நேரு பிரதம மந்திரியாக இருந்த போது, இந்திரா காந்தியின் கணவரான ஃபிரோஸ் காந்தி எம். பி, யாக இருந்தார். துடிப்பான எம். பி. அவர்.
அந்த சமயம் சேட் ராமகிருஷ்ண டால்மியா என்பவர் ஏதோ ஒரு காரணத்திற்காக கைது செய்யப் பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். டால்மியா பெரும் பணக்காரர்.
பாராளுமன்றத்தில் இது பற்றி ஃபிரோஸ் காந்தி ஒரு கேள்வி கேட்டார்.” டால்மியாவிற்கும் அவருக்கு ஜாமீன் கொடுத்தவருக்கும் உள்ள உறவு என்ன?”
நேரு உடனே எழுந்து இந்த கேள்வியைக் கேட்டவருக்கும் பதில் அளித்தவருக்கும் உள்ள உறவு என்னவோ அதே உறவுதான் என்று குறும்பாகச் சொன்னார்.
( டால்மியாவுக்கு அவருடைய மாப்பிள்ளை ஜாமீன் கொடுத்ததை இப்படி நேரு சொன்னார்!)
அப்பா மகன், அப்பா மகள், கணவன் மனைவி என உறவுகள் அரசியலில் இருந்தது-இருப்பது தெரிந்த விசயம். மருமகன் மாமனார் கூட்டணி பாராளுமன்றத்தில் இருந்தது என்ற தகவல் சுவாரசியமானது.
ReplyDeleteஜெ. பாபு
கோவை/20
I have not read much about Feroz Gandhi. Can you provide some history about him, his career, his marriage with Indira, his end etc. - Jagannathan
ReplyDeleteபா. முருகானந்தம் என்பவர் (குஷ்வந்த் சிங் என்ற நூலின் தொகுப்பாசிரியர் -- விகடன் பிரசுரம்) எழுதிய முதல் நூல் 'ஃபெரோஸ் காந்தி' என்பது.
ReplyDeleteஅன்று...நேரு-- பிரோஸ் காந்திவிவாதம்பாராளுமன்றத்தில்அனல்பறக்கவை க்கும்!
ReplyDelete