March 19, 2010

உதிரிப் பூ -- கை குலுக்கினேன்

மார்ச் 11’ம் தேதி. சென்னையில் ஒரு பூணூல் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பழைய டில்லி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள்  ஒரே அரட்டை தான்!
        முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிடப் போனேன். ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஹாலில் சிறிது சலசலப்பு ஏற்பட்ட மாதிரி இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் (உண்ணும்) கருமமே கண்ணாய் இருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தலையைத் தூக்கிப் பார்த்தால் அடுத்த பந்திக்காக காத்திருப்பவர்களும். சர்வர்களும் என் பின் பக்க வரிசையையே பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி மாதிரி பட்டது. யாராவது ‘எந்திரன்’ வந்திருக்கிறாரோ என்று எண்ணியபடியே திரும்பிப் பார்த்தேன்.
    பின் வரிசையில் எல்லாருக்கும் நடுவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... யார்?
 உலகிலேயே  நான்காவது பெரிய பணக்காரர் என்று அன்றைய காலைப் பத்திரிகையில் பெயர் வந்திருந்த நபர்.  ஆம். முகேஷ்  அம்பானி தான்!
  ஒரு அலட்டல், பந்தா, ஜால்ராக்கள், கூஜாக்கள் இல்லாமல் எல்லாருடன் சேர்ந்து உட்கார்ந்து, வாழை இலையில் பிஸிபேளாவயும், புளியோதரையையும், போளியையும் கை பார்த்துக் கொண்டிருந்தார். நான் சாப்பிட்டு விட்டு வந்தபோது அவரும் சாப்பிட்டு விட்டுக் கை அலம்பிக் கொண்டு வந்தார்.
ஒரு ஸ்லாக் ஷர்ட்டில் இருந்தார். கலவென்று பேசியபடியே வந்தார்.
அவரிடம் சென்று  கைகுலுக்கியபடியே.” உங்கள் தந்தையாருக்கு உங்கள் மூலமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ரிலையன்ஸ் ஷேர் வைத்து  இருப்பவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பது அவரால்தான்.” என்றேன்.
“ ஓ.. தேங்க் யூ” என்றார்.
அதற்கு அப்புறம் தான் அவர் கையை விட்டேன்!!

10 comments:

  1. Saar... Kadugu siruthaalum kaaram kurayathu saar... chinna mattera yerunthaalum narukkunnu yerunthathu...

    Udhurippooo vasanai !!

    - Sri

    ReplyDelete
  2. ராஜ சுப்ரமணியன்March 19, 2010 at 10:00 AM

    யார் வீட்டு பூணூல் கல்யாணம்? நீங்களும் போயிருக்கிறீர்கள், அம்பானியும் வந்திருக்கிறார் - ஒரே VVIP மயமாக் உள்ளதே?

    பிசி பேளே பாத் எப்படியிருந்தது?

    ReplyDelete
  3. Sir,
    Thank you very much for your announcement of twodays once a new posting...you have agreed for a win-win situation. Hope you too have reliance shares!!!!!!

    ReplyDelete
  4. முகமூடிMarch 19, 2010 at 12:40 PM

    அஞ்சு கோடி மாலை செய்தி வந்த வேளையில் மிக மிக ஆறுதலான நாட்டுக்கு தேவையான செய்தி - எளிமையை பற்றி. நன்றி கடுகு சார்.

    ReplyDelete
  5. ஆச்சர்யமான விசயம் கருப்பு பூனை படையொடு திரிய கூடிய மனிதர், சாதாரனமாக வந்து சென்றது..

    ReplyDelete
  6. <<>>
    அதனால் தான் எழுதினேன். நான் கை குலுக்கினது பெரிய விஷயமல்ல.அன்று காலையில்தான் 4-வது பெரிய பணக்காரர் என்று பத்திரிகையில் வந்திருந்தது. தனி அறை, தனி மேஜை, இம்போர்டட் கிராக்கரி, வெள்ளி ஸ்பூன் என்று எதையும் எதிர் பார்க்கவில்லை.
    அன்புள்ள டில்லியில் ஒரு சுவையான் தகவல் வரும். PLEASE AWAIT.

    ReplyDelete
  7. <<>>
    ஆம்..நான் அதிர்ஷ்டசாலிதான். மனிதனை உயர்த்தும் பண்புகளைக் கற்றுணர எல்லாருக்குமா வாய்ப்புகள் கிடைக்கின்றன? -கடுகு

    ReplyDelete
  8. ராஜ சுப்ரமணியன்March 20, 2010 at 10:11 AM

    தெரிந்து விட்டது - யார் வீட்டு பூணூல் கல்யாணம் என்பதும், சென்னையில் எங்கே நடந்தது என்பதும் (அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில்) இவ-வில் வந்துவிட்டது.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!