இதில் பிரசுரிக்கப்படும் எல்லாம் உங்களுக்கு ஓ.கே.வா என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல போஸ்டிங்கோ அறுவை போஸ்டிங்கோ என்னைப் பொருத்தவரை வேலையின் அளவு ஒன்றேதான். உங்கள் பின்னூட்டங்களில் அன்பு கூர்ந்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். இது தான் நீங்கள் எனக்கு செய்யக்கூடிய உதவி.
எழுத ஏராளமாக விஷயங்கள் உள்ளன. நிறைய நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதி வைத்துள்ளேன்.. எனக்குத் தெரிந்தவைகளைப் பலருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆசையினால் இதைச் செய்து வருகிறேன்.
-- கடுகு
கடுகு சார்,
ReplyDeleteஇந்த சந்தேகம் உங்களுக்கு வரலாமா? எத்தனை வருடங்களாக பத்திரிக்கைகளில் எழுதி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்த உங்கள் எழுத்துகளுக்கு என்றும் மதிப்பு உண்டு.
உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது அவைகளை அந்தக்காலத்தில் பத்திரிக்கைகளில் படித்த ஞாபகம் வருகிறது.
தொடருங்கள்.
All the posts are excellent. Please keep going.
ReplyDeleteஅன்பு நண்பருக்கு,
ReplyDeleteதங்களின் எழுத்துகள்
என்னைபோன்ற
அறுபதுகளுக்கு
மிகவும் மகிழ்ச்சி
தரும் விசயம்
மட்டுமல்ல,
பழைய நினைவுகளை
திரும்பிப்பார்க்கும்
சுகானுபவமும்கூட!
அன்புடன்
மதி
வாழ்த்துக்கள் ..........உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்
ReplyDelete//எனக்குத் தெரிந்தவைகளைப் பலருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆசையினால் இதைச் செய்து வருகிறேன்.//
நாங்கள் ஆவலுடன் படித்து வருகிறோம் .............அன்புடன் கணேஷ்
Sir, Excellent. Keep Going..
ReplyDeleteஎனக்கு இன்னும் அறுபது வயதாகவில்லை, ஆனாலும் எந்தப் பதிவையும் தவறவிடுவதில்லை. தொச்சுவைத்தான் இன்னும் காணோம்...
ReplyDeleteசந்தேகமே வேண்டாம், உங்கள் பதிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. என் தளத்தில் கூட நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்... http://koottanchoru.wordpress.com/2010/02/06/எழுத்தாளர்-கடுகுவின்-தளம/
கடுகு சார்,
ReplyDeleteஉங்களைப் போன்ற ஒரு ஜாம்பவான், எங்களைப் போன்ற சாதாரண வாசகர்களை இவ்வளவு மதித்துக் கருத்துக் கேட்பதே எங்களுக்குப் பெருமை.
அருமையான உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
உங்களை எங்களுடன் இணைத்த இணையத்துக்கு நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்
Fremont, California
Saar... all posts are excellent, fantastic, too good... cant find words... now a days finding good contents on web itself is a challenge... undoubtedly your blog is going to attract millions in future... I'm happy that I was one of the first few in the fan club... Please keep writing... do write that you werent able to write (according to your will and wish) in any magazines/weekly during early days... we expect a lot... will be happy if we see new items daily in your blog...
ReplyDelete- Sri :)
கடுகு அய்யா அவர்களுக்கு உங்கள் வலைப்பூவை என் வலைப்பூவில் லின்க் கொடுத்திருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் எப்பொழுது கமலா மாமி கதைகளை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறென். நான் கூகிள் ரீடரில் படித்து வருகிறேன். அது போல நிறைய பேர் படித்து வருகிறார்கள். இந்த பின்னூட்டம் கருத்து கூறுவது இங்கு மிகவும் குறைவு. அதை எதிர்பார்க்க வேண்டாம்.ஆனால் படிப்பவர்கள் அதிகம். அதனால் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாசகன் வாழ்த்துக்கள்
ReplyDeleteToday is 100th day.....Don't worry together we will celebrate 1000, 10000....also. Really fantastic.....Please keep writing....Need minimum one article per day...May god bless you.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றி. இவ்வளவு உற்சாக போனஸ் எனக்குக் கொடுத்து இருக்க வேண்டாம்..
ReplyDeleteடெய்லி ஒரு போஸ்ட் போட ஆசைதான். ஆனால் முடியும் என்று தோன்றவில்லை. இப்போது வந்துள்ள பின்னூட்டங்களே போதும். உங்களுக்கு அஜீரணம் ஆகும் அளவுக்கு FEED பண்ணுகிறேன்!
