June 06, 2010

நூல் வியாபார கணக்கில் சிக்கல் -- மேலும் சில ஸ்விஃப்டிகள்

சில நாட்களுக்கு இந்த வார்த்தை விளயாட்டுக்கு எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன்.

திரு ரவிபிரகாஷ் அனுப்பியவை. (http://vikatandiary.blogspot.com/

 ”என் மாமியார் பத்மினி ஆடாத ஆட்டமா!” என்றாள் மருமகள் ஜானு.

“எனக்கு ஆத்திரம் வந்துதோ, அவ்ளோதான்..!” - சீறினாள் நாகலட்சுமி.

”இந்த மாவு சரியா அரைபடவே இல்லே!” - சலித்துக்கொண்டாள் பத்மா.

“நீ கொடுக்கிற பத்து ரூபாய்க்கு நைலான் நூலா வாங்கித் தைக்க முடியும்?” - குத்தலாகக் கேட்டான் டெய்லர் மணி.

கூப்பிடக் கூப்பிட சட்டையே செய்யாமல் போய்விட்டான் டெய்லர் தண்டபாணி.

”இந்த ரப்பர் பந்தை ரெண்டு ரூபாய்க்குத் தர முடியுமான்னுதானே கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி மேலும் கீழும் எகிறிக் குதிக்கிறீங்க?”

“ஆட்டிறைச்சி கிலோ 120-க்கும் கம்மி கிடையாதுங்க!” - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொன்னார் கசாப்புக் கடைக்காரர்.

அன்னை சமாதியில் மெழுகுவத்தி ஏற்றி வைத்து வணங்கியபோது, அவள் உள்ளம் நெகிழ்ச்சியில் உருகிக் கரைந்தது.
“வெளியே போடா நாயே!” என வள்ளென்று விழுந்தார் எஜமானர்.

( மேலும் வரும்,)

3 comments:

  1. என் முயற்சியை அங்கீகரித்து, தங்கள் வலைப்பூவில் பதிந்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  2. நல்லா இருக்கு
    raviprakash sir

    ReplyDelete
  3. ரொம்ப நன்றாக இருக்கிறது.

    ரவிபிரகாஷ் சார் வலைப்பூவில் உங்கள் ரசிகன்.காம் படிச்சாச்சு.

    அன்புடன்

    சீதாலஷ்மி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!