May 30, 2017

மனிதன் பறவை ஆகலாம் - பாகம் 2

ஜிம் சொன்னான்: "நான் குடித்திருக்கலாம்ஆனால் இந்த மாதிரி உண்மையை அவர்கள் பார்த்திருக்க  முடியாது.  ஏனெனில்  உலகம்  தோன்றி இத்தனை பெரிய அதிசயம் இதுவரை எங்கும் நிகழ்ந்ததே இல்லை.... நான் ஒரு பெரிய திட்டம்  வைத்திருக்கிறேன்.  நீங்கள்  ‘ம்’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்கோடி கோடியாக உங்கள் காலில் கொட்டுகிறேன் பணத்தை!"

பணமா..?” முல்லி பேச்சில் நாசூக்காகக் கலந்துகொண்டாள்.
"ஆமாம்எக்ஸிபிஷன்வொர்ல்ட் டூர் எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்!'
*அதெல்லாம் எதற்குநான் பேசாமல் என் சொந்த ஊரான யார்க்ஷையருக்குத் திரும்பிப் போகலாம் என்று நினைக்கிறேன்!" என்றார் ஸாம்.
ஏதாவது தத்துப்பித்துன்னு பேச வேண்டாம்நான் சொல்லுகிறபடி கேளுங்கள்!' என்றாள் முல்லி.
'பறக்க வேண்டியவன் நான்ஆகவே நான் சொல்லுகிறபடிதான்..." என்று ஸாம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
முல்லி குறுக்கிட்டு, ''அடாடாஇந்த மனுஷனுக்கு மூளை ஏன் இப்படித் திடீர்னு வக்கரித்துக் கொள்ள வேண்டுமோதெரிய8லயே!.. சரி சரிஇத்தனை நாளாக இல்லாமல் இது என்ன  புது வழக்கம்?.... நான் பார்த்துக்கறேன்!' என்று ஒரு   போடு போட்டதுதான் தாமதம்ஸாம் வாயை மூடிக்கொண்டார்.
"நியூயார்க் மாடிஸன் அவென்யூவின் பரந்த மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டம் தயாரானதும்உங்களுக்கு நான் பிளேன் டிக் கெட் வாங்கி அனுப்புகிறேன்!" என்றான் ஜிம்.
"ஸாமுக்கு டிக்கெட் ஏன்நாம் பிளேனில் போவோம்அவர் அந்தப் பிளேனுக்குப் பின்னல் பறந்து வரட்டும்டிக்கெட் செலவு மிச்சமாகும்!" என்றாள் முல்லி.
"அதெல்லாம் கூடாதுஸாம் அதிக நேரம் பறந்தால் ஆபத்து ஏற்படலாம்என்று ஜிம் கடைசியாகக் கூறியதை முல்லி ஒப்புக்கொண்டாள்.
நியூயார்க்கிலிருந்த ஒரு பிரம்மாண்டமா ஓட்டலில் ஸாம் குழு தங்கியிருந்ததுஹோட்டல் அறை வழிய வழிய வந்து சேர்ந்த நிருபர்கள்போட்டோகிராபர்கள்டெலிவிஷன்காரர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்.
மனிதனாவதுபறப்பதாவது!...”

