June 03, 2010

சித்ராலயா கோபுவும் நானும் - கடுகு

டைரக்டர் ஸ்ரீதரைப் பற்றி நான் எழுதிய பதிவில் சித்ராலயா கோபுவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

கோபுவும் நானும் நண்பர்கள் மட்டும் அல்ல மேடை நகைச் சுவை நிகழ்ச்சிகளை நடத்தி பெயர் பெற்ற லாரல் - ஹார்டிக்கள் (அல்லது கவுண்டமணி - செந்தில்கள்). இது பற்றி பின்னால் சொல்லுகிறேன்.
    கோபு-ஸ்ரீதர்-நான் மூவரும் செங்கல்பட்டில் படித்தவர்கள். பள்ளி நாடகங்களில் ஒன்றாக நடித்தவர்கள்.

கோபு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருதம் படித்தார். நாங்கள் தமிழ். (நமக்குள் இருக்கட்டும். கோபு சமஸ்கிருதம் படித்ததால் அவர் அதில் புலமை அடைந்தவர் என்று எண்ணிவிடாதீர்கள். சமஸ்கிருதம் படித்ததால் அவர் தமிழ் படிக்கவில்லை.  அவ்வளவுதான்.  இன்றைக்கும் அவருக்கு பெரிய ’ற’ சின்ன ’ர’ தகராறுதான்.

சில சமயம் கோபுவை நான் கலாட்டா பண்ணியிருக்கிறேன். ”நீ என்ன கதை, வசன கர்த்தா? பெரிய ’ற’ சின்ன ’ர’ வித்தியாசம் தெரியாதவன் நீ” என்று.  அதற்கு கோபு என்ன சொல்லுவார் தெரியுமா,

”தெரியாவிட்டால் என்ன, நான் எழுதறது வசனம். மேடையில் பேசும்போது பெரிய ’ற’ சின்ன ’ர’ வித்தியாசம் எதுவும் கிடையாது” என்பார்.
 *               *                    *
கோபுவின் அப்பா எங்கள் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். அவருடய சித்தப்பாவும் ஆசிரியர். அதனால் என்ன லாபம்? பரீட்சையில் வரக்கூடிய  கேள்விகள் என்று அவர் அப்பா சொன்னதை நைசாக எங்களுக்குக் கோபு  சொல்லிவிடுவார்,    இது  எப்படியோ கோபுவின் அப்பாவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது,
அதனால்  பரீட்சைக்கு முன் நாள் இரவுதான் கோபுவுக்கே கேள்விகளை ஜாடை மாடையாகச் சொல்வார், அதன் பிறகு கோபு வீட்டை விட்டு வெளியே போகமுடியாது, மறு நாள் நேரே பரீட்சை ஹாலுக்கு அவரே அழைத்து வருவார். எங்கள் இரண்டு பேரையும் பார்த்து கோபு உதட்டைப் பிதுக்குவார், அதன் பொருள் ”என்னால் உங்களுக்குச் சொல்ல முடியவில்லைடா” என்பதுதான்.
 இந்தப் பிரச்சனையை சமாளிக்க நாங்கள் மூவரும் ஒரு உச்சி மகாநாடு நடத்தி இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தோம். அதன்படி, பரீட்சைக்கு முன்னாள் இரவு,  நன்றாக இருட்டிய பிறகு கோபுவின் வீட்டருகில் சென்று ஒரு விசில் அடிப்போம்.  கோபுவின் வீடு மாடிப் போர்ஷன். அங்கிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு கோபு போய் விடுவார்.  கொஞ்ச நேரம் கழித்து திடீரென்று ஒரு பேப்பர் பந்து தெருவில் வந்து விழும். சிதறு தேங்காயைப் பொறுக்குவது போல் அதைத் தாவி எடுப்போம். அதில் கோபு ஒன்றிரண்டு கேள்விகளை எழுதி இருப்பார்.  அதை வைத்துக்கொண்டு ஸ்ரீதரும் நானும் பரீட்சைக்குத் ஓரளவு தயார் பண்ணிக்கொண்டு விடுவோம்,

