டைரக்டர் ஸ்ரீதர் என் நண்பர் மட்டுமல்ல. நானும் அவருக்கு நண்பர். ’ஸ்ரீதரும் நானும்’ கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன்.)
ஸ்ரீதர் ஒரு சமயம் டில்லி வந்திருந்தார். அவர் தயாரித்து வந்த ஹிந்திப் பட பிஸினஸ் விஷயமாக ஜலந்தர் போக வேண்டியிருந்தது. நானும் அவரும் ஒரு காரில் சென்றோம், மறுதினம் மாலைதான் திரும்பினோம். . இதில் வேடிக்கை என்னவென்றால் காரில் போகும்போது பேசியது போதாது என்று, ஜலந்தர் ஹோட்டல் அறையில் இரவு முழுதும் பல விஷயங்களை விடாமல் பேசித் தீர்த்தோம்.
நாங்கள் சென்றது பயங்கர டிசம்பர் குளிரின் போது. பல வருஷங்களாக டில்லியில் இருந்த எனக்கே குளிர் கடுமையாக இருந்தது. ஸ்ரீதருக்கு? நம்ப மாட்டீர்கள். இரவு ஷர்ட்டைக் கழற்றிவிட்டார். போதாதற்கு மின் விசிறியையும் சுழல விட்டார்.நான் குளிரில் மரவட்டை மாதிரி சுருண்டு விட்டேன்.
ஸ்ரீதர் என்னிடம் சொன்ன விஷயங்களைக் கிசுகிசுவாக எழுத ஆரம்பித்தால், பல நூறு துணுக்குகளை எழுத முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜலந்தரில் ஸ்ரீதரைச் சந்தித்த சில பஞ்சாபி டிஸ்ட்ரிப்யூட்டர்கள், தமிழ் நடிகர், நடிகைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த விவரங்களுக்கு முன் இவை ஒன்றுமே இல்லை. அத்துடன் பல படத் தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள், டெக்னீஷியன்கள் ஆகியவர்களைப் பற்றியும் நிறையத் தெரிந்து வைத்திருந்தார்கள். லேட்டஸ்டாக இருந்தார்கள். பேச்சில் லட்சங்கள்தான் அதிகம் அடிபட்டன.
ஸ்ரீதருக்கு அவர்கள் காட்டிய மரியாதையைப் பார்த்து அசந்து போய்விட்டேன். ஸ்ரீதரே நேரே வந்து விட்டதால் காரியம் பத்து நிமிஷத்தில் முடிந்து விட்டது. என்னையும் ஒரு வி.ஐ.பி.யாக கருதி உபசரித்தார்கள்!
பிரியா விடை
டில்லியில் உள்ள ஒரு விளம்பர எஜன்ஸிக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் முழு நேர காபிரைட்டராகப் பணியாற்றத் தேவை என்று அறிந்து என்னைப் பற்றி குறிப்புகளை அனுப்பினேன். கதை, கட்டுரை எழுதும் போது தோன்றும் கற்பனைகளை விட, என்னைப் பற்றி சுயப் பிரதாபம் அடித்துக் கொண்டபோது பெருக்கெடுத்த கற்பனைகள் பல மடங்கு அதிகமானவை! ( வலைப்பூவைப் படித்துவரும் உங்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.)
அந்த ஏஜன்ஸிகாரர்கள் அதில் உள்ளவற்றைப் படித்து நம்பினார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஆசாமி கற்பனை வளம் உள்ளவன் என்று தெரிந்து கொண்டார்கள். சுயப்பிரதாபம் என்பதும் ஒரு விளம்பரம தானே! ஆகவே பேட்டிக்குக் கூப்பிட்டார்கள்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். "சரி... சொல்லி அனுப்புகிறோம்'' என்று விடை கொடுத்தார்.சில தினங்கள் கழித்து எனக்குப் போன் வந்தது. மறு தினம் வரச் சொன்னார்கள். சென்றேன்.
"சென்னை ஆபீஸின் மேனேஜர் இங்கு வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க விரும்புகிறார்'' என்றார்கள்.
பிறகு அவரே வந்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். "ஓ.கே. உங்களை மெட்ராஸ் ஆபீசில் வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மெட்ராஸ் வர முடியுமா?. எப்போது வேலையில் உங்களால் சேர முடியும்?'' என்று கேட்டார்.
"மெட்ராஸ் வர முடியும். ஆனால் மூன்று மாத அவகாசம் தேவை'' என்றேன்.
