அமெரிக்க ரேடியோ மற்றும் டி.வி.யில் பல தொடர் நிகழ்ச்சிகள் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இன்றும் பலர் அவற்றை நினைத்துப் பார்த்து வருகிறார்கள். ஆர்ட் லின்க்லெட்டர் என்ற நகைச்சுவையாளர் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அதன் பெயர்
‘பீப்பிள் ஆர் ஃபன்னி’ (PEOPLE
ARE FUNNY).
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ரேடியோ நிகழ்ச்சியாக நடந்தது. பிறகு டி. வி. நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 1943 முதல் 1960 வரை நடந்தது. அதில் 1943 முதல் 1960 வரை ஆர்ட் லின்க்லெட்டர் என்ற நகைச்சுவையாளர் நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்தார். அவர் எழுதிய ‘ பீப்பிள் ஆர் ஃபன்னி’ என்ற புத்தகத்தைப் பல வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அவர் நடத்திய பல நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. மூன்று நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களைச் சுருக்கமாக தருகிறேன்.
புது மணப்பெண்! ஒரு அழகான பெண்ணை மணப்பெண் மாதிரி
தடபுடலாக அலங்காரம் செய்தார்கள். அவருடைய கையில் பெரிய
பூங்கொத்தைக் கொடுத்தார்கள். யாரும் அறியாதபடி ஒரு முக்கிய தெருவில் அவளை இறக்கி விட்டார்கள். இவர் சொல்லிக்கொடுத்தபடி அவள் நடித்தாள்.
தடபுடலாக அலங்காரம் செய்தார்கள். அவருடைய கையில் பெரிய
பூங்கொத்தைக் கொடுத்தார்கள். யாரும் அறியாதபடி ஒரு முக்கிய தெருவில் அவளை இறக்கி விட்டார்கள். இவர் சொல்லிக்கொடுத்தபடி அவள் நடித்தாள்.
‘இதோ வருகிறேன்’என்று சொல்லி, கடைக்குள் போனார். அரை மணி நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை” என்றாள்.
இந்தப் பெண், கடைகள், ஹோட்டல்கள் என்று பல இடங்களுக்கும் சென்று கேட்டாள். ஒவ்வோரிடத்திலும் அவளுக்கு கிடைத்த பதில்கள், விசாரணைகள் விதவிதமானவை. யாரும் இது ஒரு அசாதாரண சம்பவமாகக் கருதவில்லை.
கடையில் அவர் இல்லை என்றார் கடைக்காரர். “என்னது, கல்யாணம் ஆகி அரைமணி நேரத்தில் கணவன் அவளைக் கைவிட்டு விட்டாரா?” என்று கடைக்காரரும் அங்கு இருந்த மற்றவர்களும் வியந்தனர்.
இப்படிக் கைவிடும் ஆண்கள் பலர் இருக்கி றார்கள் என்றுதான் எல்லாரும் கருதியிருக்க வேண்டும். நிகழ்ச்சியின் முடிவில் இது ஜோடிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று அறிவித்தார் லின்க்லெட்டர்!
அடுத்தது: புட்பால் மைதானத்தில் கலாட்டா’
அவர் எழுதிய PEOPLE
ARE FUNNY புத்தகத்தில் உள்ளதை அப்படியே தமிழ்படுத்தித் தருகிறேன்
ஒரு புட்பால் மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, உள்ளே ஓடிச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தோம். அப்படி உள்ளே ஓடுபவர்களைப் போலீஸ்காரர்கள் பிடித்துக் கைது கூட செய்வார்கள் என்றும், "நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்; நாங்கள் காப்பாற் றுவோம்” என்றும் சொன்னோம். அந்த ஆசாமியும் ஒத்துக்கொண்டார்.
”சரி, இப்படி செய்தால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்?” என்று என்றார். ” நூறு டாலர் தருவோம்” என்றோம். அவர் ‘லக்கி பிரைஸ் தான்.. நான் ரெடி! என்றார்! (இது கிட்டத்தட்ட எழுபது, எண்பது வருஷத்துக்கு முன்பு நடந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நூறு டாலர் என்பது அந்த சமயம் பெரிய தொகைதான்!)
