கமலா வெறும் பி.ஏ. பட்டம் பெற்றதோடு நிற்காமல் சட்டப்படிப்பும் படித்துக் கறுப்புக் கோட்டும் போட்டுக் கோர்ட்டுகளுக்குப் போயிருந்தால் பால்கிவாலா வகையறாக்களை முழுங்கி ஏப்பம் விட்டிருப்பாள். விவாதம் என்று வந்தால் கமலா பாயிண்ட் பாயிண்டாகவும், பல சமயம் பாயிண்ட் இல்லாமலும் வெளுத்து வாங்குவாள். இதோ சில உதாரணங்கள்:
*
``கமலா... நாளைக்கு காலை பத்து மணியிலிருந்து புது காஸ் கனெக் ஷனுக்குப் பதிவு செய்து கொள்ளப் போகிறார்களாம்.''
``முதல்லே போய் உங்க பேரை ரிஜிஸ்டர் பண்ணிட்டு வாங்கோ!''
``ஒரே கூட்டமாக இருக்கும். இரண்டு நாள் போகட்டுமே...''
``கூட்டம் இருக்காது, ஒண்ணும் இருக்காது. உங்களை மாதிரி எல்லாரும் நினைச்சிண்டு இரண்டு நாள் கழிச்சுத்தான் போவார்கள். அன்னிக்குத்தான் கூட்டம் அலைமோதும் அதனால நாளைக்கே போங்கோ...'
``சரி கமலா.''
*
``போய் அரைக் கிலோ முட்டைக்கோஸ் வாங்கிக் கொண்டு வாங்க. கையிலே எடுத்துப் பார்த்தா லேசா இருக்கணும். அதுதான் நிறைய நிக்கும்'' என்றாள் கமலா.
``அது எப்படி? எடை போட்டு வாங்கும் போது அரைக் கிலோவுக்கு 750 கிராம் என்று வந்து விடுமா?'' என்று நான் கேட்டேன்.
``பேத்தாதீங்கோ... அடைஞ்ச மாதிரி இருக்கிற முட்டைக் கோஸில் உள்ளே காற்றே இருக்காது. வெலவெலன்னு லேசா இருக்கிறதில் உள்ளே காத்து இருக்கும். அதனால் எடை குறைவாக்கிக் காண்பிக்கும். உங்க சயன்ஸ் அறிவெல்லாம் கறிகாய் மார்க்கெட்டிற்கு உதவாது'' என்றாள்.
``உண்மைதான் கமலா'' என்றேன்.
*
``பேப்பரில் பார்த்தீங்களா... ஆறு டஜன் தையல் மிஷின் ஊசி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் இனாம் தருகிறார்கள்.''
``வீட்டில் இருக்கும் பக்கெட்டுகள் எட்டுத் தலைமுறைக்கு வரும் கமலா.''
``வரட்டுமே... தையல் மிஷின் ஊசி இருககிறதா வீட்டில்?''
``மெஷின் இருந்தால்தானே ஊசி இருப்பதற்கு? மெஷின் வாங்கும் போது ஊசி வாங்கிக் கொண்டால் போகிறது கமலா!''
``அப்போது உங்களுக்கு வெத்தலை பாக்கு வெச்சு பிளாஸ்டிக் பக்கெட் இனாமாகத் தரப் போகிறார்களா?''
``ஓசி பக்கெட்டுக்காக ஊசியை வாங்கி ஸ்டாக் பண்ணணுமா?''
``ஊசி என்ன ஊசிப் போகிற வஸ்துவா? இருந்துவிட்டுப் போகிறது. எப்போ லாபகரமாகக கிடைக்கிறதோ அப்போ வாங்காமல் இருப்பாங்களா?''
``சரி... சரி... கமலா.''
*
``கமலா... நாளைக்குக் காலை பத்து மணியிலிருந்து பாம் ஆயில் தர்றாங்களாம் கடையில். நான் முதல்லே போய் நின்னுடப் போகிறேன்.''
``ஒண்ணும் வேண்டாம். ஒரே கூட்டமாக இருக்கும். நசுங்கிப் போய்டுவீங்க. இரண்டு நாள் கழிச்சுப் போகலாம்.''
``இல்லை கமலா... கூட்டமாக இருக்கும்னு ரொம்பப் பேர் இரண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க. முதல் நாள் கூட்டம் இருக்காது.''
``எல்லோரும் இரண்டு நாள் கழிச்சு வருவாங்க. நாம்ப முதல் நாளே போயிடலாம்னு எல்லாரும் நினைச்சுண்டு வந்துடுவாங்க. கொஞ்சமாவது யோசனை இருக்கணுமே...'

ஆஹா.. காஸ் கன்னெக்ஷனுக்கு ஒரு ரூல், பாம் ஆயிலுக்க் ஒரு ரூல் - இப்படியிருந்தால் நாம் என்ன செய்வது! முட்டைக்கோஸ் விஷயத்திலும் நாம் ஒரே மாதிரிதான்! எனக்கும் புரிவதில்லை மனைவியின் சட்டப் பாய்ண்ட்! -ஜெ.
ReplyDeleteகருவிலே திருன்னு சொல்றதுக்கு இப்போது தான் அர்தத்ம் புரிஞ்ச்து.. பாயின்ட் பாயின்டாகப் பிச்சு உதர்றாங்கன்னா காரணம் அவங்க பேரே கம-லா(KAMA-LAW)தானே!! -- கபாலி
ReplyDelete