இதுவும் அதிக நாட்கள் நடக்கவில்லை. ஒரு புதிய பாதிரியார் எங்கள் பள்ளிக்கு முதல்வராக வந்தார். அவர் ஒரு புதிய முறையைக் கொண்டு வந்தார், ஒரு வகுப்பாசிரியர் வேறு ஒரு வகுப்புப் பாடத்திற்கு கேள்வித்தாளை தயார் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டார்,   இதன் காரணமாக எங்கள் திட்டம் கவிழ்ந்தது. அதனாலேயோ என்னவோ நாங்கள் அக்கறையாகப் படிக்க ஆரம்பித்தோம்.  எஸ்.எஸ். எல்.ஸி. யில் நல்ல மார்க் வாங்கித் தேறினோம்.

(சந்தடி சாக்கில் கந்தகப் பொடி வைக்கிறேன். பள்ளிக் கூடத்திலேயே முதல் மார்க் வாங்கியவன் நான்தான். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சுமார் இருபது வருடங்கள் கழித்து எங்கள் பள்ளிக்கூடத்தைப் பார்க்கப் போனேன். பள்ளிக்கூடத்தில் கட்டிடங்கள் பல புதிதாக எழும்பி இருந்தன. மெயின் ஹால் சுவரில் கூரையை ஒட்டி வரிசையாக கருப்பு பலகைகள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. 1940’லிருந்து (என்று நி்னைவு) ஒவ்வொரு வருஷமும் எஸ்.எஸ்.எல்.ஸி-யில் முதல் பத்து ரேங்கில் வந்தவர்களின் பெயர்களை எழுதி இருந்தார்கள். 1947-ம் வருட பட்டியலில் முதலில் என் பெயர் இருந்ததை அடக்கத்துடன் பெருமையடித்துக் கொள்கிறேன்.)

*         *                             *                  *
கோபுவின் முழுப் பெயர் டி.ஏ.சடகோபன், (சிவாஜி எப்போதும் கோபுவை ’சட’ என்று தான் கூப்பிடுவார்.)  கோபுவின் அத்தைக்கு கோபுவை சிறு வயதிலேயே வளர்ப்புக் கொடுத்துவிட்டார்கள். இருந்தாலும் அவர் தன் சொந்த தந்தையுடன்தான் இருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும். நாங்கள் வெவ்வேறு திசையில் சென்றுவிட்டாலும் எங்கள் நட்பு சிறிதும் குறையவில்லை.

இந்த சமயம் சென்னையில் நடந்த காங்கிரஸ் கண்காட்சிக்கு நான் போயிருந்தேன் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த சந்தானம்-சந்துரு விகட நிகழ்ச்சி அன்று நடந்து கொண்டிருந்தது. வழக்கமான மிமிக்கிரி போன்றவற்றுடன் பல சின்ன சின்ன குட்டி நாடகங்களும் இருந்தன. இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது கோபுவிடம் சொன்னேன். ”நாமும் இது மாதிரி நிகழ்ச்சி நடத்தலாமே” என்றேன், கோபு ஏற்கனவே நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்ததால் என் ஐடியா அவருக்கும் பிடித்துப் போய் விட்டது. அந்த விகடக் கச்சேரி நிகழ்ச்சியை நாங்கள் இருவரும் சேர்ந்து போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். உடனே பிறந்தது, எங்கள் இருவரின் விகடக் கச்சேரி டீம்!

முதல் முதலில் கோபுவின் வீட்டு மொட்டை மாடியில் அக்கம் பக்கத்தாரை எல்லாரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்தினோம் நிகழ்ச்சி வாரிக்கொண்டு போய் விட்டது. அதன் பிறகு செங்கல்பட்டைச் சுற்றி பல ஊர்களில் எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆத்தூரில் அப்போது இருந்த ராமகிருஷ்ணா பள்ளியில் நவராத்திரி விழாவில் எங்கள் நிகழ்ச்சியை நடத்த சோவின் அப்பா ஆத்தூர் சினிவாச ஐயர் கூட அழைத்திருக்கிறார்.

நிகழ்ச்சி நடத்த நாங்கள் பணம் எதுவும் வாங்கியதில்லை. போய் வர பஸ் செலவுதான் கேட்போம். எங்கள் ஜமாவைச் சேர்ந்த நாலைந்து பேர் எங்களுடன் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து பஸ்சார்ஜ் கேட்போம்.

