செங்கற்பட்டு சேவா சங்கத்திற்காக எம். எஸ் அவர்கள் ஒரு கச்சேரி 1952-ல் செய்தார். சங்கத்தின் தொண்டன் என்ற முறையில் கச்சேரி செய்ய வந்த எம். எஸ். அவர்களுக்கு நமஸ்காரம் போட்டேன். பிறகு கச்சேரி முடிந்து அவர் விடைபெறும்போது அவ்ரிடம் கையெழுத்து வாங்கினேன்..
அதன் பிறகு 1985-ல் அவரது உறவினர் திருமணத்திற்குப் போயிருந்து போது அவர் இங்கும் அங்கும் போய் எல்லாரையும் விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து போனேன். குறுக்கே போன என்னிடம் “சாப்பிட்டீங்களா?” என்று பரிவோடு கேட்டார்.2004-ல் ஒரு நாள் என் டில்லி நண்பர் போன் செய்தார்.: என் பையன் ரவி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். அவன எம்.எஸ். அவர்களைப் பார்த்து ந்மஸ்காரம் சொல்ல ஆசைப்படுகிறான். நாளைக்குப் பகல் சென்னை வருகிறான். சாயங்காலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்... ஆகட்டும், பார்க்கிறேன் அது இது என்று எது சொன்னாலும் என் காதில் விழாது... நீங்கள் தான் பிரபலமான ஆசாமியாச்சே!” என்று சொன்னார்.
எம். எஸ் அவர்களோ உடல் நலமில்லாமல் இருக்கிறர் என்பது எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று புரியவில்லை. ‘எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமே: என்று திரு. ஆத்மா அவர்களுக்குப் போன் செய்தேன்
என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ஆத்மா உடனே உற்சாகமாக: ”அடேடே.. நீங்களா? எப்படி இருக்கீங்க? டில்லிதானே?” என்று மிகவும் பரிச்சியமானவரைப் போல கேட்டார். ( அவர் என் விசிறி என்பதைப் பின்னால் அறிந்தேன்.)
“ உங்களால் ஒரு காரியம் ஆகவேண்டும்.”
“என்னாலேயா? சொல்லுங்கோ.” என்றார்.
“அமெரிக்காவிலிருந்து என் நண்பரின் பிள்ளை ரவி வந்திருக்கிறார். அவர் எம். எஸ். அம்மாவை ஒரு தடவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையினால் வந்திருக்கிறார். இதற்காகவே வந்திருக்கிறார்....”
“ரொம்ப சந்தோஷம்.. உங்களுக்குத்தான் தெரியுமே.. அம்மா உடம்பு சரியில்லை.. ஒரு வியாதியும் இல்லை. வயது காரணமாகத் தள்ளாமை. படுத்தபடிதான் இருக்கிறார்.. யாரையும் பார்ப்பதில்லையே” என்றார்.
“ ஐந்து நிமிஷம் பார்த்து ஒரு நமஸ்காரம் செய்து விட்டு வந்து விடுவோம். நாங்கள் மூன்று பேர் தான் வருவோம்” என்றேன்.
“ சரி.. அப்படியானால் சரியாக நாலு மணிக்கு வாங்கோ”: என்றார்.
நான்கு மணிக்கு எம். எஸ். அவர்களின் வீட்டுக்குப் போனோம்.. என்ன, எங்களுடன் இன்னும் மூன்று பேர் ஒட்டிக் கொண்டார்கள்! அம்மா இருந்த அறைக்கு ஆத்மா எங்களை அழைத்துக்கொண்டு போனார்.
கண்ணைப் பறிக்கும் வெள்ளை ஷீட்டைப் போர்த்தியபடி படுத்திருந்தார். அறையில் திருமதி விஜயா ராஜேந்திரனும் திருமதி கௌரி ராம நாராயணனும் இருந்தார்கள். ஏற்கனவே அவர்களுக்கு என்னையும் என் மனைவியையும் தெரியும் என்பதால் “வாங்க.. வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் வர்வேற்றார்கள்.
