August 30, 2010

தமிழ் முத்து - தன்னேர் இல்லாத தமிழ்

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்!
                                            -   தண்டியலங்காரம்

 உலகின் இருளைப் போக்கக்கூடியவை இரண்டு.:
1. சூரியன்
2.. நிகரில்லாத தமிழ் மொழி

5 comments:

  1. அட..ரொம்ப நல்லா இருக்கே...

    ReplyDelete
  2. பெரும் மதிப்பிற்குரிய கடுகு அவர்களே,
    மஹாபாரதத்தில் தருமரும், துரியோதனனும் நல்லவர் கெட்டவர் கணக்கெடுப்பு எடுக்க சென்றபோது, தருமர் எல்லோரும் நல்லவரே என்று சொல்ல துரியோதனன் எல்லோருமே கெட்டவர்கள் என்று சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். அவரவர் எண்ணப்படியே பிறர் நமக்கு தோன்றுவார்கள் என்றுணர்த்தும் கதை அது. அதைப்போலவே உங்கள் கேரக்டரில் எல்லோரும் பிரத்யேக குணங்கள் கொண்டிருந்தாலும், நல்லவராகவும்,பிறருக்கு என்றுமே மனதளவில் கூட தீங்கு செய்யாதவர்களாகவும் இருப்பது உங்கள் உயரிய எண்ணத்தை காட்டுகிறது.இதை நானும் பின்பற்ற அவா எழுகிறது.
    பணிவான வணக்கத்துடன்,
    பாரதசாரி

    ReplyDelete
  3. Muthu.....Pramaadham!!!!!!!!

    Kothamalli

    ReplyDelete
  4. பாரதசாரி said...
    === உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். நன்றி. நான் ஏதோ எழுதினேன். அதில் இவ்வளவு சிறப்பு’ இருப்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கிறீர்கள்! ரசித்தேன்; ஆனால் நம்பவில்லை!!!:)

    ReplyDelete


  5. வணக்கம் சார்!

    நாந்தான் புள்ளையார் சுழி!

    http://sowmora.blogspot.com/

    இது என்னொடது!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!