காட்டாங்குளத்தூர் சிவானந்த ஆசிரமத்தில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சி மறக்க முடியாதது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த டி.ஏ.மதுரம் அவர்கள் ஒன்றரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரித்ததையும் ரசித்ததையும் பாராட்டிப் பேசியதையும் எப்படி மறக்க முடியும்?

குடும்பம், வேலை என்று வந்து விட்டதால் நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொண்டோம்.  கோபு சித்ராலயாவில் ஸ்ரீதருடன் சேர்ந்து விட்டார். நான் ஜி. பி. ஓ. வில் சேர்ந்து விட்டேன்.

*       *               *              *
கோபுவுக்கு ஒரு தனி சாமர்த்தியம் உண்டு. ஒரு ஆளைப் பார்த்தால் அவரை அப்படியே இமிடேட் செய்வார். நடை உடை பாவனைகளை ஜெராக்ஸ் எடுத்து விடுவார். அவர் ஒரு ’வார்த்தைக் கார்டூனிஸ்ட்!.  நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால் அப்படியே அந்த குடும்பத்துடன் அப்படியே கலந்து விடுவார்.  கோபுவிற்கு  கர்நாடக சங்கீதத்திலும் கொஞ்சம் தேர்ச்சி உண்டு.

ஸ்ரீதருடன் சேர்ந்த பிறகு ஒரு நல்ல புரொடக்‌ஷன் மேனேஜர் என்ற பெயரை பெற்றார். இதை ஸ்ரீதரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீதரும் கோபுவும் இரட்டையர்கள் மாதிரி தமிழ்த் திரையுலகைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். நான் டெல்லிக்கு மாற்றலாகிப் போய்விட்டேன். சென்னை வரும்போதெல்லாம் சிங்கராச்சாரி தெருவில் இருந்த கோபுவின் வீட்டிற்குப் போகத் தவறமாட்டேன். கோபுவின் மனைவி கமலா ஒரு தலைசிறந்த எழுத்தாளர் என்பதும் ஒரு காரணம்.

யார் கண் பட்டதோ. இந்த காலகட்டத்தில் ஸ்ரீதருக்கும் கோபுவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர். தமிழ்த் திரை உலகில் இப்பிரிவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிரிவினால் இரண்டு பேருக்கும் ஓரளவு பின்னடைவு ஏற்பட்டது என்பதை மறுக்கமுடியாது. இவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் சென்னை வந்தேன். ஸ்ரீதரிடமும் கோபுவிடமும் நிறைய பேசினேன். அறிவுரைகள் கூறினேன். "பழைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. நீங்கள் இப்படி பிரிந்திருப்பது அழகல்ல” என்று சொன்னேன். இப்படி யாராவது மீடியேட் பண்ணி சமரசம் செய்து வைக்க மாட்டார்களா என்று அவர்களும் எண்ணி இருக்க வேண்டும்  வேறு பலரும்  இவர்களை  இணக்க முயற்சி செய்தார்கள்.  கோபுவும் ஸ்ரீதரும் சந்தித்தார்கள். புதிய அத்தியாயம் பிறந்தது. இரண்டு பேருக்கும் வெற்றி.  எனக்கும் மகிழ்ச்சி.

