June 03, 2010

கொங்குதேர் வாழ்க்கை

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
 காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ,  நீயறியும் பூவே.

-இறையனார்.


உரை
பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!

6 comments:

  1. பாடலைப் படிக்கும் போது இனிமை. உங்கள் உரையும் இனிமை. வெட்கத்துடன் சில கேள்விகள்: ‘கொங்கு’ என்றால் பூக்களா? பயலியது, கெழீஇய, நறியவும் - இவற்றுக்கு நேர் அர்த்தங்கள் என்ன? உங்கள் உரையில் வரும் ‘எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய’ என்பதற்கு ஈடான பாடல் வரிகள் யாவை? தெரிந்து கொள்ளும் ஆவலுடனும், சங்கோஜத்துடனும் - ஜகன்னாதன்

    ReplyDelete
  2. கொங்கு = பூந்தாது
    கெழி = நட்பு

    பயிலியது கெழீஇய = பல பிறவியிலும் என்னோடு இணைந்த;
    நறியவும்” ந்றுமணம், Fragrance

    ReplyDelete
  3. மிக்க நன்றி. - ஜகன்னாதன்

    ReplyDelete
  4. குறுந்தொகைல இதை முதல்ல படிச்சப்ப ஆத்தர் பேரைப் பார்த்து அசந்து போனேன்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  5. என்னுடைய பிளாக்கைப்(http://kgjawarlal.wordpress.com) படிச்சீங்கன்னா, என்னை இன்ஸ்பயர் பண்ண எழுத்தாளர்கள்ளே நீங்களும் ஒருத்தர்ன்னு புரிஞ்சிப்பீங்க. கல்கியில வந்த ‘தாளிப்பு-கடுகு’ தொடருக்கு நான் எழுபதுகள்ளே ரசிகன்.

    ReplyDelete
  6. Jawahar அவர்களுக்கு, மிக்க நன்றி. INSPIRE பண்ண எழுத்தாளனா அல்லது என்ப்து PERSPIRE பண்ண எழுத்தாளனா”...:)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!