March 18, 2010

இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடினேன்!

கிட்டதட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது சென்னை ஐ.பி.ஓ.வில் நான் வேலையில் இருந்தேன். போஸ்டல் ஆர்டர்கள் விற்பனை,பணம் கொடுத்தல் ஆகியவைகளைக் கவனித்துக் கொள்ளும் செக்‌ஷனில் பணி.
அன்றாடம் சுமார் 200, 300 போஸ்டல் ஆர்டர்கள் பரிவர்த்தனை இருக்கும். முக்கியமாகப் பிரிட்டிஷ் போஸ்டல் ஆர்டர்களைப் பலர் `காஷ்' செய்வார்கள்.
என் நண்பர் கண்ணன் கவுன்டரைப் பார்த்துக் கொண்டு இருந்தார், ஒருநாள் வழக்கம் போல் கவுன்ட்டர் மூடப்பட்டதும் அவர் கணக்குகளை செக் செய்தேன்.. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுமார் முந்நூற்று அறுபது ரூபாய் குறைவாக இருந்தது. யாருக்கோ தவறுதலாக அதிகப் பணம் கொடுத்து விட்டார்.! ” கண்ணா, பணம் அதிகமாகக் கொடுத்துவிட்டாய் என்று நினைக்கிறேன்” என்றேன் அதை கேட்டதும் அவருக்குத் தலையைச் சுற்றியது. வயிற்றில் கலவரம். ( 360 ரூபாய் என்பது அவருடைய மூன்று மாதச் சம்பளம்!)
சூபர்வைசரிடம் விஷயத்தைச் சொன்னோம் .போஸ்டல் ஆர்டர்களையெல்லாம் பரிசீலனை செய்து புள்ளிகள் போட்டுக் கண்டுபிடித்தோம். உண்ணி என்ற நபருக்கு முந்நூறுக்குப் பதிலாக அறுநூற்று அறுபது ரூபாய் கொடுத்திருந்தார் கண்ணன்.. ஒரு இடத்தில் நாற்பது என்பதை நானூறு என்று எழுதிக் கூட்டியிருந்தார்.
    போஸ்டல் ஆர்டர்களில் பணம் பெற்றுக் கொள்பவர்களின் விலாசத்தை எழுதி வைப்பது  வழக்கம்.  பார்க் டவுனில் ஒரு லாட்ஜின் விலாசத்தை உண்ணி கொடுத்திருந்தார். உண்ணியைத் தேடிக் கிளம்பினோம்.
   லாட்ஜில் உதட்டைப் பிதுக்கினார்கள். அது ரிஜிஸ்டர்ட் லாட்ஜ்  அங்கு உண்ணி என்பவர் சமீபத்தில் தங்கவே இல்லையாம்.
``உங்கள் லாட்ஜ் விசிடிங் கார்டைக் காண்பித்தாரே?'' என்று கேட்டேன்.
``சிங்கப்பூரிலிருந்து கப்பலில் வருகிறவர்களிடம் எல்லாம் இந்தக் கார்டுகளை விநியோகிக்கிறோம். இது விளம்பர நோட்டீஸ் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்கள் லாட்ஜில்
.உண்ணி என்பவர் எப்படி இருப்பார் என்பதும் கண்ணனுக்கு நினைவில் இல்லை. ஆனால் அவர் படிக்கத் தெரியாத ஆசாமி என்று தெரியும். பணம் பெறும் போது கைநாட்டு வைத்திருந்தார்.
பார்க் டவுன், மண்ணடி ஆகிய இடங்களில் பல லாட்ஜ்களில் ஏறி இறங்கினோம். பலன் இல்லை.
ஆபீசுக்குத் திரும்பிய போது போலீஸ் காத்திருந்தது. சட்டப்படி பீச் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்திருந்தார் உதவி போஸ்ட் மாஸ்டர்!
போலீஸ் வாக்குமூலம் வாங்கிக் கொண்டது. சட்டப்படி பார்த்தால், 360 ரூபாயை கையாடி இருக்கிறார்!
       கைப்பணத்தைப் போட்டு ஈடு செய்தாலும், இலாகா நடவடிக்கைக்குத் தப்ப முடியாது. மேலும்  360 ரூபாய்க்கு எங்கு போவது?
உண்ணி பணம் பெற்றுக் கொள்ளும் போது பேச்சுவாக்கில் மலையாளம் கலந்த தமிழில், ஊருக்குப் போகணும் என்று கூறியது கண்ணனுக்கு ஞாபகம் வந்தது. பிரசிடென்ஸி போஸ்ட் மாஸ்டரிடம் சொன்னோம்
``சரி, எழும்பூர் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் இரண்டு இடங்களுக்கும் போய் விட்டு வாங்க.  நாளைக்கு சிங்கப்பூர் கப்பல் போகிறது. ஹார்பருக்கும் போய்ப் பார்க்கலாம்'' என்றார்.
போலீஸ்காரருடன் எழும்பூர் ஸ்டேஷனுக்குச் சென்றோம். ஜன சமுத்திரத்தில் முகம் தெரியாத ஒருவரை மன்க் கவலையுடன் தேடினோம்..
போலீஸ்காரர், ``நல்லா கவனிச்சுப் பாரு, சார்'' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
        இல்லாத கறுப்புப் பூனையை இருட்டு அறையில் தேடினோம்!
      எழும்பூரிலிருந்து சென்ட்ரல் வந்தோம். மணி எட்டரை இருக்கும். பகல் ஒரு மணிக்குச் சாப்பிட்டது. தலைவலி மண்டையைப் பிளந்தது. தொண்டையில் ஈரம் இல்லை.
`இவராக இருக்குமோ, இவர் தானோ?' என்று யார் யாரையோ கூர்ந்து கவனித்தோம். யாரையும் நிறுத்திக் கேட்கத் தைரியமில்லை.
வைக்கோல் போரில் ஊசியைத் தேட முடியுமா? கண்ணனுக்கு உண்ணியின் முகம் கூடச் சரியாக நினைவில்லை!
மணி 8.55. `ஒன்பது மணிக்கு பம்பாய் வண்டி ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்' என்று ஒலிபெருக்கி அறிவித்தது.
வைத்துவிட்ட பொருளை எடுக்கச் செல்வது போல் குறிப்பிட்ட பிளாட்பாரம் சென்று பரபரப்புடன் ஓடினோம். பைத்தியக்காரனைப் போல் கண்ணன் ஓடினான்.
திடீரென்று “ அதோ.. அதோ.. அது உண்ணியே தான்'' என்று கத்தி கொண்டு ஓடினான்.
அவரிட்ம் போய் ``ஏங்க.. நீங்க இன்று மத்தியானம் நீங்க ஜி.பி.ஓ.வில் பணம் வாங்கினீங்க, இல்லையா?'' என்று கேட்டார்,
``ஆமாங்க. வங்கினேன். என்ன விஷயம்?'' என்றார். எங்களுடன் போலீஸ்காரர் இருந்ததால் அவர் சற்றுப் பயந்து விட்டார்.
``முந்நூற்று அறுபது ரூபாய் அதிகம் கொடுத்து விட்டேன். நீங்களும்...''
``அப்படியா! நங்களுக்குப் படிப்பு கிடிப்பு கிடையாது. நிங்கள் கொடுத்ததே இதோ'' என்று சொல்லிக் கையிலிருந்த சின்ன துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார். அதில் பணததைக் கட்டி வைத்திருந்தார்.
அவரை அழைத்துக் கோண்டு  ஆபீசுக்கு வந்தோம். அதிகப்படி பெற்றுக்கொண்ட பணத்தைக உண்ணி திருப்பிக் கொடுத்து விட்டார். கண்ணன் வயிற்றில் பாலை வார்த்தார். .
அன்று கடவுள் கண்ணனுக்குக் கை கொடுத்தார்.
திரு.உண்ணி, ஒன்பது மணிக்குப் புறப்படும் பம்பாய் வண்டியில் ராஜஸ்தான் செல்ல இருந்தாராம்!
(சாயங்காலம் 4 மணியிலிருந்து இரவு 10 வணி வரை  எங்களுடன் இருந்த போlலீஸ்காரருக்கு பெரிய ‘தாங்க்ஸ்’ சொன்னோம்.. கேஸை ’மூடி’ விடுவதாகச் சொல்லிவிட்டுப் போனார்,)

16 comments:

  1. பரபரப்பான நாவல் படிப்பது போல் இருந்தது, உண்ணி ரொம்ப நல்லவராய் இருந்திருக்கிறார்.

