P.M..மின் டூர் புரோகிராம் ( P.M. என்பது ”பிரியமுள்ள மனைவி” என்பதன் சுருக்கம்!)
நமது பிரதம மந்திரி எங்கேயாவது சுற்றுப் பயணம் செய்தால், அவரது நிகழ்ச்சி நிரலை மணிப்பிரகாரம் விவரமாகத் தயாரிக்கிறார்கள். எங்கள் வீட்டு பி. எம். (பிரியமுள்ள மனைவி!) மிற்கும் இம்மாதிரி ஒரு டூர் புரோகிராம் போட்டால்?
வியாழக்கிழமை 2’ம் தேதி :
காலை 7 :
சாயங்காலம் மிஸஸ் சுதாமூர்த்தி வீட்டு நவராத்திரிக்கு எந்தப் புடவை கட்டிக் கொண்டு போவது என்பதை ஆராய்வார்.
காலை 8 :
மேற்படி பிரச்சினையைத் தொடர்ந்து ஆராய்வார். (நாள், கிழமைக்குக் கட்டிக் கொண்டு போக டீசண்டா ஒரு புடவை கிடையாது. சாயம் போனதும், தையல் போட்டதும் தான் என் ராசி ஹும்.'' என்று அலுத்துக் கொள்ளுதல்.)
காலை 9:
ஒரு பட்டுப் புடவையைத் தவணை முறையில் வாங்குவதற்குக் கணவரிடம் அனுமதி பெறுதல் (அதே சமயம் புடவை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு லேசாகப் புன்னகை புரிதல்.)
காலை 10 முதல் மாலை 3 மணி வரை:
14 புடவைக் கடைகளுக்கு விஜயம் செய்து, பல புடவைகளைப் பார்த்துத் திருப்தி ஏற்படாமல், முதலில் சென்ற கடைக்கே போய் மறுபடியும் எல்லாப் புடவைகளையும் - குறைந்தபட்சம் 130 புடவைகளை -எடுத்துப் போடச் சொல்லிப் பார்த்து விட்டு ஒரு புடவையை வாங்கிக் கொள்ளுதல். ("ஹும், என்னமோ புடவை! ஒண்ணாவது, தலைப்பு நன்றாக இருந்தால், பார்டர் சரியாக இல்லை. கலர் நன்றாக இருந்தால், தலைப்பு நன்றாக இல்லை'' என்பது போன்ற கமெண்ட்டுகள் அலுப்புடன் வீசப்படல்.)
3-4 மணி வரை
கடையிலிருந்து வீடு திரும்புதல்- வழியில் மீனா மாமி, ருக்மணி மாமி, பத்மா மாமி, அம்புஜம் மாமி, கோகிலா மாமி ஆகியவர்களுடன் ஐந்து, ஐந்து நிமிடங்கள் உரையாடல், புதுப் புடவையைக் காட்டி லேசாக ஜம்பம் அடித்துக் கொள்ளுதல். ("பீரோ பிடிக்காமல் புடவை இருக்கிறது. இருந்தாலும் நாள், கிழமை குறையக் கூடாது என்று எங்க அகத்துக்காரர் நிர்ப்பந்தப்படுத்தி வாங்கிக் கொள்ளச் சொன்னார்'' போன்ற சிற்றுரைகள் நிகழ்த்தப்படும்.
4- 5 மணி வரை:
இரவு சமையலைச் செய்து முடித்தல். (இடைஇடையே "ஒரு நாள் சீக்கிரம் ஆபீஸை விட்டு வரமாட்டாரே. இந்த மனுஷன் ஆபீஸே இவர் தலை மேலே ஓடற மாதிரி நினைப்பு. ஹும்' என்று கணவரைப் பற்றி முணுமுணுப்பது.)
5 -6 மணி:
நங்கநல்லூர் மிஸஸ் சுதாமூர்த்தி வீட்டு விஜயம். (டாக்ஸிக்காரருடன் சண்டை. "அநியாயமாக சார்ஜைக் காட்டறது உன் டாக்ஸி மீட்டர்') சுதாமூர்த்தி என்ன வாடகை கொடுக்கிறாள், மாத வருமானம் என்ன, தீபாவளிக்கு என்ன புடவை வாங்கினாள், பிளாட் ஏதாவது வாங்கிப் போட்டிருக்கிறார்களா, ஏன் டீ.வி.டி இன்னும் வாங்கவில்லை போன்ற முக்கிய விஷயங்களைப் பற்றி கருத்துப் பரிமாறிக் கொண்டுவிட்டு, விடைபெறுவார்.
6.30 மணி
வீடு வந்து சேர்தல்
6.30-7.30 மணி
போய் வந்த விவரங்களையும், நடுநடுவில் சந்தித்த மாமிகள் மூலம் கிடைத்த முக்கிய தகவல்களையும் டூர் ரிப்போர்ட்டாக கணவரிடம் சொல்லுதல். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியவைகளைத் தனியாகப் பட்டியல் போட வேண்டியது. மறுநாள் டூர் பற்றி கணவரின் ஆலோசனையை ஒப்புக்குக் கேட்டு விட்டு, தனக்கு உகந்தபடி அமைப்பது.
(பி.எம்முடன் எதிர்வீட்டு லட்சுமியும் பக்கத்து வீட்டுப் பெண் மாலதியும் உடன் செல்வார்கள்.)
பி எம் ரொம்ப பிஸி தான்
ReplyDeleteரங்காச்சாரியில் “தள்ளுபடி ஸேல்ஸ்” போட்டது பி.எம்.மிற்குத் தெரியுமோ?
ReplyDelete<<< padma said...பி எம் ரொம்ப பிஸி தான்>>>
ReplyDeleteஆமாம்... பி எம் பிஸி; நான் பசி!
Sir,
ReplyDeleteIf mami is really like this then what will you do?
Kothamalli
Neenga President..Avanga P.M.
ReplyDelete<<>
ReplyDeleteஅதாவது நீங்க என்னை ரப்பர் ஸ்டாம்புன்னு சொல்ல வர்றீங்க!