July 07, 2010

புள்ளிகள்: அண்ணங்கராச்சாரியார்

நூலுக்கு வயது நூறு!ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றி மதிக்கக்கூடிய தகுதி படைத்தவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ப்ரதிவாதி  பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.  அவர்
எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது. இதை ஒட்டி சென்னை சர்வ கலாசாலை வைணவுப் பிரிவில்  ஒரு சிறப்புச் சொற் பொழிவு நடந்தது. : சென்னை வைணவச் சங்கத்தின் துடிப்பான செயலர் அட்வகேட் ராஜநாராயணன்.நிகழ்த்திய மிகச் சுவையான உரையிலிருந்து ஒன்றிரண்டு தகவல் துளிகளைத் தருகிறேன்.
* அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர்  எழுதிய முதல் நூல்.

* அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் - 1200!
* எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!

 * ஒரு மொழியில் எழுதிய புத்தகத்தை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்யவில்லை.

* இதுமட்டுமன்றி அவர் ஒரு பத்திரிகைiயையும் தனி ஆளாக நடத்தி வந்தார். அவரே எழுதி, புரூஃப் பார்த்து, அச்சுப்பிரதிகள் வந்ததும் சந்தாதாரர்களுக்குக் கைப்பட முகவரி எழுதி தபாலில் அனுப்புவாராம்.

* அவர் வலது கையாலும் இடது கையாலும் எழுதும் திறமை படைத்தவர். அது மட்டுமல்ல, ஒரே சமயத்தில் இரண்டு கையாலும் எழுதும் திறமை படைத்தவராம்!
============================
என் குறிப்பு:
* பல ஆண்டுகளுக்கு முன்பு , டில்லி ராம்லீலா மைதானத்தில் நூற்றுக்கணக்கான வைணவர்கள் கலந்து கொண்ட நாலாயிரத் திவ்யப் பிரபந்த பாராயணம் நடந்தது. அவர்  இதில் கலந்து கொண்டார். புல் தரையில் அமர்ந்து எந்தப் புத்தகத்தையும் பார்க்காமல் பாராயணம் செய்ததை நேரில் பார்த்து வியந்தேன். 4000 பாடல்களும் அவருக்குத் தலைகீழ் பாடமாகத் தெரியுமாம்..

*  , இரண்டு கைகளாலும்  எழுதத் தெரிந்தவர் ஜான் மில்டன் என்று  என் அபிமான எழுத்தாளர் ரிச்சர்ட் ஆர்மர் ‘அவுட் ஆஃப் மை மைண்ட்’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்..
..

10 comments:

 1. One of the finest article you ever posted...Thank you.

  Kothamalli

  ReplyDelete
 2. அம்மாடியோவ், எத்தனை எத்தனை விஷயங்கள் அறிந்திருக்கிறீர்கள்! நாங்கள் அல்வா விழுங்குவது போல் ஸ்ரமம் இல்லாமல் அறிகிறோம். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். நன்றி. - ஜகன்னாதன்

  ReplyDelete
 3. பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமிகளைப் பற்றிய செய்திகளுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 4. As usual thanks for a great article. I guess Shri Annagachariyar Swami was the one who authored Shri Venkateshwara Suprabatham. It would be useful if you could confirm if my understanding is correct.

  - Sri

  ReplyDelete
 5. நான் இந்த சைவம், வைணவம் என்ற் பிரித்துபார்ப்பது இல்லை. ஆனால் எனது மகனின் திருமணத்தில் அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது. எனது மகன் மென்பொருள் வல்லுநராக மும்பையில் பணி புரிந்த்தார். அங்கு தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை விரும்பிஉள்ளார். அவர்கள் சைவப்பிரிவை சேர்ந்தவர்கள். நாங்கள் வைணவம்.கடைசியில் சமாதானமாகி பெற்றோர்களே திருமணம் செய்ய ஒப்புக்கொண்டோம். ஆனால் அவர்கள் திருமண்த்தை மயிலை கபலீஸ்வரர் கோவிலில்தான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி பின்னர் அங்கேதான் திருமணம் நடந்தது.இன்னும் கூட மனித மனம் விசாலமடையவில்லை என்பத்ற்கு இது ந்ல்ல உதாரணம்.
  மதி

  ReplyDelete
 6. ஆழ்வாரின் பெயரில் உள்ள பயங்கரம் என்பதற்கு‍ வடமொழியில் என்ன பொருள் ஐயா ?
  பாபு
  கோவை

  ReplyDelete
 7. மூலப்பாடல் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. எழுதியவர்:
  "பிரதிவாதி பயங்கரம்" என்ற பட்டப் பெயர் கொண்ட அண்ணங்காச்சாரியார்.
  (பிரதிவாதி பயங்கரம்=வாதப் போரில் எதிர் அணியினருக்குப் பயங்கரமானவர்)
  இராமானுசரின் மறு அவதாரமாக வணங்கப்படும், மணவாள மாமுனிகள் என்ற பெரும் வைணவ குருவின் சீடர் இவர்.
  தம் குருவின் வேண்டுகோளை ஏற்று, திருவேங்கடமுடையானுக்கு அவர் இயற்றியதே இந்த சுப்ரபாதம்! இயற்கை வர்ணனைகளும், ஆழ்வார் பாசுரங்களில் இருந்து பல குறிப்புகளும் கொண்டுள்ளது!

  மொத்தம் 4 பாகங்கள் கொண்டது இது!
  1. சுப்ரபாதம் - பள்ளி எழல்
  2. ஸ்தோத்திரம் - துதி, போற்றி
  3. பிரபத்தி - திருமகளைப் பற்றித், திருவடிகளில் சரணாகதி
  4. மங்களம் - சுபம்
  ஆதாரம்:
  http://verygoodmorning.blogspot.com/2006/11/blog-post_116361653246238992.html

  ReplyDelete
 8. திருப்பதியில் சுப்ரபாதம்,காஞ்சிபுரம் ஸ்வாமியின் குரலில் தான் ரிகார்ட் செய்து ஒலி பரப்பப்பட்டதாம். பிறகு 1975-லிருந்து எம். எஸ். அவர்களின் கேசட்டைப் போட ஆரம்பித்தார்களாம்.

  ReplyDelete
 9. நம்முடைய இளைய சமுதாயம் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்..
  அவர்களின் எண்ணங்கள் விசாலமடையும்.. ஹூம்..நாம் பெருமூச்சுதான் விட முடியும்.
  -ஆர்

  ReplyDelete
 10. Just to elaborate on kadugu's point and answer Sri's question - PB Anna who composed the Venkatesa Suprabhatam some centuries ago is an ancestor of PBA SwamigaL (about whom this article is).

  - R

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :