March 10, 2010

உதிரிப் பூ - தப்பு நடந்து போச்சு

அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங்கை இறக்கிய சாதனை படைத்தார்கள். சரி, அதற்குப் பாராட்டுக்கள் ஆனால் அந்தக் காலத்தில் ஒரு தவறைச் செய்து விட்டார்கள். இத்தனை வருடம் ஆகியும் அதைத் திருத்தவில்லை. காரணம், சந்திரனில் மனிதன் இறங்கித்தான் அதைத் திருத்த வேண்டும்.
மனிதனை சந்திரனில் இறக்கத் திட்டமிட்ட போது, முதன் முதலில் காலடி வைத்தவுடன் விண்வெளி வீரர் என்ன சொல்ல வேண்டும்  என்பதற்கும், அங்கு இந்தச் சாதனையைக் குறிக்க ஒரு உலோக போர்ட் வைத்து அதில் என்ன வாசகம் இருக்க வேண்டும் என்பதற்கும்  இரண்டு குழுவை நாஸா நியமித்து இருந்தது.

போர்டில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்களைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு வில்லியம் சஃபைர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் நியுயார்க் டைம்ஸ் தினசரியின் தலைமை நிருபர்.
அது மட்டுமல்ல... ஆங்கில மொழி மற்றும் பதங்கள் ( Langauge and Words) தொடர்பாகவும் பொன்மொழித் திரட்டுகளாகவும்  பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். 2009’ல் தான் அவர் காலமானார்.. கமிட்டியில் ஜனாதிபதியின் உரைகளைத் தயாரித்துக் கொடுப்பவர் கூட இருந்தார்.
 அந்தக் கமிட்டி சிபாரிசு செய்த வாசகம் கொண்டப் பலகையை நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் பதித்து விட்டு வந்தார். அதில் செதுக்கப்பட்டிருந்த வாசகம் " HERE MEN FROM THE PLANET EARTH FIRST SET FOOT UPON THE MOON  JULY 1969, A.D.   WE CAME IN PEACE FOR ALL MANKIND"
சில வருடங்கள் கழித்து வில்லியம் ஒரு கட்டுரை எழுதினார். ” நிலவில் வைத்த இந்த போர்டில் பெரிய தவறைச் செய்து விட்டோம். ...1969 A.D. என்று போட்டது தவறு. A.D. எப்போதும் வருஷத்திற்கு முன்பாகத் தான் எழுதப்பட் வேண்டும். அதாவது A.D. 1969 என்பதுதான் சரி. B.C. என்பதுதான்  வருஷத்திற்குப் பின்னால் போடப்பட வேண்டும். உதாரணமாக 300 B.C. என்பது
சரி  தவறை எப்படித் திருத்துவது?. யாராவது சந்திரனுக்குப் போனால், ஒரு மார்க்கர் பேனாவைக் கொடுத்து பிழை திருத்தம் செய்ய வேண்டும். வேறு வழியே இல்லை” என்று எழுதினார்.
  (பின் குறிப்பு:  
ஆகவே இந்த பதிவுகளில் அச்சுப் பிழை வந்தால் பெரிது படுத்தாதீர்கள்!)

3 comments:

  1. ஆஹா! நிலவில் சென்றும் மனிதன் தவறு தான் செய்கிறானா! மனிதன் எப்போதுமே இறைவனை உணர இறைவனால் நடத்தப்பட்டது இது!

    ReplyDelete
  2. அஞ்சா நஞ்சன்March 10, 2010 at 3:28 PM

    கண்டிப்பாகா மட்டோம்.

    ReplyDelete
  3. நல்ல தகவல், திருத்தம் செய்ய நம் ஆட்கள் சந்தராயன் புரப்பாடின் போது சொல்லி அனுப்ப ஞாபகபடுத்த வேண்டும் ))).

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!