"வெரிகுட்!. மெட்ராஸ் போய் ஆர்டர் அனுப்புகிறேன்'' என்றார்.. அப்படியே அனுப்பினார்.
அதன் பிறகு அரசாங்க வேலைக்கு விடை கொடுத்து விட்டேன். இதனால் இருதரப்பினருக்கும் வருத்தமில்லை.
சென்னைக்குப் புறப்படுவதை அறிந்த பலர் எனக்குப் பரிவு உபசார நிகழ்ச்சியை நடத்தினர். ஆம், பரிவுடன் நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சி! எனக்கு நெகிழ்ச்சியை எற்படுத்தியவை அவை. தில்லித் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் செüத் இந்தியன் சொஸைட்டி என்று பல சங்கங்களும் "சென்று வா' என்று விழா எடுத்தன.
இவைகளில் முக்கியமானது சௌத் இந்தியன் தியேட்டர்ஸ் அளித்த விருந்து. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தற்போது குரூப் பிரசிடெண்டாக இருக்கும் அருமை நண்பர் திரு. பாலசுப்ரமணியன் முன்னின்று நடத்தியது. இதில் சுமார் நூறு முக்கிய தமிழ்ப் பிரமுகர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். ரிலையன்ஸ் கெஸ்ட் ஹவுஸில் யு.என்.ஐ. கான்டீன் நாராயண ஐயரின் மேற்பார்வையில் தடபுடல் மெனு.
இந்தப் பகல் விருந்துக்கு எற்பாடு செய்த தினத்தன்று திடீரென்று காலையில் போன் செய்து விட்டு, பம்பாயிலிருந்து ரிலையன்ஸ் சேர்மன் திரு தீருபாய் அம்பானி டில்லிக்கு வந்து விட்டார். , "கெஸ்ட் ஹவுஸில் இன்றைக்கு ஒரு விருந்து.ஆகவே நீங்கள் அங்கு தங்க முடியாது. தாஜில் இறங்குங்கள்'' என்று ரிலையன்ஸ் பாலு கூறிவிட்டார்.
அவர் "என்ன விருந்து' என்று கேட்டிருக்கிறார். "மதராஸி கானா' என்று அறிந்ததும், "சரி, உங்கள் விருந்து முடிந்ததும் ஒரு காரியரில் சாப்பாடு போட்டு தாஜிற்கு அனுப்புங்கள்'' என்று சொல்லிவிட்டார். (அப்படியே அனுப்பப்பட்டது. ஆகவே என்னுடைய விருந்தில் அம்பானியும் "பங்கு' கொண்டதாகக் கருதி நான் பெருமைப்பட்டேன்!)
ரிலையன்ஸ் பாலு தந்த இந்தப் பரிவு உபசார விருந்து மறக்க முடியாதது. இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு டில்லியில் வந்திறங்கிய போது கனவுகளை மட்டுமல்ல, பல பயங்களையும் தான் சுமந்து கொண்டு வந்தேன். என் கனவுகள் பலித்தனவா இல்லையா என்பதை விட என் பயங்கள் பலிக்கவில்லை என்பதே முக்கியம். அதற்கு ரிலையன்ஸ் பாலு போன்ற அருமை நண்பர்களின் நட்புதான் காரணம்.
டிசம்பர் 12’ம் தேதி ஜி.டி.யில் சென்னைக்குப் புறப்பட்ட போது வழியனுப்ப வந்த அத்தனை பேரும் என் மீது ஆத்மார்த்தமாக வைத்திருந்த அன்பு காரணமாக வந்தவ்ர்கள்தான்.
என் அன்புள்ள டில்லியே! நீ என் இதயத்தைக் கவர்ந்த நகரம். எனக்கு நிறைய வாய்ப்புகளையும் நண்பர்களையும் நீ தான் தந்தாய். எனக்காக பல கதவுகளைத் திறந்து விட்டாய்., சில சின்ன உயரங்களைத் தொட வழி வகுத்தாய். ஆகவே உன் நினைவுகள் என்றும், என்னை விட்டு நீங்கா, உன்னை அடிக்கடி வந்து சந்திப்பேன். வணக்கம்.
பின்குறிப்பு: ஐந்து வருஷங்களுக்குப் பிறகு நான் மறுபடியும் டில்லிக்குப் போய்விட்டேன். இந்த தடவை பதிமூன்று ஆண்டுகள் இருந்துவிட்டு, சென்னைக்கு வந்து விட்டேன்.
முக்கிய பின்குறிப்பு: நான் மிகச் சாதாரணமானவன். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பதிவுகளைப் படித்து வந்தவர்களுக்கும், படித்து விட்டு பின்னூட்டங்கள் எழுதியவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.”
