உணர்ந்த ஒரு சிறுமி, சில வருஷங்களுக்கு முன் டில்லியில் இருந்தாள் என்றும், அவள் முழுக்க முழுக்க முற்பிறப்பை அறிந்தவள் என்பதைப் பல சோதனைகள் மூலம் பிரமுகர்கள் குழு கண்டறிந்தது என்றும் விவரமாக எழுதி இருந்தார்கள்.

      கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்கு முன்பு, அதாவது 1935 சமயம்,  ஏழெட்டு வயதுச் சிறுமியாக இருந்த போது அந்தப் பெண் (சாந்தி தேவி) இப்படி முற்பிறப்பு விவரங்களைக் கூறி, டில்லியையே அதிசயிக்க வைத்தார் என்றும் எழுதியிருந்தது.

சாந்திதேவியை எப்படியாவது கண்டுபிடித்துப் பேட்டி காண வேண்டுமென்று நினைத்தேன். கட்டுரை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன் - சைகாலஜிஸ்ட் பத்திரிகை மூலமாக. அவரிடமிருந்து பதில் வரவில்லை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் ஒருவர் புதுவை ஆசிரமத்தில் இருக்கிறார் என்று இருந்தது. அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் “டில்லியில் உள்ள  ஒரு அட்வகேட்டைக் கேட்டால் தெரியும்” என்று பதில் எழுதினார்.  அட்வகேட்டின் பெயர் குப்தா என்றும் குறிப்பிட்டிருந்தார். 

 குப்தாவைக் கண்டுபிடிப்பது எப்படி? டில்லி டெலிபோன் டைரக்டரியில் ஆறேழு பக்கங்கள் குப்தாக்கள் தான்!

சுமார் இரண்டு மாதம் அலைந்து திரிந்து அவரைக் கண்டு பிடித்தேன். அவர் சீனியர் அட்வகேட்.  தாரியாகஞ்ச் பகுதியில் சற்று பிரபலமானவர். அவரைச் சந்தித்தேன். சாந்தி தேவி பற்றிய எல்லா விவரங்களையும் அவர் என்னிடம் சொன்னார். 

   அந்தப் பெண் குழந்தை, ஒரு நாள் திடீரென்று தான் இன்னாருடைய மனைவி என்றும், தான் இந்த வயதில் ஒரு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டதாகவும் சொன்னாள்.. அதுமட்டுமல்ல, தான் இறப்பதற்கு முன்பு இருந்வீட்டின்அடையாளமும் தனக்குத் தெரியும் என்று சொன்னாள். இந்த விஷயம் மெதுவாகப் பலருக்குப் பரவிவிட்டது. குழந்தையின் பெற்றோர் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்தார்கள் ஆனால் மற்றபடி அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.

September 01, 2018

தற்செயல் நிகழ்வுகள்


    நம் வாழ்க்கையில் பல சமயங்களில் பல தற்செயல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஏதாவது ஒரு நாள் ஒருவரைப் பற்றி நினைவுக்கு வரும். “ஆம்….கடைசியாக திருப்பதி தரிசன கியூவில் பார்த்தோம்… அதற்கு அப்புறம் அவரைப் பார்க்கவில்லை. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை” என்று தோன்றும். அத்துடன் அவரை மறந்து விடுவோம். 
ஆனால் மறு நாள் ஒரு  தற்செயல் நிகழ்வு ஏற்படும். தபாலில் ஒரு கடிதம் வரும். யாரிடமிருந்து? அந்த நபரிடமிருந்து! “நலமாக இருக்கிறீர்களா? பார்த்து ஏழு வருஷம் ஆயிற்று… என் பிள்ளைக்கு உங்கள் ஊருக்கு மாற்றலாகிவிட்டது…என்று கடிதம் வரும். இதைக் COINCIDENCE  என்று, அதாவது, தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வு என்று சொல்லலாம்.
     இப்படி பல நிகழ்வுகள் எல்லாருடைய வாழ்விலும் நடந்திருக்கும். (என் வாழ்வில் நடந்த ஒரு சிலவற்றை என் வலைப்பூவில் பதிவாகக் போட்டுள்ளேன்.)

சுமார் 40 வருஷங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில வார இதழில் ஏழெட்டுப் பக்கங்களுக்கு  நீண்ட கட்டுரை- ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள்-  வந்திருந்தது. எல்லாம் COINCIDENCES பற்றி தான். அந்த கட்டுரையை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். பல சமயம் தேடிப் பார்த்து ஏமாற்றமடைந்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, எதிர்ப்பார்க்காத ஒரு நோட்டுப் புத்தகத்தில் ‘அப்பளமாகஅது கிடைத்தது. ஆமாம், அது 1974ம் வருஷம் SUNDAY  என்ற ஆங்கில வார இதழில் வந்திருந்த கட்டுரை. நியூஸ் பிரிண்ட் காகிதம் மிகவும் பழுப்படைந்து போயிருந்தது. கட்டுரை கிடைத்தது லாட்டிரியில் பரிசு விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது.
     போகட்டும், அந்த கட்டுரையின் தலைப்பு’ ‘WORLD OF COINCIDENCES’. எழுதியவர்: Arthur Koestle  
முதலில் Arthur    Koestler  பற்றி சிறு குறிப்பு தருகிறேன். இவர் 1905-ல் பிறந்தார். இவர் 1983-ல் காலமானார். இங்கிலாந்தில் வாழ்ந்தவர். நாவல்கள், மனோதத்துவப் புத்தகங்கள், கதைகள் அல்லாத பொதுவான பல விஷயங்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளவர். (நாவல்கள் 7, நாவல் அல்லாதவை 30, நாடகம்-1, சுயசரித்திரம் 6 (ஆமாம் ஆறு!) தனிப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.  பல்வேறு தொகுப்பு நூல்களுக்கும் கட்டுரைகள் எழுதித் தந்திருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு நூல்களை ஒன்பது எழுத்தாளர்கள் தனித்தனி புத்தகங்களாக எழுதியுள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.
     இவரது புத்தகத்தில் உள்ள பல விஷயங்களைப் படிக்கும்போது இவையெல்லலாம் உண்மையாக இருக்குமா என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான இவரைப் பற்றிய இத்தனை விவரங்களைத் தந்துள்ளேன்.
     இவரது வாழ்க்கையிலும் ஒரு COINCIDENCE நடந்துள்ளது. அது உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும். அதைக் கடைசியில் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.

