March 24, 2010

எல்லாம் அவன் அருள்!

ராம நவமி அன்று நடந்த ஒரு சிறிய அற்புதத்தை சூட்டோடு சூடாக எழுதாவிட்டால் அதைவிட பெரிய அபசாரம் எதுவும் இருக்காது.
      
  ராம நவமி அன்று காலை, செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள யோக ராமர் கோவிலுக்குப் போகலாம் என்று என்னை என் சகோதரன் கூப்பிட்டார். பெரிய கார் வைத்திருக்கிறார். ஒரகடம் என்ற கிராமத்தில் அந்த கோவில் இருக்கிறது என்பதும் செங்கற்பட்டுக்கருகில் 15 கி.மீ. துரத்தில் ஒரகடம் இருக்கிறது என்பதுதான் தெரியும். விசாரித்துகொண்டு போகலாம் என்று கிளம்பி விட்டோம்.
          சிங்கபெருமாள் கோவில் போனதும் ஒரு கடைக்காரரிடம் ’ஒரகடம் எங்கிருக்கிறது?’ என்று கேட்டோம். அவர் ஸ்ரீபெரும்புதூர் போகும் பாதையில் சுமார் பத்து கி.மீ.போகச் சொன்னார். அதன்படியே போனோம். ஒரகடம் வந்தது. கோவில் எதுவும் கண்ணில் படவில்லை. அங்கு  ஒரு கடைக்காரரைக் கேட்டோம். “கோவில் எதுவும் இங்கு கிடையாது. இது இண்டஸ்ட்ரியல் ஏரியா” என்றார். நல்ல காலம். அங்கு போலீஸ் ஸ்டேஷன் இருந்தது
. அங்கு போய் கேட்டோம். ஒரு போலீஸ்காரர் “கோவில் இருப்பது வேறு ஒரு ஒரகடம். செங்கற்பட்டைத் தாண்டி 15 கி.மீ போகவேண்டும். இப்போது நான் அந்த பக்கம்தான் போகிறேன். என் பின்னாலேயே வாருங்கள்” என்று சொன்னபடியே மோட்டார் சைக்களில் அடுத்த செகண்ட் புறப்பட்டு விட்டார். அவர் திரும்பிப் பார்க்காமல் முன்னே போக, நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். கிட்டதட்ட ஒரு பைலட் மாதிரி போனார். சுமார் 30 கி.மீ போனபிறகு மகாபலிபுரம் அருகில் ஒரு இடத்தில் நிறுத்தி, “இதுதான் ராமர் கோவில் இருக்கிற ஒரகடம். இதோ. இந்த ரோடில் நேராகப் போங்க. அரை கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது” என்று சொன்னார். “ரொம்ப தேங்க்ஸ், சார்” என்று சொன்னதும் தலையை ஆட்டியபடியே போய்விட்டார்.
அவர் சொன்னபடியே போனோம்.. கோவில் வந்தது., யோக ராமரைத் திவ்வியமாகத் தரிசித்தோம்.
       இந்த தரிசனம் எப்படி சாத்தியமாயிற்று?. ஸ்ரீபெரும்புதூர் பாதை ஒரகடம் கிராமத்தின் கடையில் விசாரிக்கும்படி செய்தவர் யார்? கோவில் எதுவும் இங்கு
கிடையாது. என்று கடைக்காரர் சொன்னதும், மிக அருகில் இருந்த  போலீஸ் ஸ்டேஷனில் போய் கேட்கலாம் என்ற எண்ணத்தை எங்கள் மனதில் தோன்றச்
செய்தவர் யார்? இது மட்டுமா, மகாபலிபுரம் ஒரகடம் கோவிலைப் பற்றி அறிந்திருந்த போலீஸ்காரர் அங்கு அந்த சமயத்தில் இருக்கும்படி செய்தவர் யார்? அவருக்கு 30 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்த மகாபலிபுரத்திற்குப் போக வேண்டிய வேலையை அந்த நிமிடம் கொடுத்தவர் யார்?
எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தவன் அந்த  சக்கரவர்த்தி திருமகன் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

         (இந்தச் சம்பவம் இன்றைய தினம்  நடைபெற்றதிலும் ஒரு ஆச்சரியம் உள்ளது. ”எல்லாம் அவன் அருள்” என்ற தலைப்பில் பின்னால் எழுத ஏழு உண்மைச் சமபவங்களை நேற்றுதான் குறித்து வைத்தேன். முதல் சம்பவமாக எதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று ராமரே துவக்கி வைத்து விட்டார்!)