---கடுகு
என்ன கடுகு சார், இப்படி எழுதி விட்டீர்கள்? நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் எழுத்துக்களை, அனுபவங்களை படிக்க.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
அன்புள்ள ராஜா அவர்களுக்கு,
ReplyDeleteநான் ஹோட்டல சர்வர் மாதிரி கேட்டேன்.உஙகளுக்கு என்ன சர்வ் செய்தால் பிடிக்கும் என்றுதானே கேட்டேன்.. கவலைப் படாதீர்கள்.
--கடுகு
I enjoy every writing of yours. I was not familiar with your writing before. Now I realize that how much I missed your writings. As I read your blogs from the Reader I can't post it. Thanks for your hardwork at this age and your kind heart to share your knowledge with us. Internet will never go away like your writings. So it's the best platform for coming generations to learn about you and your excellent writings
ReplyDeleteRaj
நீங்க எதை பற்றி எழுதினாலும் படிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் கடுகு சார்!
ReplyDeleteபி.கு. நீங்கள் அன்புள்ள ராஜா அவர்களுக்கு மூன்று முறை பதில் போட்டதையும் கூட மூன்று முறை படித்தேன் :)
கடுகு சார் .என்ன ஒரு எழுத்து உங்களோடது ?நா கண்ணில படரவங்ககிட்டலாம் ஒங்க லிங்க் தரேன் .மனசு எவ்ளோ லேசாகுது தெரியுமா ? கமலா மாமி போல உடல் லேசாறது ரொம்ப கஷ்டம் (எனக்கு சொன்னேன்).உங்க டைரி குறிப்பு எல்லாம் எடுத்து விளாசுங்க .படித்து ஆனந்தப்பட்டு உங்கள வாழ்த்த நாங்க இருக்கோம்
ReplyDeleteஎல்லோருக்கும் ந்ன்றி. பெரிய 1000 ரூபாய் நோட்டு மாலையே போட்டுவிட்டீர்கள்...-கடுகு
ReplyDeleteCongrats for the century, I am a big fan of your blog :)
ReplyDeleteDear Sir, This is my first comment here. I have been a regular reader since I read about your posts in idlyvadai. They are very interesting, funny and more importantly, very positive. Looking fwd to more "Kamalavum...... "
ReplyDeleteThanks.
Sir,
ReplyDeletePls do keep posing. I am reading it from my Google reader and so will not be able to come to your site for posting comments. Apologies. There is a big fan group for you.
==நாங்கள் ஆவலுடன் படித்து வருகிறோம் .............அன்புடன் கணேஷ்===
ReplyDeleteமிக்க சந்தோஷம்
--------------------
RV: நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்... http://koottanchoru.wordpress.com/2010/02/06/எழுத்தாளர்-கடுகுவின்-தளம/
பார்த்தேன். அன்பு(ஒரு)டன் கடுகு
----------------
I am reading it from my Google reader and so will not be able to come to your site for posting comments==
பரவாயில்லை. வருத்த்ப் படாதீர்கள். படித்ததால் வருத்தப்படுவதாக யாராவது நினைத்துக் கொள்ளப்போகிறார்கள்!
-------------
padma said...
கடுகு சார் .என்ன ஒரு எழுத்து உங்களோடது? நா கண்ணில படரவங்ககிட்டலாம் ஒங்க லிங்க் தரேன்.மனசு எவ்ளோ லேசாகுது தெரியுமா?
== அது தான் LIGHT ரீடிங்க் என்பதோ?.. நீங்கள் ஐ.டி என்பது, கேள்விக் குறியை இடைவெளி விட்டு போடுவதிலிருந்து தெரிகிறது. Am I right? நீங்களெல்லாம் ரசிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
============
Anonymous said...
Saar... all posts are excellent, fantastic, too good... cant find words.==
CAN'T find words? ஏன், உங்களிடம் thesaurus இல்லயா!
-------------
சார் நா ஐ டி யா .எனக்கு நெஜம்மா புரில .