அவர்களுடைய சந்தேகத்தைப் போக்குவதற்காக ஸாம் ஒரு தரம் அறையைச் சுற்றிப் பறந்து வந்தார்டாக்டர்கள் அவருடைய நாடியைப் பிடித்துப் பார்த்தார்கள்மனோதத்துவ நிபுணர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். நிருபர்களில் சிலர் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, *கண்ணுக்குத் தெரியாத கம்பிகளின் உதவி கொண்டு பறக்கிறாரோ,  என்னமோஎன்று அவரைக் கையால் தடவித் தடவிப் பார்த்தார்கள்போட்டோகிராபர்களோ அவர்களையும் சேர்த்துப் "பிடிபிடிஎன்று போட்டோ பிடித்தார்கள்எல்லோரையும் ஒரு விதமாகச் சமாளித்து அனுப்பிவிட்டு ஸாம் படுக்கை அறைக்குள் நுழைந்தார்அங்கே வயதான ஒரு நிருபர் அவருக்காக உட்கார்ந்திருந்தார்.
ரொம்பப் பிரமாதமான வித்தை தான்!. ஆனால் உலகம் இதை நம்பாதுமனிதன் எதையும் நம்பக் கூடாதென்று வைத்திருக்கிறான்நம்பிக்கைதூய நம்பிக்கைஅது தான் நமக்குத் தேவை!" என்றார் அவர்.
ஆமாம்அந்த நம்பிக்கைதான் என்னைப் பறக்கச் செய்தது”
இருக்கலாம்ஸாம்அதில் ஏதாவதுஅவநம்பிக்கை..... சரிசரிஅதெல்லாம் எதற்குஒரு சின்ன விஷயம்எப்போதாவது பறப்பதில் சிரமம் ஏற்பட்டால்என்னால் பறக்க முடியும்நிச்சயமாகப் பறக்கமுடியும் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்அதைப் பரிபூரணமாக நம்பவும் நம்புங்கள்?
வயதான நிருபர் இதைக் கூறிவிட்டுவிடை பெற்றார்.
அதற்குப் பிறகு கேட்க வேண்டுமாஸாமுக்காக ஸ்பெஷல் டிரஸ் தயார் செய்தாள் முல்லிஜிம் இறக்கையில்லாமல் பறந்து  கொண்டிருந்தான்மாடிஸன் மைதானத்தில் நியூயார்க்கே திரண்டு கொண்டிருந்ததுடிக்கெட்டுகள் எக்கச்சக்கமாக விற்றுக் கொண்டிருந்தன.
அந்த மைதானத்தின் மத்தியில் ஒரு சின்ன மேடைஅதைச் சுற்றிப் பிரம்மாண்டமான விளக்குகள்ஸாம் நிதானமாக மேடைக்கு வத்துதம்மைத் சுற்றியிருத்தவர்களை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.
மைக் அலறிக்கொண்டிருந்தது!
ஸாம் பறப்பதற்காகக் கைகளை அகற்றினார்ஒருவேளை தம்மால் பறக்க முடியாமல் போனால் என்ன ஆகும்?' என்று எண்ணிக்கொண்டே அவர் கைகளை வீசினார்உடம்பை முன்னே தள்ளினார்அவரைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அதைத் தமாஷாக எண்ணி ஆரவாரித்தது.
ஸாமோ மேலும் மேலும்முயன்று முயன்று பார்த்தார்பறக்க முடியவில்லைஅவரால் பறக்கவே முடியவில்லை.
கூட்டம் நிதானமிழந்தது! 'ஸாம்சீக்கிரம் பறந்து செல்லுங்கள்” ஜிம் கத்தினான்ஸாமுவைப் பீதி கவ்விற்றுதமக்குப் பறக்கத் தெரியும் என்பது ஒருவேளை கனவாக இருக்குமோ?" என்று எண்ணினார்அதற்குள் கூட்டத்தினரிடமிருந்து ஊளைபேய்க்கூச்சல்குத்துஉதைபணத்தை வாங்கிக் கொடுஎன்பது போன்ற குரல்கள் எழுந்தன.
*ஜிம் எல்லாருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுநஷ்டத்தை நான் ஈடு செய்கிறேன்!" என்று ஸாம்சொன்னார்ஜனங்கள் டிக்கெட்டை வாபஸ் கொடுக்கக் குவிந்தார்கள்கூட்டத்தினரிடையே ஒரே களேபரம்கலவரம்குழப்பம்.
முல்லிக்கு ஒன்றும் புரியவில்லை.
'இனி அவள் தன்மேல் நம்பிக்கை வைப்பாளா?’ என்று ஸாம் நினைத்தார்.
நம்பிக்கை.ஆம்நம்பிக்கைஅதுதானே எல்லாவற்றிற்கும் ஆரம்பம்அந்த நிருபர்கூடச் சொன்னாரேஎன்னால் பறக்க முடியும்.நிச்சயமாகநிச்சயமாக.
