புரபசர் மது தந்தவதே ஒரு எளிமையான அரசியல்வாதி இவர். ( அவர் ந்யூக்ளியர் ஃபிஸிக்ஸ் பேராசிரியராக இருந்தவர்,) மது தந்தவதே ரயில்வே அமைச்சராக சில காலம் இருந்தார். அப்போது ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி ஒரு ஃபைல் அவர் பார்வைக்கு வந்தது. ஒரு கிளார்க் நீண்ட குறிப்பை எழுதி இருந்தார். அந்த பைல் ஒவ்வொரு மேலதிகாரி வழியாக (செக் ஷன் ஆபீசர், டெபுடி டைரக்டர், டைரக்டர் என்று) பல படிகளைக் கடந்து அமைச்சரின் பார்வைக்குப் போயிற்று. எல்லாரும் ஒரு மூலையில் தங்கள் இனிஷியலை மட்டும் போட்டு விட்டு மேலே அமைச்சருக்கு அனுப்பியிருந்தார்கள்.
மது தந்தவதேக்கு அந்த ஃபைலில் ஒரு சந்தேகம் வந்தது. கடைசியாக அந்த ஃபைலைப் பார்த்து அனுப்பிய அதிகாரியை அழைத்து சந்தேகத்தைக் கேட்டார் அவர். ``அதுவா...வந்து.. இதோ விசாரித்துச் சொல்கிறேன்...'' என்று மழுப்பினார். பார்த்தார் மது தந்தவதே. நேரே செக் ஷனுக்கு போன் பண்ணி குறிப்பிட்ட கிளார்க்கை அழைத்தார். இந்த பைலைக் குறிப்பிட்டு, ``ஒன்றிரண்டு சந்தேகம் இருக்கிறது. உடனே என் அறைக்கு வர முடியுமா?'' என்று கேட்டார். குமாஸ்தாவுக்குத் தலைகால் புரியவில்லை. கூடவே பயமும் ஏற்பட்டது. அமைச்சரின் அறைக்குப் போனார். மது தந்தவதே தன் சந்தேகங்களைக் கேட்டார் . குமாஸ்தாவும் உரிய விளக்கங்களையும், விவரங்களையும் சொன்னார்.
மது தந்தவதே அவரிடம், ``ரொம்ப தேங்க்ஸ். இனிமேல் இந்த ஃபைலை மேலதிகாரிகள் வழியாக அனுப்பத் தேவையில்லை. உங்கள் குறிப்புடன் என்னிடம் நேராக வந்து கொடுங்கள்'' என்று சொல்லி விட்டார்!
அமைச்சர் மாறியவுடன் அந்த குமாஸ்தா எந்த தண்ணியில்லாக் காட்டிற்கு மாற்றப்பட்டார் என்ற குறிப்பு இல்லையே??
ReplyDeleteIt is nice to read this information. I feel Dr. Dantavate should have sacked the officials in-between. - R. J.
ReplyDelete