ஒரு நாள் காலை என் நண்பன் கிட்டப்பா என் வீட்டிற்கு வந்தார். கையில் பெரிய பை.
``என்னப்பா, பையும் கையுமா காலையில் வந்திருக்கிறாய். பையில் என்ன? உன் கிராமத்திற்குப் போயிருந்தாயா? கத்திரிக்காய் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டேன்.
``கத்திரிக்காயும் இல்லை, ஒண்ணுமில்லை. நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரைக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு அவ்வளவு சரியாக எழுத வரவில்லை. நீதான் பெரிய எழுத்தாளன் என்று ஊரெல்லாம் சொலிக் கொண்டு திரிகிறாயே, கொஞ்சம் சரி செய்து கொடு'' என்றான்.
``உன் கட்டுரைகளில் சரியாக இல்லாத பகுதிகளை எல்லாம் எடுத்து விட்டால் தலைப்பும், `முற்றும்' மட்டும்தான் இருக்கும்'' என்றேன்.
``நீ கை வெச்சால் எல்லாம் பிரமாதமாகி விடும் என்றுதானே உன்னிடம் வந்தேன். நீ என்னை நக்கல் பண்ணறே. பண்ணு, பரவாயில்லை. அப்படியே இதையும் சரி பண்ணு'' என்றான்.
``சரியப்பா... பாக்கறேன்...'' என்றேன்.
கிட்டப்பா தன் கையெழுத்துப் பிரதியை வைத்து விட்டுப் போனான்.
இரண்டு நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தேன். இங்க் புட்டிக்குள் விழுந்த எறும்பு காகிதத்தில் ஓடியது போல் இருந்தது அவன் கையெழுத்து! கஷ்டப்பட்டுப் படித்தேன். சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருந்தான். உண்மை போல் இருந்தது. அதே சமயம் நம்பமுடியாததாகவும் இருந்தது.
ஒரு வாரம் கழித்து கிட்டப்பா வந்தான்.
``கிட்டப்பா... இதில் எழுதி இருக்கிறதெல்லாம் உண்மையா? உன் மனைவி உனக்குப் பண்ணின அர்ச்சனைகள் நம்ப முடியாதபடி இருக்கிறது. உன் மனைவியைப் பற்றி இத்தனை நாளில் ஒரு சமயம் கூட என்னிடம் குறைபட்டுக் கொண்டதில்லையே! சும்மா ரீல் மாதிரி இருக்கிறதே!'' என்றேன்.
``இல்லைப்பா... உண்மைதான். கணவன்-மனைவி பெயர்களை மாற்றி இருக்கிறேன். இதை நீ சரிபார்த்த பிறகு சில சம்பவங்களையும், பெயர்களையும் மாற்றி விடப் போகிறேன். அதிருக்கட்டும், மொத்தத்தில் எப்படி இருக்கிறது நான் எழுதியது?'' என்று கேட்டான்.
``மொத்தத்தில் நன்றாக இருக்கிறது. சில்லறையில்தான் போரடிக்கிறது'' என்றேன்.
``இந்த கலாட்டாதான் வேண்டாம் என்கிறது. கதையில் வரும் மனைவியின் பெயரை அம்புஜம் என்று வைத்து விடலாம். கணவன் பெயரை பஞ்சு என்று மாற்றி விடலாம்.'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் எழுதிய உண்மையான `கற்பனை'க் கட்டுரைதான் அம்புஜத்தின் அர்ச்சனைகள்! (தொடரும்)

"பஞ்சு படும் பாடு" IN "அம்புஜத்தின் அர்ச்சனை" காத்திருக்கிறேன்
ReplyDelete