அவ்வளவுதான்சட்டென்று *ஜெட்டான அவர்ஆகாயத்தை நோக்கிக் கிளம்பினார்வெளியே போய்க் கொண்டிருந்த கூட்டத்தின்மேல் தாழ்வாகப் பறந்தார். **பாருங்கள்என்னே நன்றாகப் பாருங்கள்!" என்று இரைந்தார்விரைந்து மேலே ஏறிநாகலந்து கரணம் போட்டுவேகமாகக் கூட்டத்திற்குள் அம்புபோல் பாய்ந்தார்.
கூட்டம் பயந்து அலறிச் சிதறியது!
ஓவென்று கத்திக்கொண்டே மைதானத்தைத் தாண்டிப் போனார்அவர் பறந்து போனதைப் பார்க்க மக்கள் வீதிகளில் கூடினர் பஸ்கார்டாக்ஸி முதலியவைகளை அப்படி அப்படியே நிறுத்திவிட்டுப் பார்த்தனர்இதனால் சில விபத்துக்களும் ஏற்பட்டன.
ஓர் உயரமான கட்டிடத்தின் கூரைக்குப் போய் உட்கார்ந்தார் ஸாம். "கீழே வா!' என்று போலீஸ்காரர் கத்தினர்அதற்குள் ஆம்புலன்ஸ் வண்டிகள் வேறு வந்து அங்கே நின்றனஅதிலிருந்து இறங்கியவர்கள் ஏணிகள் போட்டு ஏற ஆரம்பித்தார்கள்அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஸாம் இன்னும் மேலே பறந்தார்குளிர்ந்த காற்று சுகமாக இருந்ததுஅதை அனுபவித்துக் கெர்ண்டே இன்னும் மேலே மேலே பறந்துகொண்டே இருந்தார்.
இந்தக் கட்டிடக் குவியலில் எது தம் ஓட்டல் கட்டிடம்?.
இந்தப் பிரச்னைக்கு உள்ளானதும் ஒன்றும் புரியாமல் அவர் ஒரு வீட்டு மேல் மாடியில் இறங்கினார்அசதி மிகுதியால் அப்படியே கண்ணயர்ந்து விட்டார்.
யாரோ உலுக்கினார்கள்கண் விழித்துப் பார்த்தார்திரும்பவும் போலீஸ்காரர்!
'நீ எப்படி இங்கே வந்தாய்?”
நானாசும்மா பறந்து வந்தேன்'”
இதைக் கேட்ட மாடி வீட்டுப் பெண்மணி ஓவென்று அலறிஞள்பிறகுஸாமை உற்றுப்பார்த்துவிட்டு*இவன் வெளவால் மனிதன்என்று கூச்சலிட்டாள்.
"நீ தானா அதுமறுபடியும் என்னிடமிருந்து தப்ப நினைக்காதேஎன்விடம் துப்பாக்கி இருக்கிறது"- போலீஸ்காரர் இதைச் சொல்லி முடிக்குமுன் ஸாம் நூறு அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தார்
வெகுதூரம் பறந்தபின் ஓரிடத்தில் அவர் இறங்கினர்அங்கிருந்தவர்கள், *ஐய்யோவெளவால் மனிதன்ஆபத்து!" என்று கூக்குரலிட ஆரம்பித்தார்கள்இதென்ன தொல்லைஎன்று அவர் திரும்பவும் பறந்தார்இறங்கினர்ஒவ்வோர் இடத்திலும் அதே கதை:
கடைசியாக ஒரு கூரையின்மேல் ஸாம் உட்கார்ந்தார்அங்கும் ஒரு போலீஸ்காரர் அவரைப் பிடிக்க மெதுவாகக் கூரையின்மேல் ஏறிக் கொண்டிருந்தார்ஸாம் அவரைப் பார்த்து, 'ஏன் வீணாகக் கஷ்டப்படுகிறீர்கள்நீங்கள் வந்து சேருவதற்குள் நான் அடுத்த வீட்டுக் கூரைக்குப் பறந்து போய்விடுவேன்திரும்பவும் நீங்கள் அங்கே ஏறி வரவேண்டும்இதோ பாருங்கள்எனக்கு முல்லி இருக்குமிடம் தெரிய வேண்டும்அதைக் கண்டுபிடிக்கும் வரையிலாவது நீங்கள் என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்என்று சொல்லிக்கொண்டே வேறு இடத்திற்குத் தாவிப் பறந்தார்அங்கே யாருடைய தொந்தரவு மில்லை அவருக்குபல மணி நேரம் அங்கேயே இருந்தார்திடீரென்று அருகேயிருந்த ஒரு பால்கனியிலிருந்து முல்லியின் குரல் கேட்டது.அவள் மிகவும் பரிதாபமாக, “ஸாம்ஸாம்!' என்று கதறிக் கொண்டிருந்தாள்.
அவ்வளவுதான்அப்படியே அவள் இருந்த பால்கனிக்குத் தாவினார் ஸாம்.
*ராத்திரியெல்லாம் இந்தக் கூரை மேலா இருந்தீர்கள்?' என்று கேட்டாள் முல்லி.
"இதோ பார்முல்லிஎனக்கு யாரும் கரிசனம் காட்ட வேண்டாம்?”
