சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் தன் பிளாக்குகளில் பல நல்ல விஷயங்களைப் போடுகிறார்.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. எனும் உன்னத மனிதரைப் பற்றிய ஒரு தகவல். அதன் லிங்க்:
http://vikatandiary.blogspot.com/ எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சொன்னது.
அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் எனப் பலரும் குடியிருந்தார்கள்.வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.
வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும்கூடக் கலந்து கொள்வார் - ஃப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!
ஒருநாள், அவர் யதேச்சையாக, “ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?” என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.
“குளியலா..? அப்படின்னா..?” என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.
எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?” என்று கேட்டார்.
“இல்லே... குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.
அமைதியில் ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி.
அதன்பின், சில மாதங்களில் மழை பெய்து, தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்து, எல்லோரும் குதூகலமாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைகூட தாராளமாகக் குளிக்க முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓடியிருக்கும். பழைய தண்ணீர்ப் பஞ்ச அனுபவங்கள் மறந்தே போன நிலை.
வழக்கம்போல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஆன்மிக நிகழ்ச்சியில் குமுதம் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தார்கள். அனைவரும் ஃப்ரெஷ்ஷாகக் குளித்துப் புத்துணர்ச்சியோடு இருந்தார்கள்.
எஸ்.ஏ.பி. வந்தார். பாக்கியம் ராமசாமி அவரிடம் யதார்த்தமாக, “என்ன சார்! திவ்வியமா ஷவர் குளியல் போட்டுட்டு வந்தீங்களா?” என்று கேட்டார்.
“ஷவரா... அப்படின்னா?” என்று திருப்பிக் கேட்டார் எஸ்.ஏ.பி.
பாக்கியம் ராமசாமிக்குப் புரியவில்லை. பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, சுமார் ஒரு வருட காலமாகவே - அதாவது, ‘குளியலா... அப்படின்னா?’ என்று பாக்கியம் ராமசாமி குறும்பாகக் கேட்டுத் தண்ணீர்ப் பிரச்னை பற்றிச் சொன்ன அன்றைய தினத்திலிருந்தே, ஷவரின் அடியில் நின்று குளிப்பதைத் தவிர்த்துவிட்டிருக்கிறார் எஸ்.ஏ.பி. சிக்கனமாக ஒரே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து, சொம்பால் மொண்டு ஊற்றிக்கொண்டுதான் குளிப்பாராம்.
கடைசி வரையில், ஷவர் குளியலை அவர் மீண்டும் அனுபவிக்கவே இல்லை!
(உடனே அடுத்த போஸ்டிங்கிற்குப் போய் விடாதீர்கள். மனதில் சிறிது நேரம் அசை போடுங்கள்!)
மேன்மக்கள் மேன்மக்களே !
ReplyDeleteநானும் என் தற்போதைய மேலாளரை நினைத்துப்பார்க்கிறேன்!
நக்கீரன்
ரவி பிரகாஷ் நல்ல விஷயங்களை போடுபவராக இருக்கட்டும். ஆனால் கண்ணைப்பரிக்கிற மாதிரி கலர்களில் போட்டு கொடுமைப்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.
ReplyDeleteThanks to you - I enjoyed Ravi Prakash's site and from there Appusami.com. Incidentally, I read your article - 'Kamalavum Tape recorderum ' which I didn't see in your site. Your greatness lies in maintaining the humour and writing so many articles which keep us absorbed all the time. My problem is how to convey my appreciations again and again - which is only repetitive! Thanks, anyway! - R. Jagannathan
ReplyDeleteதிரு ஆர். ஜே அவர்களுக்கு:
ReplyDeleteஉங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
பழைய கட்டுரைகளையும் முலாம் பூசிப் போடுகிறேன். கமலாவும் டேப் ரிகார்டரும் எங்கே படித்தீர்கள்?
நன்றி கடுகு சார்!
ReplyDeleteரொம்ப நன்றி அஞ்சாநெஞ்சன்!
Thanks for this post....knew more about the person called SAP & his simplicity. Ypu people are blessed!!!!!
ReplyDeleteKothamalli
<<<< Kothamalli
ReplyDeleteY0u people are blessed!!!!!>>>
நிச்சயமாக
/கமலாவும் டேப் ரிகார்டரும் எங்கே படித்தீர்கள்?/
ReplyDeletewww.appusami.com site-il thaan padiththaen. I tried to see it again to confirm the same but couldn't locate it. But, if I search for 'kadugu'in the search bar of the site, I could get more articles by kadugu and also the one written by Raa.Ki.Rangarajan about yourself.
Hope other readers too enjoy the appusami site.
-R. Jagannathan
The anecdote is very nice and though provoking, speaks volumes of the Man SAP. I've heard a lot of him and this one tops it. Thanks. The link that you've given for this Vikatandiary goes to some other article, but thanks to you, I read about Mr. Kalayanasundaram.
ReplyDeleteD.Sridharan
dsridharan@gmail.com