March 10, 2010

தமிழ் முத்து- 3 அந்தகக் கவியின் அற்புதப் பாடல்

அந்தகக் கவியின் அற்புதப் பாடல்
சோனையும் காத்து, நல்லானையும் காத்துத் துரோபதைதன்
தானையும் காத்து, அடைந்தானையும் காத்து. தடத்தகலி
மானையும் காத்து, அனுமானையும் காத்து, மடுவில் விழும்
ஆனையும் காத்தவே, என்னைக் காப்பது அரிதல்லவே!
           -- .பார்வை இல்லாத காரணத்தால்  ’அந்தகக் கவி’ வீரராகவ முதலியார் என்று  அழைக்கப்பட்ட புலவர்  எழுதியது.பாடல். எந்த நூலில் உள்ளது என்று தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)

சோனை= கோவர்த்தனகிரி
நல் ஆனை =  பசுக்கள்
தானை  = ( திரௌதியின்) ஆடை
அடைந்தானையும் = சரண் அடைந்த விபீஷணன்
தடத்து அகலி மானையும் = அகலிகை
அனுமானையும் = அனுமான்
மடுவில் விழும் ஆனை = கஜேந்திரன்

1 comment:

  1. அருமை! எளிமையா கடவுளை போற்ற இதை போன்றவற்றை தமிழ் மக்கள் தெரிந்து பயன் அடைய வேண்டும்! நன்று! உங்களை பாராட்டும் தகுதி இல்லை, படிக்க முடிந்ததற்கு என்றும் நன்றி !

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!