தேவன் எழுதிய ஸ்ரீமான் சுதர்சனம் என்ற நாவலில் குடவாசல் என்ற மைத்துனன் கேரக்டர் அட்டகாசமாக உருவாக்கி இருப்பார்.. அந்த கேரக்டரின் பாதிப்பால் நான் கமலா கதைகளை எழுதத் துவங்கிய போது என் மைத்துனன் தொச்சு என்ற கேரக்டரை உருவாக்கினேன் ’ மைத்துனன்
அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த சாபம்’ என்று நான் சொல்லும் அளவுக்கு அவனால் நான் படும் பாட்டைக் கதைகளில் எழுதினேன். அந்தக் கதைகள் ஓரளவு (தன்னடக்கமே நீ வாழ்க!), நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த சீரீஸிலிருந்து ஒரு கதையை இங்கு தருகிறேன்.
கார்கில் சிறப்பு இதழ் ஒன்றை கல்கி வெளியிட்ட போது ஒரு ‘தொச்சு’ கதையை என்னிடம் கேட்டார்கள். அத்துடன் ’கார்கில் சம்பந்தமான கதையாக இருக்கட்டும்’ என்றும் எழுதி இருந்தார்கள். ஆக கதையில் தொச்சு, கார்கில் போர், நகைச்சுவை இவை மூன்றும் இருக்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த போது, என் அருமை மனைவி கமலா “ அப்போ பிடிச்சு. கத்திண்டு இருக்கேன்... காதிலே விழுந்தால்தானே! எருமை மாட்டு முதுகில் மழை பெய்ஞ்சாகூட கொஞ்சம் சிலிர்த்துக்கும்... உங்களுக்கு எருமை மாட்டைவிட தடிமனான தோல்., அதனாலேதான்...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ஆஹா ஐடியா வந்திரிச்சு: என்று பாட ஆரம்பித்தேன்.
“ கமலா..உன் திட்டுமழையில் ஒரு ஐடியா துளிர் விட்டு விட்டது. கல்கிக்கு ஒரு எருமை கதை ரெடி” என்றேன். ( நமக்குள் இருக்கட்டும். அவள் அர்ச்சனையை நிறுத்துவதற்காக அப்போது ரீல் விட்டேன். அப்புறம் நிஜமாகவே எருமை மாட்டுக் கதை உருவாகிவிட்டது!).
இதோ அந்த கதை - தனிப் பதிவாக!
Sir,
ReplyDeletePlease post other stories also.....and one more request...waiting for your "Naanum en maaamiyarum".
Kothamalli
அதற்கெல்லாம் மேலிடத்தில் அனுமதி வாங்கவேண்டும்... பார்க்கிறேன்...
ReplyDeleteSir, I want to forward a mail on creativity with pencil leads. Can you share your mail id?
ReplyDeleteஇந்திரன், சந்திரன்!
ReplyDelete<<< பாரதி மணி said...இந்திரன், சந்திரன்! >>>> நீங்கள் என் நண்பர். நீங்கள் வழக்கம் போல் ஆஹா, ஓஹோ என்று பாராட்டலாம். உங்களுக்கு அனுமதி உண்டு!:)
ReplyDelete