தையலுக்கு உதவும்!
ஒரு புலவரின் மனைவி ஒரு நாள் வடை செய்தார். புலவரும் மனைவியும் சாப்பிட்ட பிறகு சில வடைகள் மிகுதியாக இருந்தன.
மறுநாள் காலை புலவரின் மனைவி, அந்த வடைகளை புலவரிடம் சாப்பிடக் கொடுத்தார். முந்தைய தினம் செய்த வடை என்பதாலும் கோடை காலம் என்பதாலும் வடைகள் ஊசிப் போயிருந்தன.
புலவர் வடையை பிய்த்தார். ஊசிய வடையாக இருந்ததால் உள்ளே இருந்து நூல் நூலாக வந்தது.
“இந்தா, வடை. ஊசிப் போய்விட்டது” என்று சொல்லியபடியே மனைவியிடம் அவற்றைக் கொடுக்க வந்தார்.
”ஊசிப் போய்விட்டால் குப்பையில் போடுங்கள். ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்?” என்று சற்று கோபமாகக் கேட்டாள்.
புலவர் சாவதானமாகச் சொன்னார். “வடை ஊசிப் போனதால், நூல் வந்தது. ஊசியும், நூலும் இருப்பதால் அவை தையலுக்கு உபயோகப்படுமே என்று உன்னிடத்தில் கொடுத்தேன்” என்றார்!
மூன்று சிலேடைகளைக் கவனியுங்கள்.
தையல் = தைப்பது, பெண்மணி
ஊசி = துணி தைக்கும் ஊசி, உணவுப் பொருள் கெட்டுவிடுவது
நூல் = வடையிலிருந்து வரும் இழை, தைக்கும் நூல்

கண்ணதாசன் சொன்ன சிலேடை நகைச் சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஉலகெங்கிலுமுள்ள மடங்களின் தலைவர்களின் மாநாடு.
எல்லோரும் வந்து விட்டனர்.
கடைசியாக ஒருவர் வருகிறார்.
அவரது சொந்த ஊர் "கடைமடை."
மடத்தின் தலைவர் வரவேற்கிறார்.
"வாரும் கடைமடையரே!"
(கடைமடை என்கிற ஊரைச் சேர்ந்தவரே வாரும்/ இன்னொரு விதத்தில் கடைசியாய் வந்த மடையரே வாரும், எனவும் அர்தத்ம்)
இப்போது வந்தவர் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, மிகப் பணிவாக சொன்ன பதிலைப் பாருங்கள்.
"வணக்கம்! மடத் தலைவரே!"
இதறகு நான் அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை.
Balhanuman........Supereb!!!!!!
ReplyDeleteKothamalli