விளையாட்டு மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது இந்த ஆசாமி, மைதானத்தின் உள்ளே புகுந்து ஓடி, விளையாட்டில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். நாங்கள் சொன்னபடி நடித்தார். எங்கள் போலீஸ் காரர்கள் அவரை துரத்துவது போல் நடித்தார்கள். கூட்டத்தில் ஒரே கலாட்டா. இந்த சமயத்தில் வேறு
இரண்டு நிஜ போலீஸ்காரர்கள் ஓடி வந்து
அவரைப் பிடித்துக் கொண்டு
போய்விட்டார்கள். என்னடா இது வம்பாக ஆகிவிட்டதே என்று நாங்கள் அதிர்ச்சி
அடைந்தோம்.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆசாமியே நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டார். அதன் பிறகுதான் எனக்கு மூச்சே வந்தது. “நூறு டாலர் எங்கே?” என்று கேட்டார். “ தருகிறேன்.. அது சரி. எப்படி போலீசில் இருந்து தப்பி வந்தாய்?” என்று கேட்டேன்.
அவரோ மிகவும் சாவதானமாக “ இந்த ‘பீப்பிள் ஆர் ஃபன்னி’ நிகழ்ச்சிக்காக இப்படிச் செய்தேன்” என்றேன் அவர்களும் சிரித்துக் கொண்டே, என்னை விட்டு விட்டார்கள்” என்றார் .
குழப்பம் விளைவிக்க முயன்றதாக இவரைச் சிறையில் கூட அடைந்திருக்கலாம். ஏன், இப்படி ஏற்பாடு செய்ததற்காக என்னையே கூட கோர்ட்டுக்கு இழுத்திருக்கலாம். நல்ல காலம் ஒன்றும் ஆகவில்லை!
வீட்டைக் காணோம்
(இந்த எபிசோட் மிகவும் அட்டகாசமானது.)
ஒரு சிறிய வீடு. மிகவும் பழையதாகி விட்டதால் அதை இடித்து விட முனிசிபாலிட்டி நோட்டீஸ் கொடுத்து இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் காலி செய்துவிட்டார்கள். நகராட்சி ஆற அமர வீட்டை இடிப்பதற்குள்,
இந்த வீட்டை வைத்துக் கொண்டு ஏதாவது வேடிக்கை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம்.
‘வீடு வாடகைக்கு விடப்படும்’ என்று போர்ட் ஒன்றை மாட்டி வைத்தோம். யார் யாரோ வந்து கேட்டார்கள். எங்கள் திட்டத்திற்கு ஏற்ற நபர்களாக (அதாவது,ஏமாந்த சோணகிரிகளாக!) அவர்கள் இல்லாததால் அவர்களுக்கு வாடகைக்கு விட மறுத்து விட்டோம்.
இந்த சமயம் ஒரு புது மணத் தம்பதியர் வந்தனர். இவர்களைக் கொஞ்சம் திணறடிக்கலாம் என்று தீர்மானித்து, மிகவும் குறைந்த வாடகைக்கு வீட்டைக் கொடுத்து விட்டோம்.
இரண்டு நாள் கழித்து ஒரு சேல்ஸ்மேன் - எங்கள் ஆசாமிதான்! -அங்கு போய் ஏதோ சோப்பு பவுடரை விற்றார். “இதில் ஒரு பரிசுக் கூப்பன் இருக்கிறது. பரிசு விழுந்தால் உல்லாச பயணம் ஒரு வாரத்திற்குக் கம்பெனி செலவில் நீங்கள் செல்லலாம்” என்றும் சொன்னார்.
சில நாட்கள் கழித்து அந்த தம்பதியருக்கு ஒரு கடிதம் அனுப்பினோம்: ”எங்கள் சோப்பு பவுடர் வாங்கிய உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது. உல்லாசப் பயணம் போவதற்கு, கார் இன்ன தேதிக்கு வரும். ஒரு வாரம் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம். செலவு முழுவதையும் டிரைவர் ஏற்றுக்கொள்வார்” என்று கடிதம் அனுப்பினோம்.
அவர்களும் குஷியாகப் பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் ஊரை விட்டு சென்ற உடனே அந்த வீட்டில் இருந்த எல்லாப் பொருட்களையும் எடுத்து, வேறு ஒரு அபார்ட்மெண்டில் வைத்தோம். வீட்டைத் தரையோடு தரையாக இடித்து சுத்தமாக ஆக்கிவிட்டோம்!
