June 26, 2010

புருஷோத்தம் கௌசிக்

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
 மத்திய அமச்சரவையில் விமானத் துறை அமைச்சராக புருஷோத்தம் கௌசிக் என்பவர் இருந்தார்.  இவர் ஒரு நாள் விடிகாலை ஸ்டேட்ஸ்மென் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். ஸ்டேட்ஸ்மெனில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் `புகார் பெட்டி' கடிதங்கள் வெளியாகும். அதில் ஒரு கடிதத்தில்l இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயணி ஒருவர் தனக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் எழுதியிருந்தார்.

கௌசிக் உடனே ஸ்டேட்ஸ்மென் ஆபீசுக்குப் போன் செய்து அந்தக் கடிதம் எழுதியவரின் விலாசத்தைக் கேட்டார். அந்த விடிகாலை வேளையில் பணியில் இருந்த ஒரு உதவி ஆசிரியர் அங்குமிங்கும் தேடி குறிப்பிட்ட கடிதத்தைக் கண்டுபிடித்து விவரங்களைக் கொடுத்தார்.

கௌசிக் உடனே காரை எடுத்துக் கொண்டு (டில்லியில் பட்டேல் நகரில் இருந்த) அந்தப் பயணியின் வீட்டுக்கே   போய் கதவைத் தட்டினார்.
அமைச்சரைப் பார்த்து பயணிகள் அவர்கள் குடும்பத்தினருக்கு லேசான அதிர்ச்சி. அந்த பயணியி டம் எல்ல விவரங்களையும் கேட்டார்.
அவருக்கு ஏற்பட்ட சங்கடத்திற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு வீடு திரும்பினார்.
 ( இந்த பதிவிற்கு BELIEVE IT OR NOT  என்று தலைப்புப் போட்டிருக்க வேண்டுமோ!)

7 comments:

 1. இந்த பதிவிற்கு BELIEVE IT OR NOT என்று தலைப்புப் போட்டிருக்க வேண்டுமோ!
  Yes. That is true. It is unbelievable. Usually the minister will send his gundas to fetch the complainant for withdraw the same. The minister should be appreciated. Appreciation in this matter will pave way for further such deeds, I believe
  Sundararajan S

  ReplyDelete
 2. நிச்சயமா நம்ப முடியும்! செய்தவர் அந்நாளைய மந்திரி, சொல்பவரோ கடுகு! இந்நாளில் அவரைப் போல மந்திரிகள் இருந்திருந்தால் இந்தியா உலகின் வல்லரசாகவே இருக்கும்! நன்றி!

  ReplyDelete
 3. Idellam romba Kaalathukku mundhina kadhai

  ReplyDelete
 4. Whatever Kadugu Sir told here about the good behaviour of Central Ministers (Kaushik, Madhu Dandavathe, George Fernandas) were part of Janatha Government headed by Morarji Desai. That was the golden era in Indian History. Another example is Mohan Dhariya, who was Commerce Minister during that time and he made a single food zone throughout the country. Because of this, practically, nobody went to Ration Shop (1977-79) to buy Sugar and Kerosine and the price difference between open market and ration shop was almost nil.

  ReplyDelete
 5. the nostalgic revived. The days are gone and will not come again(?) Thanks for your good (very good) morale boosting then Ministers deeds. Now they have to cling to their feet.

  ReplyDelete
 6. ஜனதா ஆட்சிக் காலத்தில் சர்க்கரை விலையினை போட்டிப் போட்டு குறைத்து விற்றது என் சிறு வயதில் என்றாலும் பசுமையாய் நினைவில் நிற்கிறது.

  ReplyDelete
 7. இன்றைய நிலையில் அமைச்சர்கள் பொது மக்கள் வீடு தேடி செல்வதெல்லாம் முடியாத காரியம் - எத்தனை பேர் வீட்டுக்கு செல்ல முடியும்! இனி இந்த மாதிரி பழம் பெருமைகளெல்லாம் படித்து பெருமூச்சு விட வேண்டியதுதான்.- ஜகன்னாதன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :