சில நாட்களுக்கு முன்பு நடிகர் பீட்டர் உஸ்டினாவை பற்றி எழுதி இருந்தேன். பீட்டர் உஸ்டினாவின் ஒரு சுவையான சிலேடையையும் நகைச்சுவை துணுக்கையும் ரசிக்க வாருங்கள்.
1. நியூயார்க் பப்ளிக் லைப்ரரி மிகப் பிரமாண்டமான கட்டடத்தில் இருக்கிறது. அந்த கட்டடத்தின் வெளியே இரண்டு பக்கங்களில் உயரமான பீடங்களில் சிங்கம் படுத்திருப்பது போல் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் வெளியே படிக்கட்டுகளிலும் மேடைகளிலும் பலர் உட்கார்ந்துபடித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் சுவாரசியமாக அரட்டை (கடலை?) அடித்துக் கொண்டிருப்பார்கள். ( ஒரு சமயம்) அங்கு இருந்த ஒரு தமிழ் அதிகாரி என்னை சில பகுதிககளுக்கு அழைத்து சென்றார்.)
இரண்டு சிங்கங்களுக்கு இடையே பலர் படிப்பதைக் குறிப்பிட்டு, பீட்டர் உஸ்டினாவ் சிலேடையாக எழுதினார்: இது தான்' ரீடிங்க் பிட்வீன் தி லைன்ஸ் ' (Reading between the lions/lines) என்பதோ. என்று!
2 உஸ்டினாவிற்கு பிரிட்டிஷ் அரசு 1990-ம் வருஷம் KNIGHT பட்டத்தை அளித்துக் கௌரவித்தது.
ராணியால் இந்த பட்டம் தரப்படும். அதற்கு முன்பு உஸ்டினாவிற்கு அரசுத்துறை ஒருகடிதம் போட்டிருந்தது. அதில் சில விவரங்களைக் கேட்டிருந்தார்கள்.
அதில் ஒரு கேள்வி:
பரிசு வாங்கும் போது ராணியின் முன்பு மண்டியிடுவது முறை. உங்களால் மண்டி இட இயலுமா? ( ஆம், / இல்லை) .
”இதற்கு என்ன பதில் எழுதுவது என்று தனக்குத் தெரியவில்லை” என்றார் உஸ்டினாவ் தன் நண்பரிடம்.
“ ஆம் அல்லது இல்லை - இதில் ஏதாவது ஒன்றை டிக் செய்து விடுங்கள்.” என்றார் நண்பர்.
“ இல்லை. இதில் இரண்டு சாய்ஸ் தான் இருக்கிறது. மூன்று இருக்க வேண்டும். என்னால் மண்டி இட முடியும் ஆனால் மண்டி இட்ட பிறகு எழுந்திருக்கதான் முடியாது. அதை எப்படி குறிப்பிடுவேன்/”? ” என்று கேட்டார் உஸ்டினாவ்.
அருமை! அருமை !
ReplyDelete// என்னால் மண்டி இட முடியும் ஆனால் மண்டி இட்ட பிறகு எழுந்திருக்கதான் முடியாது // ஆஹா, இவர் நம்ம கேஸ்!
ReplyDeleteஆமாம், மண்டி இட விருப்பமா இல்லையா என்று அல்லவா கேட்டிருக்க வேண்டும்! - ஜெ.