ReplyDeleteநானும் ஒரு வலைப்பூ தமிழ்ல வச்சுருக்கேன் .எதோ சிறு முயற்சி .நேரம் கிடைத்தால் வாசித்தால் எனக்கு பெருமையாய் இருக்கும்
பதமா அவர்களுக்கு. ஓரு ஐ.டி. வல்லுனர், எப்போது டைப் பண்ணினாலும் வார்த்தைக்கு அப்புறம் ஒரு ஸ்பேஸ் விட்டு விட்டுதான் கேள்விக்குறியை அடிப்பார். அது ப்ற்றி கேட்டதற்கு ஏதோ ஒரு புரொகிராமில் அப்ப்டித்தான் செய்யவேண்டுமாம். அந்தப் பழக்கத்தில் அப்படி டைப் அடித்து விடுகிறேன் என்றார். உங்க்ள் பின்னூட்டத்திலும் அப்படி இருந்ததால் நீஙகளும் ஐ.டி. யாக இருக்கும் என்று நினைத்தேன்...
ReplyDeleteபோகட்டும்..உங்கள் வலைப்பூ விவரம் தெரிவியுங்கள்.
திரு கடுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள். பல வருடங்களாக கணணி துறையில் இருப்பதால் பல நூறு பதிவர்களின் பதிவுகளை வாசித்து இருக்கிறேன். ஆனாலும் உங்களுடைய பதிவுகளில் இருக்கும் தரம் நான் இது வரை காணதது. மிகவும் பிடித்து இருக்கிறது. தொடருங்கள்.
ReplyDeleteஅன்புள்ள கடுகு சார்,
ReplyDeleteநீங்க சுஜாதா மாதிரி. கமலா அவர்கள் எழுதிய சலவைக் கணக்கைக் கூட உங்கள் பாணியில் எடிட் செய்து எழுதினால் வாசிக்கக் காத்திருக்கிறோம். :)
jokes apart, எழுத்தாளர்களுடனும், பிரபலங்களுடனும் மற்றும் தலைநகருடனுமான உங்களின் சுவாரசிய அனுபவங்களை இன்றைய தலைமுறையினருக்கு சொல்வது அவசியமானது. இவ்வாறு எழுத பாரதி மணி, எஸ.வி. ராமகிருஷ்ணன் மற்றும் உங்களைப் போன்றவர்களே உண்டு. அதனால் உங்கள் உடல்நலத்தையும் பார்த்துக் கொண்டு மீதியுள்ள நேரங்களில் இயன்ற வரை எழுதுங்கள். பின்னூட்டங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். மெளன வாசிப்பாளர்கள் (பிரபலங்கள் உட்பட) நிறைய பேர் உண்டு. (சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். திடீரென்று தனிமடலில் இன்ப அதிர்ச்சி அளிப்பார்கள்).
>>>>சுரேஷ் கண்ணன் said...
ReplyDeleteகமலா அவர்கள் எழுதிய சலவைக் கணக்கைக் கூட உங்கள் பாணியில் எடிட் செய்து எழுதினால் வாசிக்கக் காத்திருக்கிறோம். :)
jokes apart, எழுத்தாளர்களுடனும், பிரபலங்களுடனும் மற்றும் தலைநகருடனுமான உங்களின் சுவாரசிய அனுபவங்களை இன்றைய தலைமுறையினருக்கு சொல்வது அவசியமானது. உங்கள் உடல்நலத்தையும் பார்த்துக் கொண்டு மீதியுள்ள நேரங்களில் இயன்ற வரை எழுதுங்கள். >>>>
மிக்க நன்றி. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்கிறேன். கண்ணனாகிய நீங்கள் சொல்லிவிட்டபடியால். அது கீதோபதேசம் மாதிரி!
--கடுகு
<<< Kannan said... வாழ்த்துக்கள். பல வருடங்களாக கணணி துறையில் இருப்பதால் பல நூறு பதிவர்களின் பதிவுகளை வாசித்து இருக்கிறேன். ஆனாலும் உங்களுடைய பதிவுகளில் இருக்கும் தரம் நான் இது வரை காணாதது. தொடருங்கள்>>
ReplyDeleteமிக்க நன்றி மற்றொரு கண்ணன் ’தொடருங்கள்’ என்று சொல்லிவிட்டதால் எப்படி மீற முடியும -- கடுகு
sir, enakku unga blogla vara ella vishayamum pidichirukku.taking me to the days of 1970's or 80's. Thamizh Mutthu mattum.... konjam borenu enakku paduthu.(jus for me only). Everything is so fine.I found many of your writing touch in Mr.Sujatha's. Office vantha udane first open panni konja neram intha blogla ulla contents padichittu than next work. Thank you sir.
ReplyDeleteThanks, Please send in your comments and criticisms and opinions and suggestions
ReplyDelete