டெல்லியை விட்டு சில வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த போது ஒரு ஃப்ளாட் வாங்கினேன். எங்கே? கோபுவின் வீட்டிற்கு மிக அருகிலேயே!  நான் அப்படித் தேடி வாங்கவில்லை. பெசன்ட் நகரில் வீடு தேடினேன். இந்த வீடு கிடைத்தது. அவ்வளவுதான். என் வீடு பெசன்ட் நகரில், ஸ்ரீதர் இருந்த வீட்டிற்கும் அருகில் அமைந்தது.  இது தற்செயலானதாக இருக்கலாம். எங்களைப் பொருத்தவரை ஆண்டவனின் ஏற்பாடாகத்தான் கருதுகிறோம்.      மாலை வேளைகளில் நாங்கள் இருவரும் ஸ்ரீதர் வீட்டிற்குப் போய் பேசி விட்டு வருவோம்  ஸ்ரீதர் இப்படி இருக்கிறாரே என்று நாங்கள் மனவருத்தத்துடன் தான் வீடு திரும்புவோம்.
* * *
கோபு இன்றைக்கும் அதே கல கல ஆசாமிதான். நகைச்சுவை அவர் ரத்தத்தில் இருக்கிறது.  அவரது பிள்ளைகளும் திறமைசாலிகள். சித்ராலயா ஸ்ரீராம் ’காதலிக்க நேரமுண்டு’ போன்ற பல நாடகங்கள் எழுதிக் கொடிகட்டிப் பறக்கிறார். ஹிந்துவில் பணியாற்றும் நரசிம்மனும் எழுத்தாளர் தான். நாவல்களில் தன் எழுத்துத் திறமையைக் காட்டுகிறார்.’ வை.மு.கோதைநாயகியின் பத்திரிகையில் பணியாற்றிய (என்று ஞாபகம்) ’கதவு’ புகழ் கமலா சடகோபன், பிரபல எழுத்தாளர். நாலாயிர திவ்யப் பிரபந்ததில் நல்ல தேர்ச்சி பெற்றவர்.  என் மனைவிக்குச் ‘சந்தை’ சொல்லிக் கொடுத்தவர். இரண்டே நாளில் நாங்கள் பதிப்பித்துக் கொண்டிருந்த திவ்யப் பிரபந்த புத்தகத்தின் புரூஃப் பார்த்துக் கொடுத்தவர்.

அது சரி, ’காதலிக்க நேரமில்லை’, ’காசே தான் கடவுளடா’, ’பாட்டி சொல்லைத் தட்டாதே’ போன்ற படங்களைப் பற்றி ஏன் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை என்று கேட்காதீர்கள்.

இதோ சொல்லிவிடுகிறேன், ’கலியாணப் பரிசு’ பைரவன் சொன்னதையே!
”கோபு மாதிரி எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு.”

பின் குறிப்பு - சில வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் ’துரத்துகிறார் துரைக்கண்ணு’ என்ற நகைச்சுவை தொடரை கோபு எழுதினார். அதில் என்னையும்  ஒரு கதாபாத்திரமாகச் சேர்த்திருந்தார்.  முடிந்தால் அதை அவரிடமிருந்து வாங்கிப் பின்னால் போட முயற்சிக்கிறேன்.

19 comments:

  1. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    மூன்றே நாட்களில் எல்லாப் பதிவுகளும் படித்து விட்டேன். இணையத்துக்கு நன்றி. இல்லையென்றால் உங்கள் எழுத்துக்களைத் திரும்பவும் படிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்குமா?

    காரக்டர்கள், கமலா, தொச்சு கதைகள் படித்து இருக்கிறேன். ஆனால், உங்கள் டில்லி அனுபவங்கள் , மற்றும் இணையற்ற மாமனிதர்களுடன் உங்களது அனுபவங்கள் இவையெல்லாம் இந்த வலைப் பூவின் மூலம்தான் படிக்க முடிகிறது.

    மீண்டும் மீண்டும் படித்து மகிழலாம் என்பது ஒரு வரப் பிரசாதம்தானே!

    நன்றி

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. நன்றி. திருப்திதானே! தப்பில்லை என்றால் உங்கள் ஈ-மெயில் எனக்குத் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  3. Really touching.....Blessed three.

    Kothamalli

    ReplyDelete
  4. இப்படி எல்லா திறமைசாலிகளும் ஒரே இடத்துல இருந்ததும்/இருப்பதும் ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  5. துரத்துகிறார் துரைக்கண்ணுவை நான் பைண்ட் செய்யப்பட்ட புத்தகவடிவில் படித்திருக்கிறேன். இப்போது என்னிடம் இல்லை.
    கோபு தன்னுடைய சினிமா அனுபவங்களை கற்பனை கலந்து நகைச்சுவையுடன் எழுதிய தொடர்.நான் அந்த தொடரில் அவர் எழுதிய சம்பந்தப்பட்ட மூன்று தெய்வங்கள் போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், இந்த நகைச்சுவைத் தொடர் என் நினைவுக்கு வராமல் போனதில்லை. அந்த துரைக்கண்ணுவையும் மறக்க முடிந்ததில்லை. கண்டிப்பாக அந்தத் தொடரை வெளியுடவும்.

