March 01, 2010

தமிழ் முத்து-1

நம் தமிழ் இலக்கியங்களில நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அழகான பாடல்கள் ஏராளமாக உள்ளன. தனிப் பாடல்களிலும் பல முத்துகள் உள்ளன. என் கண்ணில் பட்ட, அழகு சொட்டும் பாடல்களைப் பல வருடங்களாக என் நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றைத் தொடர்ந்து இப்பகுதியில் போட எண்ணியுள்ளேன்.
-----------------
வான் கலந்த மாணிக்க வாசகா! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!
-திருவாசகத்தின் சிறப்பு பற்றி ராமலிங்க சுவாமிகள்

5 comments:

  1. பாடல் நல்லா இருக்கு. தொடர்நது போடுங்க.

    ReplyDelete
  2. நல்ல தொடக்கம் சார். எனக்கும் நிறைய இப்படிப்பட்ட தமிழ் பாடல்களை படிக்க ஆசை. நிச்சயம் தொடருகிறேன். ஒரு கமென்ட். சில பரிச்சயமில்லாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  3. அருமையான ஐடியா! சற்றுக் கடினமான பாடல்களுக்குப் பதம் பிரித்து உரையும் கொடுத்தீர்களென்றால் எல்லோருமே அனுபவிக்க முடியும்.

    ReplyDelete
  4. கூடியவரை எளிய பாடல்களைதான் போட எண்ணியுள்ளேன். பதம் பிரித்துப் போடுகிறேன்.

    ReplyDelete
  5. Studied this in School as 'mana-p-pada pagudhi' - 38 years back. Thanks a lot for starting 'Thamilz muththu'

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!