முற்றும்
A good "Good Bye"
ReplyDeleteஉலகத்தில் யாரும் சாதாரணமில்லை. வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான்.
ReplyDeleteஅவ்வகையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்தான்.
<<< mathileo said...உலகத்தில் யாரும் சாதாரணமில்லை. வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான்.>>>
ReplyDeleteமிக்க நன்றி.
சந்தர்ப்பங்களை ந்ல்லபடியாகப் பயன்படுத்திக்கொள்ள செய்தவன் இறைவன். இதில் என் பங்கு பூஜ்யம், நான் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்ட வாய்ப்புகளும் உண்டு. என் முட்டாள்தனமே காரணம்.
Ungal Delhi anuhbavangal romba sooper.. sir ethae madhari matha oorgalai/naadugalai pattriyum yezhudhangalaen sir...
ReplyDelete-Sri
கடுகு சார்,
ReplyDeleteஉங்கள் டில்லி அனுபவங்கள் மிகவும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு மீண்டும் நன்றி.
உங்களைப் பற்றி தற்பெருமை அடித்து கொள்ள ச்சொல்லவில்லை! ஆனால் சாதரணமானவன் என்பதெல்லாம் கூடாது! அப்ப சாதரணமா இருக்குற நாங்களெல்லாம் என்ன சொல்லிக் கொள்வது என்றே தெரியவில்லை! ஆனால் சாதாரணமாக பெரிய மனிதர்களுடன் பழகியவரின் கட்டுரைகளைப் படிக்கிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு எப்போதுமே உண்டு! அந்த வாய்ப்பை கொடுத்த வலை உலகத்திற்கு நன்றி சொல்ல கடமை ப் பட்டுள்ளோம்!
ReplyDeleteநமஸ்காரங்கள்!
Nandraaga irundadhu, Sir. Anbulla Chennai eppo aarambam?
ReplyDeleteகடுகு....... said...
ReplyDelete-Sri......... ethae madhari matha oorgalai/naadugalai pattriyum yezhudhangalaen sir...>>>
நன்றி...மற்ற அனுபவ்ங்களை உதிரிக்கட்டுரைகளாக எழுதப் பார்க்கிறேன்
உங்கள் டில்லி அனுபவங்களை, டில்லி தமிழர்களைப் பற்றி என பல அருமையான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.
ReplyDelete“முற்றும்” என்பது சரியல்ல (என நான் எண்ணுகிறேன்) “மீண்டும் ..” சரியாக இருக்குமோ? “மீண்டும்” உங்கள் டில்லி அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
Sir,
ReplyDeleteYou are not a aam aadmi....but naam aadmi(Peyar ponavar)...by writing sentimental suffix you can not escape from us just like that!!!!
Nice experience!!!!!!
-Kothamalli
<<<-Kothamalli said ..by writing sentimental suffix you can not escape from us just like that!!!!>>>
ReplyDeleteYes, I cannot escape since I write not only sentimental stuff but also mental and detrimental stuff!!! :)
<<>>
ReplyDeleteபார்க்கிறேன்.உங்கள் அன்புக் கட்டளைக் கண்டு மனம் நெகிழ்கிறேன்.
"Kadugu Siruthalum Karam Pogathu". << T.L. SUBRAMANIAM, SHARJAH, UAE சைட்..... 10.4.2010 muthal marubadiyum thodarugireergal. Avvalavudan!.. thideerendru niruthakkoodathu.
ReplyDeleteபார்க்கிறேன்.உங்கள் அன்புக் கட்டளைக் கண்டு மனம் நெகிழ்கிறேன்
This was very very well written. I hope you write many more
ReplyDeletein the future. Please let me know as soon as this is done.
love'
PSR :-)
அருமையான பதிவு அய்யா.. நல்ல தகவல்களையும், மனிதர்களையும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஒரு மல்டிமில்லியனரை அவரிடம் வேலை செய்பவர் உங்க கெஸ்ட் ஹவுஸை எனது நண்பருக்கு தரும் பார்ட்டிக்கு பயன் படுத்துகிறேன் என்று சொல்லும் அளவில் பெரிய பதவியில் அவரும், அதைச் சாதாரனமாக எடுத்துக்கொண்டு சாப்படை அனுப்பி வை என்று கேட்கும் அளவு எளிமையான முதலாளிகளும் இருக்கிறார்கள்.. ஆச்சரியமான விஷயம்தான்.. நாலே நாலுகாசு பாத்தவனெல்லாம் எப்படி துள்ளுகிறான் என்பதைக் கவனித்தால் இவர்களின் எளிமை புரியும். உங்கள் கட்டுரைகளில் நான் உன்னிப்பாக கவனித்தது மனிதர்களை மட்டுமே.. அவர்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடும், அவர்கள் நடந்த விதம் பற்றி நீங்கள் விவரித்ததும்.. அடுத்த பகுதியையும் அப்படியே தொடருங்கள்.
