January 12, 2011

தினமும் ஒரு கவிதை வீதம் முப்பது வருஷங்கள்!

  ஆங்கில கவிதைகள் தொகுப்புப் புத்தகத்தை  ஒரு  புத்தகச்சாலையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு  பாடல் கண்ணில் பட்டது. பாடல் மிகவும் அருமையாக இருந்தது.  எழுதியவர்” எட்கார் கெஸ்ட் ( EDGAR GUEST)
 உடனே அவர் எழுதிய பாடல் புத்தகங்களைத் தேடத் துவங்கினேன். அவரைப் பற்றிய விவரங்களைத் தேடிப்பிடித்தேன்.

எட்கார் அமெரிக்காவில் டெட்டரய்ட் நகரில் வசித்தவர். 1959’ல் தனது 78-வதுவயதில் காலமானார்.  இவர் பிரபலமான கவிஞர்.. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ஆபீஸ்  பையனாக வேலைக்குச் சேர்ந்தவர். இவர் எழுதிய முதல் கவிதை வெளியானதும், டெட்ராய்ட் நகரமே  திரும்பிப் பார்த்தது!
அத்தனை அபாரமாக இருந்ததாம். அதன் பின் இவர் நூற்றுக் கணக்கான கவிதைளை எழுதிப் புகழ் பெற்றார்.  மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது கவிதைகள் சுமார் 300 பத்திரிகைகளில் ‘சிண்டிகேட்’ செய்யப்பட்டதாம். FREE PRESS  என்ற தினசரியில் தினமும் ஒரு கவிதை எழுதிவந்தாராம்.ஆம்,  தினமும்! வாரத்தில் ஏழு நாட்களும். இப்படி எத்தனை வருஷங்கள் எழுதினார் தெரியுமா? முப்பது வருஷங்கள்.!
இவரை மிச்சிகன் மானிலம் அரசவைக் கவிஞராக்கிக் கௌரவித்தது. (இதுவரை இவரை தவிர வேறு  யாருக்கும் இந்த கௌரவம் தரப்படவில்லை.)
இவர் படத்தைத் தபால் தலையிலும்  போட்டு பெருமைப்படுத்தி இருக்கிறது அரசு.
இவர் பதினோராயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.!

 இவரது சிறந்த கவிதைகள்  THE BEST OF EDGAR GUEST  என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. கவிதைகளை அவரே தேர்ந்து எடுத்துக் கொடுத்தாராம்.
அந்த புத்தகத்தை மிகவும் தேடி அலைந்து வாங்கினேன். அதிலிருந்து ஒரு பாடலைத் தனிப் பதிவாகப் போட்டுள்ளேன். வேறு சில பாடல்களைப் பின்னால் போடுகிறேன்.

No comments:

Post a Comment

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!