எம். எஸ்.அவர்களைப் பார்த்து “நமஸ்காரம்” என்றோம்.
அந்த ஷீட்டின் வெண்மையும், பக்தியிலும் இசையிலும் ஊறியதால் முகத்தில் ஏற்பட்ட தெய்வீகக் களையும், எம்.எஸ். அவர்களைப் புத்தம் புது மல்லிகை மலராக மாற்றி இருந்தன! ஆ! என்ன தேஜஸ்!
எம். எஸ். அவர்கள் என் மனைவியைப் பார்த்து,”உங்களைப் பார்த்திருக்கிறேனே”: என்றார். கமலாவிற்குத் தலைகால் புரியவில்லை அவரருகில் சென்றாள். அப்படியே கமாலாவின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். விடவே இல்லை.
நாங்கள் எடுத்துச் சென்ற மாம்பழங்களை அவ்ர் முன்னே வைத்தோம்..
“ என்னது, ஒரு மாந்தோப்பையே எடுத்துக் கொண்டு வந்துட்டீங்களே!: என்று சிரித்தபடி சொன்னார்.
ரவியை விசாரித்தார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க ரவி விரும்பினார். படுத்துக் கொண்டிருப்பவரை அப்படி நமஸ்கரிக்கக்கூடாது என்று ஆத்மா கூறினார். ஆகவே நமஸ்கரிக்கவில்லை.மீண்டும் நமஸ்காரம் சொல்லிவிட்டு விடை பெற்றோம்.
அந்த சாந்தமான் முகபாவமும், பரிவையும் பிரியத்தையும் பிரதிபலிக்கும் புன்முறுவலும்...அடாடா..நாங்கள் எம்.எஸ். அவர்களைப் பார்த்தோம் என்று கூறுவது தவறு. தரிசித்தோம் என்று தான் சொல்லவேண்டும்!
ரவிக்கோ தன் ஜன்ம சாபல்யம் கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி.
.”அம்மாவை பார்த்துட்டேன். வந்த வேலை முடிந்து விட்டது. இன்னிக்கே அமெரிக்கா திரும்பிப் போகத் தயார்” என்றார்.
“ ரொம்ப தேங்க்ஸ்: என்றார் என்னிடம்.
“ பார்க்கப் போனால் நான்தான் உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும். உங்களால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.” என்றேன்.
அந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம். எஸ்.. காலமானார் .
கல்கி , ராஜாஜி ஆகியவர்கள் காலமானதும் டிசம்பர் மாதத்தில்தான்
பின்குறிப்பு: எம். எஸ்.அவர்களைப் பற்றி திரு /டி. சதாசிவம் 1966-ல் ஆங்கிலத்தில் ஒரு 32 பக்க புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்த பிரசுரம் என்னிடம் உள்ளது. நிறைய புகைப்படங்கள் உள்ளன. எந்த வலைப்பதிவிலும் அது இல்லை என்று நினைக்கிறேன்.. புத்தகத்தை டைப் செய்து படங்களுடன் ஒரு PDF ஃபைலை வெளியிடலாம் என்று எண்ணி இருக்கிறேன்.
Sir,
ReplyDeleteI am also a great fan of MS AMMA like you......Only she deserves the suffix AMMMA behind her name..... Your title was apt( Darshan)....Mr.Athmanathan is also a nice gentleman. Your article really touched me.
Kothamalli
PL. DO THAT JOB!......EAGERLY AWAITING TO READ THAT BOOK!........
ReplyDeleteMSS = Music Soul Stirring
ReplyDeleteஎம்.எஸ். அவர்களைப் பற்றி நினைக்கும் போதே அவருடைய கணீர் குரலும் தெய்வீகமான முகமுமே நினைவில் வரும். உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு வரியின் பின்னணியிலும் "குறையொன்றுமில்லை" ஒலித்தது. சதாசிவம் அவர்கள் வெளியிட்ட அந்தப் புத்தகத்தை தயை கூர்ந்து வெளியிடவும். ஆவலுடன் உள்ளேன்.
