சில நாட்களுக்கு இந்த வார்த்தை விளயாட்டுக்கு எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன்.
திரு ரவிபிரகாஷ் அனுப்பியவை. (http://vikatandiary.blogspot.com/
”என் மாமியார் பத்மினி ஆடாத ஆட்டமா!” என்றாள் மருமகள் ஜானு.
“எனக்கு ஆத்திரம் வந்துதோ, அவ்ளோதான்..!” - சீறினாள் நாகலட்சுமி.
”இந்த மாவு சரியா அரைபடவே இல்லே!” - சலித்துக்கொண்டாள் பத்மா.
“நீ கொடுக்கிற பத்து ரூபாய்க்கு நைலான் நூலா வாங்கித் தைக்க முடியும்?” - குத்தலாகக் கேட்டான் டெய்லர் மணி.
கூப்பிடக் கூப்பிட சட்டையே செய்யாமல் போய்விட்டான் டெய்லர் தண்டபாணி.
”இந்த ரப்பர் பந்தை ரெண்டு ரூபாய்க்குத் தர முடியுமான்னுதானே கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி மேலும் கீழும் எகிறிக் குதிக்கிறீங்க?”
“ஆட்டிறைச்சி கிலோ 120-க்கும் கம்மி கிடையாதுங்க!” - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொன்னார் கசாப்புக் கடைக்காரர்.
அன்னை சமாதியில் மெழுகுவத்தி ஏற்றி வைத்து வணங்கியபோது, அவள் உள்ளம் நெகிழ்ச்சியில் உருகிக் கரைந்தது.
“வெளியே போடா நாயே!” என வள்ளென்று விழுந்தார் எஜமானர்.
( மேலும் வரும்,)
என் முயற்சியை அங்கீகரித்து, தங்கள் வலைப்பூவில் பதிந்தமைக்கு நன்றி சார்!
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteraviprakash sir
ரொம்ப நன்றாக இருக்கிறது.
ReplyDeleteரவிபிரகாஷ் சார் வலைப்பூவில் உங்கள் ரசிகன்.காம் படிச்சாச்சு.
அன்புடன்
சீதாலஷ்மி