August 07, 2013

ஒரு மன்னரின் சவால்சமீபத்தில் ஒரு பொன்மொழிப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் இருந்தஒருபொன்மொழி:  BE PREPARED TO SHOOT THE KING – FOR I WILL BE THE SOLDIER”  என்று இருந்தது.KING CHRISTAIN  என்ற் ஒரு அரசர் சொன்னது. 
 இது என்ன பெரிய பொன்மொழி, யாரோ ஒரு அரசர் சொன்னதால், அது பொன்மொழி ஆகிவிடுமா? என்று தோன்றியது. பொன்மொழிப் புத்தகத்தில் ஓரளவு விவரங்கள் இருந்தன.. விவரமாகத் தகவல்களை அறிய வலை வீசினேன். 
KING CHRISTAIN- பற்றிய   விவரங்கள் அடங்கிய THE YELLOW STAR என்ற புத்தகம் அகப்பட்டது.  அதை படித்தேன். அதில் இந்த பொன்மொழி தொடர்பான சம்பவம் விவரிக்கப் பட்டு இருந்தது. அதை இங்கு தருகிறேன்.

1940’ம் ஆண்டு. அந்த கால கட்டத்தில் டென்மார்க் நாட்டில், அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும்  இல்லையாம்) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம். எந்த விதமான பாதுகாப்பும் வைத்துக் கொள்ளமாட்டார். மக்களால் அதிகம் நேசிக்கப்படும் மன்னனுக்கு மக்களே பாதுகாப்பு என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.

இரண்டாம் உலகப் போர் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம்.  நாஜி படைகள் டென்மார்க் எல்லையைச் சூழ்ந்து இருந்தன.
நாஜி ராணுவ அதிகாரி ஒரு நாள் நாஜி கொடியை அரண்மனைக் கொடிக் கம்பத்தில் ஏற்றிவிட்டார். இதற்கு மன்னர் என்ன செய்யப்போகிறார் என்று மக்கள் (பயத்துடன்) கவனித்துக் கொண்டிருந்தார்கள். நகர்வலம் வரும்போது நாஜி கொடியைப் பார்த்த மன்னர், ஒரு சிப்பாயை அனுப்பி அதை இறக்கச் சொன்னார்.
தங்கள் கொடி அகற்றப்பட்டதை மறுநாள் பார்த்த நாஜி ராணுவ அதிகாரி, மன்னரைப் பார்க்கக் கோபத்துடன் வந்தார்.”எங்கள் கொடியை அகற்றியது யார்?” என்று கேட்டார்.”
 “ஏன், நான் தான் ஒரு சிப்பாயை அனுப்பி கொடியை அகற்றினேன்என்றார் மன்னர்.
அப்படியா? நாளைக்கு இன்னொரு கொடியை அங்கு ஏற்றி விடுகிறேன்என்றார் நாஜி அதிகாரி.
செய்நாளைக்கு இன்னொரு சிப்பாய் அதை அகற்றி விடுவார்என்றார் மன்னர் சாவதானமாக,
அப்படி அகற்றும்போது அவன் சுடப்படுவான்.”
அப்படியானால் டென்மார்க் மன்னரைச் சுடத் தயார் படுத்திக்கொள். ஏனென்றால் அந்த சிப்பாய் நானாகத்தான் இருப்பேன்என்றார்,
அதற்குப் பிறகு அந்த கொடி அங்கு பறக்கவே இல்லை!
உண்மையிலேயே அந்த பொன்மொழி 24 காரட் பொன்மொழிதான்!

பின்
குறிப்பு-1: இந்த மன்னர் செய்த மற்றொரு துணிச்சலான நடவடிக்கை டென்மார்க் மக்களை மட்டுமல்ல, டென்மார்க் நாட்டிலிருந்த யூதர்கள். அனைவரையும் காப்பாற்றியது! விவரம் வேறொரு பதிவில், பின்னால்!
பின் குறிப்பு-2: இந்த பொன்மொழிக்கு  ஆதாரமில்லை என்று ஒரு கருத்து உள்ளது. இருந்துவிட்டுப் போகட்டுமேஇதில் உள்ள உண்மை நம்மை மேம்படுத்தும் என்றால் பொய்யில்லை!
 ========================
இந்தப் பதிவில் பிழைதிருத்தம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பதிவே மாயமாய்ப் போய்விட்டது. அத்துடன் சிலர் போட்டிருந்த பின்னூட்டங்களும் போய்விட்டன. மறுபடியும் முதலிலிருந்து பதிவைத் தயார் பண்ணி போட்டிருக்கிறேன். பின்னூட்டம் போட்டவர்கள் மறுபடியும் அனுப்பினால் அவற்றைச் சேர்க்க முடியும்.
====================

6 comments:

 1. இதில் போடப்பட்ட பின்னூட்டங்கள் எல்லாம் முதலில் போட்ட பதிவுடன் காணாமல் போய்விட்டன!-கடுகு

  ReplyDelete
 2. 'சொன்னார்கள்' என்ற வலது பத்தியின் கீழ் என் பின்னூட்டம் (RJ on blog post - 6 ) இருக்கிறது - அதை முழுமையாக விரிக்க முடியவில்லை! உங்களால் முடியுமா என்று பார்க்கவும்! - ஜெ

  ReplyDelete
 3. அது அந்த பழைய பதிவோடு இணைந்தது.அதன் CODE வேறு.. அதே பதிவைப் புதிதாய் அப்லோட் பண்ணும்போது அதற்கு வேறொரு CODE. இப்போது போட்டுள்ள பதிவிற்கென்று வந்த பின்னூட்டங்கள்தான் இதில் வரும்.
  =கடுகு

  ReplyDelete
 4. இந்த பொன்மொழிக்கு ஆதாரமில்லை என்று ஒரு கருத்து உள்ளது. இருந்துவிட்டுப் போகட்டுமே! இதில் உள்ள உண்மை நம்மை மேம்படுத்தும் என்றால் பொய்யில்லை!

  சின்னவயசில் அம்மாக்கள் இப்படித்தான் சில பல பொய்களைச் சொல்லி நம்மை நெறிப்படுத்தி இருக்கிறார்கள். அது ஞாபகம் வந்தது.

  அதற்காக இதைப் பொய் என்று சொல்லவரவில்லை. மேம்படுத்தும் என்று சொன்ன விதம் மனதைத் தொட்டது..

  ReplyDelete
 5. காணாமல் போன பின்னூட்டங்களில் என்னுடையதும் ஒன்று......

  //பழமொழிக்குப் பின்னால் இருக்கும் கதையை தெரிந்து கொண்டேன். அரசர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்......

  பகிர்வுக்கு நன்றி.
  //

  ReplyDelete
 6. Is this a conflict ??


  //அந்த நாட்டுப் பிரஜைகள் மட்டுமே இருந்தனர். (அதாவது வெளிநாட்டினர் எவரும் இல்லையாம்) மன்னர் கிங் க்ரிஸ்டியன் ஒவ்வொரு நாளும் குதிரை மீதமர்ந்து கோபன்ஹேகன் நகரை வலம் வருவாராம்.//

  இந்த மன்னர் செய்த மற்றொரு துணிச்சலான நடவடிக்கை டென்மார்க் மக்களை மட்டுமல்ல, டென்மார்க் நாட்டிலிருந்த யூதர்கள். அனைவரையும் காப்பாற்றியது!

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!