    ReplyDelete
  2. Sir,
    For this only i requested you to post minimum one article per day......Great. Even you make your blog as pay channel i am ready to pay for that. ( Today is 101 day)

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகள் ரொம்பவும் இண்டரஸ்டிங் ஆக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி!

    S . V . ராகவன்

    ReplyDelete
  4. ஹ்ம்ம்... 360 ரூபாய். இப்பல்லாம் அது மாதிரி தேடி போனால் பஸ்ஸுக்கும், டீ, காபிக்கும் சரியா போயிடும். :-)))

    ReplyDelete
  5. <> அது மட்டுமில்லை. தேங்க்ஸ் என்று நாங்கள் சொன்னதும். தன் தலையைச் சொறிந்து கொள்ளாத போலிஸ்காரர், டயனோஸ்ர் மாதிரி அழிந்து போய் விட்ட உயிரினம்!!!-கடுகு

    ReplyDelete
  6. அஞ்சா நஞ்சன்March 18, 2010 at 1:35 PM

    ஒரு மர்ம நாவலைப் படிப்பது போல் அடுத்தது என்ன நடக்குமோ என்ற சுவாரஸ்யம். அருமை ஐயா !

    ReplyDelete
  7. Great. Even you make your blog as pay channel i am ready to pay for that. ( Today is 101 day)

    == Thanks for the complimments. You have given the DEVIL its due. Why பேய் further: -Kadugu

    ReplyDelete
  8. சைவகொத்துப்பரோட்டா said...
    உண்ணி ரொம்ப நல்லவராய் இருந்திருக்கிறார்.
    == ஆமாம். அவர் படிக்காதவர்! அதனால் தானோ என்னவோ!!!
    -----------------------

    ReplyDelete
  9. Sir,
    If you want to say thanks please say so by one article per day.....ever now and then iam seeing it for new articles/your writing. (Hope your wife is helping you in this!!!! Hope you will not accept it!!!!) Since you started this game now you have to pay for that. Thank you ....Anonymous

    ReplyDelete
  10. I AM IN A DILEMMA NOW --- WHETHER TO POST ONE ARTICLE A DAY
    OR
    WITHDRAW THE THANKS...;) !!!! !!!!!

    ReplyDelete
  11. Sir,
    Definitely you can withdraw you thanks...but before that you have to give medicine for my disesse called KADUGU FLU.(suffering from last 101 days)Medicine for the same is your writing. Hope atleast for this patient, you will write.

    Thank you.. Anonymous

    ReplyDelete
  12. Many people return money like this,
    personally I believe in that as a banker

    ReplyDelete
  13. பணம் கிடைத்த சந்தோசத்துல உன்னி ராஜஸ்தான் போனாரா, இல்லையான்னு சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  14. கடுகு சார்,

    விறுவிறுப்பான நடை. உண்ணி பற்றிய உங்கள் கமெண்டும் சூப்பர்... ஜமாயுங்கள்....

    ReplyDelete
  15. Kannan said...

    பணம் கிடைத்த சந்தோசத்துல உன்னி ராஜஸ்தான் போனாரா, இல்லையான்னு சொல்லவே இல்லையே?

    ==
    இல்லை. உண்ணியை அழைத்து வந்து ஏதோ ஸ்டேட்மெண்ட் வாங்கியது போலீஸ்

    ReplyDelete
  16. போலீ்ஸ்காரர் பற்றி இறுதியில் ஒன்றுமே சொல்லவி்ல்லையே என நினைத்தேன். ஆனால் பின்னூட்டத்தில் தலையை சொறியாத அந்த இனம் டைனோஸரைப் போல் அழிந்து‍ விட்டது‍ என கூறி பஞ்ச் அடித்து‍ விட்டீர்.
    ஜெ. பாபு
    கோவை

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!