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் அவர்களுக்கு,

    துரத்துகிறார் துரைக்கண்ணு தொடரில் திரு கோபு உங்களிடம் துரைக்கண்ணுவிடம் இருந்து தப்பிப்பதைப் பற்றி யோசனை கேட்பதாக எழுதியிருந்த ஞாபகம் - சரிதானா.

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  7. Sir.. you are blessed. I am wondered how many great personalities are close to you.. Its one of the gift by god.. I am jealous about you..

    ReplyDelete
  8. your youngness is increasing day by day by seeing your writing.

    ReplyDelete
  9. I just noticed one thing in the movie "Azhage Unnai aaradikkiren".. Names of all the charecters in that movie, starts with "V".. Is there any reason for that :)?
    Can you ask Gopu?

    ~Naaratha Muni.

    ReplyDelete
  10. Sridhar named his heroine in Kalayana Parisu as Vasanthi. The filem was a roarign success. AS a result he developed an attachemnt to the names beginning with V!

    ReplyDelete
  11. Sir,
    We in Gopu's circle of relatives have always lived in the fear/hope that our idiosyncrasies would turn up in one or the other of his characters.

    ReplyDelete
  12. dear Kadugu Ranganathan , Agastian Sir, your blog i chanced upon through Sri "DUBUKU".

    right from 1964 (age of 8) , i am reading full in Tamil writing. iam enjoying your blog, all articles are of very high standard, I find dubuku & Ammanji ambi of the present generation is picking up like yours. after a long gap I am reading simultaneously OLD & Young generation in the modern media.

    well writing about Athur Srinivas Iyer, Dr Brother of Bagyam ramaswami, Subbudu, Director SRIDHAR, are all excellent people which OUR THamilagam has given to us.

    special appreciation for Smt Kamala Gopu 's reference: her kadavu noval.

    I want to get your dedecated effort on te "NALAYIRA DIVYA PRABANDAM " PUBLICATION ? WHER I CAN GET?

    WHEN I COME TO CHENNAI , i WOULD LIKE TO MEET YOU.

    i AM AT VISAKHAPATNAM. email id: mvseetaraman@yahoo.com.

    finally it is heartening to read about you THREE : GUPU, SRIDHAR & Kadugu.

    now onwords i will be following your Blog.

    ReplyDelete
  13. Thanks for your comments. I wll be sending an email.

    ReplyDelete
  14. என்றுமே என் மனம் கவர்ந்த இயக்குநர் ஸ்ரீதர் தான். கோபு சாருக்கு என் வணக்கங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் சார்.

    ReplyDelete
  15. <<>>
    மிக்க நன்றி... இந்தப் பதிவைப் போட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறதே. இவ்வளவு தாமதமாகப் படிக்கிறீர்களே!....

    ReplyDelete
  16. kadugu sir excellent i love reading your articles keep going, god bless you jagan

    ReplyDelete
  17. sir.. you are telling in many articles that "i'll try to put up these things if i can". really how many of such you had correctly remembered and published here in this blog? i may be a lilliputtian, but please answer me. chummaaa. kidaithaal podarenn apdingartha nambi naan neria theditten unga blogla... :( :(

    ReplyDelete
  18. which subject i have to tell. almost not.... all your articles and subjects are very very interesting and i request you to kindly publish that you assured (if i can s....!!!). Thanks sir for considering. Worrying abt Anbudan Delhi finished. mmchh....!! maamiya saguttu menikku varreenga. But i thk she must be a very caring wife and assists you a lot while compiling your works not only DivyaPrabhandam but all. "Vetrikku Pin intha penmaniyo"

    ReplyDelete
  19. Thanks Mr Srivatsan. I know I am guilty of these lapses. But then I am working single handedly and things do escape my memory - which is already weak. Reg the story mentioned, Gopu tells me that he or someone is planning to publish it.
    Please remind me any article/subject of interest to you.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!