ReplyDeleteநன்றி
ஜெயக்குமார்
It was a warm farewell from Delhi-ites to a good friend. The saying - "Tell me about your friends, I will tell about you" is very true. From the list of great persons you have as your friends and well wishers, you are really a great human being to be befriended with. One request: You don't have to be too modest and can rightfully be proud of, what to say, the way you have lived your life all along - acquiring and maintaining good friends, maintaining and spreading your sense of humour even with unknown faces like us etc.
ReplyDeleteAs you had gone to Delhi again for another 9 years after the first spell, I do expect (alongwith the numerous followers of this site) ' Anbulla Delhi -Irandaam Kaandam' - at your convenience.
- R. Jagannathan
திரு ஜெயக்குமார் மற்றும் திரு. R. Jagannathan:
ReplyDeleteமிக்க நன்றி. உங்கள் அன்புக்கு நன்றி
பார்த்தது, படித்தது கேட்டது, மகிழ்ந்தது, பிடித்தது, நெகிழ்ந்தது, சிரித்தது, அழுதது, செய்தது, செய்ய மறந்தது, வியந்தது - என்று பல விஷயங்களை எழுதப் பார்க்கிறேன்.
என் மனைவியின் அத்தை லட்சுமி விஸ்வநாதன், DTEA மோதிபாக்/ஆர்.கே.புரம் பள்ளிகளில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், அவரது கணவர் புலவர் விஸ்வநாதன் ஆகிய இருவரும் உங்களையும் உங்கள் மனைவியாரை பற்றியும் எங்களுக்கு பல விஷயங்களை கூறியுள்ளனர். அப்போது நாங்களும் தில்லியில்தான் இருந்தோம்.
ReplyDeleteதொச்சுவையும் அங்கச்சியையும் லட்சுமி டீச்சர் உங்கள் மனைவியிடம் விசாரிக்க அவர் விழுந்து விழுந்து சிரித்ததாகக் கூறினார். கற்பனை பாத்திரங்கள்தான் என்றாலும் அவர்கள் இருவரும் மறக்கமுடியாதவர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
dondu(#11168674346665545885) said...
ReplyDeleteஎன் மனைவியின் அத்தை லட்சுமி ... அவரது கணவர் புலவர் விஸ்வநாதன் ஆகிய இருவரும் உங்களையும் உங்கள் மனைவியாரை பற்றியும் எங்களுக்கு பல விஷயங்களை கூறியுள்ளனர்...தொச்சுவையும் அங்கச்சியையும் லட்சுமி டீச்சர் உங்கள் மனைவியிடம் விசாரிக்க அவர் விழுந்து விழுந்து சிரித்ததாகக் கூறினார். கற்பனை பாத்திரங்கள்தான் என்றாலும் அவர்கள் இருவரும் மறக்கமுடியாதவர்கள்.>>>
சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த அவர்களை ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் சந்திதோம்...புலவரின் எழுபதாவது பிறந்த நாள் விழாவில் உங்களைச் சந்தித்திருக்கிறேனே.. உஙகள் பிளாக்கிற்கு நான் ரெகுலர் விசிட்டர்.
enna sir seekiram mudichidinga ini eppo santhikkalam
ReplyDelete<<< DR.KVM said...enna sir seekiram mudichidinga ini eppo santhikkalam>>>>
ReplyDeleteகவலைப் படாதீர்கள். எனக்குத் தெரிந்ததையெல்லாம் ( ஏன், தெரியாததைப் ப்ற்றிக்கூட) எழுதுவேன்
திரு இராஜாஜி அவர்களைப்பற்றி தங்களது வலைப்பூவில் படித்தேன்.மற்ற அனைத்துபதிவுகளையும் படித்துக்கொண்டிருக்கன்றேன்.தங்களது பதிவு ஒரு ரசமான அனுபவம்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புள்ள டெல்லி .... 1 டு 18 முழுவதையும் இந்த முறையோடு சேர்த்து 3 ஆவது முறையாக படித்தாயிற்று. Really Excellent
ReplyDelete