August 09, 2010

புள்ளிகள் ---பாட்டா


HOUSEHOLD NAME? FOOTHOLD NAME?
 பாட்டா காலணி நிறுவனத்தின் விற்பணை நிலையங்கள்  உலகின் பல பாகங்களில் உள்ளன.  செக்கோஸ்லாவியாவில்  பாட்டா  1894-ல்  துவங்கியது 
ஒரு சமயம் அதன் தலைவராகஇருந்த தாமஸ் (தாமஸ்?) பாட்டா இந்தியா வந்திருந்தார், அவர் சென்னைக்கு வந்த போது ஹிந்து நிருபர் அவரிடம் : உங்கள் பாட்டா நிறுவனம் இந்தியாவாவில் ஒரு ‘ஹவுஸ்ஹோல்ட்:  (household ) பெயராகிவிட்டதே...” என்று ஆரம்பித்தார். பாட்டா உடனே ’ இல்லை..இல்லை..ஹவுஸ்ஹோல்ட் பெயர் ( Household Name)   இல்லை. கால் பதித்த பெயர் (Foothold  Name)" என்று குறும்பாகச் சொன்னார்.

2 comments:

  1. கே. பாலசந்தரின் நாடகம் “ஆசை இருக்கு தாசில் பண்ண” என்னும் தலைப்பில் என்று என ஞாபகம். அது தொடர் நாடகமாக வெளியாகும்போதே நாகேஷ், மனோரமா, சச்சு ஆகியோரை வைத்து படங்களுக்கு பதிலாக ஸ்டில்ஸ் போட்டார்கள்.

    அதில் நாகேஷ் மைலாப்பூர் தேங்காய் மூடி வக்கீல். வெளியிலிருந்து வரும்போது செருப்பை மாற்றி போட்டுக் கொண்டு வந்து விடுகிறார். மனைவி இது சம்பந்தமாக கேள்வி கேட்கிறாள்.

    “ஏன்னா தவறுதலா போட்டுண்டு வந்திடேளா”

    “ஆமாம், பின்னே என்ன திருடினேனா”?

    “திருப்பிக் கொடுத்திடுங்கோ”

    “எப்படீடி, இது மேலே என்ன சொந்தக்காரன் பேரா போட்டிருக்கு”?

    “இதோ பாட்டான்னு போட்டிருக்கே”

    “கூடவே 44.95 ந்னு கூட போட்டிருக்கு. அது என்ன பாட்டாவின் பிறந்த நாளா? போடி அறிவு கெட்டவளே”

    இன்னொரு துணுக்கு.

    “சம்பந்தி நீன்ங்கள் பாட்டாவில் ஜெனெரல் மேனேஜராக இருக்கலாம். அதுக்காக வரதட்சிணை 99999.95 எல்லாம் கேட்டு படுத்தக்கூடாது”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!