February 18, 2018

ஐயோ வேண்டாம், லாட்டரிப் பரிசு

இந்தப் பதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு இது என்று, பதிவைப் படித்து முடித்த பறகு நீங்கள்  நிச்சயம் சொல்வீர்கள். லாட்டரியில்  அதிக தொகையைப் பரிசாகப் பெற்றவர்களின் கதையைத் தர உள்ளேன்.
     1970-களில் திடீரென்று இந்தியாவில் ஒரு பயங்கர தொற்று நோய் பரவியது. எல்லா மாநில அரசுகளையும் அது பிடித்துக் கொண்டது. அவை அவை லாட்டரி டிக்கெட்டுகளைப் போட ஆரம்பித்தன. ‘டிக்கெட் விலை ஒரு ரூபாய்; பரிசு ஒரு லட்சம்என்று இருந்தாலும், அன்றைய கால கட்டத்தில் ஒரு லட்சம் என்பது பெரிய தொகை. (இன்று வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கூட வாங்கமாட்டார்கள். “ஹும்ஒரு லட்சத்திற்கு நாலு பாப்கார்ன் பொட்டலம் கூட வராது என்று சொல்லி வாங்க மறுப்பார்கள்.!)
     உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும்  லாட்டரி திட்டத்தைக் கொண்டு வந்தது. லாட்டரி டிக்கெட் விற்கும் கடைகளில் கூட்டம் அலை மோதியது. சட்டம், ஒழுங்கு குலைந்து விடுமோ என்று கருதி. லாட்டரி டிக்கட்டுகள் சில சமயம் காவல் நிலையங்களில் விற்பனை செய்தார்கள்!).
     ஒன்றிரண்டு வருஷங்கள் கழித்து, டில்லிஸ்டேட்ஸ்மென்  பத்திரிகையில்லாட்டரியில் பரிசு பெற்றவர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக வெளியிட்டார்கள்.. (அவற்றிலிருந்து சில தகவல்களைத் திரட்டி, தமிழில் நான் எழுதிய கட்டுரை 
தினமணி கதிரில் ஒரு இணைப்பு அளவிற்கு, ஏழு, எட்டு பக்கங்களில்  வந்தது.)
     பரிசு பெற்றவர்கள் யாரும் மன நிம்மதியோ சந்தோஷமோ அடைய வில்லை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல  திடீர்நண்பர்கள் பணம், பணம் என்று பிய்த்ததையும், பலர் கோபித்துக் கொண்டு உறவையே துண்டித்து விட்டதையும் வருத்தத்துடன் சொல்லி இருந்தார்கள்.
     சரி, இதெல்லாம் பழைய கதை. நாற்பது, ஐம்பது வருஷத்திற்கு முந்தையது என்று தள்ளிவிடலாம்.
     சமீப ஆண்டுகளில் பரிசு பெற்றவர்கள் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
     முக்கியமாக, அமெரிக்காவில் ஒரு பிரம்மாண்ட லாட்டரியில் 314.9 மில்லியன் டாலர் பரிசு பெற்ற விட்டேகர் என்பவரைப் பற்றி எழுத கொஞ்சம் வலை போட்டேன். TIME இதழில் சில வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த தொடர் கட்டுரையும் கிடைத்தது. அப்போது வேறு சில லாட்டரி வெற்றியாளர்களைப் பற்றியும் தகவல் கிடைத்தது.
முதலில் என் கவனத்தைக் கவர்ந்தது இங்கிலாந்தில் ஒரு லாட்டரியில் வெற்றி பெற்ற MICHAEL CARROL என்பவரின்கதை’.  முதலில் அதைப் பார்த்துவிடலாம். பிறகு விட்டேகர் கதைக்குப் போகலாம்.
     கேரல் என்ற 19 வயது இளைஞனுக்கு தேசிய லாட்டரியில் 2002’ம் ஆண்டு சுமார் 18 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது. முனிசிபல் குப்பை லாரியில் சென்று குப்பையை எடுத்துக் கொட்டும் வேலையில் கேரல் இருந்தான்.

ஏராளமான தொகைப் பரிசாகக் கிடைத்தும், அவன் அதை எந்த ஹோட்டலிலும் கொண்டாட முடிவில்லை காரணம், அவன் அந்த வயதிலேயே ஏகப்பட்டச் சில்லறை குற்றங்கள செய்து பல தடவைக் கைதாகி இருக்கிறான்.