ReplyDeleteஹ்ம்ம்மம்.... இந்த சாகா வரம்னு ஒண்ணு இருந்து அது எம்.எஸ். போன்றவர்களுக்கு கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ReplyDeleteMS Amma is one of the great creature of God. Whenever I feel depressed I used to play her song "Kurai Ondrum illai"in youtube.. By looking at her face, our problems will be diminished...
ReplyDeleteஅருமையான பகிர்வு .pdf ஐ விரைவில் போடுங்க சார் .ஆவலுடன் காத்து இருக்கிறோம்
ReplyDeleteஇது எல்லாருக்குமான் பதில் பின்னூட்டம்: எம்.எஸ். அவர்கள் பற்றி திரு. சதாசிவம் எழுதிய புத்தகத்தைப் போடுகிறேன். 32 பக்கம் டைப் பண்ணுவது பெரிய் வேலை.( எனக்குத் தெரியாத 64 கலைகளில் டைப்பிங்கும் ஒன்று!) பக்கத்து பக்கம் படங்கள் உள்ளன். ஸ்கேன் பண்ண வேண்டும். பிறகு லே-அவுட்படி பேஜ்மேக்கரில் பண்ணவேண்டும்.
ReplyDeleteபக்கங்ளை அப்படியே ஸ்கேன் பண்ணி JPG களாகப் போட இஷ்டமில்லை.
சரி. எதுக்கு இத்தனை மூக்கால் அழுகை என்று கேட்கிறீர்களா? உடனே போடுவது கஷடம் என்று சொல்வத்ற்காகத்தான்.
உங்களுக்கு நமஸ்காரம் சொல்வதைத்தவிர வேறு என்ன செய்ய! பெரியவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகள் நமக்கு பல விசயங்களில் தெளிவு ஏற்படுத்தும்!
ReplyDeleteநிறைய நேரம் பிடித்தாலும் நாங்கள் காத்திருக்கத் தயார். PDF ஃபைலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.
ReplyDeleteThank you, Sir, - R. J.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமனதை நேஹுழ்திய பதிவு .நீங்கள் சொல்வது போல் அந்த தெய்வீக
முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலத்தான் இருக்கும் .மவுண்ட் ரோடு லே vaaman brothers photographers கடையில் MS அம்மாவின் ஒரு பெரிய Black and white photo (மடியில் தம்புராவை வைத்தபடி ) பார்த்த ஞாபகம். பார்த்துக்க்கொண்டே இருக்க தூண்டும் புகைப்படம் அது.
அன்புடன்
ராஜு-துபாய்
ராஜு-துபாய் அவர்களுக்கு, இப்போது ஒரு படம் போட்டிருக்கிறேன். இது தானா வாமன் பிரதர்ஸ் போட்டோ?
ReplyDeletelucky to have accessed ur blog and read about ms dharshan gopalan
ReplyDeleteநமஸ்காரம்
ReplyDeleteநான் சொன்ன புகைப்படத்தில் M .S . அம்மா தம்புராவை மடியில் படுக்க வைத்து இருப்பார் .மை தீட்டி கருணை மிகு கண்கள் .பார்போரை கட்டிபோடும் புகை படம் அது.
ராஜு-துபாய்
எம்.எஸ். புத்தகத்துக்காக இவ்வளவெல்லாம் மெனக்கெட வேண்டாம்.
ReplyDelete1. முதலில் படங்களை உங்கள் வன்தகட்டில் சேமித்து கொள்ளவும்.
2. உங்கள் வலைப்பூவில் ஒரு புதிய பதிவை ஓப்பன் செய்யவும்.
3. அதில் முதல் பதிவில் என்ன தட்டச்சிட நினைக்கிறீர்களோ, அதை தட்டச்சிடவும்.
4. அந்த குறிப்பிட்ட மேட்டருக்கான படம் ஏதேனும் இருந்தால் அதையும் அப்லோட் செய்யலாம்.
5. முதல் பதிவுக்கான அச்சிடும் ஆணை தரவும்.
6. இப்படியே அடுத்தடுத்த பதிவுகளுக்கு செய்யவும்.