15 comments:

  1. ராஜ சுப்ரமணியன்March 24, 2010 at 5:37 PM

    எல்லாம் அந்த ஸ்ரீராமன் அருள்தான். ஸ்ரீராமநவமியன்று அவனுடைய அற்புத லீலையைப் படிக்கவே மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. ஸ்ரீராமா என்றுரைத்தால் செல்வம் தழைத்தோங்கும், துயர் நீங்கும்.

    ReplyDelete
  2. There is no god equal to RAMA & no mantra equal to RAMA. Thanks for posting immediately...awaiting for this type of article from morning !!!!!

    Thank you verymuch!!!!
    -Kothamalli

    ReplyDelete
  3. கடுகு சார்,

    அதில் சந்தேகமே இல்லை. இது அனைத்தும் ஸ்ரீ ராமனின் செயல்கள் தான். அவனுடைய அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக இருப்பதை உணர முடிகிறது.

    நீங்கள் ஆத்மார்த்தமாக எழுதுவதால், உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
  4. உளுந்துMarch 25, 2010 at 9:45 AM

    ஒரு புதிய இடத்திற்கு செல்லும்போது, வழியில் உள்ளவர்களிடம் விசாரித்துக்கொண்டே செல்வதுவும், யாராவது "நான் அந்த பக்கம்தான் போகிறேன். என் பின்னாலேயே வாருங்கள்" என்று சொல்லி வழி காண்பிப்பதுவும் இயல்பான ஒன்றுதான். அதற்காக நமக்கு வழி காட்டுவதற்காகவே அவர் வந்தார் என்று நினைப்பது ஒரு சந்தோஷத்தை வேண்டுமானால் கொடுக்கலாம். போலீஸ்காரருக்கு அந்த நிமிடம்தான் வேலை வந்தது என்று நினைப்பதுவும் அப்படியே. மார்க்கெட்டிங் துறையில் உள்ள எனக்கு இது மாதிரி 'ஆச்சர்யங்கள்' நிறையவே நடந்துள்ளன. பலருக்கும் அப்படித்தான் இருக்கும். கடுகு சார் இதற்கு இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டியதில்லை. ”எல்லாம் அவன்அருள்” வரட்டும் பார்க்கலாம்.

    (பேர் நல்லாருக்கா?)

    ReplyDelete
  5. அன்புள்ள உளுந்து, உங்கள் கருத்துக்கு நன்றி. பேர் நல்லா இருக்கு. வடை என்று இருந்தால் ருசியாக இருப்பதாகச் சொல்லியிருப்பேன்! :)

    ReplyDelete
  6. எனக்கு இந்த sequence கொஞ்சம் புரிவதில்லை.
    நாம் ஒரு தெரியாத இடம் போகும் போது விசாரித்துச் செல்வோம். சிலர் சுத்தமாக தப்பா சொல்லி நம்மை ஊரை சுத்த விட்டு விடுவர். அப்படி இல்லாமல் இந்த மாதிரி நடக்கும் போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுவது உண்டுதான்.

    இந்த மாதிரி ஊரை சுத்த விடாம நாம் போகும் ஊருக்கு செல்லும் ஒருவரை குறித்த நேரத்தில் சென்று அடைதல் என்பது தெய்வ செயலாகக் கொள்ளலாம்.

    நீங்க ஒரு படி மேலே போய் நீங்க கோவிலுக்கு புறப்பட்டு விட்ட உடனேயே ஒருவரை சாரதி மாதிரி ராமர் வழியில் நிறுத்தி வைத்திருந்ததாக நினைத்து சந்தோஷப் படுவது மாதிரிஇருக்கு.

    நான் கிண்டல் பண்ணலே. எனக்கும் சில முறை வேறு வேறு அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு. நானும் அப்போ அப்போ பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

    http://www.virutcham.com

    ReplyDelete
  7. No.. I do not consider you are making fun of me. My point was we went to a small temple in s very small village called Oragadam not knowing there were three -yes three villages of the same name in and around Chingleput.
    We were directed to wrong Orgadam. Here nobody had heard of the other Oragadam nor the temple. In the midst of vast expanse we found a police station.There was an official who knew about the other particular Oragadam and the temple which was some 35 KM away. He simply said "Please follow. I am going thru that place.: And started his bike in a few seconds as if he was waiting for us. May be all these are coincidences.
    Some things cannot be reasoned out and we call them divine acts. Even if they are not, there is nothing wrong in giving credit to god instead of brushing them as coincidences. Long back I read Arthur Koestler's book Coincidences and he had described several remarakable events and incidents. I have notes about these.
    Thanks for your comments.
    -Kadugu

    ReplyDelete
  8. Those who believe in god will think that everything happens because of him and his mercy.Those who do not believe in god will say that there is no god and he is responsible for all the events that happen around them. So even to believe in god,we need his blessing. All will not have that gift of feeling his presence in each and every action.
    vijaya K.R

    ReplyDelete
  9. It is really amazing to read your experiences. It is all but faith that leads.
    -sudha

    ReplyDelete
  10. Ms. K R Vijaya
    Ms. Sudha

    Thank you for your comments. I have few more true experiences in which we felt the hand of God coming to our help

    ReplyDelete
  11. உளுந்து அழகான பேர் கடுகு சார் .ஆனா அது வெள்ள உளுந்தா இல்ல கருப்பு உளுந்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

    ReplyDelete
  12. Dear Kadugu Sir,

    Even if we consider your experience as far from coincidence and Lord Rama has guided through a Policeman on that particular day, the persons who have experienced are only can cherish it. Others won't have that much impact.

    When you see the (co)incidences in the lives pf Lincoln and Kennedy are the world famous (just 100 years difference in each and every (co)incident in their lives, will make you thrilled and unbelievable. Sorry, the following are too short, forgive me:

    The 100 Year Recurrence:
    Lincoln-Kennedy 100 Year Coincidences
    I have heard of hundred year flood, but a hundred year assassination seems bizarre:

    Lincoln was elected in 1860, Kennedy in 1960, 100 years apart.
    Andrew Johnson was born in 1808. Lyndon Johnson was born in 1908, exactly one hundred years later.
    John Wilkes Booth was born in 1839 [according to some sources] Lee Harvey Oswald was born in 1939, one hundred years later.
    Lincoln was elected to congress in 1846, Kennedy was elected to congress in 1946...100 years apart.
    Lincoln defeated Stephen Douglas who was born in 1813; Kennedy defeated Richard Nixon who was born in 1913...100 years apart.
    Count 'em Up
    Kennedy & Lincoln's Names
    LINCOLN and KENNEDY each has 7 letters.
    ANDREW JOHNSON and LYNDON JOHNSON each has 13 letters.
    JOHN WILKES BOOTH and LEE HARVEY OSWALD each has 15 letters. (We won't get into the three name assassin thing, as I believe this is put on them after the fact to distinguish them from innocent people with the same first and last name).

    The Assassination:

    Coincidences Regarding The Assassination of JFK and Abe Lincoln
    Both men were assassinated on a Friday.
    Both assassins were Southerners who held extremist views.
    Both men were killed by a bullet that entered the head from behind.
    Lincoln was killed in Ford's Theater. Kennedy met his death while riding in a Lincoln convertible made by the Ford Motor Company.
    Booth shot Lincoln in a theater and fled to a warehouse. Oswald shot Kennedy from a warehouse and fled to a theater.
    Booth and Oswald were murdered before their trials.
    Both men were assassinated on a in the presence of their wives.
    Lincoln was sitting in box 7 when killed; Kennedy was sitting in car 7 when killed.
    Both assassins were detained by an officer named Baker.

    T.L. SUBRAMANIAN (TLS), SHARJAH, UAE

    ReplyDelete
  13. Mr TLS: Thanks for your commemnts. I agree with you. Cincidences or divne incidences, they are interesting. I j=haveread about Licoln adn Kennedylong back. Yuou know that US Presidents in 1880. 1900. 1920. 1940 i.e, every 20 years were killed. (The tid bit may not be exact but is some what like this.

    ReplyDelete
  14. sir ithai padikkum intha thingakizhamailernthu varum 4 naal athaavathu vyaazhakizhamai Kovil SriRamaNavami(usually most of the region SriRamaNavami was already celebrated in the previous month, but for us as per the temple panchangam it falls on coming thursday)

    ReplyDelete
  15. RIVATHSAN said...

    SRIVATHSAN said... sir ithai padikkum intha thingakizhamailernthu-----coming thursday)
    1. Dear Mr Srivatsan: You can download NHM writer for writing in Tamil It is very good and it is free,

    2, I think you have just found my blog. Plese read all the postings.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!