*உங்களுக்கு விஷயம் தெரியாதுஉங்களால் நேற்று எத்தனை சாலை விபத்துக்கள் தெரியுமாபன்னிரண்டு பேர் மாண்டே போனார்கள்!"
'அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன்?”
"அதென்னமோஜனாதிபதி இன்று விசேஷ பார்லிமெண்ட்டைக் கூட்டியிருக்கிறார்பறக்கும் மனிதனிடமிருந்து மக்களைக் காப்பதற்காக அவர்கள் மூன்று மிலியன் டாலர் ஒதுக்கப் போகிறார்களாம்ஒரு பக்கம் அப்படியென்றால்இன்னுமொரு பக்கமோ உலகத்தையே உலுக்கி விட்ட மனிதர் ஸாம் என்று உங்களை எல்லோரும் போற்றுகிறார்கள்!"
உலகத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுஇனி ஜன்மத்துக்கும் நான் தரையிலிருந்து என் கால்களைத் தூக்கப் போவதே இல்லைஇப்போதே யார்க்ஷையருக்குப் போய் விடுகிறேன்நான்'
"யார்க்ஷைருக்காஅதெல்லாம் வீண் பேச்சு லாவினியாவுக்கு ஐந்து வருட சினிமா காண்ட்ராக்ட்ஒன்று வந்திருக்கிறதுஇப்போது நாம் காலி போர்னியாவுக்குப் போகப் போகிறோம்.”
ஸாம் ஒரு கணம் மெளனமாக இருந்தார்பிறகு கேட்டார்:
"முல்லிநீ என்னை உண்மையில் விரும்புகிறாயா?"
"என்ன கேள்வி இது?. இத்தனை வருஷமாகச் சமையல் செய்துதுணி துவைத்துஊழியம் செய்ததெல்லாம் ஆசையில்லாமலா?
சரிசரிஅதுதான் எனக்கு வேண்டும்!" ஸாம் தம்மை ஒரு தரம் உசுப்பிக் கொண்டார். 'இதோ பார்உன் கையை இப்படிக் கொடுபயப்படாதேஎன்னை நம்பு என்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைசொல்?. ஒன்றுஇரண்டுமூன்று."
ஸாம் முழு நம்பிக்கை இருக்கிறது எனக்குஉங்கள்மேல்.”
முல்லி முடிக்கவில்லைஅதற்குள் ஸாம்,' அப்படியானால் இதோ கிளம்பி விட்டோம்!" என்றார்,
காற்று மெல்ல வீசியதுமுல்லி கண்களை மூடிக் கொண்டாள்ஏதோ ஒரு புதுவித உணர்ச்சி அவளுக்கு உண்டாயிற்றுகண்களைத் திறந்தாள் என்ன ஆச்சரியம்பக்கத்திலிருந்த ஸாம் அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டிருந்தார்.
இருவரும் சேர்ந்தாற்போல் நியூயார்க் வானத்தில் மிதந்து போவதை உணர்ந்ததும் முல்லிக்குக் கிளுகிளுப்பு உண்டாயிற்றுதெருவில் நின்று பார்த்தவர்களுக்கு அவர்கள் இருவரும் இரண்டு கரும் புள்ளிகள்போல் காணப்பட்டார்கள்சில வினாடிகளில் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் அவர்கள் மறைந்து விட்டார்கள்!
இன்றும் யார்க் ஷையருக்குப் போனால் ஸாமையும் முல்லியையும் நிச்சயம் பார்க்கலாம். 'பறக்கத் தெரியுமா?' என்று யாராவது கேட்டால், 'அதுவா?. அது நான் இல்லை இப்போதுஸாம் ஜூனியர்!" என்று அவர் மழுப்பி விடுகிறார்!
-எரிக்நைட் எழுதிய 'ப்ளையிங் யார்க் ஷையர் மேன்என்ற புத்தகத்தின் சுருக்கம்.




2 comments:

  1. 'நம்பிக்கை' என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு இன்டெரெஸ்டிங் ஆக ஒரு கதையை எழுதியிருக்கிறார்.

    எனக்குப் படிக்க ரொம்ப சுவையா இருந்தது. அப்போவே சுவையான விஷயங்களை தமிழ்ல கொண்டுவந்திருக்கீங்க. பாராட்டுக்கள் பகிர்ந்துகொண்டமைக்கு (தட்டச்சு செய்து அனுப்பிய அந்த நண்பருக்கும்தான்)

    ReplyDelete
  2. மிக நன்றாக இருக்கிறது. உண்மையில் எதற்கும் நம்பிக்கை முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. வாழ்வின் அடிநாதமே நம்பிக்கை தானே!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!