7. ஒவ்வொரு பதிவுக்கும் அதற்கான எண்ணைத் தரவும்.
8. இதற்கெல்லாம் ஏன் பேஜ் மேக்கர், பிடிஎஃப் போன்ற தேவையற்ற விஷயங்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
<<< அன்புடன்,டோண்டு ராகவன் >>>> மிக்க நனறி. அப்படியே செய்யப் பார்க்கிறேன். எனக்கு பேஜ்மேக்கர், லேஅவுட், PDF எல்லாம் (டாஸ்மாக்!) தண்ணி பட்ட பாடு!! பிரச்னை டைப் அடிப்பது தான்.இப்போது முழு புத்தகத்தையும் OCR மூலம் டெக்ஸ்ட்டாக மாற்றிவிட்டேன். பிழை திருத்தம் பார்க்கவேண்டும்.
ReplyDelete//இப்போது முழு புத்தகத்தையும் OCR மூலம் டெக்ஸ்ட்டாக மாற்றிவிட்டேன். பிழை திருத்தம் பார்க்கவேண்டும்//
ReplyDeleteஇந்த வேலையை அந்தந்த பதிவை இடும்போது வைத்துக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாக பிழை திருத்தும்போது களைப்பு ஏற்படலாம். ஆகவே தவறுகள் வரும் வாய்ப்பு உண்டு.
இன்னொன்று கூட செய்யலாம். பேசாமல் ஆங்கில புத்தகத்தைத் தருவதைவிட அத்தியாயம் அத்தியாயமாக தமிழாக்கம் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
<<< dondu(#11168674346665545885) said...
ReplyDeleteபேசாமல் ஆங்கில புத்தகத்தைத் தருவதைவிட அத்தியாயம் அத்தியாயமாக தமிழாக்கம் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?>>>
இது மேலும் வேலையை அதிகரிக்கும். ஏறக்குறைய பிழை திருத்தம் பார்த்துவிட்டேன். ஒரு புத்தகம் படிக்கும் உணர்வை ஏற்படுதத வேண்டுமானால் PDF ஆகப் போட்டால்தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மதிப்பிற்குரிய கடுகு அவர்களே,
ReplyDeletehttp://docs.google.com
என்ற தளத்திற்கு சென்று உங்கள் கூகிள் கணக்கில் லாகின் செய்து, PDF புத்தகத்தை அப்லோட் செய்யவும். பின்னர் அந்த புத்தகத்தை ரீட் ஒன்லி மோடில் அனைவரும் படிக்கும் படியாக செட்டிங்க்ஸ் -ஐ மாற்றவும். பின்னர் அந்த PDF புத்தகத்தின் லிங்கை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
இப்படிக்கு,
தங்களின் விசிறி,
பிளாக்பாண்டி
http://blogpaandi.blogspot.com
திரு.கடுகு,
ReplyDeleteஇட்லிவடை மூலமாக புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொண்டேன். நிறைய தெரிந்த செய்திகள் என்றாலும், சதாசிவம் எழுத்தில் படித்ததில்லை. அரிய ஆவணம். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!
i can't control the tears from my eyes whenever i think about Smt.M.S.Subbulakshmi. God is a cruel fellow in one side, but who knows she may sing in HIS court. Really a copy of Sri Saraswathy Devi.I tried a lot to meet her in her lifetime, but all in vain. Again she has to born to fill her place in the kingdom of music. kallum kaninthidum geetham....!!!! I enjoyed the music of Smt NC Vasantha Gokilam, Smt.DKP, Smt.MLV also. But 90% of my song collections are by Smt.MS. I really cried a lot when i heard her demise.
ReplyDeletesir en sir... MS ammmavai ivvalavu seekiramaaga iraivan azhaithu kondaar. che !!! enna excellent ,wonderful,beautiful,magnificient,magnetic voice sir... nijamaagave kannanin kodai. thanakku pushpam kudukkum velaiyil evvalavu chinnathaaga irunthaalum athaiyum oru nalu perukkavathu pangu pottu kuduthu sabai mariyaathai therintha oru gyaani. No one is equal to MS amma.
ReplyDelete