June 23, 2010

இன்னும் கொஞ்சம் - SWIFTIES

*நேசன்.எழுதியது: . கடிகாரம் வாங்கிய நேரமே சரியில்லை என அலுத்துக் கொண்டான்,மணி!

* kggouthaman .எழுதியது.. ”தேங்காயைத் துருவித் தாங்க என்று கேட்டுகிட்டே இருக்கேன், அதைச் செய்யாம அங்கே நீங்க கடுகு படிச்சி சிரிச்சுகிட்டே இருக்கீங்களே”  என்று வெடித்தாள் என் மனைவி. 

?????   எழுதியவை:
*      ஏன் சரியாக வேலை செய்யவில்லை என்றதற்கு, கொல்லத்துக்காரர் பூசி மெழுகி பதில் சொன்னார்,

*         காட்டுப்பாக்கதில் உள்ள வங்கி கிளையில் தன்  பிள்ளை வேலை பார்ப்பதாக  வனத்துறை அதிகாரி சொன்னார்,

* பள்ளி  நாடகத்தில்  அனுமார் வேஷத்திற்கு கிட்டு என்ற வால் பையனைப் போட்டார் ஆசிரியர்..

*    ”வடை ஊசிப் போயிருக்கிறது”  என்றார் தையல்காரர்.

*  ”யாராவது வாலாட்டினால் ஒரு  போடு போடுவேன்”    என்று அடித்துச் சொன்னான்.

*   போர்வீரனைப் பார்த்து  வாள் வாள் என்று கத்தினார் தளபதி.

*   கண் தானம் பற்றி கட்டுரை எழுதத் தெரியாமல் விழித்தான்

* பீமன் படத்தில் கதையே இல்லை என்றான் அவன்.

-----------------------.
 சில ஆங்கில  TOM SWIFTIES  இங்கு தருகிறேன்.
.
* "I collect fairy tales," said Tom grimly.
*  All his attempts to open a Juice shop ended  fruitlessly.  
* " I do not care for his past nor for his future" Tom said tensely.

7 comments:

  1. நன்றி நன்றி நன்றி!

    ReplyDelete
  2. Superb!!!!!!!!!

    Kothamalli

    ReplyDelete
  3. /போர்வீரனைப் பார்த்து வாள் வாள் என்று கத்தினார் தளபதி./ என்ன தளபதி இவர்? சரி, போர்வீரன் வாளைக்க் கொடுத்தானா, அவர் போரில் வென்றாரா?! - ரா.ஜெ.

    ReplyDelete
  4. தளபதி ‘கத்தி’னார்...அவ்வளவுதான்.கத்தலுக்குப் பயந்து எதிரிகள் ஓடி விட்டனர்.

    SOUND SLEEP மாதிரி இது SOUND FIGHT-டாக இருக்கலாம்!

    ReplyDelete
  5. \\”வடை ஊசிப் போயிருக்கிறது” என்றார் தையல்காரர்.//
    “சரியா சொன்னீங்க... இதோ பாருங்க, பிய்ச்சா நூல் வருது” என்றார் எழுத்தாளர்.

    ReplyDelete
  6. ரசத்திற்கு 'கடுகு' தாளிக்கும்போது அவள் முகம் 'கடு கடுவென்று இருந்தது

    ReplyDelete
  7. KGG அண்ணா எழுதியது செம்ம சூப்பர்

    ~நாரத முனி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!