பாவம், ஒரு வாரம் கழித்து அவர்கள் வந்தார்கள். “என்னடா வீட்டையே காணோமே?” என்று அவர்களுக்குத் தூக்கி வாரி போட்டது. “வீடு திருடு போய்விட்டதா? அது எப்படி திருடு போகமுடியும்?”
என்று குழம்பினார்கள். அக்கம் பக்கத்தில் விசாரித்தார்கள். இதை எல்லாம் எங்கள் நிருபர் கவனித்து வந்து விவரித்தார்.
தம்பதியரை அதிகம் தவிக்க விட்டால் அவர்களுக்குப் பைத்தியமே பிடித்து விடலாம் என்று பயந்து, அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டோம். அவர்களும் தமாஷில் கலந்து கொண்டார்கள். வேறு ஒரு நல்ல அபார்ட்மென்ட் கிடைத்ததால் அவர்களுக்கு மிகவும் சந்தோஷமே!.
எப்படி உள்ளே வந்தது கார்?
இன்னொரு சமயம் இதே மாதிரி ஒரு தம்பதியரை உல்லாசப் பயணம் செல்வதற்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் பயணம் போனதும் அவர் கள் வீட்டுக் கதவைத் திறந்து, வரவேற்பறையில் இருந்த பொருள்களை எல்லாம் வேறு அறைக்கு மாற்றிவிட்டு, பாகம் பாகமாக ஒரு காரின் பாகங்களை உள்ளே எடுத்துச் சென்று, அந்த வரவேற்பறைக்குள் ஜோடித்து ஒரு காரை ரெடி பண்ணி விட்டோம்! அந்த கார் அறையை முழுமையாக அடைத்துக் கொண்டு விட்டது. அவ்வளவு பெரிய கார் எப்படி உள்ளே வந்தது என்று அவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படட்டும் என்பது எங்கள் திட்டம்!.
நாங்கள் கதவை மூடி, பூட்டுப் போட்டு விட்டு வந்து விட்டோம். அந்த வீட்டைப் பார்த்தபடி கேமராவை வைத்து, அவர்கள் ஊர் திரும்பி வந்து, அறைக் கதவை திறந்ததும் என்னமாதிரி அதிர்ச்சி அடைகிறார்கள் என்பதைப் படப்பிடிப்பு நடத்தத் தயாராக இருந்தோம்.
பயணத்தை முடித்து ஜாலியாக அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். கதவைத் திறந்தார்கள். காரைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
. எப்படி இவ்வளவுபெரிய கார் இந்த அறைக்குள் வந்தது என்று ஒருபக்கம் ஆச்சரியமும், நமக்கு புதிதாக இலவசமாக ஒரு கார் கிடைக்கிறதா என்று கேள்வியும் அவர்களை திக்குமுக்காடச் செய்தது. அறையில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டுபோய் விட்டார்களோ என்று பயந்து, போலீசுக்குத் தகவல் தெரிவிக்க டெலிபோனிடம் அவர்கள் போன சமயம் எங்கள் நிருபர் அங்கு போய் நாங்கள் செய்த தமாஷை விளக்கினார்.
டி. வி. நிகழ்ச்சியில் யில் தாங்கள் வருவோம் என்பதே அவர்களுக்குப் பெரிய பரிசாக அமைந்து விட்டது. அதனால் அவர்கள் எங்கள் மேல்
எந்த நடவடிக்கை எடுப்பதுபற்றியும் பேசவில்லை!
இப்படி பல நிகழ்ச்சிகளை இந்தத் தொடரில் ஆர்ட் லின்க்லெட்டர் செய்திருக்கிறார். சில சில்லறை வழக்குகளையும் சந்தித்து இருக்கிறார்!
நிகழ்ச்சிகளை ரசித்தாலும், இவை டூ மச் இல்லையா? கலாட்டா பண்ணப்படுபவர்களுக்கு மன உளைச்சலா இருக்காதா? ஒருவேளை ஹார்ட் அட்டாக் வந்திருந்தால்?
ReplyDeleteமுற்றிலும் தெரியாத நிகழ்ச்சி. அதைப் பற்றிய அரிய தகவல்களையும் அந்த நிகழ்ச்சிகள் பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDelete