January 11, 2011

கடன் கேட்டுப்பாருங்கள்!

கடன் கேட்பது ஒரு கலை என்றால், கடன் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வதும் ஒரு கலை.  இந்தக் கலையை-- அதாவது கடன் தராமல் சால்ஜாப்பு  சொல்வதை நான் கற்றுக் கொள்வதற்கென்றே பலரைக் கடன் கேட்டேன்.  அதன் காரணமாகச் சில உத்திகள் எனக்குத் தெரிய வந்தன.  யான் பெற்ற பேற்றை உங்களுக்கும் தர ஆவல்.
 
      ""என்னப்பா ராமசாமி,நூறு ரூபாய் கடன் வேண்டுமே'' என்று நான் கேட்டேன். ராமசாமி சொன்னான்:
      "நூறு ரூபாய் வேண்டுமா? கிண்டல் பண்ணாதே!... 'மாசக் கடைசி, இவன் கிட்டப் பணம் இல்லை' என்கிறதைத் தெரிஞ்சு வெச்சுண்டுதானே ஆழம் பார்க்கிறே?....''
      கோபாலசாமி சொன்னதைக் கேளுங்கள்.
      " ஏனப்பா, நேத்துத்தான் கிருஷ்ணசாமிகிட்டே நான் ஐம்பது ரூபாய் கடன் கேட்டேன்.  பணம் தராவிட்டாலும் அந்தக் கிருஷ்ணசாமி ஊரெல்லாம் தண்டோராப் போட்டுட்டான் போலிருக்கு.  அதனால்தான் நீ. .-- . . டெய்லி ஐந்நூறு ரூபாய் நோட்டை மாத்தற நீ. . . இப்படி டிராமா போடறே. . . அட, நான் 
     நாராயணசாமி கூறியது: "இன்னிக்குநூறு ரூபாய் கேட்பே.  நாளைக்கு ஐந்நூறு. . .  அப்புறம் ஆயிரம்.  அடுத்த வாரம் பத்தாயிரம்.  அடுத்த மாசம் லட்சம். . . இப்படித்தான் போகும்.  கடைசியில் திவாலாகி விடுவாய். . கடன் கேட்கிற வழக்கத்தை விடு. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.''
      ரங்கசாமி கேட்டது: "நூறு ரூபாயா? இன்னிக்குத் தேதி எட்டு. சம்பளம் வாங்கின பணம் எனன் ஆச்சு  பிடிப்புப் போக உன் சம்பளம் எவ்வளவு? வாடகை,, ஓட்டல் பில்,, ஊருக்கு அனுப்பினது  இதெல்லாம் எவ்வளவுஓவர் டைம் கூட இந்த மாசம் வந்ததேசீட்டுக் கடனும் போன மாசம் முடிஞ்சுட்டுது.  ஒவ்வொரு பைசாவுக்கும் முதல்லே கணக்குச் சொல்லு!''
      கோவிந்தசாமி டைப்பே வேறு.  "கேட்கிற கடனை இருநூறு ரூபாயா கேள்.  யாராவது கொடுத்தால் அதில் எனக்குநூறு ரூபாய் கொடு. . எனக்கும் பணம் தேவை.  யாரைக் கேட்கிறது என்று தெரியவில்லை!''
      அண்ணாசாமி சொல்லியது டாப்:  ""உனக்குப் நூறு ரூபாய் தருவது ஒண்ணும் பெரிய கஷ்டமான காரியம் இல்லை.  ஆனால் இது ஆபத்தான பழக்கம் என்பதை முதலில் சொல்லிடணும்.  நேத்துதான் மெடிகல் ஜர்னலில் படித்தேன்.  கடன் வாங்கிவிட்டால் மனசில் ஒரு டென்ஷன் ஏற்படறது.  இதன் காரணமாக பிளட் பிரஷர் அதிகமாயிடறது.  தூக்கமும் சரியாக இருக்காது.  ஹார்ட்டுக்கும் தொல்லை வரும்.  கடன் வாங்குவதும்ஒண்ணுதான். சைனைட் விஷத்தைச் சாப்பிடறதும் ஒண்ணுதான்னு அழுத்தம் திருத்தமா எழுதியிருக்கிற கட்டுரையைப் படிச்ச பிறகு உனக்குப் பணம் கொடுத்தால் அது.எனக்கு மகா பாவம். நான் அந்தத் தப்புக் காரியத்தைப் பண்ண மாட்டேன்..!”


ஆகவே,  கடன் கொடுக்காமல் தப்பிக்க பல உத்திகள் என்னிடம் இருக்கிறது எனபதையும் மறைமுகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்!
=============
ரவிபிரகாஷ்  அவர்கள் அனுப்பியப்  பின்னூட்டம்
கடன் தராமல் இருக்க ஒவ்வொருவரின் சால்ஜாப்புமே டாப்! ரசித்துப் படித்தேன். இதோ, இன்னும் சில சால்ஜாப்புகள்! தேவைப்படுவோர் உபயோகித்துக் கொள்க. எனக்கு ராயல்டி எதுவும் தேவையில்லை! :) 1. அடடா! ஒரு பத்து நிமிஷம் முந்தி வந்திருக்கப்படாது? கையில் இருந்ததையெல்லாம் போட்டு இப்பத்தான், சீப்பா கிடைச்சுதேன்னு ஒரு வாக்குவம் க்ளீனர் வாங்கினேன்! வாசல்லியே கொண்டு வந்தான்! 2. நீ உடனே என்ன பண்றே... மசமசன்னு இங்கே டயத்தை வேஸ்ட் பண்றதை விட்டுட்டு, நேரே போய் பத்மநாபனைப் பிடி! அவனுக்குதான் தொப்புளுக்கு மேல கஞ்சி. காசை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கான்! அவன் கிட்டே கேளு. கண்டிப்பா கொடுப்பான். ஆனா, நான்தான் கை காமிச்சேன்னு மட்டும் அவன்கிட்டே சொல்லிடாதே, என்ன? 3. உங்கிட்டே சொல்றதுக்கு வெக்கப்படுவானேன்... கையில பரம்பைசா இல்லே. ஏதோ ஒரு படத்துல பிச்சைக்காரன் (கவுண்டமணி) சொல்லுவானே, 'அப்ப ஏண்டா நாயே இங்கே நிக்கிறே? என்கூட வா! நாலு தெரு போய் காசு பாப்போம்'னு. அப்படி யாராவது என்னைக் கூப்பிட்டா, பேசாம அவனோட கிளம்பிப் போயிடலாம்னு இருக்கேன்! 4. நீ கேட்டுக் கொடுக்க முடியலையேன்னு ரொம்ப ஃபீலா இருக்குடா மச்சி! அன்னிக்கு இந்த நாய் வந்து அவசரம்னு சொல்லிக் கேட்டபோது நாம மழுப்பி அனுப்பிட்டமே, அந்தக் காண்டுலதான் இப்ப இவன் நமக்குத் தண்ணி காட்டறான்னு மட்டும் தயவுசெஞ்சு நினைச்சுடாதே! பிராமிஸா ஒரு பைசா இல்லடா!

3 comments:

  1. Kadugu Sir,

    Excellent !!

    - Harish

    ReplyDelete
  2. அருமை ஐயா :-) :-)
    இந்த சால்ஜாப்பையும் மீறி எப்படி சாமர்த்தியமாக கடன் பெறுவது என்று பதிவிட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  3. கடன் தராமல் இருக்க ஒவ்வொருவரின் சால்ஜாப்புமே டாப்! ரசித்துப் படித்தேன்.

    இதோ, இன்னும் சில சால்ஜாப்புகள்! தேவைப்படுவோர் உபயோகித்துக் கொள்க. எனக்கு ராயல்டி எதுவும் தேவையில்லை! :)

    1. அடடா! ஒரு பத்து நிமிஷம் முந்தி வந்திருக்கப்படாது? கையில் இருந்ததையெல்லாம் போட்டு இப்பத்தான், சீப்பா கிடைச்சுதேன்னு ஒரு வாக்குவம் க்ளீனர் வாங்கினேன்! வாசல்லியே கொண்டு வந்தான்!

    2. நீ உடனே என்ன பண்றே... மசமசன்னு இங்கே டயத்தை வேஸ்ட் பண்றதை விட்டுட்டு, நேரே போய் பத்மநாபனைப் பிடி! அவனுக்குதான் தொப்புளுக்கு மேல கஞ்சி. காசை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கான்! அவன் கிட்டே கேளு. கண்டிப்பா கொடுப்பான். ஆனா, நான்தான் கை காமிச்சேன்னு மட்டும் அவன்கிட்டே சொல்லிடாதே, என்ன?

    3. உங்கிட்டே சொல்றதுக்கு வெக்கப்படுவானேன்... கையில பரம்பைசா இல்லே. ஏதோ ஒரு படத்துல பிச்சைக்காரன் (கவுண்டமணி) சொல்லுவானே, 'அப்ப ஏண்டா நாயே இங்கே நிக்கிறே? என்கூட வா! நாலு தெரு போய் காசு பாப்போம்'னு. அப்படி யாராவது என்னைக் கூப்பிட்டா, பேசாம அவனோட கிளம்பிப் போயிடலாம்னு இருக்கேன்!

    4. நீ கேட்டுக் கொடுக்க முடியலையேன்னு ரொம்ப ஃபீலா இருக்குடா மச்சி! அன்னிக்கு இந்த நாய் வந்து அவசரம்னு சொல்லிக் கேட்டபோது நாம மழுப்பி அனுப்பிட்டமே, அந்தக் காண்டுலதான் இப்ப இவன் நமக்குத் தண்ணி காட்டறான்னு மட்டும் தயவுசெஞ்சு நினைச்சுடாதே! பிராமிஸா ஒரு பைசா இல்லடா!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!